Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வரூபம் படத்தில் இஸ்லாம் அமைப்புகளே எவ்வாறு களங்கப்பட்டீர்கள் ??????????

Featured Replies

* சிறுமி மலாலா இஸ்லாம் மதவெறியர்களால் சுடப்பட்டப்போதும், தவறிழைக்காத ரிசானாவிற்கு சவூதி அரசு தூக்குத் தண்டனை அளித்தபோதும் உங்கள் மதம் களங்கப்படவில்லையா ??

* ஆயிரமாயிரம் மக்களை கொன்று பெண்களின் கற்பை கொடூரமாக சூறையாடிய இடிஅமினுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே நாடு சவூதி அரேபியாதான். அப்பொழுது உங்கள் மதம் களங்கப்படவில்லையா ??

* தாலிபான்கள் மற்றும் அல்கொய்தாக்கள் ஆங்காங்கே நடத்திவரும் தாக்குதல்களால் அப்பாவி மக்களும் குழந்தைகளும் தினந்தினம் கொல்லப்படுகிறார்களே இது உங்கள் மதத்திற்கு களங்கமில்லையா ??

* தலாக் விவாகரத்து முறை,சிறுவயது திருமணம்,பெண்கள் விளையாட்டுக்களில் கலந்துக்கொள்ளத் தடை,உடம்பு முழுக்க பர்தா அணிய வைத்தல்,குற்றம் சரியாக விசாரிக்கப் படாமலேயே மரணத் தண்டனை மற்றும் உறுப்புகளை அறுத்தல் போன்ற பிற்போக்குத்தனமான கொடுமைகள் இஸ்லாம் மதவாதிகளால் பரப்பப்பட்டு உங்கள் மதத்தில் அடிமைத்தனம் நிலவுகிறதே இவற்றால் உங்கள் மதம் களங்கப்படவில்லையா ??

* படிக்கவேண்டிய வயதில் மதவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு சிறுவர்களும் இளைஞர்களும் கையில் ஆயுதம் ஏந்துகிறார்கள்.மேலும் பலப்பல கொடுமைகள் இஸ்லாம் மதத்தில் நடந்து வருகின்றன.இதற்கெல்லாம் குரல் கொடுக்காத நீங்கள் விஸ்வரூபம் படம் வந்தால் களங்கப்பட்டு விடுவோம் என்று மூடத்தனமாக சிந்திப்பது ஏனோ ??

நியாயமாகப் பார்த்தால் கமல்ஹாசன் முஸ்லிம் அமைப்புகளுக்கு படத்தை போட்டுக் காட்டியதே தவறு.இதுப்போன்ற செயல்கள் தான் மதவாதிகளை ஊக்கப்படுத்துவதாக அமையும்.தமிழக அரசு படத்தை பார்க்காமலேயே முஸ்லிம் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஸ்வரூபம் படத்தை தடை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.கமல் என்ற கலைஞன் கோடி கோடியாக சம்பாதித்து ஹைதராபாத்,பெங்களூரு,மும்பை போன்ற எல்லா இடங்களிலும் பங்களாவும் மண்ணுமா வாங்கி சொத்து சேர்க்காமல் தான் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் உன்னத கலைஞன்.கமல்ஹாசனுக்கு தற்போது கடன் சுமையோடு மன உளைச்சலும் தான் அதிகம்.மதவாதிகளை ஊக்குவிக்கும் விதமாக தடை விதித்து இனிவரும் படங்களை எதிர்க்க துவக்கப்புள்ளி வைத்துள்ளது அரசு.விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.

 

நன்றி முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்
* சிறுமி மலாலா இஸ்லாம் மதவெறியர்களால் சுடப்பட்டப்போதும், தவறிழைக்காத ரிசானாவிற்கு சவூதி அரசு தூக்குத் தண்டனை அளித்தபோதும் உங்கள் மதம் களங்கப்படவில்லையா ?? * ஆயிரமாயிரம் மக்களை கொன்று பெண்களின் கற்பை கொடூரமாக சூறையாடிய இடிஅமினுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே நாடு சவூதி அரேபியாதான். அப்பொழுது உங்கள் மதம் களங்கப்படவில்லையா ?? * தாலிபான்கள் மற்றும் அல்கொய்தாக்கள் ஆங்காங்கே நடத்திவரும் தாக்குதல்களால் அப்பாவி மக்களும் குழந்தைகளும் தினந்தினம் கொல்லப்படுகிறார்களே இது உங்கள் மதத்திற்கு களங்கமில்லையா ?? * தலாக் விவாகரத்து முறை,சிறுவயது திருமணம்,பெண்கள் விளையாட்டுக்களில் கலந்துக்கொள்ளத் தடை,உடம்பு முழுக்க பர்தா அணிய வைத்தல்,குற்றம் சரியாக விசாரிக்கப் படாமலேயே மரணத் தண்டனை மற்றும் உறுப்புகளை அறுத்தல் போன்ற பிற்போக்குத்தனமான கொடுமைகள் இஸ்லாம் மதவாதிகளால் பரப்பப்பட்டு உங்கள் மதத்தில் அடிமைத்தனம் நிலவுகிறதே இவற்றால் உங்கள் மதம் களங்கப்படவில்லையா ?? * படிக்கவேண்டிய வயதில் மதவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு சிறுவர்களும் இளைஞர்களும் கையில் ஆயுதம் ஏந்துகிறார்கள்.மேலும் பலப்பல கொடுமைகள் இஸ்லாம் மதத்தில் நடந்து வருகின்றன.இதற்கெல்லாம் குரல் கொடுக்காத நீங்கள் விஸ்வரூபம் படம் வந்தால் களங்கப்பட்டு விடுவோம் என்று மூடத்தனமாக சிந்திப்பது ஏனோ ??
இவை யாவும் அல்லாவால் இஸ்லாத்திற்கு கொடுக்கப்பட்ட கொடைகள்
  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் விமர்சனம்

 
மலேசியாவில் படம் வெளியாகி...விமர்சனமும் வந்து விட்டது.

இதோ விமர்சனம்...

Vishwaroopam gets magnum opus response in malaysia (Here are some response the film received from malaysian viewers 

"Dhool opening. 

Kamal appears and whistle clap fills the hall 

A treat is in store

Openinh song wow"

"Stark realities behind terrorist breeding places.

Have never seen anything like this before.

Not a single irrelevant scene. Lesson on direction for everyone.

Lots of subtle humor"

"What a transformation.

Need many watches. Once isn't enough.

Some parts we feel sympathy for the terrorists"

"Phew..... what a roller coaster ride.....!

All of us are insatiated ... we want more. Please bring on part 2 quickly.

My children thought it was intermission when the movie ended!

2.5 hours of non stop action.

This is what I want from kamal.

Movie of the decade for sure.

Guys in India. .. it is worth the wait"

Courtesy:

http://www.twitlonger.com/show/kq8l74

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபச் சிக்கல்: ஒரு பன்முக அரசியல்

அரவிந்த கிருஷ்ணா
 

 

ஒரு வழியாக விஸ்வரூபம் வெளியாகிவிட்டது. பொதுவாக கமல்ஹாசன் படங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அவரையும் அவரது ரசிகர்களையும்தான் பாதிக்கும். ஆனால் விஸ்வரூபம் படத்தின் பிரச்சினைகள் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதிலும் பரவி வெளிநாடு வாழ் இந்தியர்களையும் பாதிக்கும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்தது.

 

விஸ்வரூபம் படம் சந்தித்த பிரச்சனைகளாலேயே வரலாறு படைத்துவிட்டது. இந்தப் பிரச்சனையால் பெருத்த பணநெருக்கடியும் கடுமையான மன உளைச்சலையும் சந்தித்தவர் கமல்ஹாசன் என்ற தமிழ் நடிகர். ஒரு தமிழ் நடிகருக்காக பாலிவுட் திரையுலகமும் தெலுங்கு சூப்பர்ஸ்டார்களும் குரலெழுப்பியிருப்பது இதுவே முதல் முறை.

 

ஒரு தமிழ்ப் படத்தின் பிரச்சினைமீது தேசிய ஊடகங்களின் கவனம் இந்த அளவு குவிந்ததில்லை. விஸ்வரூபம் பிரச்சினை தொடங்கியதுமுதல் முடிவடைந்தவரை அதற்காக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஒதுக்கப்பட்ட பக்கங்களும் நேரமும் 30 கோடி ரூபாய் விளம்பர வருமானத்துக்கு இணையானவை என்று ஒரு மூத்த ஊடகவியல் அறிஞர் தெரிவிக்கிறார்.


விஸ்வரூபம் சந்தித்த பிரச்சினைகள் கமல் என்ற வியாபாரியின் பிரச்சினையோ தனி மனித உரிமைப் பிரச்சினையோ மட்டுமல்ல. இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாக ஒரு தரப்பினரும், சிறுபான்மையினர் புண்படுத்தப்படுவதன் நீட்சியாக ஒரு சாராரும் இந்தப் பிரச்சனையைப் பார்த்ததால்தான் விஸ்வரூபம் படத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

 

பொதுமக்கள் கவனம் இந்த அளவுக்கு எந்தப் படத்தின் மீதும் குவிந்ததில்லை என்பதால் கமல்ஹாசனுக்கும் இதுவே விளம்பரமாக அமைந்துவிட்டதாகச் சிலர் கூறுவதற்கும் இடமிருந்தது. ஆனால் இத்தகு மன உளைச்சலுடன் கிடைக்கும் விளம்பரத்தை யாரும் விரும்பமாட்டார்கள்.

 

ஒத்திவைப்பு, தடை, தடை நீக்கம், மீண்டும் தடை, விரக்தி, கண்ணீர், அரசின் தலையீடு, சமரசம், ஒட்டு, வெட்டு, நன்றி நவிலல் என்று பல கட்டங்களைக் கடந்து படம் வெளியாகி இருப்பதால் அனைவரும் பெருமூச்சு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அளவில் பெரியதும் சம்பந்தப்பட்டவர்களின் வருங்கால நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தக்கூடியதுமான இந்தப் பிரச்சினையை இத்துடன் மறந்துவிட முடியாது.

 

பிரச்சனையுடன் சம்பந்தப்பட்டவர்களும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் சில மட்டங்களில், சில செய்ய வேண்டியதைச் செய்து தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்திருந்தால் இந்தப் பிரச்சினை இத்தனை பூதாகரமாக வெடித்திருக்காது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு தரப்பினரும் என்ன செய்திருக்கலாம் அல்லது என்ன செய்திருக்கக் கூடாது என்ற பார்வைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்வைக்கிறோம்.

 

 

 

கமல்ஹாசனுக்கு:

 

ஒரு படம் பொது மக்கள் பார்வைக்குச் செல்லலாமா கூடாதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய தணிக்கைக் குழு, விஸ்வரூபம் படத்துக்கு சான்றுதல் அளித்துவிட்ட பின் அந்தப் படத்தை வேறு யாருக்கும் போட்டுக் காண்பிக்க வேண்டிய பொறுப்பு கமல்ஹாசனுக்கு இல்லை. தணிக்கைக்குழு சான்றளிப்பதில் தவறிருந்தால் அதற்கான பிரச்சினையை தணிக்கைக் குழுதான் எதிர்கொள்ள வேண்டும்.

 

எனவே, கமல் இந்தப் படத்தை இஸ்லாமிய அமைப்புகளுக்குப் போட்டுக் காண்பித்ததுதான் பிரச்சினையின் வேர். தன் படைப்பின்மீது இருந்த நம்பிக்கையால்தான் கமல் அதைச் செய்தார் என்று கருதப்படுகிறது. ஆனால், தன் அடுத்த படத்தைத் தங்களுக்குப் போட்டுக்காண்பிக்கும்படி வேறொரு அமைப்பு கேட்கக்கூடும் என்பதையும் மற்றவர்களின் படங்களுக்கும் இதே நிலை உருவாகக்கூடும் என்பதையும் அவர் யோசித்ததாகத் தெரியவில்லை. இது தவறான முன்னுதாரணம்.

 

இந்த ஒப்புதல் வாங்கும் பழக்கத்தை மணிரத்னம் பம்பாய் படத்தை பால் தாக்கரேவுக்குப் போட்டுக் காண்பித்துத் தொடங்கிவைத்தார். அதைக் கமலும் பின் தொடர்கிறார். இஸ்லாமிய அமைப்புகளுக்குப் போட்டுக் காண்பித்ததுதான் காண்பித்தார், அவர்கள் கேட்டவுடன் காண்பித்திருந்தால் பிரச்சனையைப் பேசித் தீர்க்க நேரமிருந்திருக்கும். ஆனால் முதலில் பலமுறை தள்ளிப்போட்டு, கடைசியில் படம் வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் போட்டுக் காட்டியதால்தான் இத்தனை பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

 

இந்தப் படத்தை ஒட்டி எழுந்த கொந்தளிப்புகளால் கமல் செய்த ஒரு காரியம் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. அமெரிக்க அரசாங்கத்திடம் விஸ்வரூபம் படத்தின் திரைக்கதையைக் காண்பித்து ஒப்புதல் பெற்ற பின்தான் இந்தப் படத்தை எடுத்தேன் என்பதைக் கமலே தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவைப் பற்றிய சித்தரிப்பு இருப்பதால் அமெரிக்காவுக்கு ஆட்சேபமில்லாத வகையில் அது இருக்கிறதா என்பது குறித்து அமெரிக்காவின் கருத்து அல்லது அனுமதி தனக்குத் தேவை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அதே படத்தில் தாலிபான் முஸ்லிம்கள் பற்றிய சித்தரிப்பு இருப்பதால் அதை தாலிபான்கள் அல்லது அவர்களது போராட்டத்தை ஆதரிப்பவர்களின் அனுமதி தேவை என்று ஏன் நினைக்கவில்லை? தாலிபான்களையும் அமெரிக்க அரசையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்னும் வாதத்தை ஒப்புக்கொண்டாலும், படத்தில் வரும் பொதுவான முஸ்லிம் அடையாளங்கள் குறித்து இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அங்கிகரித்து அனுமதி அளிக்க வேண்டும் என்பது கமலின் அணுகுமுறையின்படி அவசியம்தானே? அதை ஏன் முன்னதாகவே செய்யவில்லை?

 

படத்துக்குத் தமிழக அரசால் விதிக்கப்பட்ட தடை ஏற்படுத்திய மன உளைச்சலைப் பொறுத்துக்கொண்டு பல நாட்கள் அமைதிகாத்தார் கமல். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதி தடையை நீக்கிய பின்னும் படம் வெளியாக முடியாமல் போனதால் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். சிரித்துக்கொண்டே பேசுவதாக அவர் வாய் சொன்னாலும் அவரது மனதில் இருந்த சோகம் கண்களில் நீர்த்துளிகளாக வெளிப்பட்டது. அப்படிப் பேசும்போது, தமிழகம் மதச்சார்புடைய மாநிலம் என்றும் இதனால் மதச்சார்பற்ற மாநிலத்துக்கோ நாட்டுக்கோ சென்றுவிடுகிறேன் என்றும் தெரிவித்தார். இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு தடை விதித்ததை மதச்சார்பு என்று சொல்வது, இஸ்லாமியர்களின் உணர்வை மதித்துச் செய்யப்படும் எதையும் மதச்சார்பு என்றே சொல்பவர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும் என்பது அவருக்குத் தெரியாதா? இப்படிப் பேசியதன் அர்த்ததை உணர்ந்து அடுத்த நாள் அவரே, 'அவை வருத்தத்தில் பேசிய வார்த்தைகள்' என்று சொல்லிவிட்டதையும் நாம் கவனிக்க வேண்டும்.

 

ஆனால் அத்தனை உணர்ச்சிவயப்பட்ட சூழலிலும் தன் ரசிகர்களை அமைதிகாக்கக் கோரியதை அவரது பக்குவத்தின் அடையாளம் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

தொடர்ந்து திரைப்படங்களில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவே சித்தரித்துக்கொண்டிருப்பதால், ஒவ்வொரு இஸ்லாமியனும் தீவிரவாதிதான் என்ற பிம்பம் வலுப்பெறுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இஸ்லாமியத் தலைவர்களும் பொதுவாக அறிஞர்களும் விஸ்வரூபம் படம் இதை முன்னெடுக்கும் என்று அஞ்சுவதில் இருக்கும் நியாயத்தை கமல் உணர வேண்டும். அவருக்கு இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர் என்ற ஒரு பிம்பம் இருந்தது உணமைதான். ஆனால் 2009இல் வெளியான உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் அதைத் தகர்த்தெறிந்தது. விஸ்வரூபம் படத்தை எடுப்பதற்கு முன் கமல் இதை யோசித்திருக்கலாம். எடுத்து இஸ்லாமியர்களுக்குப் போட்டுக் காண்பித்து, இத்தனை பிரச்சினைகளை சந்தித்து, சில வெட்டுகளுக்கு ஒப்புக்கொண்டு தன் படத்தை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் ஒரு வியாபாரியாக அவர் தப்பித்துவிட்டார். ஆனால் அவர் கூறிக்கொள்வதுபோல் அவர் மதமற்றவர் என்றால், இனிவரும் படங்களில் இஸ்லாமியர்களையும் மற்ற சமூகத்தவரையும் சித்தரிக்கும் விதத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

இந்தப் படம் இஸ்லாமியர்களை எப்படிச் சித்தரிக்கிறது என்று பார்ப்போம். தாலிபான் தீவிரவாதத்தால் அமெரிக்காவுக்கு இருக்கும் அச்சுறுத்தலைப் பற்றிய படம் இது. தாலிபான்கள் பயங்கரவாதத்தை எப்படி ஒரு வாழ்க்கை முறையாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதைப் படம் துல்லியமாகச் சித்தரிக்கிறது. ஆங்கிலம், மருத்துவம் முதலான அம்சங்களைக்கூட தாலிபான்கள் தங்கள் சமயத்திற்கு விரோதமானதாகக் கருதுகிறார்கள் என்றும் படம் சித்தரிக்கிறது. சிறுவர்கள் மனித வெடிகுண்டாக ஆக்கப்படுவது மனம் பதைக்கும் வகையில் காட்டப்படுகிறது. ஈவிரக்கமற்ற கொலைகளும் உயிரைத் துரும்பாக மதிக்கும் மனத்திடம் உருவாவதற்கான பயிற்சிகளும் அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.

 

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அணுகுண்டு வீசவும் தாலிபான்கள் தயாராவதையும் படம் காட்டுகிறது. இவை அனைத்தும் ஆப்கானில் உள்ள பயங்கரவாதம் பற்றியவை. இவற்றை இஸ்லாம் பற்றிய சித்தரிப்பாகக் கொள்ள முடியாது. பயங்கரவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த மதத்தின் அடையாளங்கள் அவர்களிடத்தில் வெளிப்படத்தான் செய்யும். போராளிகள் மதத்தின் பெயரால் தூண்டப்படுவதும் மதம் சார்ந்த பயங்கரவாதங்களின் பொதுப் பண்புதான். எனவே தாலிபான் பயங்கரவாதத்தை இஸ்லாமிய பயங்கரவாதமாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று கமல் வாதிடலாம். அது தன் நோக்கமல்ல என்று சொல்லலாம். தாலிபான்கள் பற்றிய சித்தரிப்புகளுக்கு ஆதாரங்களையும் காட்டலாம். ஆனால் விவாதம் தாலிபான்களின் தீவிரவாதம் பற்றியதல்ல. இந்தத் தீவிரவாதம் உருவாகி வளர்ந்ததில் அமெரிக்காவுக்கு இருக்கும் பங்கைப் பற்றிப் பேசாமல் தாலிபான்களைப் பற்றி மட்டுமே பேசும் கமலின் அரசியலைப் பற்றியது. இதுதான் பிரச்சினை. கமலுக்கு இஸ்லாமியர்கள் மீதும் உலக அமைதி மீதும் உண்மையான அக்கறை இருந்திருந்தால் தாலிபான்கள் ஏன் உருவாகிறார்கள் என்பதையும அவர் இந்தப் படத்தில் அலசியிருப்பார். அல்லது அதைப் பற்றித் தனியே ஒரு படமெடுப்பார்.

 

 

இஸ்லாமிய அமைப்பின் அணுகுமுறை


விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்கக் கோரிப் போராடிய இஸ்லாமிய அமைப்புகளின் அச்சத்தில் நியாயமிருக்கிறது. ஆனால் அவர்கள் போராடிய முறை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீது சினிமாவாலும் ஊடகங்களாலும் கட்டமைக்கப்பட்டு பொதுப்புத்தியில் ஊறிப்போயிருக்கும் தவறான பிம்பத்துக்கு வலுவூட்டிவிட்டது.

 

அரசிடம் மனு கொடுப்பது, கூட்டம் போட்டுப் பேசுவது, கோஷம் போடுவது ஆகிய ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படத்தின் போஸ்டர்களைக் கொளுத்துவது, அவற்றில் இருக்கும் கமல்ஹாசனின் முகத்தைச் செருப்பால் அடிப்பது, ஆகிய செய்கைகளை இந்தப் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் கண்டிக்கவில்லை. ஜைனுலாப்தீன் என்பவர் கமலையும் அவரது குடும்பத்துப் பெண்களையும் மிக இழிவாகப் பேசினார். அதைக்கூட யாரும் கண்டிக்கவில்லை. தடை உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டதை அடுத்து படத்தை வெளியிட முற்பட்ட திரையரங்குகள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. படம் திரையிடப்படாததை எதிர்த்து சில ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடைசியில் அவர்களது ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை கமல் நீக்க முன்வந்த பிறகே படம் வெளியிட முடிந்திருக்கிறது.

 

ஒரு படத்தைப் பொதுமக்கள் பார்க்கக் கூடாது என்று ஒரு சில அமைப்புகள் தீர்மானிப்பது ஜனநாயக வழிமுறை அல்ல. கருத்துச் சுதந்திரத்துக்கு ஒரு எல்லை உண்டுதான். ஆனால் அந்த எல்லையை யார் வேண்டுமானாலும் தீர்மானிக்கலாம் என்ற நிலை மிக ஆபத்தானது. கேள்வி எழுப்புவது வேறு, தடுத்து நிறுத்துவது வேறு. இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்துக்கு இசைந்து தமிழக அரசு தடை விதித்ததால் ஒரு படத்தைப் பார்த்து அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை ஏற்கவோ மறுக்கவோ ஒரு சாதாரணக் குடிமகனுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. வாக்கு வங்கி அரசியலைப் பற்றிய பேச்சுக்களை இது உசுப்பி விட்டுள்ளது. இனி சிறுபான்மையினரின் வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால்கூட, 'சிறுபான்மையினரின் வாக்கைப் பெறுவதற்காக செய்யப்பட்டது' என்ற பிரச்சாரத்தால் பொதுப்புத்தியில் ஊறியிருக்கும் கருத்துக்கு இது வலு சேர்த்துவிட்டது.

 

இஸ்லாமிய அமைப்புகள் முதலிலேயே இந்தப் பிரச்சினையை சட்ட உதவியுடன் அணுகியிருக்கலாம். ஆனால் அதை கமல் தரப்பும் அரசும்தான் செய்ய வேண்டியிருந்தது.

 

அரசின் கவனத்திற்கு:
 

 
நீதிமன்ற விசாரணையின்போது விஸ்வரூபம் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அரசுத் தரப்பு வாதாடியது. இந்தக் குற்றச்சாட்டைத் தணிக்கைக் குழு கடுமையாக மறுத்துள்ளது. தணிக்கைக் குழுவில் முறைகேடுகள் / போதாமைகள் இருந்தால் அதைக் களைய முயலலாம். அதில் அவர்கள் வெற்றிகண்டால் இனி எந்தப் படத்திலும் எந்த ஒரு சமூகத்தையும் இழிவுபடுத்தும் காட்சிகளைத் தணிக்கை குழுவே சரியாக நீக்கிவிடும் நன்மை நடக்கும். மத்திய அரசு, இதுபோன்ற பிரச்சனைகள் வருங்காலத்தில் நிகழாவண்ணம் திரைப்படங்கள் குறித்த சட்டத்தை மறுவரையறை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
 
அரசு இந்தப் பிரச்சனையைக் கையாண்ட விதமும் வழக்கம்போல் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. விஸ்வரூபம் படம் வெளியானால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதற்காகத்தான் படத்தைத் தடை செய்தோம் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்கிறது. இஸ்லாமியர்களை விமர்சிக்கும் படத்தை வெளியிட்டால் உடனே இஸ்லாமியர்கள் சட்ட ஒழுங்கைச் சீர்குலைப்பார்கள் என்று அரசே நினைப்பதாகத்தான் இது புரிந்துகொள்ளப்படும். மாறாக விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் இருப்பதாகத் தெரியவருவதால் அந்தப் படத்துக்குத் தடை விதிப்பதாக அறிவித்திருந்தால் இந்த அரசு உண்மையிலே இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கிறது என்று நம்பலாம்.
 
இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தையை சாத்தியப்படுத்துவதற்காகத்தான் தடை விதிக்கப்பட்டது என்ற விளக்கத்தைத் தடையால் பாதிக்கப்பட்டவர் கண்ணீர் சிந்தி பேட்டி கொடுத்த பின்தான் வழங்கினார் தமிழக முதல்வர். அதுவும் தடை விதிக்கப்பட்டதற்கு சில அரசியல் பின்னணி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட பின்தான் இதைப் பற்றி வாய் திறந்தார் அவர். தடைவிதிக்கும் முன்பே பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்திருக்கலாம். அல்லது தடை விதிக்கும்போதே இப்போது கொடுத்த விளக்கத்தைக் கொடுத்திருந்தாலாவது பிரச்சினை இத்தனை பெரிதாகாமல் இருந்திருக்கும்.
 
படம் வெளியிடுவதற்கான தடையைத் தனி நீதிபதி நீக்கிய பின், இரவு 10:30 மணிக்கு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் வீட்டுக் கதவைத் தட்டி, மேல் முறையீட்டுக்கான அனுமதியைப் பெறுவதில் காட்டப்பட்ட அவசரத்துக்கு எந்த விளக்கத்தையும் முதல்வர் அளிக்கவில்லை.
 
ஆனால் இந்தப் பிரச்சனையைப் பற்றி முதல்வர் பேசியவுடன், அவர் பேசிவிட்டார் என்பதற்காகவே கமல்ஹாசனும் இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு நன்றி தெரிவித்தார்கள். பிரச்சனையைத் தீர்க்க பேசித் தீர்ப்பது என்ற ஒரு வழி இருப்பதையே கமலுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் முதல்வர்தான் சுட்டிக் காட்டியிருக்கிறார் போலிருக்கிறது.
 
இந்த இரு தரப்பினரும் நன்றி தெரிவித்ததைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் பிரச்சனையின் உச்சத்தில் இருக்கும்போது கமலுக்காக ஆதரவுக் குரல் கொடுக்காத சில நடிகர் நடிகைகள், கமல் பேட்டி கொடுத்து மக்கள் அனுதாபம் ஒட்டுமொத்தமாக அவர் பக்கம் திரும்பிய பின், அவர் வீட்டுக்குச் சென்றதையும் அங்கிருந்துகொண்டே முதல்வருக்கு நன்றி கோரியதையும்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
 
 
அறிவுவாதிகளின் சிந்தனைக்கு:
 
இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களும் கருத்து சுதந்திர ஆதரவாளர்களும் விஸ்வரூபம் படம் சந்தித்த பிரச்சனையைப் பற்றி பொதுத் தளங்களில் அதிகமாக விவாதித்தார்கள். இரு தரப்பினருமே பிரச்சனையின் மறுபுறத்தை அணுகவில்லை.
 
இஸ்லாமிய அமைப்புகளின் தரப்பில் இருக்கும் நியாயத்தைப் பேசிய சில பொது அறிஞர்கள் இந்தப் பிரச்சனையில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவது பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இவர்களில் பலர் கமல்ஹாசனின் மன்மதன் அம்புவில் ஒரு பாடல் இந்துக்களைப் புண்படுத்துவதால் அந்தப் பாட்டை நீக்க வலியுறுத்திய இந்து அமைப்புகளை விமர்சித்தவர்கள். இந்துக்கள் மனம் புண்படுவது இவர்களுக்குப் பிரச்சனையாகத் தெரியவில்லை போலும்.
 
கருத்துச் சுதந்திரப் போராளிகள் என்ற போர்வையில் விஸ்வரூபம் பிரச்சனையைப் பயன்படுத்தி இஸ்லாமியர்கள் மீதான் வன்மத்துக்கு தணலேற்றச் சிலர் முயன்றார்கள். ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் பலர் இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தீவிரவாத முத்திரையையும் அதைச் செய்வதில் 90களுக்குப் பிறகு வெளியான திரைப்படங்களுக்கும் இருக்கும் பங்கைப் பற்றி எப்போதும் பேசியதில்லை. இனியும் பேசமாட்டார்கள்.
 
அனைத்துக்குப் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது. ஒவ்வொருவரும் தனக்கான அரசியலின் கோணத்தில் மட்டுமே யோசித்தால் பொது நியாயம் பிடிபடாமல் நழுவத்தான் செய்யும். தனக்கான உரிமைகளைப் போலவே பிறர் உரிமைகளை மதிப்பது, பிறர் கடமைகளை வலியுறுத்துவதுபோலவே தன் கடமைகளுக்கு அழுத்தம் கொடுப்பது, ஒவ்வொரு தரப்புக்கு ஒரு நியாயம், ஒவ்வொரு நேரத்துக்கு ஒரு நியாயம் என்று இராமல் சமச்சீரான தன்மையைக் கடைப்பிடிப்பது, எதிராளியின் மனம் புண்படாத வகையில் விவாதிப்பது, எப்போதும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை வைப்பது ஆகிய பண்புகளே பொதுவெளியில் அமைதியும் சம நீதியும் ஓங்க வழி வகுக்கும். கருத்து வேற்றுமைகளும் விமர்சனங்களும் தம்மளவில் ஆரோக்கியமானவை. தனிப்பட்ட காழ்ப்புகளும் பாரபட்சமான அணுகுமுறைகளும் பிடிவாதங்களும்தான் அந்த ஆரோக்கியத்தைக் குலைக்கும் விஷத் துளிகளாய் கலந்துவிடுகின்றன. இவற்றைத் தவிர்க்க முயன்றாலே சூழலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம். எந்த விவகாரமும் விகார ரூபம் எடுக்காமல் தடுக்கலாம்.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=8c1f9280-c64c-4702-830c-08c7f7401d1b

எவ்வாறு களங்கப்பட்டீர்கள் ??????????

 

 

 

'விஸ்வரூபம்' உள்பட ரூ.1 கோடி மதிப்புள்ள புதுப்பட டி.வி.டி.க்கள் பறிமுதல்: 4 பேர் கைது 

 

மாநிலம் முழுவதும் பல இடங்களில் 'விஸ்வரூபம்' உள்ளிட்ட புதுப்படங்களின் திருட்டு டி.வி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

 

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் தலைமையில் தூத்துக்குடி மாநகர உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மாநகர இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தூத்துக்குடி நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது 5 கடைகளில் அனுமதியின்றி விற்பனைக்காக ஏராளமான திருட்டு டி.வி.டி. கேசட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் டி.வி.டி. கேசட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் விஸ்வரூபம், கடல், டேவிட், கண்ணா லட்டு தின்ன ஆசையா, அம்புலி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட புதுப்பட டி.வி.டி.க்களும், சில ஆபாச பட டி.வி.டி.க்களும் அடங்கும்.

இதுதொடர்பாக காஜா முகைதீன் (வயது 29), யாசர் அராபத் (27), சமீர் பாஷா (21), பேச்சிமுத்து (31) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கடைகளில் இருந்து கணினிகள், பென் டிரைவ்கள், 10 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட டி.வி.டி.க்கள் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் என போலீசார் கூறினர்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=91783

இன்றைய அரசியலில் விஸ்வரூபம் 
     சி.மகேந்திரன்                                                                                   pdf_button.png            
                       

       

தமிழக திரையுலகில் கமலஹாசன் பங்களிப்பை
யாராலும் மறுக்க முடியாதது. கடின உழைப்பு, திரையுலகின் தலைவாயிலில் நின்று
கொண்டு, புதிதாகப் பிறப்பெடுக்கும் அனைத்தையும் தானே பரிசோதனை செய்து
பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், என்று இவருடைய தனித்த ஆளுமையை, பட்டியலிட்டு
சொல்ல முடியும். இழப்புகளைப் பற்றி கவலை கொள்ளாமல், படைப்பின் புதிய
பரிமாணங்களை உருவாக்கிக் காட்டியவர் என்ற வகையில், எளிதில் மறந்துவிடக்
கூடியவர் அல்லர் கமல். விஸ்வரூபம் இவரது அண்மைகால திரைப்படைப்பு. அது
பிரச்சனைகளில் சிக்கிக்கொண்ட போது, வருத்தமுற்ற மனம் இப்பொழுது தடை
நீங்கித் திரைக்கு வந்த போது, பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது.


Kamal_500.jpgகமலஹாசனின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை
உருவாக்கிவிடுகிறது. வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சென்று
கொண்டிருக்கும் கதைப் பாதையை மாற்றுவழி அமைத்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி
தரும் இவரது பாணியால், புதிய படங்களில் இந்த எதிர்பார்ப்புகள் கூடுதலாகி
விடுகின்றன. இந்த வகையில் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்ட விஸ்வரூபம்
பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னத்திரைகளில் திடீர் திடீர்
என்று தோன்றி மறையும், விளம்பரங்கள் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும்
என்ற ஆர்வத்தை உருவாக்கிவிடுகிறது. விளம்பரத்திற்கான செலவுகளும் கூடுலானது
தான் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.


கமலஹாசன் ஒரு மாபெரும் கலைஞன் என்பதைப்
போலவே, அவருடைய திரைப் படைப்புகளும் மாபெரும் விவாதத்தை
உருவாக்கிவிடுகின்றன. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை புரிந்து, உணர்ந்து
கொள்வதில் சிரமங்கள் இருக்கின்றன. இதற்கான காரணங்களை இன்னமும் நம்மால்
ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. ஹேராம், விருமாண்டி, ஆளவந்தான்,
உன்னைப்போல் ஒருவன் என்று எல்லாத் திரைப்படங்களும், ஏதாவது ஒருவிதத்தில்
சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டன. இதற்கு கலைஞனுக்கே உரிய இவருடைய
அப்பாவித்தனமான எதார்த்த இயல்புகள் காரணமா? படைப்பாளிகளுக்குரிய, தான் என்ற
ஞானச்செருக்கு காரணமா? இந்திய தேசியத்தைப் பற்றியும், இந்திய ஒற்றுமையின்
இலக்குகள் பற்றியும் இவர் உணர்ந்து கொண்ட புரிந்துணர்வு காரணமா? என்பதை
அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டு விடுகிறது.


திரைப்படைப்பாளிகள் இந்திய அளவிலும்,
தமிழக அளவிலும், விவாதங்களில் சிக்கியிருப்பது புதிதானது அல்ல. கௌதம் கோஷ்
வங்கத் திரைப்பட இயக்கத்தின் புகழ்மிக்கவர். இவர் அந்தர் ஜாலி யாத்ரா
என்னும் படத்தை இயக்கினார். உள்முகப் பயணம் என்பது இந்த திரைப்படத்தின்
பெயர். உடன் கட்டை ஏறுதலில், பார்ப்பன சனாதன தர்மங்களில் வளர்க்கப்பட்ட
பெண்ணொருத்தி, பிணம் எரிக்கும் ஆடவன் ஒருவனுடன் சேர்ந்துவிடும்
எதார்த்தையும், வாழ்க்கையின் அழகையும் காட்சிப்படுத்துகிறார்.
திரைப்படத்தின் கருவும், காட்சி அமைவும் நம்மை பெரிதும்
பாதித்துவிடுகின்றன.


இது எத்தகைய எதிர்ப்பையும், விவாதத்தையும்
படம் வெளிவந்த காலத்தில் உருவாக்கியிருக்கும். சத்யஜித்ரே, சியாம் பனகல்,
ரித்விக் கட்டாக் போன்ற மாபெரும் படைப்பாளிகள் இத்தகையப் பிரச்சனைகள்
எத்தனையோ எதிர் கொண்டிருக்கிறார்கள். எல்லாமும் சமூக ஏற்றதாழ்வுகளை
தீவிரமாக கவனப்படுத்தும் கருத்து ரீதியானப் போராட்டத்தை உள்ளடக்கியவை.
காலங்காலமாக நிகழ்ந்து வரும் இந்தக் சமூக கொடுமைகளை காட்சி அமைப்பின் மூலம்
வீரியப்படுத்திக் காட்டினார்கள். சமூக மனிதனின் மனசாட்சி உறுத்தலால்,
ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமூக அசைவுகள் தோன்றின.


தமிழ் திரையுலகில் முதன் முதலில் மிகவும்
கடுமையான எதிர்ப்பை சந்தித்தவர் இயக்குநர் சுப்ரமணியம் அவர்கள். இவர் 1939
ஆண்டில் இயக்கிய திரைப்படம் தான் தியாக பூமி. இப்பொழுது யோசித்துப்
பார்த்தாலும், அந்த கதை அமைப்பு நம்மை மிகவும் அதிர்ச்சியுற
வைத்துவிடுகிறது. பார்ப்பன‌ சமூகத்தின் பின்னணியில் அமைந்த திரைப்படம் அது.
ஒரு இளம் விதவைப் பெண், தலித் இளைஞன் ஒருவனை மணமுடித்துக் கொள்கிறாள்.
தீவிரம் மிகுந்த பல்வேறு திருப்பங்களை திரைக்கதை கொண்டிருந்தது. இயக்குநர்
சுப்பரமணியம் அவர்கள் பிறந்தது கும்பகோணத்தில். அங்குள்ள பார்ப்பன
சங்கத்தினர் ஒன்று கூடி, சாதியிலிருந்து, இவரை ஒதுக்கி வைப்பதாக
அறிவித்தார்கள். அன்றைய காலத்தில் இது இயக்குநருக்கு ஏற்பட்ட சமூக ரீதியான
நெருக்கடியாகும். இதற்காக இவர் அஞ்சவில்லை. எதிர்த்துப் போராடுவது என்ற
முடிவுக்கு வந்துவிட்டார்.


பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு
விடுத்தார். 'நான் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. என் கருத்தில்
உறுதியுடன் இருக்கிறேன். இதற்காக எந்த இழப்பையும் சந்திக்கவும் தயாராகவும்
இருக்கிறேன்' என்று பகிரங்கமாக அறித்தார். இதைப் போலவே 'என்னை
சாதியிலிருந்து நீங்கள் ஒதுக்கி வைத்தால் உங்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி
வைக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. உங்களை ஒதுக்கி வைக்கிறேன்' என்று
அறிவித்தார். இவ்வாறான எத்தனையோ கருத்து ரீதியானப் போராட்டங்களை கடந்த
காலத்தில் தமிழகம் சந்தித்துள்ளது.


எப்படி பார்த்தாலும், தமிழக, இந்திய
அடிப்படை பிரச்சனைகளில் முக்கியமானதாகக் கருதப்படுபவை மதமோதல்களும், சாதிய
மோதல்களும் தான். இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில் மதப்பிரச்சனையை பற்றி
கமல் யோசித்திருப்பதில் தவறு இல்லை. இதற்கான கமலின் துணிச்சலை நாம்
பாராட்டலாம். இந்திய நாடு சுதந்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது,
எத்தனை படுகொலைகளை நாடு சந்தித்தது! கொலையுண்ட மனிதர்களின் உயிர்மூச்சு
தேசத்தின் சமவெளி முழுவதும் ஆக்ரமித்து நின்றன அன்று. ஹேராம் படத்திலும்
இதனை ஓரளவிற்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். இதிலும் விமர்சனங்கள்
இருக்கலாம், அது வேறு பிரச்சனை.


இந்திய பாக்கிஸ்தான் பிரிவினை காலத்தில்
பிறந்த படைப்பிலக்கியங்க‌ள் பலவற்றை தமிழக படைப்புலகம் வாசிப்பது இப்பொழுது
அவசியமானதாகும். மாண்ட்டோ என்னும் புகழ் மிக்க படைப்பாளி ஒருவரின்
பிரிவினை காலத்தின் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்குக்
கிடைத்தது. தேசம் பிரிந்த போது இத்தகைய பிரச்சனைகளை நாடு சந்தித்த‌தா?
இலக்கியத்தை இவ்வாறு கூட படைக்க முடியுமா, என்ற உணர்வை இந்த நூல் எனக்கு
உருவாக்கியது. காலத்தின் குரூரத்தைப் புரிந்து கொள்ள, மண்ட்டேயின்
எழுத்துகளில் ஒரு பகுதியை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதனை ராமனுஜம் தெளிந்த தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். புலம் என்னும்
பதிப்பகம், நூலை பதிப்பித்துள்ளது.


பிழை சரி செய்யபட்டது என்னும் தலைப்பில்
இதனை இவர் எழுதியிருக்கிறார். சொற் சித்திரம் என்னும் வடிவத்தில்
மறைபொருளில் கூறும் யுத்தியில் இது அமைக்கப்பட்டுள்ளது. மூர்க்கம் கொண்ட
கும்பலில் சிக்கிக் கொண்ட ஒருவனுக்கும், கும்பலுக்குமான உரையாடலாக இது
அமைக்கிறது.


யார் நீ?


நீ யாரு?


ஹர் ஹர் மகாதேவ்


என்ன அத்தாட்சி இருக்கிறது.


அத்தாட்சி இருக்கிறது. என்னுடைய பெயர் தரம் சந்த்.


இது அத்தாட்சியே இல்லை.


சரி, வேதங்களிலிருந்து எதை வேண்டுமானாலும் என்னைக் கேளுங்கள்.


எங்களுக்கு வேதங்களில் எதுமே தெரியாது. ஆனாலும் எங்களுக்கு அத்தாட்சி வேண்டும்.


என்ன அத்தாட்சி வேண்டும்?


நீ அணிந்திருக்கும் பைஜாமா நாடாவை அவிழ்த்திவிடு


அவன் பைஜமா நாடாவை அவிழ்ப்பதற்குப் பதில், இறுக்கி கட்டுகிறான். இதனால் கும்பலில் பெரும் கோபக்குரல் எழுகிறது.


அவனைக் கொல்லுங்கள்! கொல்லுங்கள்!! என்னும் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.


கொஞ்சம் பொறுங்கள். தயவு செய்து கொஞ்சம்
பொறுங்கள். நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன். பகவான் மீது ஆணையிட்டுச்
சொல்கிறேன். நான் உஙகள் சகோதரன்.


அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்.


நான் வந்து கொண்டிருந்த பகுதி,
விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் இந்த
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. என் உயிரைக்
காப்பாற்றிக் கொள்ள, இது ஒன்று தான் நான் செய்த பிழை. மற்ற அத்தாட்சிகளை
வைத்துப் பாருங்கள், நான் உங்கள் சகோதரன் தான்.


அந்தப் பிழையை வெட்டி எறியுங்கள். கும்பல் வெறி கொண்டு கத்துகிறது.


அந்தப் பிழை வெட்டி எறியப்படுகிறது.


அன்றைய சமூகப் பதட்டத்தையும், அதனால் எழுப்பட்ட மத அரசியலின் முதுகுப்புறத்தையும் இந்தக் கதை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.


ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற
காந்தியடிகளின் முழக்கத்தில் இந்த ஒற்றுமைக்கான பாதை உருவாக்கப்பட்டது.
வேற்றுமையில் ஒற்றுமை என்னும் வழிகாட்டும் நெறி கூட இதன் காரணம் கருதியே
உருவாக்கப்பட்டன. காந்தி காலத்தில் பிறந்த காங்கிரஸ் கொடியிலும்,
சுதந்திரத்திற்குப் பின்னர் அமைந்த தேசியக் கொடியிலும், கொடியின் நிறங்கள்
மதஒற்றுமைக்கான குறியீடாக்கப்பட்டன. காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று
நிறங்களுக்கான மத அடையாளத்தையும், அதன் ஒற்றுமையையையும் நாம்
புறக்கணித்துவிட இயலாது. இந்த மத ஒற்றுமைக்காகத்தான் காந்தியடிகளும்
தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்தார்.


சென்ற நூற்றாண்டின், எண்பதுகளுக்குப்
பின்னர் மதஒற்றுமை, ஆட்சி அதிகாரத்தின் சுயநலத்திற்காக பெரும் கேள்விக்கு
உள்ளாக்கப்பட்டது. பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. பம்பாயில் மதக்கலவரங்கள்
தோற்றுவிக்கப்பட்டன. குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தன. இந்திய பாக்கிஸ்தான்
பிரிவினைக்குப் பின்னர், இந்திய தாய், இரண்டாம் முறையாக தமது மக்கள்
ஒற்றமையை இழந்து, மோதிக்கொள்வதைப் பார்த்து, தவிக்கத் தொடங்கிவிட்டாள். மரண
ஓலங்கள், புலபெயர்வுகள், இடப்பெயர்வுகள் என்று, இந்தியா இரண்டாவது முறையாக
மக்களில் ஒரு பகுதியை மீண்டும் அனாதையாக்கிக் கொண்டது.


முஸ்லீம் மக்கள் பெரும் எண்ணிக்கையில்
வாழும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இவர்களை ஒருபுறம்
ஒதுக்கிவிட்டு இந்திய ஒற்றுமையை யாராலும் கட்டி எழுப்ப முடியாது. இந்திய
முஸ்லீம் மக்கள் தாங்கள் தனித்துவிடப்பட்டதாக உணரத் தொடங்கிவிட்டார்கள்.
தங்கள் முழுசமூகத்தின் மீதும் பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டதாக
கருதுகிறார்கள். சொந்த குடிமக்களின் மீதே குடியரசு சந்தேகக் கண்கொண்டு
பார்த்தால் தாங்கள் என்ன செய்வது என்ற வேதனை அவர்களை வதைத்துக்
கொண்டிருக்கிறது. கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்து அப்பாவி முஸ்லீம்
இளைஞர்கள் இன்னமும் விசாரணையின்றி சிறைச்சாலையில் இருக்கிறார்கள். இந்திய
சிறைகள் அனைத்திலும் முஸ்லீம் இளைஞர்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரில்
அடைப்பட்டுள்ளார்கள்.


இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும்,
முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்படுகிறார்கள். பாக்கிஸ்தானுக்கும் இதற்கும்
தொடர்பு இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். இஸ்லாமிய
அடிப்படைவாதத்தை பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறது.
இதிலும் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால் பாக்கிஸ்தான்
பயங்கரவாத செயல்பாட்டிற்காக இந்திய முஸ்லீம் மக்களுக்கு தண்டனை வழங்கலாமா?
காவல்துறையாலும், ராணுவ உளவுத்துறைகளாலும் பயங்கரவாத நடவடிக்கையில்
ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய இயலுவதில்லை. அவர்கள் கைது
செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும். இதற்கு இவர்களுக்கு மிகவும் சுலபமாகக்
கிடைப்பவர்கள் அப்பாவி, ஏழை முஸ்லீம் இளைஞர்கள் தான்.


ஒருகாலத்தில் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக
அறிவித்துக் கொண்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். இன்றும் கம்யூனிஸ்டுகளை
ஒழிப்பதில் ஏகாதிபத்திய ஆதிக்கச் சக்திகள் மிகுந்த கவனத்துடன் தான்
செயல்படுகின்றன. கம்யூனிஸ்டுகளைப் போலவே, இன்று அவர்கள் மிகுந்த வெறுப்பைக்
கொண்டிருப்பது முஸ்லீம் மக்களின் மீது தான். அமெரிக்காவில்
இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டது மட்டும் காரணம் இல்லை. உலகமயப்
பொருளாதாரத்தில் பெட்ரோலிய எண்ணெய் ஆதிக்கத்தை தன் கையில் வைத்துக்
கொள்வதற்கும் இது தேவைப்படுகிறது. உலக நாகரிகத் தொட்டில்களில் ஒன்றான
டைகிரிஸ் யூப்ரட்டிஸ் நதிக் கரையில் அமைந்தது தான் ஈராக். இது
அமெரிக்காவால், எவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது என்பதை யாரும் மறந்துவிட
முடியாது.


இவை எல்லாவற்றையும் மீறி ஒரு உண்மை நாம்
அனைவரும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இது யாரும் அறிந்து
விடாதவாறு மூடிமறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மூடுதிரை உருவாக்கி
உண்மையை முற்றாக மறைப்பதற்கு இன்றைய ஆதிக்க ஊடகங்கங்கள் வெகுவாக
பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்தது
பின்லேடனும், அதன் பின்னணியில் அமைந்த இயக்கமும் என்பது எத்தனை உண்மையானதோ
அதைப்போலவோ பின்லேடனையும் அதன் பின்னணியில் அமைந்த இயக்கத்தையும் பெரும் பண
உதவி செய்து வளர்த்தெடுத்தது அமெரிக்காவும், அதன் சிஐஏ உளவு நிறுவனமும்
தான் என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.


அமெரிக்கா உலகில் பரப்பி வரும் பயங்கரவாத
சுமையையையும் இந்திய முஸ்லீம்கள் சுமக்கிறார்கள். இந்தப் பின்னணியில்
கலையும் இலக்கியமும், 'சகோதரர்களே நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்' என்ற
நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறான சூழல் இங்கு இல்லை.
திரைப்படங்கள் மனிதாபிமானம் கொண்டு மக்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்திருக்க
வேண்டும். மாற்றாக, படைப்புலகின் எதிர்மறைப் பார்வையில் இவர்கள்
அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதனால் முஸ்லீம்கள்
அமைதியற்றவர்களாகி விடுகிறார்கள்.


தமிழ் திரையுலகில் 1960 முதல் 1985 வரை
முஸ்லீம் பாத்திரங்கள் பிறருக்கு உதவி செய்பவர்களாக, சமூக இணக்கம்
கொண்டவர்களாக காட்டப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள், தீவிரவாதிகளாகவும்,
பயங்கரவாதிகளாகவும் காட்டப்படுகிறார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு எப்படி
வந்தது? வடஇந்தியாவிலிருந்து வந்ததா? உலக ஆதிக்க அரசியலிலிருந்து வந்ததா?
இவை எல்லாவற்றையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.


இந்தப் பின்னணியில் தான் கமலின்
விஸ்வரூபம் பெரும் பிரச்சனைகளை சந்தித்தது. இதனை கமலுக்கும் தமிழக
முஸ்லீம்களுக்கும் இடையில் அமைந்த பிரச்சனையாகப் பார்க்காமல், இன்றைய தமிழ்
சினிமாவின் மீது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள, மாறுபட்ட கருத்தின்
அடையாளமாக புரிந்து கொள்ள வேண்டும்.


இன்றைய திரையுலகில் நிகழ்ந்து வரும்
மாற்றங்களையும், படைப்பாளிகளின் இன்றைய நெருக்கடியையும் நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும். படைப்பு பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொள்கிறது.
ஒருவிதத்தில் பார்த்தால், இது உலகமயத்தின் விளைவு என்பதை உணர்ந்து கொள்வது
அவசியமானது. கலைஞன் மானுடத்தின் பொதுவுடமை. அவனது வாழ்வு தாழ்வு அனைத்தும்
சமூகம் சார்ந்தது. முஸ்லீம் கூட்டமைப்பு மாறுபாடுகளை தெரிவித்ததும்,
மீண்டும் இணக்கம் கண்டதும் வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.


கமல் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பு
இருந்த போதிலும் மனத்தின் அடி ஆழத்தில் ஒருவிதமான வேதனை தேங்கி நிற்கிறது.
அதனை மனதில் போட்டு அழுத்தி வைக்காமல், வெளிப்படையாகவே வெளியிட
விரும்புகிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலை இரண்டாம் உலகப்போருக்கு பின்
நிகழ்ந்த மாபெரும் இன அழிப்பு. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய  தமிழ் மக்கள்
மீதான தாக்குதல் 2009 மே மாதம் 18 ஆம் தேதியோடு முடிவடைந்தது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் என்பதை ஐக்கிய நாடுகள்
சபையே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து உலகம் முழுவதும்
வாழும் 10 கோடி தமிழ் மக்களும் இன்னமும் விடுபடவில்லை. இரண்டாம் உலக போரின்
மாபெரும் மனித அவலங்களிலிருந்து தோன்றியது தான், ஐரோப்பாவின் புகழ்மிகுந்த
இலக்கியங்கள், திரைப்படங்கள், உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும். தாலிபான்
பிரச்சனை பாதித்த அளவிற்கு கமலுக்கு ஏன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை
பாதிப்பைத் தரவில்லை என்பது மனதுக்குள் நீங்காத ஆதங்கமாகவே இருக்கிறது.


- சி.மகேந்திரன் (
thamarai_mahendran@yahoo.co.in)

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22872:2013-02-06-05-37-32&catid=1:articles&Itemid=264

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் விஸ்வரூபத்திற்கான சோதனை நிறைவு : திரையிட அனுமதி

 

kamal.jpgகமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது.விஸ்வரூபதில் முஸ்லிம் மக்களை வேதனைக்குட்படுத்தும் வகையில் காட்சிகள் அமையப்பெற்றுள்ளதாக கூறி அந்த திரைப்படத்தை தடை செய்யுமாறு பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தன.இந்நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முதல்நாள் இலங்கையில் தற்காலிக தடை விதிக்கப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

எனினும் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னர் படத்தை வெளியிடுவதற்கான அனுமதியை தணிக்கை சபை இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.