Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதியில் ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து தேசிய பிக்குகள் முன்னணி ஆர்ப்பாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
bhikku-protest-seithy-3-20130122-150.jpg

சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையை கண்டித்தும் வேலை வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்ப வேண்டாம் எனக் கோரியும் தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது. கொழும்பு நகர மண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான பிக்குகள் ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் பேரணியாக சென்றனர்.

  

சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் சவூதி அரேபியாவினால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை கண்டிக்கிறோம், இனிமேலும் இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, சவூதிக்கு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தேசிய பிக்குகள் முன்னணியினரின் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை ஜனாபதிக்கு கையளித்தனர்.

 

bhikku-protest-seithy-1-20130122-400.jpg

 

 

bhikku-protest-seithy-2-20130122-400.jpg

 

 

bhikku-protest-seithy-3-20130122-400.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=74381&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவங்களிடமும் மனிதாபிமானம் இருக்கிறதாம், வன்னியில ஆயிரக்கணக்காக பொதுமக்கள் கொல்லப்பட்டபோது இவங்கட மனிதாபிமானம் எங்க போய்விட்டது என்றுதான் புரியவில்லை 

இவங்களிடமும் மனிதாபிமானம் இருக்கிறதாம், வன்னியில ஆயிரக்கணக்காக பொதுமக்கள் கொல்லப்பட்டபோது இவங்கட மனிதாபிமானம் எங்க போய்விட்டது என்றுதான் புரியவில்லை 

 

அதே தான்.... வன்னியில் இறந்த மக்கள் மக்களாக தெரியவில்லையா இவர்களுக்கு? எல்லாம் நாடகம் தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சாதரணமான கடவுள் நம்பிக்கை என்பது பீடி சிகரெட் கோப்பி தேத்தண்ணி போன்றது. அவ்வப்போது மட்டுப்படுத்தப்பட்ட உற்காசம் வலி நிவாரணி ஆறுதல். மதப்பற்று என்பது கெரோயின் அபின் போன்ற பெரிய போதை. தன்னிலை இழந்த நிலை. குஜராத்தில் இந்து வெறித்தனம் இலங்கையில் பெளத்த வெறித்தனம் இஸ்லாமிய நாடுகளில் அதன் வெறித்தனம். இந்த போதைக்கு மீட்சியில்லை. நடப்பதை கண்டுகொள்ளவேண்டியதுதான்.

வன்னியில் பொதுமக்கள் சாகும் போது பொங்காத எவரும் இனிவரும் காலங்களில் எதற்கும் பொங்க கூடாது போலிருக்கு ?

 

அந்த மக்களை வன்னிக்க தள்ளிக்கொண்டு போகும் போது நீங்கள் யாரும் பொங்காததால் வந்த விளைவு தான் எல்லாம் .

வன்னியில் பொதுமக்கள் சாகும் போது பொங்காத எவரும் இனிவரும் காலங்களில் எதற்கும் பொங்க கூடாது போலிருக்கு ?

 

அந்த மக்களை வன்னிக்க தள்ளிக்கொண்டு போகும் போது நீங்கள் யாரும் பொங்காததால் வந்த விளைவு தான் எல்லாம் .

 

வன்னியில் மக்கள் சாகும் போது பொங்காத எவரும் இனியும் பொங்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது கூட தமிழர்களுக்கெதிராக பல விடயங்கள் நடைபெறும்போது அது கண்ணுக்கு தெரியாமல் ரிசானாவின் மரண தண்டனை தான் தெரிகிறதா?

வேடிக்கை என்னவென்றால் இவர்கள் கொண்டுபோய் கொடுத்த மனு கூட குற்றவாளியான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

 

"சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் சவூதி அரேபியாவினால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை கண்டிக்கிறோம்" என்று கூறுபவர்கள் இலங்கையில் நடைபெற்ற படுகொலைகள் மட்டும் சட்டத்துக்கு ஒப்பான வகையில் நடைபெற்றது என்று நினைக்கிறார்களா? தமிழர்களுக்காக குரல்கொடுப்பதற்கு காலம் பிந்தவில்லை. இனியும் கூட இவர்கள் முயற்சிக்கலாம்.

மற்றவர்களை திருத்த வெளிக்கிட முதல் நாம் முதலில் திருந்துவோம் .நாம் விட்ட பிழைகளுக்கு முதலில் மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்ப்போம்.அதன் பின் அடுத்த படியை யோசிப்போம்.(இப்பவும் அவனை போட வேணும் இவனை போட வேணும் என சிந்திக்கும் எம்மவர்களாவது திருந்துவதாவது )

வன்னியில் பொதுமக்கள் சாகும் போது பொங்காத எவரும் இனிவரும் காலங்களில் எதற்கும் பொங்க கூடாது போலிருக்கு ?

 

அந்த மக்களை வன்னிக்க தள்ளிக்கொண்டு போகும் போது நீங்கள் யாரும் பொங்காததால் வந்த விளைவு தான் எல்லாம் .

 

இதைதான் அசல்

ஊசி போகிற இடம் தெரியும் உலகை போகும் இடம் தெரியாது என்னும் பழ மொழியால் விளங்கப்படுத்துவது. பௌவுத்த மேட்டுக்குடிக்கள் பொங்கி எழும் பொது மட்டும்தான் கண் தெரிகிறது. எமது கோவிலில் வேள்வி அல்ல காவடி எடுத்தவர்களை கூட ஆமி நொறுக்கிய போது ஒரு சொல் எழுத்தாதவர்கள்.

 

சிங்களவன் என்றால் உருகும் அளவு கடந்த மேட்டுக்குடி பண்பு. :lol:  இவ்வளவு காலமும் யாழ்பாணத்து மேட்டுகுடிகளை மட்டும் ஆதரித்து எழுத்திவிட்டு இப்போ பௌத்த மேட்டுக்குடிகளை.... :lol:

 

சிங்கள மோட்டுக்குடிகளின் பந்தங்களா? :icon_idea:

மற்றவர்களை திருத்த வெளிக்கிட முதல் நாம் முதலில் திருந்துவோம் .நாம் விட்ட பிழைகளுக்கு முதலில் மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்ப்போம்.

 

நல்லது! ஆரம்பிக்கலாமே?

ஏன் காலதாமதம்?

ஒரு நாளைக்கு ஒரு வரி PLOTE யை பற்றி எழுத்திவிட்டு, அதன் கீழ் மன்னிப்பும்

மற்றவர்களை திருத்த வெளிக்கிட முதல் நாம் முதலில் திருந்துவோம் .நாம் விட்ட பிழைகளுக்கு முதலில் மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்ப்போம்.அதன் பின் அடுத்த படியை யோசிப்போம்.(இப்பவும் அவனை போட வேணும் இவனை போட வேணும் என சிந்திக்கும் எம்மவர்களாவது திருந்துவதாவது )

 

நாம் எல்லோரும் திருந்தி விட்டு தான் மற்றவர்கள் ஆதரவை கோர வேண்டுமானால் உலகில் எந்த இனத்திலும் அது நடந்ததில்லை. விடுதலைப்போரும் நடந்திருக்காது. நாம் சென்று யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? மன்னிப்பு வழங்கும் தகுதியை மற்றவர்கள் கொண்டிருக்கிறார்களா? எம்மை விட அதிகளவில் மற்றவன் பிழை விட்டிருக்கிறான். சரி.. மன்னிப்பு கேட்பதால் புதிதாக ஏதும் நடந்து விடப்போகிறதா?

அவனை போடணும் இவனை போடணும் என்று சிந்திப்பது பிழை தான். ஆனால் நாம் நல்லவர்களாக மாறினாலும் எம்மை மற்றவன் போட நினைக்கிறானே... அதற்கெதிராக கூட உங்கள் குரலை ஓங்கி ஒலிக்க செய்வீர்களா?

 

தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்துக்கு எதிராக திரும்பினாலே அது எமக்கு பலம். அதை நீங்களும் செய்வீர்களா?  அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஆதரவு வழங்குவதை உங்களால் விட முடியுமா? தமிழர்களை குறை சொல்வதை விடுத்து முதலில் அரசாங்கத்தின் குற்றங்களை முன்வைக்க முடியுமா? அதன் பின்னர் எமது குற்றங்களை நாம் தீர்த்துக்கொள்ளலாம்.

Edited by துளசி

சாதரணமான கடவுள் நம்பிக்கை என்பது பீடி சிகரெட் கோப்பி தேத்தண்ணி போன்றது. அவ்வப்போது மட்டுப்படுத்தப்பட்ட உற்காசம் வலி நிவாரணி ஆறுதல். மதப்பற்று என்பது கெரோயின் அபின் போன்ற பெரிய போதை. தன்னிலை இழந்த நிலை. குஜராத்தில் இந்து வெறித்தனம் இலங்கையில் பெளத்த வெறித்தனம் இஸ்லாமிய நாடுகளில் அதன் வெறித்தனம். இந்த போதைக்கு மீட்சியில்லை. நடப்பதை கண்டுகொள்ளவேண்டியதுதான்.

 

 

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்கயை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப்போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஆதாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அந்த ஆவணம் இப்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ்பாணத்தில்தான் அதிகபட்சமாக 208 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள நாகர்கோவில் கிழக்கு, வடக்கு, தெற்கு, செம்பியன்பட்டு வடக்கு,

செம்பியன்பட்டு தெற்கு, வெட்டிலைக்கேணி, தந்தை செல்வபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பிரபலமான கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அதில் சோழசிவன் கோவில், கரம்பம் வயிரவர் கோவில், உச்சிமலை சிவன் கோவில், சுடலை ஞான வயிரவர் கோவில், மாங்கொல்லை வயிரவர் கோவில் உள்ளிட்ட பிரபல கோவில்கள் அடக்கம்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=115600

 

இதுலும் சொல்ல ஏதாவது......?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.