Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேர்வின் சில்வாவின் பின்னடைவுக்கு காரணம் - காளிதேவியின் சாபமே! - முன்னேஸ்வரம் பூசகர் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mervin-silva-150seithy.jpg

வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்திய அனைவரும் காளிதேவியின் சாபத்துக்குள்ளாகியுள்ளனர். ஆலய வளாகத்தில் அடாவடியில் ஈடுபட்ட அமைச்சர் மேர்வினுக்குத் தாம் வகித்த பதவியை இராஜிநாமா செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆலயக் கதவை இழுத்து மூடிய ஹசித்த மடவல கொல்லப்பட்டுள்ளார். தடையுத்தரவு பிறப்பித்தவர்களும் தற்போது இல்லை. இவ்வாறு முன்னேஸ்வரம் காளிகோயிலின் பூசகர் மகேந்திரன் குருக்கள் தெரிவித்தார். வேள்வி பூசையை அமைச்சர் மேர்வின் தடுத்து நிறுத்தியுள்ள விவகாரம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

முன்னேஸ்வரம் காளி கோயிலில் கடந்த செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவிருந்த வேள்வி பூசையை மேர்வின் தலைமையிலான குழு, நேரடியாகவே அங்கு விரைந்து சென்று தடுத்து நிறுத்தியது. அதேவேளை, அந்தக் காலப்பகுதியில் புத்தரின் புனித தந்ததாது இந்தியாவிலிருந்து வழிபாடுகளுக்குக் கொண்டுவரப்பட்டிருந்ததால் வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்துமாறு பல தரப்பும் அழுத்தங்களைப் பிரயோகித்தன. நீதிமன்றமும் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

 

எனினும், திட்டமிட்டவாறு பூசை நடைபெறும் என ஆலய நிர்வாகத்தினர் உறுதியாகக் கூறினர். பின்னர் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய வேள்விப் பூசை கைவிடப்பட்டது. பிறிதொரு திகதியில் பூசை நிச்சயம் நடத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதற்கிடையில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கோட்டை எனக் கருதப்படும் களனி பிரதேசத்தில் அவருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆளுந்தரப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

 

இவ்வாறு அரசியல் களத்தில் என்றுமில்லாதவாறு மேர்வினுக்குப் பின்னடைவு ஏற்படுவதற்கு காரணம் காளிதேவியின் சாபம் என்றே பரவலாகப் பேசப்பட்டது. தற்போது அமைச்சர் மேர்வினுக்கு அரசியல் களத்தில் மீண்டும் சோதனை ஏற்பட்டுள்ளது. அவரின் பிரத்தியேக செயலாளர்கள் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், களனி பிரதேச அமைப்பாளர் பதவியையும் மேர்வின் இராஜிநாமா செய்துள்ளார். அமைச்சர் மேர்வினுக்கு இவ்வாறு பிரச்சினைகள் ஏற்பட காளிதேவியின் சாபமே காரணம் எனப் பேசப்படுகிறது.

 

அமைச்சர் மேர்வின் சில்வா காளிகோயிலுக்கு வந்து பரிகார பூசை செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது. கோயிலுக்கு யார் வேண்டுமானலும் வந்து பூசை செய்யலாம். அதற்கு எந்தவித தடையுமில்லை என்றார் அவர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=74159&category=TamilNews&language=tamil

 அமைச்சர் மேர்வின் சில்வா காளிகோயிலுக்கு வந்து பரிகார பூசை செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது

 

ஒரு நூறு ஆடுகளை பலி செய்து பரிகாரம் தேடவேண்டியதுதான்  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு சன்னதம் ஆடுமாறுமாறும் கேட்கப்படுகிறார்.  இவர் பாராளுமன்றத்திலும் சன்னதம் ஆடுவதால் இது சுலபமானது என நினைக்கிறேன். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.