Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கு நாடுகளின் கலெண்டர், பருவகாலங்கள், மாயரின் கலண்டர்.

Featured Replies

மேற்கு நாடுகளின் கலெண்டர், பருவகாலங்கள், மாயரின் கலண்டர்.

 

மேற்கு நாடுகளின் கலண்டர் என்பதை விளங்கிக் கொள்வது அவ்வளவு ஒன்றுல் சிக்காலான விடையம் இல்லை. அதை விளங்கிவிட்டால் கலண்டரின் முதல் நாளும் முடிவு நாளும் அவ்வளவு ஒன்றும் பெரிய விசேடமான நாட்கள் அல்ல என்பதும் புலப்படும். மாயர்கள் தங்கள் கலண்டரை எதற்கு ஆக்கினார்கள் என்பது புரிவில்லை.  பூமியில் இருக்கும் உயிர்களை அவ்வளவு இலகுவாக அழிக்க முடியாது. எனவே மாயர்கள் எதாவது அழிவை பற்றி சொல்கிறார்களாயின் அதை மனித குலத்தினது அழிவு என்று மட்டும்தான் எடுக்கலாம்.  கலண்டர்களை விளங்கினால் மாயர்களின் கலண்டரில் காணப்படும் முடிவு நாளை மனித குலத்தின் முடி நாளாக விளங்க வைக்க தேவை இல்லை.

 

நாம் தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மேற்குநாடுகள் வருடப்பிறப்பு கொண்டாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதனால்தான் நமது வருடப்பிறப்பாக கொள்ளத்தக்க தைப்பொங்கள் என்றுமே ஆங்கில வருடப் பிறப்பாகிய ஜனவரியின் 1ம் திகதியின் இடத்தை அடைந்ததில்லை.  தைப்பொங்கள் ஒரு நாள் அல்ல. அது ஒரு பருவகாலத்தின் ஆரம்ப நாட்களை குறிப்பது. மாறாக ஜனவரி 1ம் திகதி ஒரு நாள். அது அன்றுடன் முடிந்து விடும்.

 

இந்த கலண்டர் முடிப்பு, தொடக்க சிக்கல் எப்படி மேற்கு நாடுகளுக்கு வந்ததென்றால், அவர்களின் இன்றைய கலாசாரம் அவர்களுடையது இல்லை என்பதிலிருந்து வருகிறது. அவர்களின் கலாச்சரம் அண்ணளவாக சுமேரியர், எகிப்தியர், கிரேக்கர், ரோமானியர் போன்றவர்களிடமிருந்து கடன் வாங்கியது. இதனால், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த இனங்கள் தாம் முன்னேறும் போது இயற்கையில் கண்டவற்றை தொகுத்து வைத்துவிட்டுப் போனபோது அதை கண்மூடிகளாக பின்பற்றிவந்த இந்த மேற்குநாட்டு கலாச்சாரம் இப்படியான பருவகால தொடக்கம், முடிவை, பழைய நாகரீகங்கள் எப்படி கண்டு பிடித்தார்கள் என்று அறியாமல் கலண்டர் தொடக்கம் முடிவாக மாற்றி அமைத்துவிட்டார்கள்.  இன்றைய கலாச்சாரம், இனி, தன்னைத்தான் இதிலிருந்து விடுவிக்க முடியாது. உதாரணத்திற்கு,  நீங்கள் உங்கள் தேவைக்கு வருடம் முழுவதும் தான் உழைக்க போகிறீர்கள். ஆனால் IRS வந்து வரிக்கு உங்கள் மடியைப் பிடிக்கப்போவது டிசெம்பர் 31 ஆகத்தான் இருக்கப்போகிறது. இதனால் இந்த "வருடம்" என்ற செயற்கையான அளவுகோல் நம் மனத்தில் மேலும் மேலும் ஆணி இறுக்கி அறையப்பட்டுகொண்டேதான் போகிறது. இந்தகைய கண்மூடி நம்பிக்கைகள்தாம் மேற்கு நாட்டவரை பூமி தட்டை என்றும் அத்திலாந்திக் சமுத்திரம் முடிய அதன் விழிம்பு வரை போவோர் நரகத்தில் விழுவார்கள் என்றும் ஒரு காலத்தில் நம்ப வைத்திருந்தது.

ஆனால் பூமி உருண்டை என்பது இன்று நமக்கு தெரியும். இதனால், பாதையை மற்றாவிட்டால், எத்தனை நாள்கள் எடுத்தாலும், பூமியில் நாம் ஒரு இடத்தில் இருந்து ஒரு பயணத்தை ஆரம்பித்தால் அதே இடத்திற்குதான் வந்து சேருவோம் என்பதும் நமக்கு நன்றாக விளங்குகிறது. இது துருவப்பகுதியிலிருக்கும்  சைபீரியாவில் என்ன, பூமத்திய ரேகையில் இருக்கும் தமிழீழத்தில் என்ன, மாறாத ஒரு உண்மை. நீங்கள் பயணத்தை அதி கிழக்கே இருக்கும் அவுஸ்திரேலியாவிலும் ஆரம்பிக்கலாம். இல்லை மேற்கில் இருக்கும் அமெரிக்காவிலும் ஆரம்பிக்காலம். பயணத்தை ஆரம்பித்த இடம் கிழக்கிலா அல்லது மேற்கிலா என்பதில் எதுவும் தங்காது. இது போன்றதுதான் இந்த வருடம் என்பதை காட்டும் கலண்டர் என்பதும். அது எந்த இடத்தில் ஆரம்ப்பிக்கிறது அதே இடத்திலியேயே வந்தும் முடிகிறது. அதாவது ஆரம்பமும் முடிவும் ஒன்றேயென்பதும், ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் இடையில் எந்தவகையான இயற்கையான வேறுபாடுகளும் இல்லை என்பதும் விளங்குகிறது.  எப்படி இந்த பூமி ஒரு உருண்டை, சூரியன் ஒரு உருண்டை சந்திரன் ஒரு உருண்டை என்பதும் அவர்கள் தங்களுக்குள் ஒன்றை ஒன்று சுற்றுவதும் ஒரு வட்டமோ(அல்லது நீள் வட்டமோ) அதே போன்றது தான் கலண்டரும் ஒரு வட்டமே. ஆதாவது இந்த கோள்கள் தம்மைத்தான் சுற்றுவதாலோ அல்லது, ஒன்றை ஒன்று சுற்றுவதாலோதான் கலண்டர் ஆகிறது.

நாலு பருவ காலங்களும் பூமி சூரியனை சுற்றும் போது வந்து வந்து போகின்றன.  பூமி என்று, எங்கே எப்படி சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது என்பது யாருக்கும் தெரியாது. அதாவது உண்மையான வருடத்தொடக்கத்தை எமக்கு தெரியாது. நாம் ஒரு நாளை எதோ ஒரு காரணத்துக்காக வருடத் தொடக்கமாக ஆக்கிவைத்துவிட்டு அதை கொண்டாடுகிறோம். மேற்கு நாட்டவர் மாரியில் தமது வருடத்தை ஆரம்பிக்கிறார்கள். இதை அவர்கள் மேற்கில் வருடா வருடம், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கொண்டாடிவிட்டு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிக்கு போய் பார்த்தார்கள். அங்கு வைட் கிறிஸ்மஸ் கொண்டாடி பழைய வருடத்தை முடித்து வைப்பதானால் புது வருடத் தொடக்கம் ஆறு மாதங்கள் பின்னால் போக வேண்டும் அல்லது முன்னால் போக வேண்டும். அது இல்லை என்றால்  அங்கு வைட் கிறிஸ்மஸ் கொண்டாடி வருசத்தை முடித்து வைக்க முடியாது. என்ன என்ன பருவகாலக் காரணங்களுக்காக மேற்கு நாடுகளுக்கு டிசம்பரில் பழைய வருடம் முடிந்து ஜனவரியில் புது வருடம் ஆரப்பிக்கிறதோ அதற்கு எதிரான பருவ காலங்களில் தான் அவுஸ்திரேலியாவுக்கு பழைய வருடம் முடிந்து புது வருடம் ஆரம்பிக்கிறது.

எனவே நாம் வருடத்தில் எந்த நாளிலும் இந்த செயற்கையான வருடத்தை ஆரம்பித்திருந்திருக்கலாம்; அல்லது முடித்திருந்திருக்கலாம். இதில் பெரிய பேதம் ஒன்றும் வந்திருந்திருக்காது. ஆனால், இன்றைய வருடத்தை, சில அழிந்து போன நாகரீகங்களில் இருந்து இன்றைய மேற்கு நாடுகள் கண்முடித்தனமாக பின்பற்றி வந்தது மட்டுமன்றி  தாம் உலகை பிடித்து ஆண்டபோது அதை உலகம் முழிவதும் திணித்தும் இருக்கிறார்கள். ஆனால் வேறு வேறு நாகரீகங்கள், சித்திரை வருடப்பிறப்பு, ஆடி வருடப்பிறப்பு, ஐப்பசித்தீபாவழி வருடப்பிறப்பு என்று வேறு வேறு வட்டாரங்களில் வருடப் பிறப்பை கொண்டாடினார்கள்.

பூமியில், ஒரு இடத்தில், ஏற்படும் வெப்பநிலை வேறுபாட்டின் இரு பிரதான காரணங்கள் பூமி தனது சுற்றுப்பதையில் சூரியனுக்கு கிட்டப்போவதும் அல்லது தூரப்போவதும், தான் 23 பாகைகள் சரிந்து நின்று தன்னைத்தான் சுற்றுவதுமே.  ஆனால் இந்த இந்த மாற்றங்கள் ஒன்றும் நாம் அடுப்பில் நெருப்பை பற்ற வைப்பது மாதிரியோ அல்லது அணைத்துவிடுவது மாதிரியோ திடு திடுப்பென நிகழ்வதொன்றும் இல்லை. குறைந்த பட்டசம் நாள்நாளாக நிகழ்வது கூட இல்லை. இந்த மற்றங்கள் ஒவ்வொரு மில்லி செக்கனும் மெல்ல மெல்லமாக மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. அதாவது, உதாரணத்திற்கு, நாம் கலண்டரில் பார்ப்பது போல ஒரு நாள் மாரி வருவதும் இல்லை. ஒருநாள் மாரி முடிவதுமில்லை. பூமி சூரியனை விட்டு அதிஉச்ச தூரத்தில் இருபதற்கு 1/8 ஆண்டு காலத்திற்கு முன்னரே மேற்குநாடுகளில் மாரி போன்றதொரு குளிர் உணரப்பட்டுவிடும். மேலும் அதிஉச்ச தூரத்திலிருந்து திரும்பத் தொடங்கியவுடன் குளிர் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்துவிடும். ஆனாலும் மேலும் ஒன்றை மாதத்திற்கு, மேற்கு நாடுகளில், மாரி போன்றதொரு குளிர்காலமே உணரப்படும். இங்கே நாம் கவனிக்க வேண்டியது, சூடு ஏறத்தொடங்கி ஒன்றரை மாத காலத்திற்கு நமது பருவகால உணர்வு மாற இடமில்லை. இப்பொது இலைதளிர் காலத்தின் குளிர்ப்பகுதியான முதல் ஒன்றரை மாதமும் ஆரம்பிக்கும். பூமியின்  23பாகை சரிவு இந்த மாற்றம் பூமி முழுவதும் ஒரே சீர் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. இதனால் அவுஸ்திரேலியாவுக்கு மாரி மேற்கு நாடுகளின் மாரி நேரம் வருவது இல்லை என்பது மட்டுமல்ல, அது போல் இயல்பிலும் அமையாது.

 

இவற்றை நாம் விளங்கிக்கொண்டால் உண்மையில் பூமி முழுவதற்குமான ஒரு நிகழ்வும் டிசம்பர் 31 லோ அல்லது ஜனவரி 1 லோ நடப்பது இல்லை என்பது விளங்கும். மேலும் நேற்று, இன்று, நாளை என்ற மூன்று நாட்களும் தமக்குள் தாம் மாரி, இலைதளிர், கோடை, இலையுதிர் என்ற பருவகால மாற்றத்தை காண்பதும் இல்லை. இந்த பருகால மற்றம் ஒரு நாளில் மாறாமல்  வருடம் முழுவதும் மெல்ல மெல்ல வந்து போகிறது.

 

கலண்டர் என்பது நமக்கு நாம் பாவிக்கும் ஒரு பருவகால அளவு கோலே. மனிதன் ஆரம்பிக்கும் கலண்டர் நாளில், இயற்கைக்கு எதுவும் ஆரம்பிக்கவும் இல்லை. முடியவுமில்லை. பூமியில் எல்லோருக்கும் ஒரே காலத்தில் பருவகாலங்கள் ஆரம்பிக்கவும் இல்லை முடியவும் இல்லை. அதாவது அமெரிக்க மாயர் தாயாரித்த கலண்டரை வைத்து அவுஸ்திரேலிய பழங்குடிமக்கள் விதைக்கவோ அறுக்க முடியாது.

 

பூமியில் பருவகாலத்தாக்கம், சூரியனால், ஆண்டு வகையில் மாற்றப்படுகின்றதென்பது  ஒரு உண்மைதான். ஆனல் பூமியில் உள்ள வாயு மண்டலம் இதில் பாரிய தாக்கத்தை காட்டக்கூடியது. வெறுமனே ஒரு இடத்து பருவகால மொன்றை கிழமைக் கணக்கில், முன்னாகவோ அல்லது தள்ளிபோடவோ பூமின் வளி மண்டலத்திற்கு முடியும். இதை எந்த கலண்டரும் காட்டுவதில்லை. IBM இன் சுப்பர் கொம்பூட்டர்கள் கண்டு பிடிக்கப்படும் வரை வளிமண்டலத்தின் தாகம் பருவகாலங்களுடன் எப்படி இணைக்கப்படலாம் என்பதை யாரும் சரியாக கணக்கு பார்த்திருந்ததில்லை.

 

எனவே மேற்கு நாடுகளுக்கு அதன் பருவகாலங்களை காட்ட வந்த கலண்டருடன் மாயரின் கலண்டரை தொடுப்பதில் ஒரு கருத்தும் கிடையாது. மாயர் தமது கலண்டரை ஏன் அப்படி ஆக்கினார்கள் என்பதை ஆராய முயலாமல் அது பூமியின் தொடக்கம்-முடிவைத்தான் காட்டுகிறது என்று முடிவெடுப்பதிலும் ஒரு கருத்தும் இல்லை. இன்றைய சுப்பர் கொம்பூட்டர் வரையும் கண்டு பிடித்திருக்கும் நமது விஞ்ஞானிகள் மாயரைவிட  நிச்சயமாக கூடத்தான் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நமக்கு அறிவு பூர்வமாக விளங்கிக்கொள்ள முடுடியாவிட்டால் எப்படி கண்மூடித்தனமாக பழைய நாகரீகங்கள் கண்டுபிடித்த கலண்டர்களில் நம்பிக்கை வைத்தோமோ அதே மனதுடன் இவர்கள் மீது நம்பிக்கை வைக்க தயாராக இருக்க வேண்டும். அப்போது மாயர்கள் தமது கலண்டரில் பூமிக்கு வைத்த அழிவு நாளை நம்புவதிலும் பார்க்க இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்கு போடும் அழிவுநாளை இலகுவில் நம்ப நமது மனம் இடம் தரும்.    

 

(we can’t predict if it’ll rain next week, but the Maya could predict a huge storm centuries in advance?),

 

Date With Destiny

The Maya were a clever bunch of folks. Their civilization got started several thousand years ago and reached its height by 900 A.D., spread over the Yucatan Peninsula in present-day Mexico. They had a sophisticated culture and were adept in agriculture and architecture. They had a complex written language and a keen system of mathematics. They were excellent astronomers, understanding the patterns of the stars and planets in the sky. And, of course, they had an advanced calendar. Several, in fact.

Keeping time is of paramount importance to any civilization. The Maya used different calendars for different purposes (we do too; there are fiscal calendars and monthly calendars and others that are arbitrary and headache-inducing, so don’t be too hard on the Maya). The calendar we’re interested in here is called the Long Count.

 

Your snarky host, at the Temple of Kukulkan in Chichen Itza.

Image credit: Your snarky host.

It had as its basic units a day (called a k’in) and a 360-day period called a tun. The Maya understood that a physical year was five days longer than a tun, and had other calendars to deal with that. They had longer units, too, like the ka’tun—just shy of 20 years—and most importantly for apocalypse aficionados, the b’ak’tun—roughly 394 of our years. The starting point for their calendar (Year Zero, if you like) is 3114 B.C., the date they figured the Earth was created.

Knowing all this, we can match their calendar to ours and convert any date they used to our more familiar system. If you do the math, you’ll find that we are nearing the end of the 13thb’ak’tun. In fact, it ends on Dec. 21, 2012.

That’s today. Friday. Cue the spooky music.

The thing is, there is no suggestion, not even a hint, in Maya writing that they thought the end of this current b’ak’tun had any connection to doomsday. It’s entirely possible it may have even been thought of as a time of celebration (just like we celebrate New Year’s Eve).

The Maya also had bigger units of time, including the piktun (which was either 13 or 20 b’ak’tun), and the alautun, which was—get this—63 million years! So it doesn’t sound like they were predicting the end of the world ever, let alone by this weekend.

Anyway, it hardly matters. Just like our calendar, theirs was based on cycles. At the end on a cycle, you reset all the current units and move the biggest one up a notch. It’s what we do on December 31: Reset to the first day of the first month, and increment the year by one. Happy New Year! Same thing with the Long Count. After the last day of the 13thb’ak’tun, they’d start over at the next one

 

ஆங்கில பகுதியின் மூலம் சிலேட்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

நான்  இரண்டு நாட்களுக்கு முன் யோசித்தேன் மல்லை கலண்டர் பற்றி எழுதுவோமோ என்று. பின் அந்த ஆர்வம் இல்லாததால் விட்டுவிட்டேன். இன்று பார்த்தேன் நான் எழுத நினைத்த பலவற்றை நீங்கள் எழுதியுள்ளீர்கள் நன்றி.

பல தகவல்களை தந்திருக்கிறியள் மல்லை . பிரபஞ்சவெடிப்பின் போதே காலக்கணிப்பு உருவாகிவிட்டது . பின்பு நாட்கள் , மாதங்கள் , வருடங்கள் என காலத்தை இலகுபடுத்தினான் மனிதன் . மாயனும் மனிதன்தான் . மனிதனே உருவாக்கிய காலத்தை எப்படி இன்ன காலவரையறைக்குள் ஓர் பாரிய அழிவு ஏற்படும் என்று இன்னுமோர் மனிதன் சொல்லுவான் ?? இணைப்புக்கு நன்றி .

  • தொடங்கியவர்

நன்றி சுமோ அக்காவுக்கும், கோவுக்கும் உங்கள் கருத்துக்களுக்கு. 

 

ஆச்சரியப்படத்தக்க விடையம் என்னவென்றால் அந்த நாட்களில், ஆராய என்றால் கையில் எதுவும் வசதிகள் இல்லாத காலத்தில், நிலத்தில் விழும் நிழலையும், வெறும் கண்ணையும் வைத்து அவ்வளவு உயர்வான வானிலை ஆராச்சிகள் செய்திருக்கிறார்கள். ஆனால் மேலைநாடுகளில் ஒரு தொலை நோக்கு கருவியே $25 வாங்கும் விளையாட்டுப் பொருளாக விற்கப்படும் போது 11% க்கு மேல் உலக அழிவை நம்புகிறார்கள் என்பதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.