Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ள பரசிற்றமோல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ள பரசிற்றமோல்
January 15, 2013, 6:48 am|views: 124
 
 
பல அழுத்தங்களுக்கு உள்ளாகி வரும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு, மற்றுமொரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
சிறிலங்காவில் பயன்படுத்தும் நோய் வலி நிவாரணியான பரசிற்ற மோல் வில்லைகள் வழமையைவிட அதிகமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
 
அதாவது கடந்த ஆண்டில், சிறிலங்காவின் சனத்தொகையை விட 40 மடங்கு அதிகமான, பரசிற்ற மோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
கடந்த ஆண்டில், வலி நிவாரணியான 810 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
 
2011ம் ஆண்டில் 560 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகளே அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டிருந்தன.
 
ஆண்டுதோறும் 560 தொடக்கம் 570 மல்லியன் பரசிற்றமோல் வில்லைகளே நோயாளிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
 
ஆனால் கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை சடுதியாக பெருமளவில் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றை நியமிக்குமாறு, மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கமால் ஜெயசிங்கவை, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.
 
காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற நோய்களுக்கான பொதுவான வலி நிவாரணியாக பரசிற்றபோல் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இந்த மருந்தை அதிகளவில் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
 
ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை இரண்டு வில்லைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற போதிலும், நோயாளிகள் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை இரு வில்லைகளை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
 
இதனால் பல சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், உடல், உள ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை, கடந்த ஆண்டில் திடீரென பரசிற்றமோல் வில்லைகள் அதிகளவில் விநியோகிக்கப்பட்டதன் பின்னணியில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

அளவுக்கு அதிகமாக பாவித்தால், பல வருத்தங்கள் தரும், சில உடல் உறுப்புக்கள் தமது செயல் திறனை இழக்கலாம்!

 

While generally safe for use at recommended doses (1,000 mg per single dose and up to 4,000 mg per day for adults), acute overdoses of paracetamol can cause potentially fatal kidney, brain and liver damage and, in rare individuals, a normal dose can do the same. The risk may be heightened by chronic alcohol abuse. Paracetamol toxicity is the foremost cause of acute liver failure in the Western world, and accounts for most drug overdoses in the United States, the United Kingdom, Australia and New Zealand.

 

http://en.wikipedia.org/wiki/Paracetamol



http://www.youtube.com/watch?v=srlIqVxLOLQ

இந்த விற்பனையில் சில அரசியல் முதலைகள் பணத்தை விழுங்கி இருக்கலாம் :-(

  • கருத்துக்கள உறவுகள்

தலையிடி  கூடிப்போச்சு 

  • கருத்துக்கள உறவுகள்

வலி நிவாரணிக் குளிசைகளை விழுங்கவேண்டி வரும்போதெல்லாம் மைக்கல் ஜாக்சன் நினைவில் வந்து போவார்.. அவர் மாதிரி அல்பாயிசில் போகக் கூடாது என்பதற்காக தலையிடிகள் வந்தாலும் குளிசைகளை அதிகம் எடுப்பதில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வலி நிவாரணிக் குளிசைகளை விழுங்கவேண்டி வரும்போதெல்லாம் மைக்கல் ஜாக்சன் நினைவில் வந்து போவார்.. அவர் மாதிரி அல்பாயிசில் போகக் கூடாது என்பதற்காக தலையிடிகள் வந்தாலும் குளிசைகளை அதிகம் எடுப்பதில்லை!

 

மைக்கல் ஜாக்சனுக்கு வலி,தலையிடி வருவதற்குரிய காரணம் உலகிற்கே தெரிந்த விடயம்.....ஆனால் போஜனத்திலும் சயனத்திலும் பிரியமுள்ள தங்களுக்கு தலையிடி....??????

  • கருத்துக்கள உறவுகள்
மைக்கல் ஜாக்சனுக்கு வலி,தலையிடி வருவதற்குரிய காரணம் உலகிற்கே தெரிந்த விடயம்.....ஆனால் போஜனத்திலும் சயனத்திலும் பிரியமுள்ள தங்களுக்கு தலையிடி....??????

 

எனக்கு தலையிடி அடிக்கடி வருவதில்லை. எப்போதாவது ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வரும். அநேகமான வேளைகளில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான் காரணமாக இருக்கும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.