Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது:- பிரதமர் உருத்திரகுமாரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது:- பிரதமர் உருத்திரகுமாரன்   
[Friday, 2013-01-04 11:47:38]
 
"நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயக வரம்பிற்குள்ளேதான் நடைபெறுகின்றன. அத்துடன் நமது அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒத்த பல அமைப்புக்கள் ஆரோக்கியமான முறையில் இயங்கிவருகின்றன. எனவே நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அறிதலுக்காக கூறிவைக்க விரும்புகின்றேன். எனினும் இலங்கை அரசாங்கத்தோடு இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த நாட்டிற்குள் நின்று செயற்படுவதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
  
ஆனாலும் தமிழீழம் என்னும் அடிப்படையில் நின்று விலகாமல் செல்லும் எமது அரசியற் செயற்பாடுகள் இன்னும் மேலோங்கி வளர புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தமது ஆதரவைத் தரவேண்டும். இலங்கையைத் தவிர ஏனைய நாடுகளில் நமது தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாக மற்றும் அரசியற் செயற்பாடுகள் திருப்தியான முறையில் நடைபெற்றுவருகின்றன என்பதையும் அண்மையில் மலேசியாவில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும் நமது பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள் என்ற மகிழ்ச்சியான விடயத்தையும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்"
 
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விஸ்வநாதன் உருத்திரகுமாரன் கடந்த ஞாயிற்றுக்க்pழமையன்று அமெரிக்காவின் பவ்லோ நகரில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்தார்.
 
மேற்படி கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் சபாநாயகர் திரு பொன்.பால்ராஜன்�� அமைச்சர் திரு நிமால் விநாயகமூர்த்தி உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஊடக நிறுவனங்களில் பிரதிநிதிகளும் பங்கு பற்றினர். கலந்துரையாடலில் பங்குபற்றி உரையாற்றுவதற்காக திரு உருத்திரகுமாரன் தான் வாழும் நியூயோர்க் நகரில் இருந்த நீண்ட பயணம் செய்து வந்திருந்தரர்.
 
மேற்படி அரசியல் கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
 
"எமது நாடு கடந்த அரசாங்கத்தையும் நமது புலம் பெயர் தமிழ் மக்களையும் பொறுத்தளவில் இந்த 2013ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டாகும் என்றே நாம் கருதுகின்றோம். 1983ம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட முதலாவது கொடூரமான இனப்படுகொலையான ஆடிப்படுகொலையில் 30வது ஆண்டை நாம் நினைவுகூரத் தயாராகிவிட்டோம்.. ஒரு நாட்டிற்குள் நாம் வாழ்ந்து கொண்டு அனுபவித்த துன்பங்கள் இனிமேல் போதும் போதும் என்றாகிவிட்டது. தமிழீழம்- ஸ்ரீலங்கா என்ற இரண்டு நாடுகள் அந்த இலங்கைக்குள் தோன்றினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். வுறழ ளுவயவந ளுழடரவழைn என்னும் இரண்டு தேசங்களின் மூலமான தீர்வு என்ற அடிப்படையில் நமது இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.
 
மேற்படி சிந்தனையின் அடிப்படையில் நமது தமிழ் மக்களின் மனித உரிமைகளையும் நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த இரண்டு தேசங்களின் மூலமான தீர்வை சர்வதேச இலங்கை அரசாங்கத்தின் மூலம் உறுதிப்படுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றே நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகின்றது.
 
மேலும் நாடுகடந்த அரசாங்கத்தின் ஒரு திட்டவரைபே மேற்படி இரண்டு தேசங்களின் மூலமான தீர்வு என்ற கோட்பாடு ஆகும். எனவே நமது நாடு கடந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களுக்கு அமையவே தனது செயற்பாடுகளை கொண்டு செல்கின்றது என்பதை நமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
 
ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகம் அவர்களுக்கும் பல்வேறு ஆலோசனைக் குழுக்கள் இயங்குகின்றன. அவற்றுள் இனப்படுகொலைகளுக்கு எதிரான குழு மிக முக்கியமானதொன்றாகும். மேற்படி இனப்படுகொலைகள் தொடர்பான குழுவின் முக்கிய பணிகள் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம். எனவே மேற்படி பணிகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம்; கேட்டுவருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே இலங்கையை குற்றவாளிக் கூண்டுக்குள் தள்ளி தகுந்த தண்டனை வழங்க ஏதுவாக அமையும்.
 
மேலும் இந்த 2013ம் ஆண்டு நமது நாடு கடந்த அரசாங்கம் நமது தாயக மண்ணில் துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் மாவீரர் குடும்பங்களில் 1000 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அந்த குடும்ப அங்கத்தவர்களின் மறுவாழ்pவுக்கு உதவும் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. மேற்படி திட்டத்திற்கு தேவையான நிதியைத் திரட்டுவதில் நமது நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள். மேற்படி திட்டம் வெற்ற்pகரமாக நடைமுறைப்படுத்தப்பட புலம் பெயர் தமிழர் சமூகம் தங்கள் ஆதரவைத் தரவேண்டும்" என்றார்.
 
மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் அங்கு சென்றிருந்த வர்த்தகப் பிரமுகர்களும் சமூக உணர்வாளர்களுமான திருவாளர்கள் ரொம் திருக்குமார் மற்றும் கிருபா கிருசாந்த் போன்றவர்கள் திரு உருத்திரகுமாரன் அவர்களிடம் பல கேள்விகளை முன்வைத்தார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் சார்பில் செயற்படுவதற்காக மக்கள் அங்கத்துவம் வகிக்கும் வாக்காளர் சங்கங்களை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அத்துடன் தென்சூடான் நாட்டில் அமைவதற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நாடு கடந்த அரசாங்கத்தின் தூதரகத்தை மிக விரைவில் நிறுவுவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு அங்கு சமூகமளித்திருந்த திரு ரொம் திருக்குமார் உட்பட பல வர்த்தக பிரமுகர்கள் முன்வந்து தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள்.
 
-ஆர். என். லோகேந்திரலிங்கம்-
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி பிரதமரே நம்ம ஊரில கம்பஸ் பொடியள புடிச்சு வைச்சிருக்கிறாங்கள் அதுபற்றி உலகணைத்திலுமுள்ள கல்வியாளர் மற்றும் கல்விச்சமூகம் பல்கலைக்க்ளகங்களது கவனத்துக்குச் சென்றடைய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இது எங்கட வேலை இல்லை என மாத்திரம் சொல்லக்கூடாது. எனக்குக் கெட்ட கோபம்வரும்.

Elugnajiru

Today, 07:12 AM

"அதுசரி பிரதமரே நம்ம ஊரில கம்பஸ் பொடியள புடிச்சு வைச்சிருக்கிறாங்கள் அதுபற்றி உலகணைத்திலுமுள்ள கல்வியாளர் மற்றும் கல்விச்சமூகம் பல்கலைக்க்ளகங்களது கவனத்துக்குச் சென்றடைய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இது எங்கட வேலை இல்லை என மாத்திரம் சொல்லக்கூடாது. எனக்குக் கெட்ட கோபம்வரும்."

கம்பஸ் பொடியளை எப்ப பிடிச்சது? ஏன் எங்கடை மந்திரிசபைக்கு இது தொடர்பாக முறையிடவில்லை?

இதன் பிரதியையும் நீங்கள் அனுப்பிய இமெயில் பிரதியையும் பிரதமருக்கும் ஒருக்கா அனுப்பிப் பாருங்கள்.  விடை கிடைக்கும்  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

"நாடு கடந்த தமிழீழ அரசின்" ஊடக சேவை இடைநிறுத்தமா ? "நாதம் ஊடக சேவை" இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இணையத்தளத்திற்குச் சென்றால் சொல்லுகிறது! என்ன நடந்தது ? ஏது நடக்கப் போகிறது ?முதலில் அதைப் பாருங்க பிரதமரே 

 

கனடிய எல்லையைக் கடந்து சென்ற நண்பர்கள் தொகை 12 பேர் வரை இருக்கலாம். அமெரிக்காவில் உள்ள தமிழ் பிரமுகர் ஒருவரைச் சந்தித்து அவர்கள் நேற்று உரையாடி இருந்ததாக ஒரு தகவல். பிரமுகர் அமெரிக்க அரசிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பரிந்துரைத்ததாக கனடியத் தமிழர்களுக்கு சொல்லியுள்ளார். சூடானிலே தூதரகம் என்று உலகத்தமிழ் மக்கள் புளகாங்கிதம் அடைந்த வரலாறும் சந்திப்பின்போது பேசப்பட்டது. எம்மிடம் காசில்லாததால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற சாட்டு பதிலாக வந்து விழுந்தது. 200 டொலர் செலவழித்து தென் சூடானில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்க முடியாதவர்கள் தமிழீழக் கனவை எப்படி சுமப்பார்கள் என்று நண்பர் ஒருவர் என்னிடம் எதிர்கேள்வி கேட்டார். இவர் பரிந்துரைக்காவிட்டாலும் அமெரிக்கா ஏற்கனவே தமிழ் தேசியக்கூட்டமைப்போடுதான் தொடர்புகளை வைத்துள்ளது என்று போடு போட்டார் இன்னொருவர்! 106 உறுப்பினர்கள் என்கிறார்கள். ஒருவர் பத்து டொலர் போட்டால் சூடான் விவகாரத்தை இலகுவாகக் கையாள முடியும். ஆனால் அடுத்த வருடம்; தேர்தல் வந்தால் கட்டுக் காசு 3000 டொலர்! தேர்தல் செலவு மேலும் 2000 டொலர்! எப்படி தாயகத்தில் துயருறும் மக்களைப் பாதுகாப்பது? சூடானில் தூதரகத்தைத் திறப்பது எப்படி ? ஆனால் தேர்தலை நடத்தாமல் மேலும் வருடங்களை இழுத்துச் செல்வதற்குத் திட்டங்கள் இடப்பட்டு விட்டது என்ற செய்திகளும் உள்வீட்டுக்கால் பின் கதவு வழியாகக் கசிகின்றது ?

 

அப்பிடியே இதையும் பாருங்கோ என்ன என்று . பாவம் நீங்க ஒரு பிரதமர் எப்பிடி தான் எல்லா பிரச்னையையும் சாமாளிக்கிறது? யாரங்கே ...............   

எமது பிரதமர், நியூயோர்க்கில் சட்ட அலுவலகம் வைத்திருக்கிறார். பல வருடங்களாக சட்ட ஆய்வாளராகவும் இருக்கிறார்.  பிரபல பல்கலைக்கழகமான ஹார்வர்ட் பல்கலைகழகத்திலும் படித்தவராம்.  இதுவரை, எந்த அமெரிக்க அரசியல்வாதிகளையாவது சந்தித்து தமிழீழத்தைப் பற்றி விவாதித்திருக்கிறாரா?   அதற்கான முயற்சிகளாவது மேற்கொண்டிருக்கிறாரா?

அவர்களின் அரசியல் யாப்பு.

 

தமிழில்:

 

http://thamil.govthamileelam.org/index.php/2012-04-04-02-04-01

 

 

 ஆங்கிலத்தில்:

http://www.govthamileelam.org/index.php/constitution-english

 

படித்து நீங்கள் பயன் பெறுவதோடு அவர்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்.  ஏனெனில் பிரதமரே யாப்பை சரியாக வாசித்தது போல் தெரியவில்லை.  பலநேரங்களில் முன்னுக்குப் பின் முரணான வகையிலேயே யாப்பைப் பற்றிப் பலரோடு உரையாடி வருவதாக அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசாங்க விநோதம் - தேர்தல் நடக்குமா?

 

ஆங்கிலத்தில் கொன்ஸ்ரிரியூஷன் என்ற பதம் தமிழில் யாப்பு என்று மொழி பெயர்க்கப்படுகிறது.

இனி விடயத்துக்கு வருகிறேன்,

நாடு கடந்த அரசாங்கம் அமெரிக்கா என்ற இணையத்தளத்தில்;

http://www.tgte-us.org

கீழுள்ள இணைப்பில்

http://www.tgte-us.org/constitution.html

இருக்கும் யாப்பில் அரசவையின் பதவிக் காலம் பற்றி கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அரசவையின் பதவிக் காலம்

• குறிப்பிட்ட தவணைக்காலத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் அந்த அரசவையின் தவணை முடியும்போது முடிவடைகின்றது.

இனி, நாடு கடந்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்று உரிமை கோரும் இணையத்தளத்தில்

http://thamil.govthamileelam.org/index.php/2012-04-04-02-04-01

காண்படும் யாப்பில் அரசவையின் பதவிக் காலம் பற்றி கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

1.4.4 அரசவையின் பதவிக் காலம்

ஒவ்வோர் அரசவையின் பதவிக்காலமும் அரசவையின் முதல் அமர்வில் இருந்து மூன்று

ஆண்டுகள் என்பதாக இருக்கும்.

இவை இரண்டில் எது உத்தியோகபூர்வ இணையத்தளம்? எது சரியான யாப்பு என்ற கேள்வி எழுகிறது? இவற்றை வைத்துப் பார்க்கும் போது தேர்தல் கூட நடக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

பிரதமர் பதில் தருவாரா இந்தக் கேள்விகளுக்கு?

கீழுள்ள படத்தில்,

http://youtu.be/0DtBpQUURxE

இடமிருந்து வலமாக நிற்கும் முதலாமவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். இவரையும் பிரதமரையும் தவிர ஏனைய மூவரது கைங்கரியங்களையும் ரொரன்ரோ வாழ் தமிழ் சமூகம் நன்கறியும்

இம்மூவரது ஆலோசனையும் கூட்டும் பிரதமருக்குக் கிட்டுமானால் ராஜபக்ச, வட கிழக்கிலிருந்து ராணுவத்தை வாபஸ் வாங்கிவிட்டு காலுக்கு மேல் கால் போட்டபடி “தமிழினம் அழிவதைக் கண்ணாரக் காணலாம்.”

Edited by பாகன்

கேள்வி கேட்பதற்கு தமிழன் என்ற வகையில் உரிமை உள்ளது .இருக்கட்டும் அதற்காக போட்டுத்தாக்காமல் குறைபாடுகளை உரிய முறையில் சுட்டி காட்டி உற்சாகப்படுத்தி முன் நோக்கி நகர வைப்பது ஒவ்வொரு தமிழ் மகனதும் கடமை .அது புலம் வாழ் மண்ணில் தமிழர்மேல் அக்கறை கொண்டு செயற்படும் எந்த அமைப்பாக ,குழுவாக இருந்தாலும் சரி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளிருந்து கேள்வி கேட்ட அமைச்சர்களையே பதவி விலக வைத்து விட்டார்கள். - நாங்கள் எம்மாத்திரம்? இவருக்கு எத்தனையோ பேர் எடுத்துச் சொல்லியாயிற்று அப்படியிருந்தும் கேட்பதாகத் தெரியவில்லை.

 

மேலே உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அனைத்துலகச் செயலகத்தின் முன்னைய பொறுப்பாளர் சர்வேயின் சொற்படியே பிரதமர் இயங்கி வருகிறார்.

 

அவர்களின் செயற்பாடுகளுக்குக் குந்தகம் விளைவிக்காதவாறு செயற்படுபவர்களை மட்டுமே இணைத்துச் செல்கிறார்கள், மற்றவர்களைச் சூழ்ச்சிகள் செய்து  வெளியேற்றி விடுகிறார்கள்.

 

நாடு கடந்த தமிழீழ அரசுடன் இணைந்து பணிபுரியப் பலர் தயாராக இருந்தபோதும், இவர்கள் தான் அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை.

 

இவர்களும் அனைத்துலகச் செயலகத்தின் இன்னொரு வடிவம் தான்.

Edited by பாகன்

இப்படியே ஆளுக்காள் கேள்வி கேட்டு பிரச்சனைகளைத் தாங்களே தீர்க்கிறோம் என்றுதான் அனியாயத்துக்கு லட்சக்கணக்கில் கொட்டிகொடுத்தாச்சு.இப்போ மலேசியாவில் 50,000 கேள்விக்குறியிலே நிற்கிறார்கள்.இனி இதையும் கெடுத்துவிட்டால் எங்களுக்கு சீனாகாரன் தான் மச்சான் சம்பந்தியெல்லாம்.இங்கே கனடாவில் இலங்கை ராணுவத்தினன் ஒருவன் வந்திருக்கிறான் என்று செய்தி போட்டு ஒரு வாரமாகிறது.ஒரே ஒரு பதிலுடன் நிற்கிறது.அதைப்பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை.தமிழனின் பிரச்சனை எதுவிதத்திலும் தீரக்கூடாது என்பது தான் எல்லோரின் குறிக்கோளும் என்பது வடிவாகத்தெரிகிறது.தமிழன் ஒன்று சேரப்போகிறான் என்பதற்காக ஒருவனை கொன்றுவிட்டார்கள்.இதிலேயே தெரிகிறது நாட்டின் மேலே உள்ள அக்கறை.

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114201

 

http://www.yarl.com/...howtopic=114014

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.