Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசை எதிர்த்த சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகரவுக்கு இந்தியாவில் இருந்து பாராட்டுமழை

Featured Replies

மகிந்த அரசை எதிர்த்த சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகரவுக்கு இந்தியாவில் இருந்து பாராட்டுமழை [ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 00:34 GMT ] [ தா.அருணாசலம் ]

DU.Kunasegara.jpgசிராணி பண்டாரநாயக்கவை தலைமைநீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மூத்த அமைச்சர் டியு.குணசேகரவுக்கு இந்தியாவில் இருந்து பாராட்டுகள் குவிந்துள்ளன. 

கடந்தவாரம், சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியூ.குணசேகர, அதனைக் கடுமையாக எதிர்த்துக் கருத்து வெளியிட்டிருந்தார். 

அத்துடன், வாக்கெடுப்பில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். 

சிறிலங்கா அரசின் நகர்வுக்கு எதிராக அவர் உரையாற்றி விட்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய போது, முதலாவது தொலைபேசி அழைப்பு இந்தியாவில் இருந்து வந்தது. 

அந்த அழைப்பை எடுத்தவர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் தனிப்பட்ட செயலர். 
அந்த உரைக்காக, அவர் இந்தியப் பிரதமரின் சார்பில் பாராட்டுத் தெரிவித்திருந்தார். 

அதற்கடுத்து இந்தியாவில் இருந்த மேலும் பெருமளவு தொலைபேசி அழைப்புகள் வந்தன. 

தொலைபேசி மூலம் டியு.குணசேகரவுக்குப் பாராட்டுத் தெரிவித்தவர்களில் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் பலரும் அடங்கியிருந்தனர். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று உயர்மட்டத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டு, இரு நாடுகளினதும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்தத் தகவலை கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130120107629

 

கொள்கை இல்லாத விலை போன இடதுசாரிகள்தான் இன்றைய இலங்கை இடது சாரிகள்  என்பதை இவரை இந்தியாவுக்கு அழைத்து கண்டு பிடிக்கட்டும். அன்று இந்தியாவில் பல அமைப்புகள் சுதந்திரத்திற்கு போராடிய போது இலங்கையில் இடதுசாரிகள் மட்டும் தான் போராடினார்கள். இன்று இலங்கையில் மிக கேவலமான அடிமைகளும் சில இடதுசாரிகள்தான். விமல் வீரவன்சா மாதிரி இனியாராவது ஒருவர் பிறக்க வழி உண்டா?

Edited by மல்லையூரான்

வாசுதேவாவும் ஒரு காலத்தில் நன்கு மதிக்கப்பட்ட இடதுசாரி.

 

பதவி ஆசையில் பலதையும் இழந்து விட்டார்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கேவலம் கெட்ட இடதுசாரியும் தற்போதைய அரசின் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காராவை என்னவென்பது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.