Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா கோபம் : நடுங்கிய விருதுக்குழு

Featured Replies

இங்கு இளையராஜாவுக்கும் விருது தரவுள்ளோம் என்று கூறாமல் அவரை அழைத்து சென்றவரில் பிழை உள்ளது. எனவே இளையராஜாவுக்கு கோபம் வருவது நியாயம். ஆனாலும் அதை தன்மையாக சொல்லியிருக்கலாம். சொன்ன விதத்தில் இளையராஜாவிலும் பிழை உள்ளது.

விருது தரவிருக்கிறோம் என்பதை கூறாமல் என்னை அழைத்தது தவறு. விருது தருவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். மற்றவர்களுக்கு விருது வழங்குவதற்காக தான் வந்தேன். எனவே இந்த விருதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது போல் கூறியிருக்கலாம்.

"இந்த விருதை நான் வாங்கிட்டு போய் பாதுகாக்கிற அளவுக்கு உங்க விருது பெருமைக்குரியதா... " என்ற கேள்வியை கேட்டிருக்க கூடாது. பெருமைக்குரிய விருது இல்லை என்று அவர் கருதியிருந்தால் அந்த விருதை மற்றவர்களுக்கு வழங்குவதற்கு கூட அவர் சம்மதம் தெரிவித்திருக்க கூடாது.

எனவே ஒட்டுமொத்தத்தில் இருவரிலும் பிழை உள்ளது.

நான் ரகுமானின் ரசிகை. இளையராஜாவின் பாடல்களிலும் பல பிடிக்கும். கடும் உழைப்பு இளையராஜாவிடம் அதிகம் உள்ளது. மற்றவர்களுடன் நல்லபடி பழகும் முறை ரகுமானிடம் அதிகம் உள்ளது.

உங்க கருத்தை வரவேற்கிறேன், இன்று 46 அகவையை கொண்டாடும் றஹ்மானுக்கு நல் வாழ்த்து சொல்வோமா?!!!

  • Replies 71
  • Views 6.5k
  • Created
  • Last Reply

வாவ்...!  என்ன ஒரு இசைஞானம்...!  உங்களை போல் இசை ஞானம் உள்ளவர்கள்  கருத்து களத்தில் இல்லை என்று ஒரு வருத்தம் இருந்தது அதை போக்கீட்டீங்க!!!

வாவ் என்ன ஒரு சந்தோசம் என் கருத்தை கிண்டல் அடிப்பதில்?

சரி  விளம்பரபடத்துக்கு இசை அமைப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த கதையை சொல்லுங்களேன்/?

ஒருவனை விழ்த்த என்று  ஒருவனை வளர்ப்பது  சுத்த பஞ்சோந்தித்தனம் .

இளையராஜா பாடிய பாட்டின் தொகையில்லை ஏ ஆர் ரகுமான் இசை அமைத்த படங்களின் என்னிக்கை.

முக்கியமானது   நான் எந்த ஒரு மேடையிலும் கூறவில்லை ஏ ஆர்   திறமையில்லாதவர் என்று.

உங்கள் வருத்தம் ( நோய் என்றும் சொல்லுவார்கள்)  அவசரப்பட்டு கருத்து கூறுவது.

வாவ்...!  என்ன ஒரு இசைஞானம்...!  உங்களை போல் இசை ஞானம் உள்ளவர்கள்  கருத்து களத்தில் இல்லை என்று ஒரு வருத்தம் இருந்தது அதை போக்கீட்டீங்க!!!

இது ஒரு தனிநபர் தக்குதலாக எடுத்துக் கொள்கிறேன்.

ஊத்திகிட்ட படங்களிலும் இளை யராஜாவின் பாட்டுகள் கேட்க்கஊடியதாக இருக்கும்
ஆனால் அந்த ரகுமானின் எந்த  பாட்டுகளுக்கும் ஆயுசு  ஒரு 6 மாதம்  தான்..
இளையராஜவின் பாடல்கள் படம் ஞாபகம் வராமலேயே கேட்கலாம்..
ரகுபான் அப்படியா? ரகுபானின் பாட்டுகள் சிவமணியின் drums களாலும் தான் புகழ் பெற்றது..
Rahmaan ஒரு music composser 
இளையராஜா ஒரு music God

இளையராஜா அந்த ***************** கூட்டத்துக்கே போயிருக்க கூடாது...

Edited by nunavilan

மணிரத்தினத்தின் முக்கிய பங்கு சொல்லி வேலையில்லை....மிண்டு குடுத்தவர் பாலச்சந்தர்......இளையராஜயாவினது வேலைப்பழுவின் சூழ்நிலை தெரியாமல் சூட்சி வேலை செய்தவர்கள்.

மணிரத்தினத்துக்கும்  இளசுக்கும் தளபதி படத்தோடு  முரன்பாடு, பாலசந்தரின் படத்துக்கு பின்னனி இசை அமைப்பதில்  லேட் ஆனதும் பெயரை மட்டும் போடலாமா என கேட்டத்தில் முரன்படு. வைஅரமுத்துக்கும் இளசுக்கும் பல விடயத்தில் முரன்பாடுகள்.

ஊத்திகிட்ட படங்களிலும் இளை யராஜாவின் பாட்டுகள் கேட்க்கஊடியதாக இருக்கும்

ஆனால் அந்த ரகுமானின் எந்த  பாட்டுகளுக்கும் ஆயுசு  ஒரு 6 மாதம்  தான்..

இளையராஜவின் பாடல்கள் படம் ஞாபகம் வராமலேயே கேட்கலாம்..

ரகுபான் அப்படியா? ரகுபானின் பாட்டுகள் சிவமணியின் drums களாலும் தான் புகழ் பெற்றது..

Rahmaan ஒரு music composser 

இளையராஜா ஒரு music God

இளையராஜா அந்த....... கூட்டத்துக்கே போயிருக்க கூடாது...

இளைசின்  அன்னக்கிளி உன்னை தேடுது பாடலை இப்பொதும் கேக்கலாம் ஆதே போல்  நீ தானே பொன்வசந்தத்தில் வந்த   * என்னொட்டு வா வா என்று சொல்லை  எப்போதும் கேக்கலாம்* 

Edited by nunavilan

இசை, திரைப்படம் எல்லாம் - ஒரு பொழுது போக்கிறேகே  :D 
அதை கடவுள் போன்று தலையில் வைத்த சமுதாயம் முன்னேறிய வரலாறு இல்லை  :o

.

இது ஒரு தனிநபர் தக்குதலாக எடுத்துக் கொள்கிறேன்.

இதில் என்ன தனிமனித தக்குதல் இங்கைஇருக்கு சசி???

ரஹ்மானின் எந்த பாட்டும் நிழல்கள் படத்தில் வரும் ஓரூ பாட்டுக்குமே ஈடாகாது.
யாருக்காவது நிழல்கள் படத்தை ஞாபகம் இருக்குமா? ஆனால் அதில் உள்ள பாட்டுகளை மறக்க முடியுமா?
அது எதனால்? இசையால் தானே? ரஹ்மான் அதற்கு இசை போட்டிருந்தால்..எப்படி இருந்திருக்கும்? 

Edited by nunavilan

பூங்கதவே தாழ்திறவாய்? :D

இசை, திரைப்படம் எல்லாம் - ஒரு பொழுது போக்கிறேகே  :D 

அதை கடவுள் போன்று தலையில் வைத்த சமுதாயம் முன்னேறிய வரலாறு இல்லை  :o

இசையும் பொழுதுபோக்கு அம்சங்களும் சமூகத்தின் கொண்டாட்டங்களுடன் சம்மந்தப்பட்டது. கொண்டாட்டங்களை இழந்த சமூகத்தில் எந்த அழகும் இருக்காது. அதற்கு நல்ல உதாரணம் நாங்கள்.

அக்கூதா: எங்கள் கடவுள் வழிபாட்டில் இசை ஒரு முக்கிய இடத்தில் உள்ளது....எங்கள் சமுதாயத்தில் கலைகளுக்கு முக்கிய இடமுண்டு..கலை மனிதனை பண்படுத்துகிறது..ஆகவே கலையை படைப்பவன் இறைவன்..
நாங்கள் அழிப்பவர்களையுமே (சிவபெருமானை சொன்னேன்) கும்பிடுபவர்கள்

"பூங்கதவே தாழ்" இதற்கு அந்த ரஹ்மான் போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்

எப்போதும் "மடை திறந்து" is the all time best

இசையும் பொழுதுபோக்கு அம்சங்களும் சமூகத்தின் கொண்டாட்டங்களுடன் சம்மந்தப்பட்டது. கொண்டாட்டங்களை இழந்த சமூகத்தில் எந்த அழகும் இருக்காது. அதற்கு நல்ல உதாரணம் நாங்கள்.

எமது இனத்தில் வரலாற்று ரீதியாக பலவேறு விதமான கலை, கலாச்சார  அம்சங்கள் இன்றும் உண்டு. நாட்டுக்கூத்து தொடக்கம் தாலாட்டு பாடல் வரை புலிகளின் விடுதலை பாடல்கள் தொடக்கம் தமிழர்

இலக்கியம் வரை எம்முடம் இன்றும் இணைந்து நிற்கும் அழகு காவியங்கள்.

சினிமா என்பதில் தமிழ் பலவேறு கலாச்சார மோகங்களுக்குள்ளும் சிக்குண்டு அழிந்து செல்கின்றது.

அடுத்த நேர சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்கள் கூட சினிமாவை முதல்நாள் பார்க்கும் அழகில்லாத சமுதாயமாக மாறி வருகின்றோம்.

ஐயோ, நான் இசைஞானியின் இசையை குறை சொல்ல வில்லை! அவர் வாழும் காலத்திலேயே ஒருத்தன் அவரை மிஞ்சி விட்டான் என்று சொல்கிறேன், இது நான் இசைஞானியை குறைத்து மதிப்பிடுவதாய் உங்கள் மனதுக்கு பட்டால் அது உங்கள் தவறு!!!

Edited by r.raja

உண்மைதான் அகூதா...!!!

ராஜா: நீங்க சொல்லுறத பார்த்தா ரஜனி சிவாஜி கணேசனை நடிப்பில் முந்தின மாதிரியா?

ரஹ்மானின் எந்த பாட்டும் நிழல்கள் படத்தில் வரும் ஓரூ பாட்டுக்குமே ஈடாகாது.

யாருக்காவது நிழல்கள் படத்தை ஞாபகம் இருக்குமா? ஆனால் அதில் உள்ள பாட்டுகளை மறக்க முடியுமா?

அது எதனால்? இசையால் தானே? ரஹ்மான் அதற்கு இசை போட்டிருந்தால்..எப்படி இருந்திருக்கும்? கிளிஞ்சுருக்கும்

இன்று றஹ்மானுக்கு 46 வயது அவன் இசையில் எத்தனையோ சாதனை படைத்து இருக்கார் நானும் அவனின் வயதில் இருந்தும் அவன் அளவிற்கு எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருக்கு, சரி எனக்கு அந்த திறைமை இல்லா விடினும் அந்த திறைமை உள்ளவனை வாழ்த்துவோமே!!!

ராஜா: நீங்க சொல்லுறத பார்த்தா ரஜனி சிவாஜி கணேசனை நடிப்பில் முந்தின மாதிரியா?

சுத்தம்!!! இனி நீங்க இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு!

ஐயோ, நான் இசைஞானியின் இசையை குறை சொல்ல வில்லை! அவர் வாழும் காலத்திலேயே ஒருத்தன் அவரை மிஞ்சி விட்டான் என்று சொல்கிறேன், இது நான் இசைஞானியை குறைத்து மதிப்பிடுவதாய் உங்கள் மனதுக்கு பட்டால் அது உங்கள் தவறு!!!

வில்லங்கமே இதுதான். தமிழக இசைப்பயணத்தில் அப்படி மிஞ்ச முடியாது. இளையராஜா தனக்கு முன்னோர்கள் நடந்த தடத்தை எப்போதும் நினைவு கூருவார். அதை மிக ஆழமாகக் கூறுவார். அவரால் எக்காலத்திலும் முன்னோர்களை விட தான் மிஞ்சி விட்டதாக கருத முடியாது. அதே போல்தான் ரகுமானும். இளையராஜா ஒரு தளத்தில் இருந்து என்னுமொரு தளத்திற்கு தமிழிசையை நகர்த்திய பெரும் உழைப்பாளி. அவர் நகர்த்திய தளத்தின் மீதே ரகுமானின் இசைப்பயணம் ஆரம்பிக்கின்றது.

வயற்காடுகளிலும் உழைக்கும் மக்களிடமும் இயற்கையோடு ஒட்டியிருந்த இசையை ஒரு மேம்பட்ட இடத்திற்கு நகர்த்திய இளையராஜாவை அவ் மேம்பட்ட தளத்தில் இருந்து இசைப்பயணத்தை ஆரம்பித்த ஒருவன் மிஞ்சிவிட்டான் என்று சொல்வதை விட கூட்டிக் குறைத்து மதிப்பிட வேறு என்ன இருக்கின்றது. தவிர நாம் ஒரு தனித்த சமூகமாக ஈழத்தமிழ்சமூகமாக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமானது.

ராஜா: சண்டமாருதன் சொல்லுறது உங்களுக்கு விளங்குதா?

நீங்க சொல்லுற லாஜிக் படி பார்த்தா ரஜனி, சிவாஜியை சிவாஜியின் காலத்திலேயே முந்திவிட்டார் தானே..சிவாஜியை வைத்தே படமெடுக்க யோசிக்கும் கோலிவுட் ரஜனியின் காலில் வீழ்ந்து கிடந்தது..போதாது என்று எல்லா வாரபத்திரிகைகளும் ரஜனிக்கு ஜால்ரா

எமது இனத்தில் வரலாற்று ரீதியாக பலவேறு விதமான கலை, கலாச்சார  அம்சங்கள் இன்றும் உண்டு. நாட்டுக்கூத்து தொடக்கம் தாலாட்டு பாடல் வரை புலிகளின் விடுதலை பாடல்கள் தொடக்கம் தமிழர்

இலக்கியம் வரை எம்முடம் இன்றும் இணைந்து நிற்கும் அழகு காவியங்கள்.

சினிமா என்பதில் தமிழ் பலவேறு கலாச்சார மோகங்களுக்குள்ளும் சிக்குண்டு அழிந்து செல்கின்றது.

அடுத்த நேர சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்கள் கூட சினிமாவை முதல்நாள் பார்க்கும் அழகில்லாத சமுதாயமாக மாறி வருகின்றோம்.

இன்று ஒன்றும் இணைந்து நிற்கவில்லை. இந்த வரலாற்றுக் கூறுகள் எல்லாம் எம்மாலே நிராகரிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் அவர்களிடம் இருந்த கலாச்சார பண்பாட்டுக்கூறுகள் மக்கள் வாழ்வியல் சினிமா ஊடாகவேனும் கொஞ்சமேனும் தக்கவைக்கப்படுகின்றது. காலத்துக்கேற்ப தக்கவைக்கக் கூடிய நிலையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள். இலங்கைத் தமிழர்களுக்கும் 99 வீதம் தமிழக பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டாட்டங்கள்தான் ஆதராம். அவற்றின் பின்னே தான் நிற்கின்றோம். இல்லை எங்கட என்று தனித்து பிரிக்கவெளிக்கிட்டால் நாட்டுக்கூத்து இருந்தது தாலாட்டு இருந்தது என்று எழுதிக்கொண்டு மட்டும் இருக்கலாம். அதுதான் உங்கழுக்கு அழகாச்சே !

இன்று ஒன்றும் இணைந்து நிற்கவில்லை. இந்த வரலாற்றுக் கூறுகள் எல்லாம் எம்மாலே நிராகரிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் அவர்களிடம் இருந்த கலாச்சார பண்பாட்டுக்கூறுகள் மக்கள் வாழ்வியல் சினிமா ஊடாகவேனும் கொஞ்சமேனும் தக்கவைக்கப்படுகின்றது. 

இன்னரும் அதிகமாகவே தக்கவைத்திருக்கலாம் சினிமா என்ற மோகத்திற்குள் முழுகி இருக்காது விட்டிருந்தால்.

ஆம் இப்படி கூறுபவர்கள் தமிழகத்தில் அரசியலில் நிறையவே உண்டு. அதனால் தான் தமிழகம் இன்று தமிழர்களுக்காக எதுவுமே செய்யமுடியாத நிலையில் உள்ளது.

 காலத்துக்கேற்ப தக்கவைக்கக் கூடிய நிலையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள். இலங்கைத் தமிழர்களுக்கும் 99 வீதம் தமிழக பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டாட்டங்கள்தான் ஆதராம். அவற்றின் பின்னே தான் நிற்கின்றோம். இல்லை எங்கட என்று தனித்து பிரிக்கவெளிக்கிட்டால் நாட்டுக்கூத்து இருந்தது தாலாட்டு இருந்தது என்று எழுதிக்கொண்டு மட்டும் இருக்கலாம். அதுதான் உங்கழுக்கு அழகாச்சே !

  செயலாளர் நாயகம் போன்ற எங்களுக்குள் உள்ள அழுக்குகளை மட்டுமே கண்டு கொண்டு வாழ்த்தும் ஆளேச்சே  நீங்கள். உங்களுக்கு எங்கள் கலை பற்றியோ இல்லை கலாச்சாரம் பற்றிய முதலைக்கண்ணீர் கூட வராது!

வில்லங்கமே இதுதான். தமிழக இசைப்பயணத்தில் அப்படி மிஞ்ச முடியாது. இளையராஜா தனக்கு முன்னோர்கள் நடந்த தடத்தை எப்போதும் நினைவு கூருவார். அதை மிக ஆழமாகக் கூறுவார். அவரால் எக்காலத்திலும் முன்னோர்களை விட தான் மிஞ்சி விட்டதாக கருத முடியாது. அதே போல்தான் ரகுமானும். இளையராஜா ஒரு தளத்தில் இருந்து என்னுமொரு தளத்திற்கு தமிழிசையை நகர்த்திய பெரும் உழைப்பாளி. அவர் நகர்த்திய தளத்தின் மீதே ரகுமானின் இசைப்பயணம் ஆரம்பிக்கின்றது.

வயற்காடுகளிலும் உழைக்கும் மக்களிடமும் இயற்கையோடு ஒட்டியிருந்த இசையை ஒரு மேம்பட்ட இடத்திற்கு நகர்த்திய இளையராஜாவை அவ் மேம்பட்ட தளத்தில் இருந்து இசைப்பயணத்தை ஆரம்பித்த ஒருவன் மிஞ்சிவிட்டான் என்று சொல்வதை விட கூட்டிக் குறைத்து மதிப்பிட வேறு என்ன இருக்கின்றது. தவிர நாம் ஒரு தனித்த சமூகமாக ஈழத்தமிழ்சமூகமாக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமானது.

இங்கு நாம் கருத்தாடுவது இசையை பற்றி, சோ...! இங்கு தமிழ் ஈழசமூகத்துக்கும் என்ன சம்பந்தம்? சும்மா மொட்ட தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சு போடா

தீங்க!!!

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ...ஆஹா அமர்க்களம் 
இது தான் தமிழனின் குணம் .எங்கே என் கருத்தில் A.R  ரஹ்மானிட்கு மட்டும் தான் இசையமைக்க முடியும் என்று கூறியிருந்தேன் 

அவர்களின் குணங்களை  மட்டும் தான் ஒப்பிட்டிருந்தேன் . 

இக்காலத்தில் நான்கூடப் பாடலாம்..  :D சுருதியை மென்பொருளில் சரிசெய்துவிடுவார்கள்..! என்ன.. கொஞ்சம் அதிகப்படியான வேலையாக இருக்கும்..  :D

ரகுமான் முதற்கொண்டு இப்போது பலர் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவதன் சூட்சுமம் இதுவே.

அது சரி இசைக்கலைஞன் 

இப்படி மென் பொருள் இசையமைப்பாளர் A.R ரஹ்மான் எப்படி திலீப் குமார் எனும் பெயரில் இளையராஜாவிடம்  KEYBOARD இசைகலைஞ்சராக 

இருந்தார்  இவர் ஒரு மென்பொருள் இசையமைப்பாளர் என்பது கூட தெரியாதவரா இசைஞானி 
இசைஞானி இசையில் கோபுரம் ஆனால் அவரில் குறையிருக்கிறது .அதனை இசையின்பெயராலோ  அல்லது திறமையின் பெயராலோ மறைக்க முடியாது 
மற்றும்படி இசைஞானி யும் இசைப்புயலும் மோதுவது அவர் அவர்களின் இரசனை சம்மந்த்தப்பட்டது 
உதாரணம் : james Bond கதாபாத்திரம் 
பழையவர்களிடம் கேட்டால் SEAN CONNERY ஐ தவிர சிறந்த நடிகர் இல்லை என்பார்கள். அது அவர்கள் பார்த்து பழகிய கதாபாத்திரம் 
எங்கள் காலத்தினரிடம் கேட்டால் PIERCE BROSNAN போன்று பொருத்தமானவர்கள் இல்லை என்போம் .
புதியவர்கள் DANIEL GREIG ஐ பார்க்கிறார்கள் இன்னும் சில காலத்தில் அவர்கள் GREIG  போன்று ஒருவர் இல்லை என்பார்கள் 
அது அவர்களின் காலத்தை பொறுத்தது . ஆனால்  நாம் இவர்கள் மூவரையும் ஒப்பிடலாம் ஆயிரம் குறைகள் கண்டுபிடிக்கலாம் 
  • கருத்துக்கள உறவுகள்
அது சரி இசைக்கலைஞன் 

இப்படி மென் பொருள் இசையமைப்பாளர் A.R ரஹ்மான் எப்படி திலீப் குமார் எனும் பெயரில் இளையராஜாவிடம்  KEYBOARD இசைகலைஞ்சராக 

இருந்தார்  இவர் ஒரு மென்பொருள் இசையமைப்பாளர் என்பது கூட தெரியாதவரா இசைஞானி 
இசைஞானி இசையில் கோபுரம் ஆனால் அவரில் குறையிருக்கிறது .

Keyboard அறுபதுகளிலேயே வந்துவிட்டது. ஆனால் மென்பொருள் இசை வந்தது தொண்ணூறுகளில். அதை முதலில் அறிமுகப்படுத்தியவர் இளையராஜாவே.. (கவிதை கேளுங்கள் பாடல்).. ஒருங்கிணைத்தவர் திலீப்குமார்.. :D

மென்பொருள் இசையில் நீங்கள் எதையும் ஆக்க வேண்டியதில்லை. பலவிதமான மென்பொருட்கள் இருக்கின்றன. அவை உங்களுக்கு பல மெட்டுக்களையும், இசைத்துண்டுகளையும் தந்துகொண்டிருக்கும். தாளத்திற்குப் பல வகையான துண்டுகள்..! உங்களுக்கு இசைஞானம் இருந்தால் இவற்றை நன்கு உபயோகிக்கலாம்.

இளையராஜாவில் குறையிருக்கிறது என்கிறீர்கள். அவரின் தனிப்பட்ட குணத்தை என நினைக்கிறேன். எனக்கும் அவர்மீது குறையிருக்கிறது. ஆனால் அது நீங்கள் குறிப்பிடும் தலைக்கனம் அல்ல.

நான் ஒரு தனிமனிதனாக எனக்கான நடத்தை நெறிகளைப் போட்டுக்கொள்ள முடியும். அது எனது சுதந்திரம். அடுத்தவரைப் பாதிக்காதவரையில் அது சரியே. என்னைப் பிடிக்கவில்லையென்றால் என்னிடம் யாரும் வரமட்டார்கள். :D ஆனால் இளையராஜாவுக்கு எழுபது வயதிலும் வேலைப்பளு உள்ளது.

எனக்கு அவர்மீது உள்ள குறை என்னவென்றால், தற்கால இசையை அவர் குறை சொல்லும்போது முதலில் அவர் வீட்டில் இருக்கும் யுவனை யோசிக்க வேண்டும். :wub: இக்காலப் பாடகர்கள் குறித்துப் பேசும்போது பவதாரணியையும் யோசிக்க வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களை வரவேற்கிறேன்

இசை

இப்படி எல்லாப்பக்கத்தையும் ஆராய்ந்து எழுதுபவர்கள் யாழில் குறைவாகவே இருக்கிறார்கள்

நீங்கள் நிச்சயமாகவே இதில் விதிவிலக்கு  

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா வின் கர்வம் தான் இது.

சினிமா விருது நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதும் விருதுகள் தருவதும் புதிதல்லவே. கெளரவ விருதுகள் அளிப்பதும் புதிதல்லவே. ஆனால் வழங்கிய விருதை தரக்குறைவாக (அது அப்படி இருந்தாலும் கூட) அந்த விழா மேடையில் வைத்து விமர்சிப்பது இளையராஜாவின் கர்வம்.. மட்டுமே..!

மாறாக நாசூக்காக இந்த விருதை வாங்கியும் வாங்காமலும் விட்டுச் சென்றிருக்கலாம் இளையராஜா. எதுஎப்படியோ.. இது அவருடைய சொந்தப் பிரச்சனை. இதில நாங்கள் அவருக்கு வகுப்பெடுத்து.. அவர் கேட்கப் போறாராக்கும்..! :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.