Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறுக்கல்களின் கிறுக்கன்களாக.. இ(வர்)வைகளை நினைக்கும் போது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kagayaphoenix8jp.jpg

சுதந்திர வான் நோக்கி
தனிப் பறவையாய் நான்
இணைச்சிறகடித்து பறந்திட
மலரே உன்னை
மலர்ச் சிறகாக்கி
என்றோ என்
நினைவுச் சிலையில்
செதுக்கி வைத்தேன்...!

தோப்பிருந்து புறப்பட்டு
இலக்கு நோக்கிப் பறக்கும் வேளை
மலரே உன் நினைவு மட்டும்
மனதோடு இல்லைக் கண்டால்
அடிக்கும் என் சிறகும்
ஓய்தல் காண்கிறேன்
அதற்காய் நான் உன்னடிமையில்லை...!
உன் அன்புக்கு அடிமையாகி
உன்னினைவின் சக்தியில் பறப்பதாய்
மட்டுமே உணர்கிறேன் பார்...!
அதுவும் ஓர் நிலை உந்துசக்தியாக....!

நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுதி
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் அன்பு மட்டும்
எனைத் தாங்கும் கோலம் கண்டால்
மீண்டும் எழுவேன்...!
வேற்றுமையில்லா உன்னன்பு
போதுமடி என் சிறகுகள் இயங்க....!

தேவதையாய் அல்ல
சக தோழியாய் என்னருகிரு
தாயவள் பக்கத்துணை போல்
நீ வருவாய் எனும் நினைவிரு
உனக்காய் நானும் வாழ்வதாய்
சத்தியம் கூட வேண்டாம்...
உன் வார்த்தையில்
உன்னளவில் சத்தியம் வை
அது போதும்
நீயும் என் உறவாய்
என்னோடு சிறகடிக்க....!

மாயக் கோலம் போட்டு
புலக்கண்ணும் மனக்கண்ணும்
ஏமாற்ற நினைக்காதே....
பருவக் கோலம் காட்டி
புத்தி கிறங்கடிக்க எண்ணாதே...
பறவையாயினும் பதறாமல்
பண்பட்ட உள்ளம்
பசப்புகள் அறிந்தால்
உதிர்க்கும் உன் நினைவுச் சிறகும்
என்னைப் பலமாக்கும்
அறிந்து கொள் தோழியே....!

இப்போதே....
உண்மைக்கு உதாரணமாய்
என்னோடு வா....
அகிலத்தின் அன்பின்
போரொளி காட்டுறேன்
அதுவரை உற்சாகமாய்
என் சிறகுகள் அடித்தபடி
உனக்காயே நான்...!

 

யாழ் - Mar 14 2005 - படைப்பு எமது நட்புவட்டம்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப் பொறுக்கி குருவிகள்... :)

 

தீராநதி, உயிர்மை, காலச்சுவடு, கணையாழி இதழ்களில் வருகின்ற கவிதைகளை படித்து படித்து போர் அடித்து விட்டது. வித்தியாசமான புதிய முயற்சிகளை உள்ளடக்கிய கவிதைகள் தேடி கொழுவிகள் அலைந்தனர்.

அகப்பட்டது யாழ் இணையத்திலிருந்து சில பல நல்ல இதுநாள் வரை எங்கேனும் வாசித்தறியாத நல்ல கவிதைகள்.

மாந்தோப்பு என்ற இடத்திலிருக்கின்ற குருவிகள் என்னும் அதி உன்னத கவிஞன் எழுதிய கவிதைகளை படித்த மாத்திரத்திலேயே கொழுவிக்கும் குழப்பிக்கும் பிடித்து விட்டது.

மரபுக்கவிதை புதுக்கவிதை என கவிதைகளை பலவகையாக பிரிக்கலாம். ஆனால் குருவிகளின் கவிதைகளை மொத்தம் 30 வகையான பிரிவுகளில் வேறுபடுத்தலாம். இதுவே அவரது கவிதைகளின் சிறப்பும் ஆகிறது.

அவையாவன

ஆனாக் கவிதைகள், ஆவன்னா கவிதைகள் முதலான உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாம்.

ஆனாக்கவிதைகளிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையாக தரவேண்டும் என கொழுவியும் குழப்பியும் விரும்பினாலும் நல்ல இலக்கியங்களை படிக்க காத்திருக்கும் வலை மேய்பவர்களின் ஆவல் கருதி முழுவதையும் தர எண்ணுகிறோம்.

முதலில் ஒரு வானாக் கவிதை படியுங்கள்.

வாழ்வெனும் வீதியில் பயணம்
வழக்கங்கள் மாறா விதிகள்
வழமையானால் இல்லை அவதிகள்
வழமைக்கு மாறாய் விதிகள்
வடிவமைத்து வடிவாய் வாழினும்
வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!
வழமை நாம் விரும்பினும்
வழமைகள் மாற்றி
வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்
வந்தவை தரும் விபத்துக்கள்
வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்
வருமுன் காப்போம் விதிகள்...!

வந்த விதி வழி அப்பாவியாய்
வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்
வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்
வகை வகையாய் விபத்துக்கள்
வந்தவை எதுவும் புதிதல்ல
வருந்தவும் அங்கு இடமில்லை
வருந்த உன்னில் எதுவுமில்லை
வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்
வாடா உன் முகம் என்றும் வேண்டும்
வரமது தந்திடு அரு மலரே...!

வசந்தம் வந்த வேளையில்
வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்
வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்
வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே
வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை
வரும் என் கை உன்னை நாடியே..!
வரும் மரணம் கூட
வழி மறிக்கா
வகையான அன்பு வழி
வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை
வருத்தமின்றி வா
வகையாய் குதூகலிப்போம்
வான வீதியில் வாழ்ந்திடும்
வண்ணச் சிட்டுக்களாய்....!


வானாக்கவிதையின்
வனப்பிலே
வழிந்தோடிய
வளர் தமிழை (அடச் சே.. கொழுவிக்கும் குழப்பிக்கும் குருவிகளின் தாக்கம் இருக்கிறது) பருகிய நீங்கள் இனி குருவி எழுதிய ஒரு ஊனாக் கவிதை படியுங்கள்.

உதிர்ந்த வார்த்தையொன்று
உள்ளத்தைக் கிழித்தது
உண்மை அன்பு தேடி
உன்னை உண்மையாய் நாடி
உலகமே நீ என்று கண்டதற்கு
உன் காணிக்கை இதுதானா....??!
உண்மையாய் இக்கணம்
உலகமே வெறுக்கிறது
உன் நினைவு வாட்டுகிறது
உறக்கம் தொலைகிறது
உண்மை என்ன...?!
உன்னில் என்ன அவநம்பிக்கை
உன்னை ஊரே ஏய்க்குதோ
உன் கண்களை மறைக்குதோ..??!
உயிரே...
உனக்கொரு வேண்டுகோள்
உள்ளத்தில் நீயே முதலாய்
உன் வார்த்தைகளால்
உன் நிலை தாழ்த்தாதே...!
உண்மை அன்புக்கு
உலகில் இடமில்லை
உண்மை என்று உணர்ந்து
உலகை வெறுத்தவன்
உன் வார்த்தைகளால்
உண்மையில் உறுதியாகிறான்...!
உண்மைக்காய்
உறங்கி விழித்தவன் - இவன்
உளறுவதாய் என்னாதே - இன்னும்
உலகை உணர்கிறான்
உள்ளங்கள் உணர்கிறான்...!
உண்மையில் அன்பு
உன்னிடத்தில் உண்டா...??!
உலகில் உண்டா....??!
உண்டு
உன்னால் அதை
உள்ளம் கொண்டு தெளிக்கக் கூட முடியவில்லை
உண்மைக் காரணம்....
உண்மைகள் என்று
உலகம் உன்னை ஏய்ப்பதால்
உன்னை நீயே உணர மறுப்பதால்
உண்மைத் தேடல் இன்றி
உறுதி இழந்ததால்....!
உண்மையில் இவன்
உறுதியின் உறைவிடம் - இருந்தும்
உண்மை அன்புக்கு
உள்ளது அடைக்கலம்
உனக்கு மட்டுமே என்றும் அது...!


இனி நாங்கள் தரவிருப்பது குரவி எழுதிய ஒரு ஈனாக் கவிதை(ஈனக்கவிதை அல்ல).. ஈஈதோ..

இயற்கையை ரசித்தவன்
இன்பத்தை ருசித்தவன்
இருப்பவைக்காய் ஆசை வளர்த்தவன்
இழப்பதையே வெறுத்தவன்
இருளுக்குள் ஒளி தேடியவன்
இனிய விடியலுகாய் ஏங்கியவன்
இருப்பவர் எல்லாம் இன்பமாய் வாழ
இலட்சியம் வளர்த்தவன்
இனிய உலகுக்காய்
இனிய கனவு ரசித்தவன்
இனியவளே மலரே உன்
இதயத்தை அளந்ததும்
இயல்பை இழந்துவிட்டான்
இரவும் பகலும் உன் நினைவுகளால்
இந்து சமுத்திரமானான்
இயற்கை எங்கனும் உன்னுருவம்
இயல்பாய் வரையும் ஓவியனானான்
"இன்பத்துக்கு வழியெது
இனியவளின் வார்த்தையது"
இப்படியொரு தத்துவனானான்
இருப்பு இவனுக்கு வெறுப்பு
இன்று அதுவே கடமையாக்கினான்
இனிப்பாய் ஒரு வரி
இயல்பாய் அறியாதவன்
இன்று வரிகளில் தேன் சொரிகிறான்.....
இப்படி இப்படி எத்தனை மாற்றங்கள்
இவை எப்படி இவனுக்குள்
இன்னும் காரணம் அறிந்ததில்லை
இதன் மாயமும் புரியவில்லை
இருப்பவை எல்லாம் இன்பமாய்
இனியவளே உன் ரசிகனாய்
இவன் காண்பதெல்லாம் சொர்க்கமாய்
இவை பிரமையும் அல்ல
இன்றைய நிஜங்களாய்
இனிய நாளைய நினைவுகளாய்
இவன் இள மனதோடு பதிவாகுது
இவையே நாளை
இவன் வரலாறாகும்...!


நமது குருவிகள் லேசுப்பட்ட ஆள் இல்லை. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தொடத் தயங்கும் விடயங்களையும் எழுத்துக்களையும் தொடுவார். பின்னே.. பாருங்கள் அவர் ஒரு பேயன்னா (பேயன் அல்ல) கவிதையும் எழுதியுள்ளார்.

பேசா மலரே
பேசினாய் முதல் வார்த்தை
பேச்சிற்கு நாலு வார்த்தை
பேதைக் குருவியிவன்
போதை தீர....!
போ... மலரே
போன காலம் மெளனத்தால்
போனதே வீணா...
பேரன்பு உனை மலரவைக்க
போனதோ வீராப்பு
போனதை எண்ணி வருந்தி
பேசினாயோ அன்பு வார்த்தை..!
பேசியது தேனினும் இனிப்பாய்
பேசாச் செவிகூடச் சுவை அறிந்து
போதை கொண்டு
பேச்சுக்கு அடிமையாகிறது....!
பேசாமல் தொடர்வாயோ
பேச்செனும் அமுதம் தினமும் ஊட்டாயோ..??!
போதை எனித் தீராது
பேசியதும் இங்கினி
போகாது வீணே...!
பேதையெனினும் போதையெனினும்
போகும் அவை
பேதையிவன் மூச்சில் கலந்து...!
பேச்சின் மொழியும்
பேதையே உன் ஞாபகம் தந்து
போகும் இவன் இறுதி மூச்சுவரை...!
பேசியதை இங்கு பேசியதற்காய்
பேசாமல் பேசிடு என்ன
பேச்சதில் நீயும் மலர்வாய்
பேதையிவன் நெஞ்சில்
பேரழகு மலராய்...!


என்ன.. குருவிகளின் ஆனா ஆவன்னா கவிதைகளில் குளித்தீர்களா..? நல்ல இலக்கியங்களை படித்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டீர்களா?

மீண்டும் சந்திப்போம்.
பிற்குறிப்பு கவிதைகளின் முழு உரிமையுமும் குருவிகளுக்கே சொந்தம். ஆனாவை ஆவன்னா என்றோ ஊனாவை ஊவன்னா என்றோ மாற்ற யாருக்கும் அனுமதியில்லை.

 

இதோ பலரின் வேண்டுகளுக்கோளிற்கிணங்க குருவியின் ஆனா க் கவிதை.. மிகவும் அற்புதமான கவிதை இது.. படித்து பரவசம் அடையுங்கள்..

அகர வரிசை
அடுக்காக்கி
அன்பே
அமுதே
அழகே என்று
அடுக்கு மொழி பேசிலேன்
அன்னைக்கு அடுத்ததாய்
அகத்திலொரு
அணியாய் கொண்டேன்
அருகிருந்து நீ
அன்பு வளர்க்க - இன்று
அவதிப்படுகிறேன்..!
அழகிய மலராய்
அகிலம் வந்தாய்
அகத்திலும் வந்தாய்
அருகிருக்க மட்டும்
அனுமதி மறுக்கிறாய்
அன்பான உறவுக்கு
அவசரம் ஏனோ
அர்த்தமாய் கேள்வி கேட்கிறாய்...!
அவலம் இவன்
அன்பு தாழ் திறக்க
அவதிப்படுவது அறியாயோ
அருமலரே....!
அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ்
அன்று அரிவரியில்
அவசரமாய் உச்சரித்தது
அர்த்தமாய் இன்று
அதிர்கிறது மனத்திடலெங்கும்..!
அது கேட்டு
அரங்கேறத் துடிக்கிறது
அன்பான குருவியதன்
அருங்கவி..!
அது ஒரு ஜீவகவி
அர்த்தமில்லா ஆயுளதை
அர்த்தமாக்க
அன்பே நீ தந்த
அன்பின் அரிச்சுவடி
அணைத்தெடுக்க
அகத்தோடு அரும்பிய
அருமலர் - நீ
அறியாமல் அலம்பிய
அரும் வரிகள்
அருமையாய்க் கோர்த்தெடுக்க
அரும்பியது
அந்தக் கவி
அகிலத்தில் அது
அடங்காது ஆயுள் வரை..!
அன்பே உன்னைப் பிரியாது
அற்புதன் இவன்
அன்புக் கவி..!
அதுவே தாங்கும்
அற்புத ஆயுள் வரி
அது தரும் என்றும் - இவன்
அன்பின் மொழி...!

 

http://koluvithaluvi.blogspot.co.uk/2005/06/blog-post_06.html

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறுக்கல் என்ற பெயரில்.. 2005 காலப்பகுதியில் யாழின் நட்பு வட்டங்களின் கூட்டு முயற்சியில் தொகுக்கப்பட்ட ஒரு மின்னூல் மீண்டும் மீட்கப்படுகிறது..

 

poem-kirukal.jpg

 

இங்கு அழுத்தி கிறுக்கல் மின்னூலைப் படிக்கலாம்...

Edited by nedukkalapoovan

உங்களுக்கும் இதை மின்நூலாக்க உதவிய தமிழினிக்கும் நன்றிகள் பல.

 

 
இன்றைய படைப்புகளை அடுத்த தலைமுறைக்கும்  நகர்த்தி செல்ல நினைக்கும் உங்களது மனப்பாங்கு பாராட்டுக்குரியது. கண்ணகியை நினைக்கும்போது அக்கதையை தொகுத்த இளங்கோவை வாழ்த்துவது போல உங்களது தொகுப்பு நாளைக்கு யாருக்காவது முந்தைய கலாச்சார பண்பாட்டு கூறுகளை அறிய உதவக் கூடும்
  • கருத்துக்கள உறவுகள்



இப்பதான் விளங்குது நெடுக்ஸ் உங்கள் பிரச்சனை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் விளங்குது நெடுக்ஸ் உங்கள் பிரச்சனை :D

 

உங்களை மாதிரித்தான் இங்கையும் நிறையப் பேர் தப்புத் தப்பா விளங்கி வைச்சிருக்கினம். சோழியான் அண்ணா மட்டும் கொஞ்சம் பறுவாயில்லை.. அவரின்.. அணிந்துரையை ஒருக்கா வாசியுங்கோ..! :icon_idea::)

உங்களுக்கும் இதை மின்நூலாக்க உதவிய தமிழினிக்கும் நன்றிகள் பல.

 

 
இன்றைய படைப்புகளை அடுத்த தலைமுறைக்கும்  நகர்த்தி செல்ல நினைக்கும் உங்களது மனப்பாங்கு பாராட்டுக்குரியது. கண்ணகியை நினைக்கும்போது அக்கதையை தொகுத்த இளங்கோவை வாழ்த்துவது போல உங்களது தொகுப்பு நாளைக்கு யாருக்காவது முந்தைய கலாச்சார பண்பாட்டு கூறுகளை அறிய உதவக் கூடும்

 

நன்றி ஆதித்ய இளம்பிறையன்.. உங்கள் பாராட்டுக்கள் அந்த கிறுக்கல் தொகுப்பை ஆக்கிய.. தொகுத்த.. அணிந்துரை வழங்கிய.. படித்துப் பாராட்டி.. குறை நிறை சொல்லி.. ஊக்குவித்த.. உறவுகள் எல்லோரையும் சேர்வதே நியாயம். :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும். :)

 

முழுதும் படிக்கவில்லை படித்து விட்டு எழுதுகிறேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதில் பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும். :)

 

முழுதும் படிக்கவில்லை படித்து விட்டு எழுதுகிறேன்..

 

நன்றி ஜீவா.

 

நிச்சயம் இவற்றைப் படிக்கும் உங்களுக்கும்..  உடன்பாடும் எதிர்மறையும் இருக்கும் என்று நினைக்கிறேன். :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.