Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைத்தியர் சங்கர் பைத்தியரே - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பல்லவன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வாதிகளாலும் பிரமுகர்களாலும் கண்டு கொள்ளப்படாது சிறையில் வாடும் வைத்தியர் சிவசங்கரின் விடுதலையை வேண்டி நிற்கும் உண்மையான தமிழ் மக்களின் குரல்களில் இதுவும் ஒன்று.

ஆ.ர்

இராணுவத்தில் தமிழ் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் நேரடியாக இராணுவ முகாமுக்குச் சென்று முரண்பட்டார் எனவைத்தியர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவானின் தடுப்புக்காவல் உத்தரவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வைத்தியர்சங்கர் வித்தியாசமான மனிதர். அவரோடு பழகியவர்களுக்கு அவரது சிந்தனைகள் மற்றையவர்களைக் காட்டிலும் வேறானது என்பது தெரிந்திருக்கும்.

 

நிர்வாணிகள் உலகில் கோவணம் கட்டியவன் முட்டாள் என்பார்கள். அடக்குமுறையையும் அடிமைத் தனத்தையும் ஏற்றுக் கொண்டவர்களின் உலகில் நியாயம் பேசுபவனை குறிப்பாக இலங்கையில் பயித்தியக்காரன் என்பார்கள்.  “எழுது இவன் நெற்றியில் பயித்தியக்காரன்” என்று யார்கேட்டார்? போத்தித்த  கடாமார்பில் ஏன் பாய்ந்தது. வலி சிவ சங்கருக்கு.

 

உண்மையில் சங்கர் பைத்தியக்காரர்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கத் தெரியாத பயித்தியக்காரன்.

 

தன்நலத்தைமட்டும் கருத்தாகக் கொண்ட எங்கள் தமிழ் சமூகத்தில் சமுதாயச் சிந்தனையைச் சதா சிந்திக்கின்ற சங்கர் போன்ற சிலமனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவ்வாறான சிலரை எஞ்சியிருக்கின்ற அதிபுத்திசாலிகள், 'ஒருமாதிரியானஆள்' 'தன்போக்கு’ (one way) 'கொஞ்சம் பிரச்சனை' என்ற பதங்களின் அடிப்படையில் அடையாளப் படுத்துகின்றார்கள். அதையும் தாண்டி அதிகம்படித்தவர்கள் எனும் மட்டைகளைத் தம்வசம் கொண்டிருக்கும் அதிமேதாவிகள் தமக்குத் தெரிந்த தமது துறை சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி அந்தமேனியா இந்தமேனியா என்றெல்லாம் விளக்கமளிப்பார்கள். பின்னர் இந்தச்சொற்கள் மக்களுக்குப் புரியாதென்னச் சொல்லி மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதற்காகக் கடைசியில் பைத்தியக்காரர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என இத்தகைய மனிதர்களுக்கு முத்திரைகுத்தி விடுகின்றார்கள். இதுதான் வைத்தியர் சிவசங்கரின் சம்பவத்திலும் நடந்திருக்கின்றது.

 

வைத்தியர் சங்கர் பலராலும் குறிப்பாக ஏழை மக்களினாலும் இளைஞர்களினாலும் அதிகம் அறியப்பட்ட மனிதர். ஆன்மீக நாட்டம் அதிகம்மிக்கவர். சமூக அக்கறை அதிகம் கொண்டவர். நேர்மையானவர். தனது கருத்துக்களையும் நிலைப்பாட்டடையும் மாற்றி எதற்காகவும் சோரம் போகாதவர். அண்மையில் நடைபெற்ற அவரது அனுராதபுரத்துக்கான மாற்றம் கூட வடமாகாண சுகாதாரசேவைகள் திணைக்களத்தில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய போது ஆளுனர் சந்திரசிறியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாகவே ஏற்பட்டது. ஆளுனர் “இம்”என்றாலே சலம் கழிய எழும்பி நிற்கும் எங்கள் அதிகாரிகள் மத்தியில் நியாயத்திற்காக ஆளுனருடன் முரண்பட்ட சங்கர் உண்மையில் பைத்தியக்காரர்தான்.  ஊரோடு ஒத்து ஓடத் தெரியாத மனிதர்.

 

இன்றைக்கு யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் பக்கங்களை அடிக்கடி நிரப்பும் செய்திகள் அங்காங்கு பாடசாலைகள் கட்சி அலுவலகங்கள் பொது அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள் என்பவற்றில் நடைபெறும் இரத்தததான முகாம்கள் பற்றிய விடயங்களும் புகைப்படங்களும் அடங்கிய செய்திகள்தான். குருதிக் கொடையாளர்கள் என்ற ஒருசமூக அடுக்கமைவு இன்று யாழ்ப்பாணத்தில் மிகப்பிரபலம். அதிகதடவைகள் குருதிவழங்கியமைக்காக கௌரவம் பெற்றபலர் இன்றுயாழ்பாணத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் வழங்கிய குருதியில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள். இவ்வாறாகக் குருதிகொடையில் மிகப் பெரும்மாற்றமும் விழிப்புணர்வும் ஏற்படக்காரணமான மனிதர் வைத்தியர்சிவசங்கர். அதிகப்பேரிடம் இரத்தம் எடுத்தமனிதர். அதனால் அவர்பேசும் போது இரத்தம் எடுக்கின்றார் எனப்பலர் சிலேடையாக விமர்சிப்பதிலும் அர்த்த முண்டு.

 

இன்று யாழ்ப் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கி நடமாடும் குருதிகொடை நிகழ்வுகளை நடாத்தவல்ல வளங்களைக் கொண்டிருக்கின்றது. நடமாடும் இரத்ததான முகாம்கள் பலவற்றை நடாத்தி அதனை இலகுவானதொரு செயற்பாடாகமக்களிடம் எடுத்துச் சென்றவர் வைத்தியர்சங்கர்.

 

வைத்தியர் சங்கர் ஒரு தீவிரமான சாயிபத்தர். வட மாகாணத்திலுள்ள சாயி சமித்திகள் பலவற்றின் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால்ஆன உதவிகளை ஆற்றிவருகின்றவர். குறிப்பாக யாழ்ப்பாணப் பக்கலைக்கழகத்துக்கு முன்பாக வைத்தியகலாநிதி கணேசமூர்த்தி தலமையில் நடைபெற்றுவரும் சாயிசமித்தியில் ஒரு செயற்பாட்டுத்திறன் மிக்க அங்கத்தவர். அங்கு அடிக்கடி ஆன்மீக உரைகளை நிகழ்த்தி வளரும் தலைமுறைக்கு நல்ல கருத்துக்களை விதைப்பவர். சாயிபத்தர்கள்கூட எந்தப் பிரார்த்தனைகளையும் அவரது விடுதலைக்காக இதுவரை செய்யவில்லை.

trust-me-im-a-doctor.jpg

பாடசாலைகள் தனியார் கல்விநிலையங்கள் என்பவற்றில் அவ்வப்போது தலமைத்துவக் கருத்தரங்குகள் ஆளுமை விருத்திச் செயலமர்வுகள் என்பவற்றை நடாத்தி இளைய சமூகம் தவாறான பாதையில் செல்லாதிருக்க வழிகாட்டியவர் வைத்தியர் சங்கர். பலரும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சமூகப்பிறழ்வுகளைக் கண்டு ஐயோ முறையோ எனக்கூச்சலிட்டுக் கத்தும் போது அவற்றைத் தடுக்க தேவையான அடிப்படைகளைச் சதா தேடிக்கொண்டும் செயற்படுத்திக்  கொண்டும் இருந்த மனிதர் வைத்தியர் சிவசங்கர். சமூகத்தைப்பற்றியே அவரது சிந்தனை சதா சுழன்று கொண்டிருந்தமையால் தனிப்பட்ட வாழ்வில் சில தவிர்க்க முடியாத பின்னடைவுகள் ஏற்பட்டமை மனவருத்தத்துக்குரியதே. அவ்வாறான சிலபின்னடைவுகளும் சிலவேளைகளில் அவரைப் பைத்தியக்காரர் என மற்றவர்கள் விளங்கிக்கொள்ள வாய்ப்புக்களை வழங்கியிருக்கலாம்.

 

தனக்குத்தவறு எனத்தெரியும் எந்த விடயத்தையும் தனித்து நின்று எதிர்த்து பேசும் துணிவும் வாண்மையும் சங்கரின் தனித்துவமான இயல்புகள். இந்த இயல்புதான் இன்று அவருக்கு ஆபத்தைக் கொண்டு வந்துள்ளது.

 

தேசியத்தின் தனிக்காவலர்கள் தாம்தான் என்றும் தாம் இல்லாவிட்டால் தமிழர்களை வெள்ளம் எப்போ அடித்துச் சென்றிருக்கும் என்றும் மார்தட்டும் தமிழ் அரசியல்வாதிகள் பத்திரிகைகள் இணையங்கள் அறிக்கைகள் வாயிலாக வெறும் அறிக்கைப் போராட்டத்தை நாடாத்திக் கொண்டிருந்த “தமிழ்ப் பெண்களை இராணுவத்துக்குச் சேர்க்கும்” விடயத்தைச் சங்கர்தானே கையில் எடுத்து நேரடியாக இராணுவ முகாமுக்குச் சென்று துணிந்து இராணுவ அதிகாரிகளுடன் வாக்குவாதப்பட்டு நியாயங்களைப் பேசியிருக்கின்றார்.

 

தமிழர்களுக்குப் பைத்தியக்காரராகத் தெரிந்த வைத்தியர் சங்கர் சிங்கள இராணுவத்துக்கு ஆபத்து மிக்க பயங்கரவாதியாகத் தெரிந்திருக்கின்றார்.

 

உடனே இத்தகையவர்களை தமிழ் சமூகத்தில் விட்டால் ஆபத்து என்று எண்ணி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் அள்ளி உள்ளே போட்டிருக்கின்றார்கள்.

 

வைத்தியரான அவரதுமனைவி திருமகள்த னதுகணவரை விடுவிக்க பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டும் முடியாதுபோய் இருக்கின்றது.

இதில் வேதனை என்ன வென்றால் எந்த சமூகத்துக்காகத் தேவையான வகையில் காலக்கனதியை உணர்ந்து யதார்த்தமாக தனது கருத்துக்களை சங்கர் முன்வைத்தாரோ அந்தச் சமூகத்தின் பொறுப்பு வாய்ந்தமனிதர்களும் அமைப்புக்களும் அவரது கைதுகுறித்து மௌனம் காக்கின்றனர்.

 

பருவகால கொந்தளிப்புக்களை மட்டும் விளைவிக்கும் திறன் மிக்கபல்கலைக்கழக மாணவர்களின் கைது போன்ற விடையங்கள் பெறும் முக்கியத்துவத்தைச் சதா தமிழ்சமூகம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் சங்கரின் கைது பெறவில்லை.

 

வன்னியில் பெய்த அடைமழையில் செத்துப்போன ஆட்டுக் குட்டிபோல அமைந்திருக்கின்றது வைத்தியர் சங்கரின் கைது.

பல்கலைக்கழக மாணவர்களிடம் ஓடிப்போய் தன்வாகனக்க ண்ணாடியைத் தொலைத்த தமிழ்த் தேசியநாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்கூட வைத்தியர் சங்கரின்கைதில் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. அவருக்கு சொந்தமான பத்திரிகையில் வெளி வந்த வைத்தியர் சங்கரின் கட்டுரைக்காக ஆளுனர் சந்திரசிறியால் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாகவும் பேசப்படுகின்றது. அதுமட்டுமன்றி சரவணபவனும் ஒரு தீவிர சாயிபத்தர். அந்த வகையிலும் சிவசங்கருக்கும் அவருக்கும் தொடர்புண்டு. ஏனோ இன்னும் பேசத்தக்க பிரதிபலிப்பு சரவணபவனிடம் இருந்து எழவில்லை.

 

அது போன்றே இராணுவத்துக்கு தமிழ் பெண்களை ஆட்சேர்ப்பது ஆபத்தானது எனக் குரல் கொடுத்துத் தமிழ்மக்களின் ஆபத்பாந்தவர்களாக தம்மைபிரகடனப்படுத்திய பலரும் வைத்தியர் சங்கரின் கைது குறித்து சில ஆறுதல் வார்த்தைகள் தானும் பேசவில்லை.  இதுமிகவும்ஆபத்தானது.

 

 

உண்மையில் தமிழ்மக்களின் ஆரோக்கியமான எதிர்காலம் குறித்த அக்கறையுள்ள மனிதர்கள் வைத்தியர் சங்கரின் விடுதலையில் அக்கறை காட்ட வேண்டும். தமிழர் நலன்களுக்காக அரசியல் மகுடங்களைச் சுமப்பதாக முகம் காட்டும் அல்லது நடிக்கும்  மனிதர்கள் சங்கர் போன்ற சமூக அக்கறை கொண்டவர்களுக்கு வழங்க வேண்டிய ஆதரவையும்  நம்பிக்கையும் வழங்குவதாகத் தெரியவில்லை. அரசியற்தளத்தில் நிகழவேண்டிய இந்த நகர்வு இன்னும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. இந்த நகர்வுதான் சமூக அக்கறை கொண்ட மனிதர்களை இன்னும் இன்னும் எதிர்காலத்தில் உருவாக்குவதற்கான உந்துசத்தியும்கூட.

 

தம்மைவிட வேறொருவர் மக்கள் தொடர்பில் சிந்திப்பது தமது இருப்புக்கு ஆபத்தாகி விடும் எனத் தமிழ்த் தலைவர்கள் நினைப்பார்களாகில் சுயநலம் சார்ந்து அவர்கள் முடிவுசரியானதே.

 

திசைகெட்டு திக்குதடுமாறி நிற்கும் தமிழ் இனத்துக்கு வைத்தியர் சங்கர் போன்றபல மனிதர்கள் தேவை. இந்தக் கனதியை உணர்ந்து சங்கரின் விடுதலைக்கு உரிய அரசியல் அழுத்தங்களை வழங்குங்கள். ஒரு லட்சம் மக்களைக் கொன்ற கொலைகாரரையே சிங்கள அதிகார வர்க்கம் வெட்கம் கெட்டுப் பாதுகாத்து நிற்கிறது. ஆனால் தனது மக்களுக்காக நியாயம் கேட்ட,  போகட்டும் “ஒரு பயித்தியக்காரனுக்காகக்” குரல் கொடுத்தால் நீங்கள் என்ன குறைந்து போய்விடுவீர்களோ???

இதுநிற்க பாவம் வைத்தியர்சங்கர். சுயநலத்தில் சுழலும் ஈனத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துத் தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக்கேட்க வேண்டியதைக் கேட்டு இன்று உலகத்தின் பார்வையில் பைத்தியக்காரர் ஆகி நிற்கின்றார்.

சிலவேளை “புனர்வாழ்வின் பின் விடுதலையாகி” வந்து அவரும் அதிபுத்திசாலியாகலாம். தானுன்டு தன் குடும்பமுண்டு. தனியார் வைத்தியசாலையுண்டு. பட்டமுண்டு. பதவியுண்டு. பாதுகாப்புமிக்க வாகனமுண்டு. என அவரும் தன் தொழில் சார்ந்து சிந்தித்துப் புத்திசாலியாகலாம். எனப் பலர் எண்ணக் கூடும். ஆனால் வைத்தியர் சங்கரோடு நெருங்கிப் பழகிய பலருக்குத்தெரியும் அவர் ஒருநிரந்தரபைத்தியக்காரன் என்று.

 

பல்லவன்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87362/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தேவையை மெத்த படித்தவர்களும் பித்தி சாரி புத்தி ஜீவிகள் என்று தங்களை தாங்களே அழைத்து மகிழ்ந்து கொள்வோரும் உணரட்டும் இனி உணர்ந்து என்ன ஆகபோகுது? என்றாலும் கூட புதியதோர் பாதை பிறக்க இந்த சிந்தனை வழிவகுக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த மருத்துவரின் கைதை காட்டி இன்னும் ஒரு 100 மருத்துவர்களும் ஏனையவர்களும் அசைலம் அடிக்க உதவும் தமிழனின் சிந்தனை எல்லாம் இப்பொழுது என்ன காரணத்தை காட்டி அசைலம் அடிக்கலாம் எப்பிடி ஊரில் இருக்கும் மாமனையும் மச்சானையும் வெளிநாட்டிற்கு எடுத்து விடலாம் என்ற சிந்தனையில் இருக்கின்றது ........

என்ன இந்த மருத்துவரின் கைதை காட்டி இன்னும் ஒரு 100 மருத்துவர்களும் ஏனையவர்களும் அசைலம் அடிக்க உதவும் தமிழனின் சிந்தனை எல்லாம் இப்பொழுது என்ன காரணத்தை காட்டி அசைலம் அடிக்கலாம் எப்பிடி ஊரில் இருக்கும் மாமனையும் மச்சானையும் வெளிநாட்டிற்கு எடுத்து விடலாம் என்ற சிந்தனையில் இருக்கின்றது ........

 

அது உண்மைதான். ஆனால் சிவசங்கரின் கவலைக்கிடமான நிலை வெளியேவர வேண்டும்.

 

சரவணபவனை தனிய பெயர் குறிப்பிடுவதில் பயன் இல்லை.

 

மேற்குநாடுகள் புலிக் கிலிகாட்டும் வரைக்கும் இலங்கை அதை மிகவும் சாதுரியமாக பயன் படுத்தப்போகிறது.

 

புலம் பெயர்்தமிழர், அவர்களின்  அமைப்புக்கள் சிராணியின் விடையத்தை  பெரிதுபடுத்தவில்லை. ஆனால் மேற்குநாடுகள் அதை கையில் எடுக்கின்றன. இதை தணிக்க, மேற்குநாடுகளால் தடுக்கப்பட்டிருக்கும் புலிகளின் கையாள்தான் சிராணி என்று இலங்கை அரசு,பிரச்சாரம் செய்கிறது.

 

மேற்குநாடுகள் இதை உணர்ந்து புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று அறிவிக்காவிட்டால், சிவசங்கர் போல தமிழ் தியாகிகள் மட்டும் அல்ல, எதிலும் தொடர்பில்லாத சிராணி மாதிரி சிங்கள உத்தியோகத்தர்கள் வரை புலி பட்டம் கேட்கவேண்டிவரும்.

 

இது எதுவும் புதிதல்ல. 2009 ஆண்டு போர் நடந்த போது, ஐ .நா தனது அதிகாரிகளுக்கு, அவர்கள் அகதிகளுக்கு உதவுவதை காட்டிலும், இலங்கை அரசால் புலிபட்டம் கட்டப்படாமல் தங்களை பாதுகாக்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்ததாக அவர்களின் உள்ளக விசாரணை தெரிவிக்கிறது.பதன் பின்னர் அரசுக்காக தமிழ் மரணங்களை வேண்டுமென்றே மறைத்தது ஐ.நா. உண்மைகளை மூடிமறைக்கும் ஐ.நாவின் கபடம் தொடரும் வரைக்கும் சிவசங்கர் போன்ற அப்பாவிகளின் நிலையை சரவதேசத்தின் முன் கொண்டுவந்தாலும் அவர்களை காப்பாறலாமா தெரியாது. ஆனால் நாம் சிவசங்கரின் சிறையை வெளிகொண்டுவர முயலவேண்டியது கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை தமிழன் கண்டுகொண்டால் ஒழிய வேறு எந்த நாடும் கண்டுகொள்ளபோவதில்லை

முன்னர் பயங்கரவாதிகள் என்றார்கள்.

 

இப்பொழுது பைத்தியக்காரர்கள்  என்கிறார்கள்.

சிவசங்கரைத் தெரிந்தவர்களுக்கு அவர் குணமும் நன்கு தெரியும். "தனக்குத்தவறு எனத்தெரியும் எந்த விடயத்தையும் தனித்து நின்று எதிர்த்து பேசும் துணிவும் வாண்மையும் சங்கரின் தனித்துவமான இயல்புகள். இது சரியான கூற்று.

முன்னர் பயங்கரவாதிகள் என்றார்கள்.

 

இப்பொழுது பைத்தியக்காரர்கள்  என்கிறார்கள்.

 

அவரை துரோகி என்று அழைத்தவர்களும் இருக்கிறார்கள்.

 

சரி இனியாவது  யதார்த்ததை உணர்ந்து அவரை வெளியே எடுக்கும் வேலைகளை  ஈழத்தில் உள்ளவர்கள்  முயற்சிக்க வேண்டும்.

அவரை துரோகி என்று அழைத்தவர்களும் இருக்கிறார்கள்.

 

சரி இனியாவது  யதார்த்ததை உணர்ந்து அவரை வெளியே எடுக்கும் வேலைகளை  ஈழத்தில் உள்ளவர்கள்  முயற்சிக்க வேண்டும்.

 

அவர்களையும் சிங்களம் ஒன்றில் பயங்கரவாதிகள் இல்லை பைத்தியக்காரார்கள் என உள்ளே போட்டுவிடுமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//மேற்குநாடுகள் இதை உணர்ந்து புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று அறிவிக்காவிட்டால், சிவசங்கர் போல தமிழ் தியாகிகள் மட்டும் அல்ல, எதிலும் தொடர்பில்லாத சிராணி மாதிரி சிங்கள உத்தியோகத்தர்கள் வரை புலி பட்டம் கேட்கவேண்டிவரும்//.

 

http://www.parliamentlive.tv/Main/Player.aspx?meetingId=12159

 

இன்று பிரித்தானியாவில் நடந்த இலங்கை சம்பந்தமான விவாதத்தில் புலிகள் மிகவும் கொடிய பயங்கரவாதிகள் என்று பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் கூறினார். 

 

http://www.parliament.uk/business/publications/hansard/commons/todays-commons-debates/read/unknown/1258/

 

Alistair Burt:

 

Yes. As we have all said during the debate, the UN is examining its processes carefully as it finds fault in what it did in the past and emphasises the importance of UN engagement in the most difficult circumstances. Of course, we see in Syria today how difficult that has become. No doubt, the UN panel will look carefully at how it failed to meet that obligation and what might be done in difficult circumstances in future.

The LTTE is a brutal, ruthless organisation that rightly remains proscribed in the UK, but a military victory alone cannot deliver the stable, lasting peace all Sri Lankans deserve. Addressing events during the final days of the conflict is important and the UK has consistently called for an independent investigation into allegations of violation of international humanitarian law on both sides. There needs to be a more fundamental approach that goes beyond accountability. Colleagues have mentioned this in terms of the context of the future of Sri Lanka being for Sri Lankans themselves and how they take this forward. Therefore, we support the view, widely held in Sri Lanka and outside, that long-term peace can best be achieved through an inclusive political settlement that addresses the underlying causes of the conflict. Such a settlement must also take into account the legitimate grievances and aspirations of all Sri Lanka’s communities.

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.