Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவையான சுண்டைக்காய் கறி செய்வது எப்படி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான சுண்டைக்காய் கறி செய்வது எப்படி என யாருக்காவது தெரிந்தால் இணைத்துவிட முடியுமா?

 

இப்பதான் காய்க்க தொடங்கியிருக்கு, பிடுங்கி சேகரிக்கத் தொடங்கிவிட்டேன், ஒரு கறிக்கு இப்ப காணும்

 

கொண்டையுடன் சமைக்கலாமா?

 

 



================

வேறுபெயர்: மலைச்சுண்டை, கடுகி
தாவரவியற் பெயர்: Solanumver verbascl folium

ஆங்கிலம் பெயர்: Unarmed night shade

இது பெரும்பாலும் மலைகளில் பயிராகும் செடி, ஆனைச் சுண்டை என வேறொரு வகையுமுண்டு. இதை பச்சையாக சமையல் செய்து உண்பது அரிதாக இருப்பினும் இக்காயை வெய்யிலில் உலர்த்தி பின்பு புளித்தமோரில் சிறிது உப்பை சேர்த்து அதில் மேற்கூறிய சுண்டங்காயைப் போட்டு ஊறவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்வது நமது வழக்கம். இதில் சிறிது கைப்புத் தன்மை உண்டு. எனினும் இது உடலுக்கு பல நன்மைகளை உண்டாக்கக்கூடியது.

unarmed_night_shade.jpg
வற்றலால் சுவையின்மை, வயிற்றுப் புளு, நிணக்கழிச்சல், சீதக்கட்டு நீங்கும். இது பசியை உண்டுபண்ணும். இதனை மார்புச்சளி, செரியாக் கழிச்சல் மூலம் முதலியவைகளுக்கும் கொடுக்கலாம். மருத்துவப் பயன்களாவன;
சுண்டங்காய் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து பின் நசுக்கிப் பொடியாக்கிக் கொண்டு பகலில் 1 கைப்பிடி சாதத்துடன் தேவையான அளவு தூளைச் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவிட்டு பின் வழக்கம் போல உண்ணலாம். இவ்விதம் தொடர்ந்து ஒரு வாரம் அருந்தினாலே போதும் குடலில் உள்ள கிருமிகள் வெளிப்படும்.

வயிற்றுப் போக்கு குணமாக

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாம்பருப்பு, மாதுளம் பழத்தோல், நெல்லிவற்றில், ஓமம், வெந்தயம் வகைக்கு 30 கி அளவு எடுத்து வறுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்டு வேளைக்கு 1/2  தே.க. அளவு சூரணத்தை மோரில் உண்டுவர எல்லா வகை வயிற்றுப் போக்கும் தீரும்.
காய்ந்த சுண்டங்காய் வற்றலை உப்பிட்ட மோரில் போட்டு முறையாகப் பிசறிப் பிசிறி உலரவைத்து நெய்யிலாவது அல்லது நல்லெண்ணெயிலாவது வறுத்து இரவு ஆகாரத்துடன் சாப்பிடலாம்.  
வறுத்த சுண்டங்காய் வற்றலை நன்றாகப் பொடி செய்து உப்பு, புளி,காரம் கூட்டிய குழம்பில் சேர்த்துக் காய்ச்சி அன்னத்தில் கலந்து சாப்பிடுவது உண்டு. இது உண்ணப் பேதியை நிறுத்தும்.
சுண்டங்காய் வற்றல், கறிவேப்பிலை, ஓமம், மிளகு சுக்கு, திப்பிலி, பெருங்காயம் இவற்றில் கறிவேப்பிலையை சருகு போன்று காய வைத்து அதில் 10 கிராமும் அதே அளவுக்கு இதர பொருட்களையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக வறுத்தெடுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்டு பகல், இரவு சாப்பிடுவதற்கு முன் ஒரு கைப்பிடி சுடு சாதத்துடன் 1தே.க. தூளும் ஒரு தே.கரண்டி பசு நெய்யும் விட்டுப் பிசைந்து உண்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
வாய்வு மிகுதியால் வயிற்றுப் போக்கு ஆகும் நிலையில் சுக்கு, ஓமம், கசகசா, சுண்டங்காய் வற்றல்,  காய்ந்த கறிவேப்பிலை இவற்றை சம அளவு எடுத்து தனித்தனியே நெய் விட்டு வறுத்து ஒன்றாகக் கொட்டி இடித்து சூரணித்துக் கொண்டு வேளைக்கு 1/2  தே.க. வீதம் காலை மாலை 2 வேளையாக வெந்நீரில் அருந்த நிற்கும்.

மூக்கடைப்பிற்கு


சுண்டை வேர், பாலைவேர் சம எடை உலர்த்திப் பொடித்து வஸ்திரகாயஞ் செய்து குப்பியில் வைத்துக் கொண்டு மூக்கில் உறிஞ்சவும் மூக்கடைப்பு குணமாகும்.

செரியாமைக்கு


சுண்டங்காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து உப்பு, மிளகு, சீரகம்,கறிவேப்பிலை, வெந்தயம் இவைகளையும் சிறிது வறுத்து கூட்டிப் பொடித்துச் சோற்றுடன் கலந்து சாப்பிடலாம்.
சுண்டங் காய் நல்லதொரு இரும்புச் சத்துள்ள பொருள் மலச்சிக்கலைப் போக்கும். உணவை ஜீரணிக்கப் பண்ணும். நெஞ்சில் சளியைப் போக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண், கர்ப்பப்பைப்புண், இவற்றை குணமாக்கும் பெண்களுக்கு இது ஒரு  சத்தான உணவு. இரும்புச் சத்து நிறைய இச் சுண்டங்காயில் இருப்பதால் பெண்கள் அனைவரும் சுண்டங்காய்களை சமையலில் சேர்ப்பதால் கைவலி, கால்வலி, இடுப்பு வலி தீரும். இதற்கு சுண்டங்காய் பால் கறி சமைத்துண்ணலாம். 
சுண்டங் காய் பால்கறி
சுண்டங்காய் ஒரு கப், சோம்பு 1 தே.க., தக்காளி 3, சின் வெங்காயம் பொடியாக அரிந்தது ஒரு கைப்பிடி, கராம்பு 1, தேங்காய் துருவல் ஒரு மூடி, மஞ்சள் பொடி 1 தே.க., கறிவேப்பிலை தேவையான அளவு, மல்லி இலை ஒரு கொத்து, மல்லித்தூள்  1 தே.க. , நிலக்கடலை 100 கி, தாளிக்க எண்ணெய் 3 கரண்டி, உப்பு தேவையான அளவு. காய்ந்த மிளகாய் 2, கசகசா 1 தே.க., பூண்டு 3 பல்.
காயை நீரில் அலசி இரண்டிரண்டாக அரிந்து வேகவிடவும் மல்லித்தூள், உப்புத்தூள், மஞ்சள் தூளையும் போட்டு காய் வெந்துவரும் போது சோம்பு, தேங்காய்த்துருவல், இவைகளை அரைத்து ஊற்றவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கறுவாப்பட்டை, சோம்புதூள் செய்து போட்டு சிவந்து வரும் போது  கசகசாவை தூள் செய்து போட்டு வதக்கி வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி போட்டு வதக்கி, மல்லித்தழையை பொடியாக அரிந்து போட்டு வதக்கி சுண்டக் காய் பால் கறியை தாளிக்கவும்  தேங்காய் முற்றியது ஒன்றை கரகரப்பாக அரைத்துப் பாலெடுத்து சுண்டங்காய் பால்கறியை இறக்கி வைத்து ஊற்றவும். இந்த சுண்டங் காய் பால்கறியை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்டலி, தோசை, பிட்டு, உப்புமா, அனைத்துடனும் சேர்த்தும் சாப்பிடலாம்.
சுண்டங் காய் பச்சடி
சுண்டங்காயை பொடியாக அரியவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி 2 தே.க. கடுக, 1 துண்டு பெருங்காயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு, மல்லித்தழை 1 கைப்பிடியை பொடியாக அரிந்து போட்டு இறக்கும் முன் சுண்டங்காய்களைப் போட்டு நன்றாக வதக்கிக் கீழே இறக்கி தயிரைக்  கொட்டி உப்பைத் தூள் செய்து போட்டு வெங்காயம் அரிந்தது ஒரு கைப்பிடி போட்டு பச்சை மிளகாய் 2 ஐ அரைத்துப் போட்டு நன்கு கலக்கி மதிய உணவுடன் சாப்பிட கண்கள் குளிர்ச்சி அடையும். உடலும் பலமடையும் வாரம் 3 நாள் சாப்பிடுவது நல்லது.  புழுத் தொல்லையும் இராது.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=16315:2012-07-02-10-06-01&catid=299:2012-03-29-10-11-42

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டைக்காய் குழம்பு….

தேவையானவை 
  • சுண்டைக்காய் வத்தல் –  1 மே கரண்டி
  • மிளகாய் பொடி – 1 தே கரண்டி
  • மல்லி பொடி – 2 தே கரண்டி
  • மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி
  • உப்பு
  • புளி கரைசல் – 2 மே கரண்டி
தாளிக்க
  • நல்லெண்ணெய் – 2 தே கரண்டி
  • கடுகு – 1/4 தே கரண்டி
  • வெந்தயம் – 1/4 தே கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது 
  • சின்ன வெங்காயம் – 1 மே கரண்டி
செய்முறை 
  • சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் பொரித்து எடுத்துகொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
  • மிளகாய் தூள், மல்லி பொடி, மஞ்சள் பொடி, புளி கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 
  • நன்கு கெட்டியானவுடன் வறுத்து  வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலை சேர்க்கவும்.
  • இப்போது வத்தல் குழம்பு ரெடி……

http://aduppadi.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி, நான் வைத்திருப்பது இந்த வாரம் பிடுங்கிய கத்தரி. ஊரில் சப்பிட்டது, சிட்னியில் விதை எடுத்து இப்பதான் காய்க்க தொடங்குகின்றது, வத்தல் செரியான உப்பா இருக்கும் வாங்குவதில்லை

சுண்டை

 

Sundai_sedi.jpg
சுண்டைச் செடி , ஏறத்தாழ் ஓர் ஆள் உயரத்துக்கு வளரும்.இதனை வீடுகளில் வளர்க்கலாம்.சிறிய முட்கள் கொண்டது.வெள்ளை நிறப்பூக்கள் கொத்து கொத்தாகப் பூத்து காய்களாக மாறுகின்றன.சுண்டைக் காயை குழம்பில் போட்டும் கறி செய்தும் சாப்பிடலாம்.மருத்துவ குணம் கொண்டது.
 
ஒரு மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் உபயோகப்படும் ஒரு செடியாகும். சுவாசப் பாதை நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. 
sunndai1.jpg
சுண்டை ஒரு பெருஞ்செடி இனத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5 அடி முதல் 10 அடி உயரம் கூட வளரக்கூடியது. எல்லா வித மண் வளத்திலும் வளரக்கூடியது. இதற்கு ஆங்கிலத்தில் TURKEY BERRY என்று சொல்வார்கள். சுண்டையில் இரு வகையுண்டு.  மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களிலும் சம வெளியிலும் வளர்வதை ஆனைச்சுண்டை அல்லது பால் சுண்டை என்றும் சொல்வர். அகன்ற இறகாக உடைந்த நேர் அடுக்கில் அமைந்த இலைகளையும் வெண்நிரப் பூங் கொத்துக்களையும், உருண்டையான காய்களையும் உடைய முள்ளுள்ள செடியாகும். பச்சைக் காய்கள் பழுத்தால் மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழம் காய்ந்தால் மரநிர வத்தலாக மாறிவிடும். ஒரு பழத்தில் சுமார் 200 விதைகள் இருக்கும். காய்  சற்று கசப்புடையது.  வற்றலாகக் கடைகளில் கிடைக்கும்.. இதை இன விருத்தி செய்ய விதைமூலமாகவும், கிழைகளை வெட்டி வைத்து முறைப்படி வளர்த்தியும் பயிரிடுவார்கள். 
 
 வேறு பெயர்கள் :- கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி.
மருத்துவப் பயன்கள் :- 
சுண்டை கோழையகற்றியாகவும்,   வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், சுண்டைக் கசாயம் பாம்புக்கடி வீரியம் குறைக்கவும், நீரிழிவு நோய், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு முதலியன குணமாக்கக் கூடியது. மலேசியாவில் இதன் விதையை பல் வலி குறையப் பயன்படுத்துகிறார்கள். வியட்னாமில் இதன் இலையை மாதவிடாய் தொல்லைக்கும், தோல் வியாதியைப் போக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதன் பழம் சாப்பிட்டால் வயிற்றுவலி போகும்.
 
பால் சுண்டைக் காயைச்சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும்.
 
உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில்  பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.
 
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம்  ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்ச்சளி, நீரிழுவு தீரும்.
 
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.
 
இதன் வேர்ப்பட்டையை பொடிசெயுது தேய்காய் தொட்டியில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிலிட்டு உள் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக் குடச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும்.
 
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழப்பு நோய் தணியும்.
 
சுண்டை வேர்  ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாச்சல் குணமாகும்.
 
இதன் வத்தலை காயவைத்து அதனுடன் புளித்த மோர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து உணவுடன் உண்ண நீரிழிவு நோய் குறையும்.
 
sundai3.JPG
மருத்துவக் குணங்கள்:
sundai.JPG
  1. பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
  2. சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
  3. சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.
  4. சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
  5. சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
  6. சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.
  7. சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
  8. சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
  9. சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
  10. சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.
  11.  சுண்டைக்காயில் இருவகை உண்டு.

    1. காட்டுச் சுண்டை

    2. நாட்டுச் சுண்டை எனப் படும் யானைச் சுண்டை.

    மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை.  இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

    வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம்.  இவற்றின் மருத்துவப்பயன்கள் ஒன்றே.

    நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்

    விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே

    வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்

    காயைச் சுவைப்பவர்க்குக் காண்

    (அகத்தியர் குணபாடம்)

    குணம் - ஐயம், நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், வளிப்பெருக்கு இவை போகும்.

    சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.  சுண்டைக்காய் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.  சிறுகசப்பு சுவை உடையது.  இதை வாரம் இருமுறை சாப்பிடுவந்தால் இரத்தம் சுத்தமடையும்.  உடற்சோர்வு நீங்கும்.

    மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.  வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.  குடற்புண்களை ஆற்றும்.

    வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மும்முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும்.  வயிற்றுப்புண் ஆறும்.  வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

    சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும். 

    சுண்டைக்காய்     - 10

    மிளகு        - 5

    கறிவேப்பிலை    - 10 இலை

    இவைகளை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.

    சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.  மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.

    சுண்டைக்காய் சூப்

    சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு,  சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும்.

    இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும்.  உடல் சோர்வை நீக்கும்.  தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

    மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.  ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

    சுண்டைக்காய் வற்றல்

    முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.  இது மார்புச்சளியைப் போக்கும்.  குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

    சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல் நீங்கும்

http://greatinformationrepository.blogspot.com.au/2012/12/blog-post_7273.html

 

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி கறுப்பி, நான் வைத்திருப்பது இந்த வாரம் பிடுங்கிய கத்தரி. ஊரில் சப்பிட்டது, சிட்னியில் விதை எடுத்து இப்பதான் காய்க்க தொடங்குகின்றது, வத்தல் செரியான உப்பா இருக்கும் வாங்குவதில்லை

 

உடையார், சிட்னியில இது வளருமா?

அல்லது தூதுவளை மாதிரி, சம்மருக்கு மட்டும், இரண்டு இலையைக் காட்டிப்போட்டு, வின்ரருக்கு, நீண்ட நித்திரைக்குப் போய் விடுமா?

நன்றிகள்!

சுண்டக்காயை உடைத்து எடுத்து உப்பு கலந்த தண்ணீரில் ஊற விடுங்க 20 நிமிடம். சமைக்க தேவையானது 1 உள்ளி வெங்காயம் வெந்தயம் சிறிது கடுகு சீரகம் புளி,உப்பு எண்ணெய் தூள் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணையை விடவும். எண்ணெய் சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும் , வதங்கியதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை , உள்ளி போட்டு வதக்கவும். எல்லாம் வதங்கியதும் சுண்டங்காயை போட்டு வதக்கவும். பின் உப்பு தூள் சேர்த்து1/2 செக்கன் வதக்கவும். பின் கரைத்த புளி விட்டு கொதிக்க விடவும். கொதித்து வந்தவுடன் தேங்காய்ப் பாலோ ,அல்லது பசும் பாலோ சேர்க்கவும். கறி தடித்தவுடன் இறக்கி சுடச்ச்ட புட்டோடு சாப்பிடவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டக்காயை உடைத்து எடுத்து உப்பு கலந்த தண்ணீரில் ஊற விடுங்க 20 நிமிடம். சமைக்க தேவையானது 1 உள்ளி வெங்காயம் வெந்தயம் சிறிது கடுகு சீரகம் புளி,உப்பு எண்ணெய் தூள் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணையை விடவும். எண்ணெய் சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும் , வதங்கியதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை , உள்ளி போட்டு வதக்கவும். எல்லாம் வதங்கியதும் சுண்டங்காயை போட்டு வதக்கவும். பின் உப்பு தூள் சேர்த்து1/2 செக்கன் வதக்கவும். பின் கரைத்த புளி விட்டு கொதிக்க விடவும். கொதித்து வந்தவுடன் தேங்காய்ப் பாலோ ,அல்லது பசும் பாலோ சேர்க்கவும். கறி தடித்தவுடன் இறக்கி சுடச்ச்ட புட்டோடு சாப்பிடவும்.

 

நன்றி செவ்வந்தி அருமையான பகிர்வுக்கு, நாளை இந்த முறையில் செய்து பார்க்கின்றேன்

புங்கை - எந்த காலநிலைக்கும் இது நன்றாக வரும் சிட்னியில் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள் கிடைக்கவில்லையெனில் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் விதைகளை அனுப்பிவிடுகின்றேன். 

எனக்கு தூதுவளை விதைகளை அனுப்பிவிடுங்கள் திருப்பி

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டைக்காயை சாதுவாக‌ பொரித்து... வெங்காயம், செத்தல் மிளாகாய், பெருஞ்சீரகம், சின்னச்சீரகம் போன்ற... எங்கள் மசாலா அயிற்றங்களைப் போட்டு தாழித்து... கொஞ்சப் பழப்புளிவிட்டு கறிவைக்கலாம்.
அதை விட... சுண்டக்காயை... கத்திப்பிடியால் சாதுவாக நசிக்க, அது வெடிக்கும். அதற்குள்... கொஞ்ச உப்புப் போட்ட பின்... கொதிக்கும் எண்ணையில்.. பொரித்து எடுத்து சாப்பிடுங்கள். மொறுக், மொறுகென்று... அந்தமாதிரி இருக்கும் உடையார். :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செவ்வந்தி அருமையான பகிர்வுக்கு, நாளை இந்த முறையில் செய்து பார்க்கின்றேன்

புங்கை - எந்த காலநிலைக்கும் இது நன்றாக வரும் சிட்னியில் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள் கிடைக்கவில்லையெனில் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் விதைகளை அனுப்பிவிடுகின்றேன். 

எனக்கு தூதுவளை விதைகளை அனுப்பிவிடுங்கள் திருப்பி

 

சிட்னியில் முயற்சிக்கிறேன்!

கிடைக்கா விட்டால், தனி மடலில். தொடர்பு கொள்கின்றேன்!

 

தூதுவளை, தடி தான் இப்போது நிற்கிறது!

 

முதல் காய், உடையார்க்குக் தான்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் முயற்சிக்கிறேன்!

கிடைக்கா விட்டால், தனி மடலில். தொடர்பு கொள்கின்றேன்!

 

தூதுவளை, தடி தான் இப்போது நிற்கிறது!

 

முதல் காய், உடையார்க்குக் தான்! :D

 

:D நன்றி

சுண்டைக்காயை சாதுவாக‌ பொரித்து... வெங்காயம், செத்தல் மிளாகாய், பெருஞ்சீரகம், சின்னச்சீரகம் போன்ற... எங்கள் மசாலா அயிற்றங்களைப் போட்டு தாழித்து... கொஞ்சப் பழப்புளிவிட்டு கறிவைக்கலாம்.

அதை விட... சுண்டக்காயை... கத்திப்பிடியால் சாதுவாக நசிக்க, அது வெடிக்கும். அதற்குள்... கொஞ்ச உப்புப் போட்ட பின்... கொதிக்கும் எண்ணையில்.. பொரித்து எடுத்து சாப்பிடுங்கள். மொறுக், மொறுகென்று... அந்தமாதிரி இருக்கும் உடையார். :D

 

நன்றி சிறி, அடுத்த முறை பொரித்து பார்க்கின்றேன், இதுவரை வத்தலைதான் பொரித்து சாப்பிடனான், இப்படியொருக்க செய்து பார்க்கனும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.