Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேர்வினின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மேர்வினின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்பு
By General 
2013-01-11 20:43:26
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்த தரிப்பிடம் பொன்சேகாவா இல்லை UNP யா...??      போற இடத்தையும் கழுவி ஊத்தட்டும்...

மேர்வின் எங்கும் போக மாட்டார். அவரை வெளியே விட்டால் காலிசெய்ய வேண்டிவரும். அது மற்றய ஒட்டுக்குளுக்கு பீதியை உருவாக்குவது. அதை இலகுவில் செய்ய மாட்டார்கள். அவர் மந்திரி பதவியை இராஜினாம செய்ததாக இல்லை. சுதந்திர கட்சி அமைப்பளர் பதவி சற்று சிக்கலானது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

முன்னரும் அவருக்கு கோத்தாவிடமிருந்து பல மிரட்டல்கள் வந்தது.ஒரு தடவை மகிந்தாவைபற்றி மேர்வின் சில்வா ஒளிப்பேழைகள் வைத்திருந்ததாக கோத்தா குற்றம் சட்டியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்


1753941454presanna-ranaweera2.jpg

மேர்வின் கைது செய்யப்படும் வரை எமது உயிர்களுக்கு ஆபத்துதான் - களனி பிரதேச சபைத் தலைவர்

January 12, 2013  04:02 pm

lg-share-en.gif
அமைச்சர் மேவின் சில்வாவின் ஆலோசனைக்கு அமைய 35 லட்சம் ரூபா ஒப்பந்தத்தில் எங்கள் அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக ஹசித்த மடவல கொலை சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். 

களனியில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தனிப்பட்ட பிரச்சினையால் களனி பிரதேசசபை உறுப்பினர்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டிய தேவை மேர்வினுக்கு இல்லை எனவும் அவ்வாறு செய்வதானால் தன்னையே சுட்டுக் கொலை செய்திருக்க வேண்டும் எனவும் பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார். 

தென்னை மர பிரச்சினை மற்றும் தாயை திட்டிய பிரச்சினை ஆகியவற்றை மாத்திரம் வைத்து கொலைத் திட்டம் தீட்ட முடியாது என அவர் கூறியுள்ளார். 

எனவே 35 லட்சம் ரூபா ஒப்பந்தத்திற்கு அனைவரையும் கொலை செய்ய திட்டமிட்டமை தெளிவாவதாக களனி பிரதேச சபை தலைவர் தெரிவித்தார். 

இன்று களனி பிரதேசசபை உறுப்பினர்கள் - பொதுமக்கள் சந்திப்புக்களையோ கூட்டங்களையோ நடத்த முடியாது அச்சத்தில் இருப்பதாக அவர் கூறினார். 

ஆனால் நாங்கள் அனைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்கள் என்பதால் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக களனி பிரதேச சபை தலைவர் குறிப்பிட்டார். 

தனக்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது போன்று ஏனைய உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். 

ஹசித்த மடவல கொலையுடன் தொடர்புடைய அமைச்சர் மேர்வின் சில்வா சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் அவர் கைது செய்யப்படும் வரை தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் களனி பிரதேச சபை தலைவர் தெரிவித்தார். 

தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைய முடியாது எனக் கூறிய அவர் யாரையும் பழிவாங்கும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார். 

அனைவரோடும் ஒன்றிணைந்து களனியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த தாம் தயார் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா தவிர்ந்த எந்தவொரு அமைப்பாளரோடும் இணைந்து செயற்பட தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். 

மேலும் ஹசித்த மடவல கொலையை அடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தமக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். 

(அத தெரண தமிழ்)
  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதுமே மகிந்தவின் செல்லப்பிள்ளை தான் மேர்வின் மகிந்த மேடையில் இருந்தால் மேர்வின் வந்து பக்கத்தில் அமர மாட்டார் அவரது காலடியின் கீழ் தான் இருப்பார்....... அப்பிடி சோ இதெல்லாம் ஒரு நாடகம் ஆனால் தனக்கு கெட்ட பேர் வரும் என்றால் மகிந்த யாரையும் தூக்கி எறிவார் அரசியல் இருப்பு தானே முக்கியம்

களனிக்கு மீண்டும் மேர்வின்?: மும்முரமாக இடம்பெறும் கையெழுத்து வேட்டை!

 

மேர்வின் சில்வாவை களனி தொகுதியின் அமைப்பாளராக மீண்டும் நியமிக்கும் படி ஜனாதிபதிக்கு வலியுறுத்தி கையெழுத்து வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

களனிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் இணைந்து அப்பகுதியில் இந் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேர்வின் சில்வா மிகவும் நல்லவர் என்பதுடன் மிகவும் திறமையானவர் எனவே அவரை உடனடியாக அப்பதவிக்கு நியமிக்கும்படி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனிப் பிரதேசத்திற்கான பெண்கள் பிரிவின் தலைவி தமயந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.

 

அவர் எப்போதும் பெளத்த தர்மத்தின் நற்சிந்தனைகளுடனே எமக்கு அறிவுரை கூறுபவர் எனவும் அவர் கொலைகாரர் அல்ல எனவும் தமயந்தி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

 

களனிப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இக் கைழுத்து வேட்டை இடம்பெற்றுவருவதாகவும் இதில் ஏற்கனவே நூற்றுக் கணக்காணோர் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2547

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.