Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தை தடுத்து நிறுத்த காவல்துறையினர் தவறியுள்ளனர் -நீதி அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
hakeem-seithy-20120918-150.jpg

முஸ்லிம் மக்களுக்கு எதிரான குரோத செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சில பௌத்த பிக்குகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக மஹரகமவில் நடைபெற்ற போராட்டத்தை தடுத்து நிறுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  

நாடடின் பல பகுதிகளில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். மஹரகம பிரதேசத்தில் தனியார் ஆடை விற்பனை நிலையமொன்றிற்கு எதிராக பௌத்த பிக்குகள் மேற்கொண்ட குரோதப் போராட்டத்தை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கைச் சார்ந்தோர் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

முஸ்லிம் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிரான குரோத செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அனைத்து சமூகத்தினரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார். சில தரப்பினர் நாட்டையும் அரசாங்கத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச அரங்கில் இலங்கையை தனிமைப்படுத்தும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மதங்களுக்கு இடையில் குரோத உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளுக்கு சட்டம் ஒழுங்கை மதிக்கும் நாட்டின் பிரஜைகள் துணை போகக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=74278&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக நீதி அமைச்சர் பதவிய ஹக்கீம் ராஜினமா செய்வாரா?

நீதி அமைச்சர் என்பார் இதுவரையில் சட்டத்திற்கு முரணானவகையில் கைதுசெய்யப்பட்டிருக்கும் பல்கலைகழகமாணவர்களை பற்றி எதுவும் கூறவில்லை. அப்படி இருக்க இன சமத்துவம் பேசுகிறார்.

 

தேர்தலின் பின்னர் அரசை கண்டித்து சொல்லும் முதல் பேச்சு இது. அண்மையில் வெளிவரத்தொடங்கியிருக்கும் செய்தியான தனது நீதி அமைச்சு பதவியை சரத் என் சில்வா பறிக்கலாம் என்பதை படித்துவிட்டு பயப்பட்டு இப்படித் தவிக்கிறார். 19ம் திருத்தம் வந்த பின்னர் இவர்களில் பலர் வீட்டுக்கு போவார்கள். பாரளுமன்றத்தில் 2/3 இல்லாமலே  மகிந்த தான் விரும்பியவர்களை அங்கே நியமித்து விருப்பமானவற்றை செய்துகொள்வார்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அதுக்காக நீதி அமைச்சர் பதவிய ஹக்கீம் ராஜினமா செய்வாரா?

 

 

பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் அந்தாள் ஆனால் நீதிக்காக எதுவும் செய்யாது .
 
இது கூட புரியாமல் இருக்கிறிங்களே சுண்டல்  :D
  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமின் ஆதாரமற்ற கருத்துக்கள் கண்டிக்கப்படவேண்டியவை.. :D உன்னதமான பௌத்த கலாச்சாரத்தைப் பேணிக்காக்கும் பிக்குகளை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் ஹக்கீம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்களையோ காப்பாற்றும் ஒரு அன்புசசார் அரசு உள்ள நாட்டில் இதற்கு சந்தர்ப்பமே இல்லை.  இவர் பொய்யர் என்பது புரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.