Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழிய புங்கையாரே வாழியவே!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்வில் முதிர்ச்சியுடைய புங்கையூரானின் பதிவுகள் ஒவ்வொன்றையும் இரசித்து வாசிப்பதுண்டு.

தொடர்ந்து எழுதுங்கள் புங்கையூரான், உங்கள் எழுத்துக்கள் பயனுள்ளவை.

 

நன்றிகள், இணையவன்!

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம், எழுத முயற்சிக்கிறேன்!

யாழ் களத்தில் பல சுய ஆக்கங்களை பதிந்து தனக்கென முத்திரை பதித்த புங்கையூரான் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட வாழ்த்துகின்றேன்.

 

வாழ்த்துக்களுக்கு நன்றிகள், கிருபன்!

 

யாழ்களத்தில் உள்ள மிகச் சிறந்த, யதார்த்தமான ஒரு கருத்தாளர் நீங்கள்!

 

நான், லண்டனில் வாழ்ந்த காலங்களில், உங்களை அறிந்திருக்கவில்லையே, என்ற ஏக்கம் இன்னும் எனக்கு உண்டு!

  • Replies 93
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

5000_zps61f225fd.gif

இனிய வாழ்த்துக்கள் புங்கையூரான். களத்தில்... தேடி வாசிக்கும் பதிவுகளில், உங்கள் பதிவுகளும் அடங்கும். உங்கள் சேவை... யாழுக்குத் தேவை. :) 

 

உங்கள் வாழ்த்துக்களுக்கு, மிகவும் நன்றிகள், தமிழ் சிறி!

 

எனக்கு யாழ் களத்தில் பிடித்ததே, இருவருள், யார் மூத்தவர் என்ற விவாதம் தான்! :D

 

சபாலிங்கம் ஒருக்காக் குமாரசாமி ஹோலிலை இருந்து, ரோட்டைக் கடந்த போது, சைக்கிள்ள வந்து , அவற்றை தலையில குட்டிப்போட்டு ஓடின ஆள், நீங்கள் தானென்று, எனது உள்மனம் கூறுகின்றது! :D

வாழ்த்துக்கள் புங்கையூரான்!!!!!தொடரட்டும் தங்கள் சேவை!!!!!!!

 

நன்றிகள், புலவர்!

 

தமிழ் மீதும், அதன் வரலாறு மீதும் அதீத பற்றுக்கொண்டவர் நீங்கள்!

 

இடைக்கிடை என்றில்லாமல், அடிக்கடி வாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

புதிய எழுத்தாளர்களை வரவேற்பதிலும், ஊக்கபடுத்துவதிலும் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை. எனது ஆக்கங்களில் கூட உங்களின் கருத்தை நான் மிகவும் எதிர்பார்ப்பேன். கருத்தை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் முதிர்ச்சியாகவும் கூற கூடிய வல்லமை உங்களிடம் உண்டு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

 

நன்றிகள், பகலவன்!

 

உங்கள் பதிவுகளை, வாசிக்க முதலே, சிரிப்புத் தானாக வந்துவிடும்!

 

அந்த அளவுக்கு, உங்கள் எழுத்துக்களின் வீச்சு இருக்கும்!

 

உங்கள் வேலையின் நிமித்தம், உலகின் பல இடங்களுக்குப் பயணிக்கும் நீங்கள், மால்ராவைப் போன்ற பயணக் கட்டுரைகளை, நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்!

வாழ்த்துகள் புங்கையூரான்,

 

 

நன்றிகள், வந்தி!

 

களத்திற்கு நீங்கள் புதியவராக இருந்தாலும், உங்கள் எழுத்துக்கள், மிகவும் முதிர்ச்சியுடயவை போன்று தெரிகின்றன! 

 

தொடர்ந்து எழுதுங்கள்!

நீங்கள் கூறியவை,சற்று மிகைப்படுத்தப் பட்டவை!

 

எனது வயதில் குறைந்தவர்களை,இளைய தலைமுறையைச் சந்திக்கும்போது, நான் அடிக்கடி கூறுவதை, மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றேன்!

 

இது கூட உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. :D

உங்கள் பெருந்தன்மை குணம் பற்றி கூறாமல் விட்டு விட்டேன். இவ்வாறு எழுதி நினைவு படுத்தி விட்டீர்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...
யாழ் உயர்ந்து வளரவும்
தமிழர் எழுந்து நிமிரவும்
ஈழம் மலர்ந்து மிளிரவும் 
எழுதுங்கள்...எழுதுங்கள்...
எழுதிக்கொண்டேயிருங்கள்... 

 

கவிதையால் வாழ்த்திய, தமிழீழனே, 

உனக்கு என் பணிவான நன்றிகள்!

congratz :)

 

வாழ்த்துக்களுக்கு நன்றிகள், யாழினி!

 

இயற்கை அழகை, பறவைகளை, விலங்குகளை, பூக்களை, ரசிப்பதில், உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் ! :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்கை.

தெளிந்த நீரோடை போன்ற ஆழமான கருத்துக்கள். நோகாமல்  சுளுக்கெடுத்து சுண்ணாம்பு தடவுவதில் வல்லவர். :D

 

நன்றிகள், தப்பிலி!

 

தமிழ் சிறியையும், இசையையும் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பவர் நீங்கள் தான் என நினைக்கிறேன்! :D

வாழ்த்துக்கள்  புங்கை  அண்ணாறிகள், தம்பி!

 

நன்றிகள், தம்பி!

சரவணைப் பக்கம் ஒரு நாளைக்குச் சந்திப்பம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ ஒருவரையும் நோகடிக்காமல் 5000 ?

 

ஓ... ரோமியோ நீங்களும் என்னை முந்தி ஓடிவிட்டீர்களா? ரொம்பக் கவலையாக இருக்கிறது... என்னோடு சேர்ந்து மெல்ல மெல்ல நடப்பீங்கள் என்று பார்த்தால் கங்காரு தேசத்து கருத்தாளன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். சரி சரி ரோமியோ மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உங்களுக்காக... :wub:

 

எண்ணுக்கணக்கில் எழுதுபவர்களைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.... :icon_mrgreen:  நம்ம இஞ்சின் கறல் கட்டிப்போச்சு :rolleyes:

 

நன்றிகள், வல்வை!

 

தமிழீழத்தின் ஆஸ்தானக் கவிஞன், வளர்த்தெடுத்த குழந்தை நீங்கள்!

 

நீங்கள், திரும்ப நீங்களாக வேண்டும்! 

 

சமுதாயச் சாயங்களைத் துடைத்தெறிந்து விட்டு, மீண்டும் கவிதாயினி ஆக வேண்டும் என்பதே எனது அவா! :D

"நிறைகுடம் தளம்பாது...."

அப்படின்னு எங்கள மாதிரி உள்ளார சந்தோஷ பட்டுக்கொண்டு இருக்கணும். 

புங்கை அண்ணா வாழ்த்துக்கள்.

 
அனைத்தையும் விரித்து விசாலமாக  எழுதுபவர்.
சளைக்கால் களைக்காமல்  உங்கள் பனி தொடரட்டும்.

 

வாழ்த்துக்கு நன்றிகள், மருது!

கருத்துக் களத்தில் யாரையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டிய கருத்தை லாவகமாகச் சொல்லும் புங்கையூரனுக்கு  உளங்கனிந்த வாழ்த்துக்கள் :)

மென்மேலும் புதிய ஆக்கங்களை அளித்து யாழையும், தமிழையும் செழுமைப் படுத்த வேண்டுகிறேன்.

 

நன்றிகள், ஆதித்தன்!

 

உங்கள் எழுத்துக்களின் மூலமே, பழந்தமிழன் பெருமைகளை அதிகமாக அறிந்து கொள்கின்றேன்!

 

உலகத்தில், வேறு எந்த மொழியும், தமிழ் மொழியைப் போல், வளைந்து கொடுப்பதில்லை!

அதிலிருந்தே தமிழ் எவ்வளவு தொன்மையானது என்று உணர்ந்து கொள்ள முடியும்!

புங்கையூரானுக்கு எனது நல்வாழ்த்துக்கள!

 

நன்றிகள், கறுப்பி!

 

யாழ் களத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்கு மிகவும் முக்கியமானது என்றே கருதுகின்றேன்! :D

நன்றிகள், இசை!

 

உங்கள் கருத்துக்கள் நகைச்ச்வையாகவும், அதே வேளை, இரத்தினச் சுருக்கமாகவும் இருக்கும்!

 

உங்கள் இசை பற்றிய அறிவைக்கண்டு, ஒரு விதமான 'பொறாமை' யும் உண்டு! :D 

 

இசை அண்ணாவுக்கு இசை மேலுள்ள ஆர்வத்தால் தான் இசைக்கலைஞன் என்ற பெயரையே வைத்திருக்கிறார். இசை பற்றி கேள்வி கேட்டால் அப்படியே புட்டு புட்டு வைப்பார்.

இசை மேல் எவ்வளவோ ஆர்வம் கொண்டவர், இசை பற்றி பரந்த அறிவு கொண்டவர் இன்னும் இசையமைப்பாளராகவில்லையே என்பது தான் கவலை. அவருக்கு நேரமின்மை மற்றும் இசைக்குழு அமைப்பதற்கு தேவையான கலைஞர்கள் பற்றாக்குறை போன்றன அதற்கு காரணம்.

எப்படி இருந்தாலும் ஒருநாளுக்கு இசையமைப்பாளராக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவர் ஒரு நாளுக்கு மட்டும் தான் இசை அமைப்பாளர் ஆகணுமா? அது என்ன உங்க கல்யாணத்திக்கா பாப்ஸ்?

:D

ஏன் அவர் ஒரு நாளுக்கு மட்டும் தான் இசை அமைப்பாளர் ஆகணுமா? அது என்ன உங்க கல்யாணத்திக்கா பாப்ஸ்?

:D

 

ஸ்ஸப்பா..... :)

முதல் பாடல் இசையமைக்கும் போது தானே இசையமைப்பாளர் ஆவார்.  அதுக்கு பிறகு நாங்கள் இல்லை என்று சொன்னால் கூட அவர் இசையமைப்பாளர் தானே... :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்ஸ்

புங்கையூரனுக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்கை :)

 

நன்றிகள், சஜீவன்!

 

வியாபாரம் எல்லாம், எப்படியிருக்கு? :D

புங்கை வாழ்த்துக்கள். உங்கள் படைப்புகளின் வழி தனி வழி, தொடர்ந்து பகிருங்கள்

 

நன்றிகள், உடையார்!

 

ஒரே நாட்டில் தான் வசிக்கிறோம்! ஆனால், உங்களுக்கும், எங்களுக்குமிடையில், மூன்று மணித்தியாலக் கால இடைவெளி!

 

மிகவும் வெளிப்படையான,ஒரு கருத்தாளர் நீங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
புங்கையூரானுக்கு  எனது  உள்ளங்கனிந்த  வாழ்த்துக்கள் .

 

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்,, நண்பனே!

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை, நீங்களும்..... உங்களைப் பற்றிய, சுயசரிதையும், தமிழுக்கு ஆற்றிய? சேவை பற்றியும்.... தனித் திரி ஆரம்பித்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துகள் அண்ணா.. :)

 

ஒருவருமே எட்டி பார்க்காத என் இணைப்புகளில் கூட உங்களின் கருத்துகள் இருக்கும் உங்களிர்காகவே சில இணைப்புகளை இடைவிடாமல் இணைத்து முடித்தும் இருக்கிறேன் அந்தளவு தூரம் ஆதரவு தந்த ஒருவர் நீங்க ......

 

நன்றிகள், அபராஜிதன்!

 

நீங்கள் இணைக்கும் இணைப்புகள், எப்போதுமே வித்தியாசமானவையாக இருக்கும்!

 

அதனால் தான், அவற்றை தேடித்தேடி வருகின்றேன்!

 

தொடர்ந்து இணைந்திருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5000 தடவைகள்  யாழில் தடம் பதித்த புங்கையூரனுக்கு மனதார வாழ்த்துக்கள். :)

 

நன்றிகள், சுமோ!

 

உங்கள் எழுத்துக்களைத் தேடி வாசிப்பதுண்டு!

 

மாறி வரும், எமது புலத்து சமுதாயத்தையும், தாயகக் கண்ணாடி போட்டுப் பார்ப்பது போன்று, உங்கள் கதைகள் இருக்கும்!

 

நீண்ட காலம்,புலத்தில் புதைந்து போன, எனது பார்வை கொஞ்சம் வித்தியாசமானது! :o

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
கங்காரு தேசத்து கருத்தாள னுக்கு என் பாராட்டுக்கள். :D

 

புதிய உறவுகளை ஊக்குவிக்கும் உங்கள் பண்பு, எனக்கு மிகவும் பிடித்தது!

 

ஆசிரியைத் தொழில், உங்களைப் புடம் போட்டுள்ளது என நினைக்கிறேன்!

 

உங்கள் கருத்துக்களை, ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது வழக்கம்!

 

சுருக்கமாகச் சொல்லப் போனால், நீங்கள் எனது 'நிலாக்கா' :D

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் புங்கையூரன். :)

 

நன்றிகள், நெடுக்கர்!

 

உங்களால் நகைச் சுவையாக, எழுதவும் முடியும்!

 

காரசாரமாகக் கருத்தாடவும் முடியும்!

 

ஆனால், எப்போதுமே உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் உங்களைப், பூமிக்கு இழுத்துக்கொண்டு வர, ஒரு பெண் இனித்தான் பிறக்கப் போகிறாள் என்று நான் நம்பவில்லை!

 

அவள் உங்களைச் சந்திக்கும் வரைக்கும்,  Have Fun! :D

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் ..... யாழ் இந்துக் கல்லூரி, "லை போய்" சோப்பை என்றும் மறக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணாவுக்கு வாழ்த்துகள். என் எழுத்துகளை பாராட்டி ஊக்குவிக்கும் ஒரு அன்பான கள உறவு நீங்கள்.

 

நன்றிகள், நிழலி!

 

தாயகம் போன போது,இரண்டு தடவைகள் உங்கள் நினைவு வந்தது!

 

முதலாவது, குவித்து வைக்கப் பட்டுக் கேட்பாரற்றுக் கிடந்த கணவாய்க் கருவாட்டுக்குவியலைக் கண்ட போது! :D

 

இரண்டாவது, யோகர் சுவாமிகளின் ஆச்சிரமத்தைக் கடந்து சென்ற போது! :icon_idea:

வாழ்த்துக்கள் புங்கையூரன் . 

நீங்கள் படித்தவர் பண்பானவர் என்பதை உங்கள் எழுத்துக்கள் அடையாளபடுத்தியுள்ளன . எலோருக்கும் சளைக்காமல் மனம்   புண்படாமல் கருத்து எழுதும் ஒரு நல்ல மனிதர். உங்கள் எழுத்துப் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் என்றென்றும். .....

 

நன்றிகள், கல்கி!

 

உங்கள் கவிதைகளையும், சிறுகதைகளையும் தேடிப் படிப்பதுண்டு! 

 

அவற்றில் ஒரு விதமமான ஏக்கம், எப்போதும் இருக்கும்!

 

அத்துடன், தாயகத்தின் மீதுள்ள மாறாதா காதலும், கலந்திருக்கும்!

வாழ்த்துக்கள் புங்கையூர் அண்ணா...!

 

நன்றிகள், எனது அன்புத் தங்கையே! :D

யாழில் நான் பார்த்த பண்பான ,மற்றவர்களை தட்டிக்கொடுக்கும் இன்னொரு பெரிய மனிதர். வாழ்த்துக்கள் புங்கை அண்ணா.

 

நன்றிகள், தமிழ் சூரியன்!

 

இசையால், வசமாகாதார் எவரும் இல்லை என்று கூறுவார்கள்!

 

இறைவன் கூட, இதற்கு விதி விலக்கில்லை!

 

நீங்கள் யாழ் களத்தின், சிறந்த கருத்தாளர்களில் ஒருவர்!

  • கருத்துக்கள உறவுகள்
நெகிழ வைக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் புங்கை அண்ணா...நவீனத்தின் தோற்றமாகவும்,தொன்மையின் ரகசியமாகவும் இருக்கும் உங்கள் சிந்தனைகள்..
உங்கள் எழுத்துக்களை படிக்கும் அனுபவங்கள் அற்புதமானவை. ஆழமானவை...உங்கள் ஒவ்வொரு பதிவிடமிருந்தும் படித்துமுடிய பிரிய மனமில்லாமல்தான் விடைபெற்று இருக்கிறேன்....  எழுத்துக்களின் மீதான உங்கள் ஆளுமை அபாரமாக உள்ளது.. உங்கள் அழகிய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டே யாழில் உங்கள் கூட நடக்கும் ஒரு பயணி..இந்த அழகிய எழுத்துக்களின் துணையோடே நம் நட்பு நீளும்..
இன்னும் பலஆயிரம் பதிவுகளாய் நீளட்டும் உங்கள் எழுத்துக்கள்..உங்கள் எழுத்துப் பயணம் மென்மேலும் இனிதே தொடரவேண்டும்....5000ம் அல்ல....அது தாண்டும் பல ஆயிரமாயிரங்களை.... வாழ்த்துக்கள் அண்ணா...
 
 

 

நன்றிகள், சுபேஸ்!

 

யாழ் களத்தின்,  இளைய தலைமுறையின்,இணையில்லாத பிரதிநிதி நீங்கள் தான் என்று சொல்வேன்!

(நந்தன், சுண்டு, ஜீவா, ஆகியோர் மன்னிக்கவும்: :D ) 

 

கதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமரிசனங்கள் என்று களத்தை, அலங்கரிப்பவர் நீங்கள்!

 

தாயகம் மீதும், அதன் விடுதலைக் கனவுகளை நெஞ்சில் ஏந்தியபடி, கண்களை மூடிய, அந்த மாவீரர்களின் மீதும் நீங்கள் கொண்ட பாசம் அளப்பரியது!

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் களத்திற்கு வாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  புங்கை  அண்ணா... :)

 

நன்றிகள்!

 

ஜீவாத் தம்பி, உங்களால் அழகான கதைகளும் எழுத முடியும்!

 

அதை விட அழகான கவிதைகள் வடிக்கவும் முடியும்!(அந்த ஆட்டுக் கவிதையைத் தான்  சொல்கிறேன்! :D ) 

 

களத்திற்கு அடிக்கடி வாருங்கள்!

 எனக்கு அன்று தொடக்கம் புலம்பெயர்தமிழர்களுக்குள் அவுஸ்ரேலியாவில் இருக்கும் ஈழத்தவர்களில் ஒரு தனிப்பட்ட மரியாதை.எவ்வளவுதான் படித்திருந்தாலும் அட்டகாசம் ஆடம்பரமில்லாத வாழ்க்கை...நிறைகுடம் தளம்பாது என்பது போல் வாழ்பவர்கள்.ஆனால் இன்றையநிலை எப்படியோ தெரியவில்லை.

 

நன்றிகள், குமாரசாமியண்ணை!

 

உங்களால் நல்ல படைப்புகளைத் தர முடியும்!

 

உங்கள், காவோலை வேலி  தாண்டிச் சுறாவுக்குக் குடல் உருவிய கவிதை, நினைவிருக்கின்றதா? :D

 

நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்!

புங்கையூரனுக்கு வாழ்த்துக்கள்!

 

மிகவும் நன்றிகள், போக்குவரத்து!

 

யாழின் பொற்கிழி எனக்குத் தான்' நிகழ்ச்சியின் மூலம், யாழிற்கு மேலும் மெருகூட்டுபவர் நீங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
 
நல்வாழ்த்துக்கள் புங்கையூரான்.மேலும்  பல ஆயிரம் அரிய கருத்துக்களை எழுதுங்கள்.

 

நன்றிகள், நுணாவிலான்!

 

யாழ் களத்தின், உன்னதமான ஒரு கருத்தாளர் நீங்கள்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.