Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒபாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒபாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த கடிதம்
ஞாயிற்றுக்கிழமை, 16 டிசெம்பர் 2012 15:54 
அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலை ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத மர்மமனிதன் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் உள்ள சான்டி ஹக் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவமானது என்னையும் நாட்டு மக்களையும் ஆழந்த சோகத்தில் தள்ளியது.
 
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நானும் இலங்கையர்களும் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அவர்களின் துன்பங்களிலும் பங்கெடுத்து கொள்கின்றோம்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

mahinda_seithy-20120920-150.jpg

நேற்று முன்தினம் அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாடசாலை சிறுவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் 20 சிறுவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=72145&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவுக்கான தமிழ அமைப்பு என்று ஒரு குரூப்பு திரிஞ்சது.. யாழ் மாணவர்கள் குறித்து ஒரு அறிக்கை காணோம்.. அவுங்க நாட்டுல  போட்டு தள்ளியதற்கு இவரு அனுதாபம் தெரிவிக்கிறார்.. இவுங்கநாட்டில போட்டதற்கு..  

டிஸ்கி:

கணக்கு என்ன..? சர்வதேச ரீதியான அநாதைகள்  .. எவனும் கேட்க போறதும்  கிடையது..

மகிந்தா போன்று நீங்களும் ஒபாமாவிற்கு அனுப்புங்கள் 

http://www.whitehouse.gov/contact/submit-questions-and-comments



#1: I was shocked and horrified by the savage massacre of innocent children and adults at the Sandy Hook Elementary School in Connecticut.  I want to express my profound grief to the families that lost their loved ones.

 



#2 : An event like this reminds us of our common humanity, regardless of nationality or where we live in the world.This was a senseless loss of innocent young lives, especially since schools should be sanctuaries for our children. I wish you success in your efforts to prevent such tragedies from recurring in the future.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்தரின் கண்ணீருக்கு பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சி என்ன?
December 17, 2012, 7:07 am|views: 584
 
அமெரிக்காவின் நியூரவுண் நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் இருபது சிறுவர்கள் உட்பட 26 பேர் பலியான சம்பவத்தினால் உலகமே கவலை கொண்டுள்ளது என்பது மிகையானதல்ல.
 
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கொடூரத்தின் துயரத்தில் தமிழீழ மக்களும் பங்கேற்கின்றார்கள்.
 
மனிதாபிமான சிந்தனை கொண்ட அனைவரும் இந்தப் படுகொலைகளைக் கண்டிப்பதுடன், பலியாகிப்போன அந்தப் பிஞ்சுகள் உட்பட்ட 26 பேருக்கும் தங்கள் அஞ்சலியைத் தெரிவித்துவருகின்றனர்.
 
ஆனாலும், அதன் அபத்தமாகப் போர்க் குற்றவாளியான இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தனது இரங்கலைத் தெரிவித்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
 
வலி நிறைந்த வேதனையைத் தன் கண்ணீராக வெளிப்படுத்திய அமெரிக்க அதிபரது மனித நேயம் ஒருவேளை மகிந்தவின் கல்லிதயத்தைக் கனக்க வைத்திருக்கலாம்.
 
உறவுகள் தாண்டி, இனங்கள் தாண்டி, அமெரிக்க அதிபர் கண்கலங்கி, நா தழுதழுக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அடங்கியிருந்த மனிதாபிமானத்தைக் கண்டு மகிந்தவின் மனதை மீண்டும் ஒரு தடவை வெட்கம் ஆட்கொண்டிருக்கலாம்.
 
வன்னிப் பெருநிலப் பரப்பில் வலிந்த தாக்குதல்களைத் தொடுத்தது முதல், முள்ளிவாய்க்கால் இறுதிக் கணங்கள் வரை மகிந்த ஏவிய சிங்களக் கொடூர மிருகங்கள் நடாத்திய வெறியாட்டத்தில் எத்தனை ஆயிரம் குழந்தைகள், எத்தனை ஆயிரம் பெண்கள், எத்தனை ஆயிரம் முதியவர்கள் பலியானார்கள் என்ற கணக்கே கிடையாது.
 
சிங்களப் படைகளிடம் உயிரோடு சிக்கிக்கொண்ட இளைஞர்கள் சித்திரவதைகள் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
 
இளம் பெண்கள் பாலியல் கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.
 
யுத்த முனைகளில் மட்டும் நடத்தப்பட்ட கொடூரங்கள் அல்லஸ அதன் முன்னரும், பின்னரும்கூட நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலைகள் அத்தனையும் சிங்களவர்களது வெற்றியின் குறியீடாக மகிந்தவால் நாள் குறித்துக் கொண்டாடப்பட்டது.
 
இன்றுவரை ஈழத் தமிழினத்தின்மேல் நிகழ்த்தப்பட்ட அதி உச்ச இன அழிப்பினை சிங்கள தேசம் கொண்டாடியே வருகின்றது.
 
இத்தனை கொடூரங்களுக்கும் மொத்தச் சொந்தக்காரனான மகிந்த ராஜபக்ச எப்படி அமெரிக்காவில் நடைபெற்ற 26 பேரின் படுகொலைக்காக இரங்கல் தெரிவிக்க முடியும்? இது தொடர் அபத்தங்களின் மொத்த வெளிப்பாடாகவே நோக்கப்படுகின்றது.
 
மகாவம்சக் கனவோடு, தமிழ் மக்கள்மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு குறித்து சிங்கள தேசம் எப்போதுமே வெட்கம் கொண்டதில்லை. இப்போதும் தொடர்ச்சியாக மீண்டும்ஸ மீண்டும்ஸ அதே கொடூரங்களை நிகழ்த்தி இப்போதும் சிங்கள வெறியாட்டத்தைத் தொடர்கின்றது.
 
தமிழினத்தின் மீதான கைதுகளும், கடத்தல்களும், சிறை வைப்புக்களும், படுகொலைகளும் அவர்களது மாறாத விதியாகவே உள்ளது.
 
அமெரிக்கப் படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு மகிந்தவின் மனதில் ஈரம் இருந்திருக்க எந்த வாய்ப்பும் கிடையாது. இந்தப் படுகொலையிலும் மகிந்த அரசியல் செய்வதற்கு முற்பட்டுள்ளார்.
 
இதன்மூலம், தனது தமிழின அழிப்புக்குச் சிறிது நியாயத்தை அந்தப் படுகொலைக்குள் தேட முயற்சிக்கின்றார்.
 
பயங்கரவாதம் என்ற அமெரிக்கச் சொல்லாடலைத் தமிழினத்தின் விடுதலை இலட்சியத்தின்மீது பொருத்தி ஒரு இன அழிப்பைச் செய்து முடித்த ராஜபக்ச, தன்மீது அமெரிக்கா கொண்டுள்ள அதிருப்தியினை இந்த ஒற்றைக் கடிதத்தின் மூலம் தணிக்க முயல்கின்றார்.
 
உண்மையிலேயே, மகிந்த சகோதரர்கள் மறைவாகவேனும் இந்தப் படுகொலைச் சம்பவத்தை ரசித்துக் கொண்டாடியிருப்பார்கள். பயங்கரவாதத்திற்கெதிரான தங்கள் நியாயப்படுத்தல்களை அமெரிக்கா புரிந்து கொள்வதற்கு இதுவும் வேணும்ஸ அவர்களுக்கு இன்னமும் வேணும்ஸ என்று கொண்டாடியிருக்கக்கூடும்.
 
ஈழத் தமிழினத்தின் மீதான இன அழிப்பை அப்படித்தான் கொண்டாடினார்கள். அதற்காக அவர்கள் ஒருபோதும் வெட்கப்படப் போவதில்லைஸ வருத்தம் கொள்ளப் போவதில்லைஸ இப்படியான சம்பவங்கள் மூலம் தங்களை நியாயப்படுத்துவதற்காக, இது தொடர வேண்டும் என்று புத்தனிடம் மன்றாடிக்கொண்டிருப்பார்கள்.
 
ஆனாலும், தமிழீழ மக்களுக்கு நிகழ்ந்த இன அழிப்புக் கொடூரங்களுக்காக இப்போதும் உலகின் மனச்சாட்சியுடன் போர் தொடுத்துள்ள புலம்பெயர் தமிழர்களும், தமிழக உறவுகளும்ஸ உலகத் தமிழினமும் சிங்கள தேசத்தின் நிம்மதியைக் கெடுப்பார்கள்ஸ அவாகளது கொடூரங்களை வெளிப்படுத்துவார்கள்ஸ
 
தமிழீழம் மலரும்வரை தமிழர்களது போராட்டங்கள் உலகின் ஒவ்வொரு திசையிலும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.
 
சிங்கள இனவாதம் இன்னமும் அதிக காலத்திற்கு உயிர்வாழ மாட்டாதுஸ அதை அழிக்காமல் ஒருபோதும், தமிழினம் உறக்கம் கொள்ளாதுஸ!
 
- சுவிசிலிருந்து கதிரவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.