Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசோக் யோகனிடம் கேள்வி…..

Featured Replies

 

 

கேள்வி: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புகலிடத்தில் புதிது புதிதாக அமைப்புக்கள் தொடங்கப்படுகின்றன.இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

-தவராசா

identity_crisis-296x300.jpgதோற்றம் பெறும் இவ்வாறான அமைப்புக்கள் தொடர்பாக பேசுவதானால் அது நீண்ட உரையாடல் ஆகிவிடும். எனினும் குறிப்பாக சில விடயங்களை கூறமுடியும்.

தொடங்கப்படும் ஒவ்வொரு அமைப்புக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேண்டி ; அமைக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. தனிநபர்களின் அடையாள விருப்புக்களின்  தனிப்பட்ட நலன்சார்ந்த  தேவைகளின் அடிப்படையிலேயே தனிநபர்களினால், அவர்களின் நலன் சார்ந்து இயங்கும் சில நபர்களையும் கூட்டிணைத்து இவை தொடங்கப்படுகின்றன. அதற்கு அப்பால் இதனுடைய பெறுமதிகள் எதுவமில்லை.

உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட எமது மக்களின் விடுதலைவேண்டி அமைக்கபடும் ஒரு அமைப்பு, ஐனநாயக வடிவங்களை கொண்டதாக இருக்கவேண்டும். இதற்கு முதலில் கடந்த காலங்களில் விடுதலை இயக்கங்களின் தோல்விக்கு பின்னடைவுக்கு காரணமான அமைப்பு வடிவங்கள் பற்றிய மறுபரீசிலனை அவசியம். அத்தோடு விடுதலைக் கோட்பாடுகளை வெறும் சூத்திரங்களாக சொல்லிக் கொண்டு, நிஐவாழ்வில் போலிகளாக வாழ்ந்தவர்கள்  இன்றும் அதன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டு ,அமைப்புக் கட்டுபவர்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்படவேண்டும்.

இல்லாவிடின் மக்கள் தொடர்ச்சியாக இவர்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். மக்களின் வாழ்வில் தொடர்ச்சியாய் இவர்கள் தங்கள் பிழைப்புவாதத்தை தொடர்வார்கள்.

ஒரு அமைப்பு ஐனநாயக வடிவத்தோடும், மார்க்ஸ்சிய சிந்தனையோடும், சமூகஒடுக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல் முறைகளுக்கு எதிராக போராட முனையும்போதே மக்கள் நலன் சார்ந்த அமைப்பாக என்னால் கருதமுடியும். அதற்கு அமைப்புக்களை உருவாக்க முனைபவர்கள் மார்க்ஸியத்தின் இயங்கியலை புரிவதோடு வாழ்வில் நேர்மைகொண்டவர்களாக இருக்கவேண்டும்.

கேள்வி: யாழ்ப்பாண மேலாதிக்கத்திற்கு எதிராக மட்டக்களப்பில் யாழ் அகற்றிச் சங்கம் தொடங்கிய வரலாறு உண்மையா?

-குமரன்.

batticaloa-300x225.jpgஉண்மைதான்  இதன்வரலாறு சுவாரசியமானது. 1960களில் மட்டக்களப்பு பிரதேசத்தில் யாழ்ப்பாணதிலிருந்து வந்து வர்த்தக முயற்சிகளில் ஈடுபபட்டவர்களுக்கு எதிராக, மட்டக்களப்பில் நீண்டகாலங்களுக்கு முன்னர் குடியேறி முதலாளிகளாக மாறிய “பழைய” யாழ்ப்பாண வர்த்தகர்களின் பின்புலத்தில் உருவாக்கபட்டதுதான் இந்த ‘’யாழ்அகற்றிச் சங்கம்’’.இதில் சாதிய அம்சங்களும் அடங்கியிருந்தன.

1960களில் மட்டக்களப்பில் வந்து வர்த்தக முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண வர்த்தகர்களில் பெரும்பாண்மையோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் சிறுவியாபாரிகளாக கிராமங்கள் தோறும் வியாபாரத்தை தொடங்கினார்கள்.இது அதுவரை காலமும் மட்டக்களப்பு மக்களை சுரண்டிக் கொண்டிருந்த யாழ்ப்பாணப் ‘’பெருமுதலாளிகளுக்கு’’ பலத்த தொந்தரவாக இருந்தது.

எனவே இவர்களை அகற்றுவதற்காக இப் பெரும் முதலாளிகள் தமக்கிருந்த அரசியல் உறவுகளையும் இணைத்துக்கொண்டு, ‘யாழ் அகற்றிச் சங்கத்தை’ தொடங்கினார்கள். யாழ்ப்பாண-மட்டக்களப்பு பிரதேச முரண்பாடுகள் இவ்வாறுதான் இவர்களால் ஊக்குவிக்கப்பட்டு பெருப்பிக்கப்ட்டன. இதில் பலர் தங்கள் பிழைப்புக்காக தொடர்ச்சியாக வழிமொழிந்தனர். இன்றும்கூட மிகத் தீவிரமாக பிரதேசவாதம் பேசும் நபர்களின் “பூர்வீகத்தையும்,” அவர்களின் வர்க்கப் பின்னணியையும் ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.

எனினும்  இதற்கு அப்பால், அரசியல் சமூக பொருளாதார தளங்களில் மட்டக்களப்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் பாரிய முரண்பாடுகள் இருந்தன. இந்த முரண்பாடுகளும், புறக்கணிப்புக்களும் அரசியல் -சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை.

கேள்வி: புகலிடத்தில் தலித்தியம் கதைப்பவர்கள் இலங்கை பேரினவாத அரசின் கைக்கூலிகளாக இருக்கிறார்களே உங்கள் அபிப்பிராயம் என்ன?

-சிவா – டென்மார்க்

நண்பரே அனைவரையும் இவ்வாறு கூறுவது சரியல்ல. பல நண்பர்கள் இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுப்பவர்களாக, செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் ஒடுக்கப்பட்ட எமது தலித் மக்களின் சமூக விடுதலையில் அக்கறைகொண்டு எம் மக்களின் கல்வி பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். நீங்கள் தலித் முன்னணியைச்சேர்ந்த நபர்களை வைத்துக்கொண்டு பொது முடிவுக்கு வரக்கூடாது. தலித் முன்னணி நபர்களின் பிழைப்புவாதமும் இலங்கை அரசை அண்டிப் பிழைக்கும் வியாபாரத் தனமும் நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் நண்பரே இப்போது இந்தப் பிழைப்புவாதிகள் எம்மைப் போன்றவர்களை பிள்ளையானுக்கும், இலங்கை அரசுக்கும் போட்டுக்கொடுக்கும் “ஆள்காட்டிகளாக,” இலங்கை அரசின் ‘‘ புலனாய்வுத் துறையாக ’’ மாறிவட்டார்கள். எமது தலித் மக்களை வைத்து பிழைப்பு நாடத்தும் இந்த வியாபாரிகளை நாம் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தனிநபர்களாக அடையாளப்படுத்த்த வேண்டும்.

கேள்வி: புளொட் நேசனைத் தெரியுமா?. அவர் எழுதிய புளொட் வரலாறு பற்றி உங்கள் கருத்து என்ன?.

-பவன் சுவீஸ்.

நேசனை 1983ம் ஆண்டிலிருந்து தெரியுமென நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் உமா மகேஸ்வரனுக்கு இரண்டு ‘’விசுவாச ரசிகர் மன்ற மையங்கள்’’ இருந்தன. ஒன்று சுழிபுரம் ; மற்றையது கொக்குவில். கொக்குவில் ‘விசுவாச மையத்திலிருந்து’ வந்தவர்தான் நேசன். புளொட்டில் அதிகாரத் துஷ்பிரயோகங்களைச் செய்து, மத்தியதர வர்க்க மனோபாவ சொகுசுகளை அனுபவித்தவர்கள்தான் இவர்கள். அராஜகங்கள், அடாவடித்தனங்கள், கொள்ளை, கொலை என்று உமா மகேஸ்வரன் விசுவாசத்தை மூலதனமாக வைத்து இவர்கள் செய்த அட்டூழியங்கள் அளவற்றவை. புளொட் ‘’மார்க்ஸிய இயக்கமாக’’ தன்னை சொல்லிக்கொண்டபோதிலும் இவர்கள் அரசியலின் அடிச்சுவட்டைக் கூட அறியாதவர்கள். புளொட் ஒரு ‘’வெள்ளாளர் இயக்கம்’’ என்று முத்திரை குத்தப்படுவதற்கு இவர்களின் சாBroken_Mask-300x216.jpgதிய ஆதிக்க மனோபாவ செயல்பாடுகளே காரணமாக இருந்தது.

ஆனால் நேசன்  இவர்களில் இருந்து மாறுபட்டவராக, ஜனநாயக பண்பு கொண்டவராக இருந்தார். சுறுசுறுப்பும், உதவும் குணமும் நேசனிடம் தாரளமாக இருந்தன. அதேவேளை அரசியல் ஆழுமை அற்றவராகவும், இருந்தார். எல்லோருக்கும் நல்லவராக இருக்கவேண்டுமென்ற தாராளவாதமும் இவரிடம் இருந்தன. இதனால் இவரை எல்லோரும் பயன்படுத்திக்கொண்டார்கள். குறிப்பாக புளொட்டில் இருந்த கண்ணாடிச் சந்திரன் என்பவரின் தன்னிச்சையான பல நடவடிக்கைகளுக்கு நேசன் பயன்படுத்தப்பட்டார். உதாரணமாக யாழ்- கொட்டடியில் படுகொலை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பொது மக்களின் கொலைக்கும் நேசன் துணைபோனார். இவ்வாறு பல அதிகார துஷ்பிரயோகங்களை பட்டியல் இட முடியும்.

நேசன் தன் காலம் பூராகவும் யாரோ சிலருடைய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றார். அவர் அரசியல் தலைமைத்துவ ஆளுமை கொண்டவராக மாறவேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நேசன் மற்றவர்களுக்கு பயன்படும் செயல் புகலிடத்திலும் தொடர்கின்றது. அதன் வெளிப்பாடுதான் அவர் எழுதியதாகச் சொல்லப்படும் புளொட் வரலாறு.

இந்த வரலாற்றில் நேசன் நிறைய உண்மைகளைச் சொல்லுகின்றார். அதே நேரம் ஒரு சிலரின் வரலாற்றை மிக திட்டமிட்டு மறைத்து கொச்சைப்படுத்துகின்றார். இவ்வாறான செயலுக்கு நேசன் பொறுப்பில்லையென்றும் ; ஒரு சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக, சிலபேர்களோடு கொண்ட தனிப்பட்ட முரண்பாட்டிற்காக, அந்த நபர்கள் மீது சேறுபூசியதாகவும், நேசன் சொல்லியவற்றை திரிவுபடுத்தி எழுதியதாகவும் ஒரு செய்தி உண்டு. (சேறு பூசப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன்). இதனால் நேசன் எழுதிய வரலாறு நம்பகத் தன்மை அற்று, வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வரலாறாக தோல்வி கண்டுவிட்டது. இதனால் நேசன் கூறிய உண்மையான விடயங்களும் பெறுமதியற்று நம்பகத்தன்மையற்றதாகிவிட்டது. சுயவரலாறு என்பது சுய விமர்சன பரீசீலனையோடு உண்மையோடும், நேர்மையோடும் எழுதப்படவேண்டும். அந்தத் தகுதி நேசனிடமிருந்தும் “கூடாத நட்பினால்” கைநழுவ விட்டுவிட்டார். இவ்வாறுதான் என்னால் சொல்லமுடியும்.

 

www.inioru.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கேள்வி: புகலிடத்தில் தலித்தியம் கதைப்பவர்கள் இலங்கை பேரினவாத அரசின் கைக்கூலிகளாக இருக்கிறார்களே உங்கள் அபிப்பிராயம் என்ன?
-சிவா – டென்மார்க்

நண்பரே அனைவரையும் இவ்வாறு கூறுவது சரியல்ல. பல நண்பர்கள் இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுப்பவர்களாக, செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் ஒடுக்கப்பட்ட எமது தலித் மக்களின் சமூக விடுதலையில் அக்கறைகொண்டு எம் மக்களின் கல்வி பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். நீங்கள் தலித் முன்னணியைச்சேர்ந்த நபர்களை வைத்துக்கொண்டு பொது முடிவுக்கு வரக்கூடாது. தலித் முன்னணி நபர்களின் பிழைப்புவாதமும் இலங்கை அரசை அண்டிப் பிழைக்கும் வியாபாரத் தனமும் நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் நண்பரே இப்போது இந்தப் பிழைப்புவாதிகள் எம்மைப் போன்றவர்களை பிள்ளையானுக்கும், இலங்கை அரசுக்கும் போட்டுக்கொடுக்கும் “ஆள்காட்டிகளாக,” இலங்கை அரசின் ‘‘ புலனாய்வுத் துறையாக ’’ மாறிவட்டார்கள். எமது தலித் மக்களை வைத்து பிழைப்பு நாடத்தும் இந்த வியாபாரிகளை நாம் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தனிநபர்களாக அடையாளப்படுத்த்த வேண்டும்.

கேள்வி: புளொட் நேசனைத் தெரியுமா?. அவர் எழுதிய புளொட் வரலாறு பற்றி உங்கள் கருத்து என்ன?.
-பவன் சுவீஸ்.

நேசனை 1983ம் ஆண்டிலிருந்து தெரியுமென நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் உமா மகேஸ்வரனுக்கு இரண்டு ‘’விசுவாச ரசிகர் மன்ற மையங்கள்’’ இருந்தன. ஒன்று சுழிபுரம் ; மற்றையது கொக்குவில். கொக்குவில் ‘விசுவாச மையத்திலிருந்து’ வந்தவர்தான் நேசன். புளொட்டில் அதிகாரத் துஷ்பிரயோகங்களைச் செய்து, மத்தியதர வர்க்க மனோபாவ சொகுசுகளை அனுபவித்தவர்கள்தான் இவர்கள். அராஜகங்கள், அடாவடித்தனங்கள், கொள்ளை, கொலை என்று உமா மகேஸ்வரன் விசுவாசத்தை மூலதனமாக வைத்து இவர்கள் செய்த அட்டூழியங்கள் அளவற்றவை. புளொட் ‘’மார்க்ஸிய இயக்கமாக’’ தன்னை சொல்லிக்கொண்டபோதிலும் இவர்கள் அரசியலின் அடிச்சுவட்டைக் கூட அறியாதவர்கள். புளொட் ஒரு ‘’வெள்ளாளர் இயக்கம்’’ என்று முத்திரை குத்தப்படுவதற்கு இவர்களின் சாBroken_Mask-300x216.jpgதிய ஆதிக்க மனோபாவ செயல்பாடுகளே காரணமாக இருந்தது.

ஆனால் நேசன்  இவர்களில் இருந்து மாறுபட்டவராக, ஜனநாயக பண்பு கொண்டவராக இருந்தார். சுறுசுறுப்பும், உதவும் குணமும் நேசனிடம் தாரளமாக இருந்தன. அதேவேளை அரசியல் ஆழுமை அற்றவராகவும், இருந்தார். எல்லோருக்கும் நல்லவராக இருக்கவேண்டுமென்ற தாராளவாதமும் இவரிடம் இருந்தன. இதனால் இவரை எல்லோரும் பயன்படுத்திக்கொண்டார்கள். குறிப்பாக புளொட்டில் இருந்த கண்ணாடிச் சந்திரன் என்பவரின் தன்னிச்சையான பல நடவடிக்கைகளுக்கு நேசன் பயன்படுத்தப்பட்டார். உதாரணமாக யாழ்- கொட்டடியில் படுகொலை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பொது மக்களின் கொலைக்கும் நேசன் துணைபோனார். இவ்வாறு பல அதிகார துஷ்பிரயோகங்களை பட்டியல் இட முடியும்.

நேசன் தன் காலம் பூராகவும் யாரோ சிலருடைய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றார். அவர் அரசியல் தலைமைத்துவ ஆளுமை கொண்டவராக மாறவேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நேசன் மற்றவர்களுக்கு பயன்படும் செயல் புகலிடத்திலும் தொடர்கின்றது. அதன் வெளிப்பாடுதான் அவர் எழுதியதாகச் சொல்லப்படும் புளொட் வரலாறு.

இந்த வரலாற்றில் நேசன் நிறைய உண்மைகளைச் சொல்லுகின்றார். அதே நேரம் ஒரு சிலரின் வரலாற்றை மிக திட்டமிட்டு மறைத்து கொச்சைப்படுத்துகின்றார். இவ்வாறான செயலுக்கு நேசன் பொறுப்பில்லையென்றும் ; ஒரு சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக, சிலபேர்களோடு கொண்ட தனிப்பட்ட முரண்பாட்டிற்காக, அந்த நபர்கள் மீது சேறுபூசியதாகவும், நேசன் சொல்லியவற்றை திரிவுபடுத்தி எழுதியதாகவும் ஒரு செய்தி உண்டு. (சேறு பூசப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன்). இதனால் நேசன் எழுதிய வரலாறு நம்பகத் தன்மை அற்று, வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்ட வரலாறாக தோல்வி கண்டுவிட்டது. இதனால் நேசன் கூறிய உண்மையான விடயங்களும் பெறுமதியற்று நம்பகத்தன்மையற்றதாகிவிட்டது. சுயவரலாறு என்பது சுய விமர்சன பரீசீலனையோடு உண்மையோடும், நேர்மையோடும் எழுதப்படவேண்டும். அந்தத் தகுதி நேசனிடமிருந்தும் “கூடாத நட்பினால்” கைநழுவ விட்டுவிட்டார். இவ்வாறுதான் என்னால் சொல்லமுடியும்.

மட்டக்களப்பில் போடியார்கள் என்பவர்கள் யார்? போடியார் மரபு அங்கு இப்போது உள்ளதா? யாழ்ப்பாணத்தை விட மட்டக்களப்பில் பெண்களுக்கு உரிமைகள் கூடுதலாக உள்ளதாக சொல்கிறார்களே. மேலும் மட்டக்களப்பில் கம்யூனிச கட்சிகள் ஏன் வளரவில்லை. தயவு செய்து இவற்றிற்கு பதில் தரவும்.

வாசன்

batti1.jpgமட்டக்களப்பு தொடர்பான இவ்வாறான ஆய்வுநிலைக் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பது கொஞ்சம் சிரமமே. இக்கேள்விக்கு, இனியொருவில் மட்டக்களப்பு ஆய்வுகள் பற்றி எழுதும் விஜய் போன்றவர்கள் பதிலளிப்பது சிறப்பானதாக இருக்கும். எனினும் எனது அப்பிராயங்களைக் கூறுகிறேன்.

மட்டக்களப்பில் நிலங்களை மிகக் கூடுதலாக தன்னகத்தே கொண்ட நிலவுடைமையாளர்களே ”போடியார்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். மட்டக்களப்பு நிலப்பிரபுத்துவ, நிலமானிய சமூகத்தில் ஓர் கால கட்டத்தில் இவர்களே சமூகத்தின் அரசியல், பொருளாதார விதிகளை உருவாக்குகின்றவர்களாக ஆளுமை பெற்றிருந்தார்கள். ஆனால்; போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகைக்குப் பிற்பாடு இவர்களுடைய ஆளுமை இருத்தல் குறைக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காரணம் இப்போடியார்கள் போத்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் அந்நிய அதிகார ஆதிக்கத்திற்கு எதிராகப் போர்கொடி தூக்கியதன் காரணமாக இவர்களின் நிலவுடைமைகள், சொத்துக்கள் காலத்திற்கு காலம் இவ் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டு பல போடிமார்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். ஆங்கிலேயரின் வருகையின் போது இவர்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக ஆங்கிலேயரோடு மட்டக்களப்புக்கு வந்த கிறிஸ்தவ மிசனெறிகளும், அவர்களுக்குத் துணையாக வந்த ஆங்கிலம் படித்த கிறிஸ்தவ சமூகத்தினரும் இந்த மட்டக்களப்பு போடியார்களின் அதிகாரத்தை குறைத்ததில் பெரும்பங்காற்றினர். போடியார்களிடம் இருந்த பெருந்தொகையான நிலங்கள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்டு கிறிஸ்தவ மிசனெறிகளுக்கு வழங்கப்பட்டதோடு, மிகக்குறைந்த விலையில் இவர்களின் காணிகள் பறிக்கப்பட்டு யாழ்ப்பாண கிறிஸ்தவ ஆதிக்க சமூகத்தினருக்கு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக போடியார்கள் அரசியல், பொருளாதார வலுவிழந்து காலப்போக்கில் இன்று ஒரளவு மறைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். மட்டக்களப்பில் பலர் தங்கள் பெயர்களில் போடியார் என்ற பதத்தை கொண்டிருந்தாலும், கடந்த காலங்களைப் போன்று அவர்களிடம் பாரிய நிலச்சொத்துக்கள் இல்லையென்றே நான் நினைக்கிறேன் எனினும் போடியார் மரபு ஒரளவு தொடர்கிறது. இன்றைய மட்டக்களப்பில் பெரும் நிலச்சுவாந்தர்களாக இருப்பவர்கள் கிறிஸ்தவ மிசனெறிகளும் அவர்களோடு வந்த நபர்களுமே.

பெண்கள் உரிமை பற்றியது

பெண்உரிமை என்பது அதிகப்படியான வார்த்தையென்றே நான் கருதுகிறேன். மட்டக்களப்பு சமூகம் ஏனைய சமூகங்களைப் போன்று ஆண் மையம் கொண்டதாகவே அமையப் பெற்றிருக்கிறது. எனினும் ஏனைய பிரதேங்களை விட பெண்களுக்கான சொத்துரிமைப் பாதுகாப்பு என்பது மட்டக்களப்பில் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் போடியார் மரபு உருவாக்கிய மரபுவழி சமூகச்சட்டங்களே. இது ”முக்குவர் சட்டம்” என அங்கு சொல்லப்படுகிறது. இச்சட்டத்தில் தாய்வழிச்சமூக முறைமைகள் பேணப்படுகின்றன. குறிப்பாக நிலங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பெண்களுக்கு கூடுதலாக அளிக்கப்படுகிறது. இதனால் பெண்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு ஒரளவு பேணப்படுகிறது. இன்று ”முக்குவர் தேசவழமைச் சட்டம்” காலவதியாகிவிட்டது.

யாழ் தேசவழமைச் சட்டத்தை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சட்ட வடிவமாக்கியது போன்று மட்டக்களப்பு போடிமார்களால் அம்முக்குவர் தேசவழமைச்சட்டத்தை நிலை நிறுத்த முடியவில்லை, காரணம் ஆங்கிலேயர்ளோடு இருந்த முரண்பாடுகளும், இயல்பாகவே இவர்களுக்கு ஆங்கிலமொழி மீது இருந்த வெறுப்பும், இதனால் ஏற்பட சட்ட ஆங்கிலப்பற்றாக்குறையும் முக்குவர் தேசவழமைச்சட்டத்தை ஆங்கிலேயர்கள் காலத்தில் சட்டப்பதிவாக்க முடியாமல் செய்துவிட்டது.

கம்யுனிசக்கட்சி பற்றி

Batticaloa1-300x212.jpgவடக்கில் இடதுசாரி இயக்கம் தோற்றம் பெற்றது போன்று மட்டக்களப்பில் உருவாகாமைக்கு மட்டக்களப்பு நிலவுடைம சமூக அமைப்பின் தன்மையே காரணமாகும். யாழ்ப்பாணத்தில் கூலி விவசாயிகளாக, தொழிலாளர்களாக பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சாதிய ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்படும் தன்மையைக் கொண்டிருந்தார்கள். ஆனால் மட்டக்களப்பில் பெரும்பான்மைச் சமூகம் முக்குவர் சமூகமாகவே உள்ளது. இவர்களே மட்டக்களப்பின் ஆதிக்க சமூகமாகவும் இருக்கின்றார்கள், இங்கு உருவாகும் கூலி விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் அனைவரும் பெரும்பான்மையாக இந்த முக்குவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள், இதனால் சாதியமுரண்பாட்டின் கூர்மை, இங்கு தொழிற்பட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. ஆனால் வர்க்க முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த வர்க்க முரண்பாட்டுக்குள்ளாகின்றவர்கள் ஒரே சமூகத்தினராக இருக்கின்றமையால் வர்க்க முரண்பாட்டை பெரிதாகிக்கொள்ள கூலிவிவசாயிகளும், தொழிலாளர்களும் முயன்றாலும் கூட இவ் ஆதிக்க முக்குவர் சமூகம் அதை தந்திரோபாயமாக கையாளவும், தணிக்கவும், இல்லாமல் செய்யவும் அவர்களால் முடிகின்றது.

உண்மையில் கூலி விவசாயிகளும் தொழிலாளர்களும் யாழ்ப்பாணத்தை விட மட்டக்களப்பிலேயே அதிகமாகவுள்ளனர். ஒரு பலமான இடதுசாரி தொழிலாளர் சங்க அமைப்பொன்று அங்கு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் தோற்றம் இல்லாமலேயே போய்விட்டது. 1960களில் கேரளாவிலிருந்து இடதுசாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த தோழர் கிருஷ்ணன் குட்டி என்பவர் மட்டக்களப்பில் தொழிற்சங்க அமைப்புக்களை உருவாக்குவதற்காக வந்ததாகவும், மட்டக்களப்பில் நீண்டகாலம் தங்கி பல முயற்சிகளை மேற்க்கொண்டும் தொழிற்சங்க அமைப்பு- இடதுசாரிகருத்துக்களை உருவாக்க முடியாமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதைப்பற்றிய அரசியல் சமூக ஆய்வுகள் அவசியம் தேவை. விஜ்ய் போன்ற அரசியல், சமூக ஆய்வாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்வது ஆரோக்கியமானது.

முன்னிலை சோசலிச கட்சி பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

பிறேம் பரீஸ்

fsp6-300x225.jpgஇக்கட்சி பற்றி சிறி ரங்கன், சபா நாவலன், ஸ்பாட்டகஸ் தாசன், குருபரன், மாயவன் மயில்வாகனம், கந்தையா ரமணிதரன் போன்றவர்கள் தங்களின் எழுத்துக்கள் மூலம் கதவுகளைத் திறந்து விட்டுள்ளனர். இவர்களுக்கு எனது நன்றிகள்.

இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற அனைத்து தேசிய இன மக்களுக்குமான விடுதலையை, சமத்துவத்தை, சுதந்திரத்தைக் கோரும் ஓர் இடதுசாரி அமைப்பின் உருவாக்கத்தை நாம் வரவேற்றே ஆக வேண்டும். இந்த அடிப்படையில் இலங்கையில் உருவாகி இருக்கும் இலங்கை முன்னிலை சோசலிச கட்சியை நாம் பார்க்க முடியுமா என்பதுதான் இன்றைய கேள்வி.

கடந்த காலத்தில் இன ஐக்கியத்தைப் பேசி, ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களுக்குமான சமஉரிமை என்ற கோசத்தை முன்வைத்து உருவான ஜேவிபி இன் வரலாற்றையும், அது எவ்வாறு இனவாத அரசியலை தீவிரமாக கடைப்பிடித்தது என்பதையும் நாம் அறிவோம். அவ்வாறான தாய்கட்சியான ஜேவிபியிலிருந்து அதிகாரப்போட்டியின் காரணமாகப் பிரிந்து, அதே அரசியலோடு தமிழ்மக்களைக் கவரும் வண்ணம் சில “தயாரிப்பு” களுடன் உருவானவர்கள்தான் இவர்கள். இவர்களின் அடிப்படை நோக்கமே பாரளுமன்ற கதிரைகளை கைப்பற்றுவதே அன்றி வேறொன்றும் இல்லை

இவர்களின் தாய்க்கட்சியான ஜேவிபியோடு எனக்கு தனிப்பட்ட அநுபவங்கள் உண்டு.1980 களில் இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்பட்ட நாங்கள் ரோகண விஜவீராவும், லயனல் போபேக்கேயும் பேசிய தேசிய ”இனங்களின் சுயஉரிமை கோட்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்; அதேநேரம் ஐக்கிய இலங்கைக்கு தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்போம்” என்ற கோசத்தில் கவரப்பட்டு ஜேவிபியில் குறிப்பிட்ட காலம் அரசியல் வேலைகளைச் செய்தவர்கள் நாங்கள். எனினும் அக்கட்சி இனவாத அரசியலையே அதன் அடித்தளமாக கொண்டிருப்பதைக் நாம் கண்டு அதிலிருந்து வெளியேறினோம்.

அக்காலத்தில் ஜேவிபி கொண்டிருந்த தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைக் கூட இவர்கள் ஏற்றுக் கொள்ள தயாரில்லை. அதிகாரப்பரவலாக்கத்தையே இவர்கள் நிராகரிக்கின்றார்கள். ”இனவாதத்திற்கு எதிரான போராட்டம்” என்பது யாருடைய இனவாதத்திற்கு எதிரானது என்பதை இவர்கள் வரையறுக்க வேண்டும். ஒரு ஒடுக்கின்ற பேரினவாத இனச் சமூகத்திலிருந்து உருவாகுகின்ற இவர்கள் முதலில் செய்ய வேண்டியிருப்பது தாம் சார்ந்த இனத்தில் படிந்திருக்கும் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் ஐக்கியத்தையும், அவர்கள் குறித்த உரிமைகள் பற்றிப் பேசுவது முக்கியமாகிறது. ஆனால் இவர்களால் தமிழ் சமூகத்தில் இனஐக்கியம், சமத்துவம் பேசுகின்றார்களே அன்றி சிங்கள மக்கள் மத்தியில், இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற ஏனைய தேசிய இனங்களின் உரிமை பற்றி எதுவுமே பேசுவதில்லை. இதுதான் இவர்களின் தாய்கட்சியிடம் பயின்று வந்த ”தேர்ந்த” அரசியல் தந்திரம். மார்க்சியத்திற்கு லெனின் வழங்கிய பெருங்கொடை ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக்கோட்பாடான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது. ஆனால் மார்க்சியர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைக் கொள்கை அளவில் கூட ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

என்னைப் பொறுத்தவரை; என்னிடம் இவர்கள் பற்றி சில சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதாகவுள்ளது. இவர்கள் இலங்கை, மேற்குலக நாடுகளின் “தயாரிப்பு”க்களோ என நான் சந்தேகம் கொள்கிறேன். முள்ளிவாய்காலுக்குப் பின் இலங்கையில் புதிய விடுதலைச்சிந்தனைகள் தமிழ் பிரதேசங்களிலும், தென்னிலங்கையிலும் உருவாகாமல் இருப்பதற்கு இவ்வாறான ”இடதுசாரி அமைப்பு” என்ற போர்வையோடு அமைப்பின் தோற்றம் “ஒரு சிலருக்கு” தேவைப்படுகிறது. அந்த தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையோ இது எனத் தெரியவில்லை.

வடக்கில் மிகத்தீவிரமாக ”தமிழ்தேசிய இனவாதம்” பேசுகின்ற குமார் பொன்னம்பலத்தின் புத்திரரான கஜேந்திரகுமாருக்கு மறைமுகமாக மகிந்தாவின் ஆதரவு இருப்பது போல, இவர்களுக்கும் உண்டோ தெரியவில்லை. வட கிழக்கில் இவர்களின் செயற்பாடும் இவர்களிடம் இருக்கும் தாராள பொருளாதாரமும் சந்தேகத்திற்குரியவையே. ”நான் அடிப்பது போல் அடிப்பேன், நீஅழுவது போல் அழு” எனும் சொல்லாடல் தான் எனக்கு இங்கு நினைவுக்கு வருகிறது.

புளட் உட்கட்சி போராட்டத்தை தாங்கள்தான் நடாத்தியதாக ரெசோவைச் சேர்ந்த ஒரு சிலர் சொல்கிறார்கள். அதேவேளை உட்கட்சிபோராட்டத்தை சுப்பையா (கெளரிகாந்தன்) போன்றோர் நடாத்தியதாக இன்னொரு சாரார் சொல்கிறார்கள். கெளரிகாந்தன் பற்றி மிக மோசமான குற்றச்சாட்டுக்களை இன்னொரு சாரார் சொல்கிறார்கள். அசோக் அவர்களே உங்கள் கருத்தென்ன?

கணேஸ்

புளொட் அமைப்பின் உட்கட்சிப்போராட்டத்தை, தளமாநாட்டை நடத்தியத்தில் தளத்தில் இருந்த அனைத்து தரப்பினருக்கும் பங்குண்டு. உதாரணமாக புளொட் உடன் விசுவாசமாக செயற்பட்ட இராணுவ பிரிவிலிருந்து தளத்தில் இராணுவப் பொறுப்பிலிருந்த சின்ன மென்ரிசுக்கு கூட பங்குண்டு. எனவே ஒரு சிலர் தாங்கள் தான் நடத்தியதாக கூறுவது அதிபிரசங்கித்தனமே. குறிப்பிட்ட ஒருசிலர் புளொட்டின் உட்கட்சிபோராட்டத்தை தாங்கள் நடாத்தியது என்று சொல்வதற்கூடாக உட்கட்சிபோராட்டத்தின் வலுவை, அதன் கனத்தை கொச்சைப்படுத்துகின்றார்கள். இது இவர்களுக்கு புரிவதில்லை.

அதேநேரம் உட்கட்சிப் போராட்டத்தை முன்நகர்த்தியதில் தமிழ் ஈழமாணவர் அமைப்பு (ரெசோ), தொழிற்சங்க அமைப்புக்களுக்கும் பாரிய பங்குண்டு. குறிப்பாக ரெசோவைச் சேர்ந்த குருபரன், தீபநேசன், தனஞ்சயன், தமிழ், மகிழ்ச்சி, சுகந்தன், கலா போன்றவர்களையும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜன், ஐபி என்ற மூர்த்தி போன்றவர்களும், செல்வி, நந்தா , வனிதா போன்றவர்களையும் கவனம் கொள்ளலாம். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், உட்கட்சிப்போராட்டத்தை- தளமாநாட்டை நடாத்துவதில் தீவிரமாக பக்கபலமாக நின்ற தொழிற்சங்க அமைப்பு பற்றி; தமிழ்ஈழமாணவர் பேரவை (ரெசோ) பற்றி பேசுகின்றவர்கள், இம் அமைப்புக்களுக்கு பொறுப்பாக இருந்த என்னைப் பற்றியோ, தளமாநாட்டை நடாத்துவதற்கு உறுதுணையாக இருந்த அன்றைய தளப்பொறுப்பாளர் குமரனைப் பற்றியோ ஒரு மூச்சுக் கூட விடமாட்டார்கள்! இதுதான் இவர்களின் ”நரித்தன” அரசியல் என்பது!.

கெளரிகாந்தன் தொடர்பாக பிற்காலங்களிலும், இன்றும் பல்வேறு அபிப்பிராயங்களும், குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. கெளரிகாந்தன் தொடர்பாக முரண்படும் தோழர்கள் நண்பர்கள் இன்றும் உள்ளனர். அவர் பற்றி அவர்கள் வைக்கும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை நான் மறுதலிக்கவில்லை அதை ஏற்றுக் கொள்கிறேன். அவை தொடர்பாக என்னிடமும் விமர்சனங்களுண்டு.

ஆனால்; அதேநேரம், உணர்ச்சிகளோடும், தீவிரத்தோடும் இருந்த புளொட்டின் உட்கட்சி போராட்டத்தை; தத்துவார்த்த போராட்டமாக நகர்த்திச் செல்ல ஊக்கமும்- வடிவமும் கொடுத்தவர் கெளரிகாந்தன் என்பதை யாரும் மறுக்க முடியாது. இராணுவ மயக்கவர்ச்சி கொண்டு 1983ல் இருந்த புளொட் டை சித்தாந்த ரீதியாக,இடதுசாரிக் கருத்தியலில் வழிநடாத்தியதில் தோழர் தங்கராசாவுக்கும் , தோழர் கெளரிகாந்தனுக்கும் பெரும் பங்குண்டு. வட கிழக்கில் நான் தொழிற்சங்க அமைப்புக்குப் பொறுப்பாக இருந்த போதிலும், அந்த அமைப்புக்களை அரசியல் மயப்படுத்தியதில் கெளரிகாந்தனுக்குப் பெரும் பங்குண்டு. புளொட்டினுடைய தோழர்கள் கூலி விவசாயிகளிடமும், கூலித் தொழிலாளர்களிடமும் மிகப் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட கிராம மக்களிடமும் சென்று, வேலை செய்வதற்கான அரசியல் தத்துவார்த்த பலத்தை, அதன் செயல் ஊக்கத்தைக் கொடுத்தவர் கெளரிகாந்தன் என்றே சொல்வேன். தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இடது சாரி இயக்கங்களோடும், தோழர்களோடும் நாங்கள் அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட போது அவ்வுறவுகளுக்கு பக்க பலமாகவும், இரு சாராரும் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பின் உறுப்பினராகவும் கெளரிகாந்தன் இருந்து முக்கிய பங்களித்தார் என்பதை நாம் மறுத்துவிடவோ மறந்து விடவோ முடியாது.

புளொட்டுக்கு பின்னாலான கெளரிகாந்தன் தொடர்பான அரசியல் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு, தவறுகளுக்கு ஒருவரின் கடந்த கால அரசியல் செயற்பாட்டை, அதன் முக்கியத்துவத்தை புறக்கணிப்பது ஆரோக்கியமானதல்ல என்றே என்று நான் கருதுகின்றேன்.

it seems that uma has been killed by RAW. Whats their purpose behind the killing?? Even though uma helped RAW to colonize Maldives he was killed be them. why? RAW managed to handle LTTE till the end for their own purpose why not PLOTE.

Thamari

உமா மகேஸ்வரனின் கொலையில் இந்திய உளவுத்துறையான ”றோ” சம்பந்தப்பட்டிருக்கும் என்று நான் நம்பவில்லை. புளொட் தொடர்பாக ஆரம்ப காலம் தொட்டே இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்பது வேறுவிடயம். அதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உண்டு .

uma-300x225.jpgஉமா மகேஸ்வரன் அன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியோடும், ரஞ்சன் விஜயவர்த்தனா போன்றோர்களுடன் அவர் வைத்திருந்த இரகசிய உறவுகளும், அவர் மேற்கொண்ட மாலைதீவு “புரட்சி” யின் காரணமாக றோ கொலை செய்திருக்கலாம் என எண்ண வாய்ப்புண்டு. ஆனால் உண்மையில் உமா மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதற்கு அவரின் சகாக்களே காரணம் என நான் அறிகின்றேன். இதற்கு காரணம் மாலைதீவில் பிடிபட்ட தங்களது சகாக்கள் தொடர்பாக உமா மகேஸ்வரன் எந்தவித அக்கறையும் அற்று இருந்ததும், உமா மகேஸ்வரனின் சகாக்களாக, அடியாட்களாக இருந்த பலரை காலப்போக்கில் உமா மகேஸ்வரன் புறக்கணித்ததும் ஒரு காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். உமா மகேஸ்வரனை சுட்டவர்களை அறியும் போது அவர்களுக்குப் பின்னால் எந்தவித அரசியலும், மற்றவர்கள் பயன்படுத்தும் ”எந்த திறனும் ” அற்ற வெறும் முட்டாள்தனமான அடியாட்களாகவே அவர்கள் இருந்தார்கள்

www.inioru.com

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அர்ஜுன் உட்கட்சி போராட்டம் பற்றி எழுதி இருக்கிறார்கள்? நாலு வரியை எடுத்து விட வேண்டியது தானே??

எனக்கு நல்ல சந்தோசமாக இருக்கு, சிலர் என்னுடைய பெயரை பார்த்துவிட்டு தொடக்ககூடாத பகுதிகளில் எல்லாம்(கதை ,கவிதை ) எட்டி பார்ப்பதையிட்டு .எப்படியோ கொஞ்சம் வளர்ந்தால் சரி .

  • தொடங்கியவர்

எனக்கு நல்ல சந்தோசமாக இருக்கு, சிலர் என்னுடைய பெயரை பார்த்துவிட்டு தொடக்ககூடாத பகுதிகளில் எல்லாம்(கதை ,கவிதை ) எட்டி பார்ப்பதையிட்டு .எப்படியோ கொஞ்சம் வளர்ந்தால் சரி .

பாவம் நீங்களும் உங்க வரலாற்றை மீண்டும் நினைக்க உதவுமே அதான் ஆயிரம் கொலை செய்தவன் பத்துக் கொலை செய்தவனை பார்த்து கொலைகாரன் என்கிறார்கள் அதுதான் பழசை கிளறி விடுறோம் கடந்த காலம் மறக்கில் எல்லோரும் மறக்கணும் இல்லை என்றாலும் எல்லோரும் நினைக்கணும் அதுதானே நீதி 

பாவம் நீங்களும் உங்க வரலாற்றை மீண்டும் நினைக்க உதவுமே அதான் ஆயிரம் கொலை செய்தவன் பத்துக் கொலை செய்தவனை பார்த்து கொலைகாரன் என்கிறார்கள் அதுதான் பழசை கிளறி விடுறோம் கடந்த காலம் மறக்கில் எல்லோரும் மறக்கணும் இல்லை என்றாலும் எல்லோரும் நினைக்கணும் அதுதானே நீதி 

 

புளொட் செய்த  உற்கொலைகளால் புளொட் அழிந்தது உண்மை ஆனால் புலிகள் செய்த  கொலைகளால் புலிகள்மட்டுமில்லை பல லட்சம் மக்களும் அழியவேண்டி போனது.,

  • கருத்துக்கள உறவுகள்

புலியெதிர்ப்பு புத்திசீவிகளின் அரசியல் புலத்திலிருந்து  தேவரதன் -

 

போர் முடிந்து மக்களை தடுப்புமுகாங்களுக்குள் அடைத்த பொழுது சில புலம்பெயர்ந்த புத்திசீவிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள்.   வந்த புத்திசீவிகளில் ஒரு பெண் எழுத்தாளப் புத்திசீவி தடுப்புமுகாங்கள் மிகவும் அழகாக உள்ளன என்றும் புலிகளிடமிருந்து மக்களை மீட்டு அரசாங்கம் இனிதே தமிழ் மக்களை கவனிக்கிறது என்றும் இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலைக் கொடுத்தார்.

தடுப்புமுகாம் என்பது எத்தகையதொரு சித்திரவதையின் சிறை என்பதை, அதற்குள் அடைத்து தொடரச்சியாக மக்கள் அனுபவித்து வரும் துயரம் என்பதை அறியாத அந்த புத்திசீவி இப்படிச் சொல்லிப் பறந்து விட்டார். தடுப்புமுகாங்களில் அடைக்கப்பட்ட ஒரு சனமாவது ‘இது சொர்க்கம்’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. முகாமில் வாழ முடியாது தவிக்கிறோம் என்று மக்கள் தினம் தினம் சொன்னார்கள்.

புலம்பெயர்ந்த நாடு ஒன்றில் புலிக்காய்ச்சலுடன் இருக்கிற புத்திசீவி ஒருவரை  அரசாங்கம் அழைத்து வந்து ‘இதுதான் ஏதேன் தோட்டம்’ என்று சொல்ல வைத்திருக்கிறது. தடுப்புமுகாங்கள் எத்தகைய கொடியவை என்று உலகம் முழுவதும் பேசப்பட்ட பொழுது அதை அந்தப் பெண் புத்திசீவி எழுத்தாளர் ‘சொர்க்கம்’ என்று வருணித்தார் என்பது எத்தகைய கொடுமை. தடுப்புமுகாங்களில் அடைக்கப்பட்ட மக்களுக்கு இழைத்த பெரும் துரோகமல்லவா அது?

இந்த புத்திசீவிகள் குழுவில் வந்த இன்னொரு டாக்டர் புத்திசீவி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார்.; அங்கு சென்று உங்களுக்கு என்ன வேணும்? என்று கேட்டிருக்கிறார். கார் ஏதாவது வேணுமா? எப்பிடிக் கார் வேணும்?   காருக்குள்ள என்ன என்ன வசதிகள் இருக்க வேணும்? கதவு, சீட் எல்லாம் எப்பிடி இருக்க வேணும்? இப்படியெல்லாம் அந்த டாக்டர் கேட்டார்.

சனம்  இருக்க வீடு இல்லாமல் நிலம் இல்லாமல் இருக்கும் பொழுது அந்த புத்;திசீவி இப்படிக் கார் பற்றி பேசியிருக்கிறார். புலிகள் இல்லாததால நாங்கள் இப்படியெல்லாம் வந்து உதவுறம் என்றாராம் அவர். கேட்டு விட்டு போன அதே போக்குத்தான். அதற்குப் பிறகு அவரை அரசாங்கம் அழைக்கவில்லையோ?   ஆனால்  மீண்டும் அவரும் மேலும் அவர் சார்ந்த புத்திசீவிகளும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் கலந்து சிறப்பிக்க இலங்கை வந்தனர்.

சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை தாயகத்தில் உள்ள எழுத்தாளர்கள் புறக்கணிக்க இம்மாதிரியான புத்திசீவிகளும் காரணமாகின்றனர். வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அநீதிகளைப் பதிவு செய்த மனச்சாட்சியுடன் வாழ்ந்த பல படைப்பாளிகள் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை மௌனமாக புறக்கணித்திருந்தனர். சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை உலகமெங்கிலுமிருந்து பல எழுத்தாளர்கள் புறக்கணித்த பொழுது புலி எதிர்ப்புப் புத்தசீவிகள் அதை ஆதரித்து நின்றார்கள்.

ஒருமுறை லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபச்க உரையாற்றச் சென்றிருந்த பொழுது போர் குற்ற விசாரணைகளுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜனாதிபதி உரையாற்ற முடியாமல் அவமானத்திற்கு உள்ளானார். அந்தப் பெரும் களோபரத்தினிடையிலும் சில புலம்பெயர்ந்த புத்திசீவித் தமிழர்கள் ஜனாதிபதியை சந்திக்க காத்திருந்தனர்.

ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் ஆச்சரியாக இருந்ததாம். வெளியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிக்கொடியுடனும் பிரபாகரனின் படத்துடன் ‘போர்க்குற்றவாளியை கைது செய்!’ என்று போராடிக் கொண்டிருக்க இலங்கை ஜனாதிபதியை ‘நமது ஜனாதிபதி’ என்று சில தமிழர்கள் சந்திக்க காத்திருந்திருக்கிறார்கள்.

அந்த தமிழர்களைச் சந்தித்ததும் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை சொல்லுங்கள்? என்று ஜனாதிபதியின் சார்பாக அமைச்சர் ஒருவர் கேட்டிருக்கிறார். தடுப்புமுகாமை சொர்க்கம் என்று குறிப்பிட்ட பெண் எழுத்தாளரும் புத்திசீவியுமானவர் முன் வந்து யார் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்? என்று கேட்டாராம். ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். தயவு செய்து அமெரிக்காவில் வசித்த புத்திசீவிப் பேராசிரியரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று அந்த பெண் எழுத்தாளப் புத்திசீவி கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.

அங்கிருந்த அமைச்சர் ஒருவர் கொழும்பில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்தக் கதையைச் சொல்லிக் கிண்டல் அடித்திருக்கிறார். தமிழர்களின் பிரச்சினை இதுதானா? என்று அந்த அமைச்சர் திரும்பத் திரும்ப கேட்டாராம்? அந்த அமைச்சர் கிண்டல் அடிப்பதுபோல ரொம்ப முக்கியமான விசயம்தான்! இவ்வகையான  புத்திசீவிகளின் மாற்றுக் கருத்து இதுதானா? புலிகள்மீது குற்றம் சாட்டிக் கொண்டு இவர்கள் செய்யும் அரசியல் இதுதானா? சொந்த மக்களின் கண்ணீரை மறைக்கும் இந்த அரசியல் ஒரு சுயநல அரசியல்தானே!

புத்திசீவிகள் அறிக்கையில் அமெரிக்காவில் வசித்த புத்திசீவிப் பேராசிரியரின் சகோதரர் ஒருவரும் ஒப்பம் இட்டுள்ளார். அந்தப் புத்திசீவியும் கடுமையான புலி எதிர்ப்பாளர். புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டு அமெரிக்காவில் தஞ்சமடைந்த பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வர வேண்டும் என்பதற்காக மீண்டும் நாடு திரும்பினார். மனித உரிமை குறித்து அதிகம் பேசி வரும் இந்த சகோதரர் துணைவேந்தர் பதவிக்காய் ஜனாதிபதியின் வலையில், தமிழ் அமைச்சர்   ஒருவரது வலையில்;  விழுந்தார். மக்கள் எல்லோரும் போர் குற்றங்களை குறித்து நல்லிணக்க ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்து கொண்டிருந்த பொழுது இந்த புத்திசீவி தமிழ் அமைச்சரே தமிழர்களின் சிறந்த தலைவன் என்று பாராட்டி துணைவேந்தர் பதவிக்கு தன்னை பரிந்துரைக்க வேண்டும் என்று கோரினார்.

துணைவேந்தர் பதவிக்கு பெண்பேராசிரியர் ஒருவரே தமிழ் அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டார். குறித்த தமிழ் அமைச்சரின் முடிவை மீறி ஜனாதிபதியால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் அமெரிக்கா வாழ் புத்திசீவிக்கு பதவி கிடைக்கவில்லை. திடீரென குறித்த புலி எதிர்ப்பு புத்திசீவி தமிழ் அமைச்சரை திட்டத் தொடங்கினார். புலிகள் யாழ்ப்பாணத்தை ஆண்டதுபோவே தமிழ் அமைச்சரும் யாழ்ப்பாணத்தை அடக்கி ஆள்வதாக அவர்மீது குற்றம் சாட்டினார்.

புலிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விமர்சித்து வந்த அந்தப் புத்திசீவி ஒருகட்டத்தில் கூட்டமைப்புடன் நெருக்கமாகி தனது துணைவேந்தர் பதவியைப் பெற முயன்றார். இறுதிவரை அது சாத்தியமாகத நிலையில் தமிழ் அமைச்சரால் தனக்கு பெரும் ஆபத்து உள்ளதாக குறிப்பிட்டு மீண்டும் அமரிக்கா சென்று குடி கொண்டார். புலி எதிர்ப்பு புத்திசீவிகள் பலரும் இந்த மனித உரிமை பாதுகாப்பு புத்திசீவி துணைவேந்தராக வர வேண்டும் என்று பல வேலைத் திட்டங்களில் ஈடுபட்டார்கள்.

எனது ஆசிரியர் ஒருவர் படிக்கும் காலத்தில் ‘புத்திசீவி’ என்பதற்கு ஒரு விளக்கம் தந்திருந்தார். புத்தியை வைத்து சீவிக்கிறவர்களைத்தான் புத்திசீவிகள் என்று சொல்லுறது அவர் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகின்றது. உண்மையில் இந்த விளக்கம் மிகவும் பொருந்துகிறது. புத்தியை வைத்து தனது நலனையும் தனது குழுவின் நலனையும் கவனித்துக் கொள்ளும் இத்தகைய புத்திசீவிகளைப்போல இப்பொழுது வேறு ஒரு புத்திசீவிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவர்கள் சமூகத்தைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசுவதன் மூலம் எத்தகைய ஆபத்து ஏற்படுகின்றது?

71 புத்திசீவிகள் அறிக்கையில் கையப்பமிட்ட விடயத்தில் உண்மையில்லை என்று கிழக்கிலங்கை எழுத்தாளர் உமாவரதராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 71 புத்திசீவிகளும் ஆட்டம் கொண்டுள்ளனர்.  இப்பொழுது அவர் முழுச் சம்மதத்துடன் ஒப்பமிட்டார் என்று அந்தப் புத்திசீவிகள் நிருபிக்க பலவகையில் பேசிக் கொண்டிருக்கிறனர்.  இந்த அறிக்கையில் 71 புத்திசீவிகளுக்குள் அரசாங்கத்திற்கு விசுவாசமான புத்திசீவிகள் சிலர் அடங்குகின்றனர்.  பலர் எதற்கு என்று தெரியாமல் ஒப்பமிட்டு மாட்டியுள்ளனர். அறிக்கையின் விபரம் அறிந்து மறுப்புத் தெரிவித்தால் அல்லது சம்மதம் இன்றி ஒப்பம் இடப்பட்டது என்றால் அது முஸ்லீம் மக்களுக்கு எதிரான வேலை என்று தலமைப் புத்திசீவிகள் புத்திமதி கூறி வெருட்டியுள்ளனர்.

இந்த அறிக்கையில் ஒப்பம் இடம்பெற்ற புத்திசீவி ஒருவர் குறிப்பிடுகையில் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அதில் ஒப்பமிடுவீர்களா என்றும் புத்திசீவி ஒருவர் கேட்டுள்ளார். முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லாத அந்த நபர் அறிக்கையை பார்த்துவிட்டு ஒப்பமிடலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு அறிக்கை காட்டப்படாமலே 71 புத்திசீவிகளின் அறிக்கை அந்த நபரை இணைத்து அவரையும் ஒரு புத்திசீவியாக அறிவித்து வெளிவந்திருக்கிறது.

நாட்டில் இருந்து கொண்டு ஒப்பம் இட்ட புத்திசீவிகள் சிலர் தொண்டு நிறுவனங்களை நடத்தி இலாபங்களை பெற முயற்சிப்பவர்கள். அரச உத்தியோகங்களில் ஈடுபட்டுக் கொண்டே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய பதிவுகளை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு புலி எதிர்ப்பு பதிவுகளை யாழில் உள்ள பெரும் விடுதி ஒன்றில் வெளியிட்டுள்ளனர். இவர்கள் தம்மை எப்பொழுதும் யாழ்ப்பாணத்தின் உயர் வர்க்கமாக காட்டிக் கொள்பவர்கள். இப்பொழுது புலி எதிர்ப்பு பேசும் இவர்களில் ஒருவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது புலிகளின் தலைவர் பிரபாரகன் கொல்லப்பட்டார் என அரசாங்கம் செய்தி வெளியிட்ட பொழுது தனது மாணவர்களிடத்தில் அழுதிருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த யாழ்ப்பாணத்தில் இன்று  பதினாறு வருடங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் ஏன் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் செய்யவில்லை? அல்லது அதற்கான ஒழுங்குகளைச் செய்யவில்லை? தமக்கான மீள்குடியேற்றப் பணிகளை செய்தாததன் காரணமாகவே தாம் மீள்குடியேற தாமதமாகவதாக யாழ் முஸ்லீம்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசாங்கம் முஸ்லீம் மக்களையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவே பார்க்கிறது. இன்று வடக்கு கிழக்கில் பல இடங்களில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்த 71 புத்திசீவிகளின் கோரிக்கை தமிழ் பேசும் மக்களிடத்தில் பிரித்தாளும் தந்திரத்தைக் கொண்ட பேரினவாத அரசின் திட்டமாகும். முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு கூட்டமைப்பைபோ தமிழ்ச் சமூகமோ தடையாக இருக்கிறதா? அவ்வாறான மாயையை இந்த அறிக்கை உருவாக்கப் பார்க்கிறது.

இந்தப் புத்திசீவிகள் இந்தக் கோரிக்கையை அரசை நோக்கியே எழுப்ப வேண்டும். தாயகத்தில் பல்வேறு பிர்ச்சினைகள் நிலவும் இன்றைய காலத்தில் கவனத்தை திசை திரும்பும் நோக்கத்தைக் கொண்ட இந்த அறிக்கை மிகவும் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பேசும் மக்களிடத்தில் கசப்பை உருவாக்குவதன்மூலம் சலசலப்பை உருவாக்குவதன் மூலம் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களை அல்லலுற வைக்கும் பேரினவாத அரசு இலங்கையில் தமிழ் பேசும் மக்கள்மீது தொடர்ந்தும் பிரச்சினைகளை கட்டிவிடப் பாக்கிறது.

இங்கு  இவ்வகையான அரசின் சார்பாளர்களாக இருந்து கொண்டிருக்கிற புலி எதிர்ப்பு புத்தீவிகள் பற்றி மாத்திரமே பேசப்படுகிறது. அதற்காக உண்மையிலேயே ஜனநாயகத்தின்மீதும் மனித உரிமைமீதும் அக்கறை கொண்ட புத்திசீவிகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் இந்த கட்டுரை பேசவில்லை. புத்திசீவிகள் என்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்றும் வேடமணிந்து கொண்டு சீவிப்பவர்களைப் பற்றியே அல்லது அரசியல் செய்பவர்களைப் பற்றியே சுட்டிக் காட்ட விரும்புகிறது.  

சிலருக்கு புலி எதிர்ப்பிலேயே ஜனநாயகமும் இல்லாமல் போய்விட்டது. புலி எதிர்ப்பில் வன்மம் ஏற்பட்டுவிட்டது. புலி எதிர்ப்பு அரசாங்கத்தின் மனிதப்படுகொலைகளை மறைக்கும் அளவிற்கு புத்தியை ஏற்படுத்திவிட்டது. கண்மூடித்தனமான புலிஎதிர்ப்பு அரசின் கண்மூடித்தனமான ஆதரவாளர்களாக்கிவிட்டது.

மாபெரும் யுத்தம் நடந்து பேரழிவுக்கு முகம் கொடுக்கும் இந்த மண்ணில் மீண்டும் வாழ்தலுக்கான ஒரு தருணத்தை அவாவிக் கொண்டிருக்கும் பொழுது,  மக்கள் செய்த தியாகங்களுக்காக அனுபவித்த கொடுமைகளுக்காக ஒரு தீர்வு வழங்கப்படவுள்ளது எனச் சொல்லப்படும் ஒரு சூழலில் எல்லாவற்றையும்  புத்திசீவிகளின் பெயரால் செய்யப்படும் அரசியல் சிதறடிக்கப் பார்க்கின்றது.

http://kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=2067:2012-01-20-05-19-58&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71

 

  • கருத்துக்கள உறவுகள்

1988-90 இல் உளவுத் துறை பின்னிய சதி வலைகள் 

 

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி-8)

‘ரா’ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனிப்போருக்கு பிரேமதாசா கொலையில், இந்திய உளவு நிறுவனத்தின் சதி இருப்பதை புரிந்து கொள்ள முடியும். ‘ரா’ உளவு நிறுவனத்தின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஆய்வாளர் எஸ்.எச். அலி, ‘Inside Raw’ (‘ரா’வின் உள்ளே...) என்ற நூலை எழுதி 1981இல் வெளியிட்டார். ‘ரா’ தனது உளவு நிறுவனத்தில் ஆட்களை இணைத்துக் கொள்ள பின்பற்றும் வழிமுறைகளை அதில் விளக்குகிறார். அதில், “அந்தந்த நாடுகளில் ‘ரா’ நிறுவனம் தங்களின் நோக்கத்தை நிறைவேற்ற உள்ளூரிலேயே ஆட்களைப் பிடித்து விடும். சாணக்கியன் தந்த வழிமுறைகளைப் பின்பற்றி, மனிதர்களின் பலவீனங்களான ‘மது, மங்கை, பணம்’ என்ற ஆசைகளைக் காட்டியும் தங்கள் திட்டத்தை செய்து முடித்து விடுவார்கள். சில நேரங்களில் மிரட்டலிலும் இறங்குவார்கள். பிரிவினைப் பற்று, இனப்பற்று, பிராந்தியப் பற்று போன்ற உணர்வுகளையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்” - என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே ‘மது-மங்கை’ பலவீனங்கள்தான் பிரேமதாசா கொலையிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது. “தென் கிழக்கு ஆசியாவில், இந்தியா பின்பற்றும் கொள்கைகளை (அதாவது ராஜீவ் காந்தியை தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கதாநாயகனாக்கும் கொள்கை) நான் கடுமையாக எதிர்ப்பதால், ‘ரா’ உளவு நிறுவனம், என்னைக் கொல்ல சதி செய்கிறது” என்று, பிரேமதாசா கூறி வந்திருக்கிறார். இது தொடர்பாக மற்றொரு முக்கிய செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும்.

பிரேமதாசா குண்டுவெடித்துக் கொல்லப்பட்டவுடன், கொழும்பு நகராட்சி அதிகாரத்தின் கீழ் செயல்பட்ட தீயணைப்புத் துறை உடனே அந்த இடத்துக்கு விரைந்து சம்பவம் நடந்த இடத்தில் கை ரேகை, ரத்தம் போன்ற தடயங்களை தண்ணீரைப் பீற்றி அழித்து முற்றிலுமாக அகற்றி விட்டது. இதனால் கொலைக்கான தடயங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. கொழும்பு ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடாமல் தடுக்கப்பட்டன; தீயணைப்புப் படையை அனுப்பும் உத்தரவை பிறப்பித்தது யார்? தடயங்களை அழிக்கச் சொன்னது யார்?

இந்தக் கேள்விக்கான விடைகள் மர்மமாகவே உள்ளன. பிரேமதாசாவின் கொலையில் அடங்கியுள்ள இத்தனை மர்மங்களையும் மூடி மறைத்து விட்டு, “விடுதலைப் புலிகள் பிரேமதாசாவை கச்சிதமாக கொலை செய்தார்கள்” என்றும், குண்டு வெடித்து இறந்தவரே விடுதலைப் புலிகளின் உளவாளி என்று நிரூபித்து விட்டான் என்றும் எழுதுவதும், நியாயம் தானா?

பிரேமதாசா படுகொலையைப்போல் புளோட் இயக்கத் தலைவர் முகுந்தன் கொலைப் பழியையும், ராஜீவ் சர்மா விடுதலைப் புலிகள் மீதே போடுகிறார். அதற்கான ஆதாரம் - சான்று எதையுமே முன் வைக்க அவர் தயாராக இல்லை.

புளோட் இயக்கத்தின் தலைவர் முகுந்தன் பின்னணி என்ன? ‘ரா’வுக்கும் அவருக்கும் உள்ள உறவு என்ன?

தென் கிழக்கு ஆசியாவில் காஷ்மீர், சிக்கிம், நேபாளம், பூட்டான் நாடுகள் இந்திய ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலையில், மாலத் தீவு மட்டும் வரவில்லை. மாலத் தீவிலே தொடர்ந்து அதிபராக இருந்த அப்துல் ஹ்யூம், பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருந்தார். அவரை பணிய வைக்க ‘ரா’ உளவு நிறுவனம் ஒரு கவிழ்ப்பு வேலையை நடத்த திட்டமிட்டது. அதற்கு முகுந்தனிடம் ‘ரா’ நிறுவனம் பேரம் பேசியது. இது 1987 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது விடுதலைப் புலிகளுக்கும், புளோட் இயக்கத்துக்குமிடையே மோதல்கள் நடந்த காலகட்டம். மாலத் தீவில் தாக்குதல் ஒன்றை நடத்த, புளோட் முகுந்தனிடம் பெரும் தொகையும், ஆயுதங்களும் ‘உளவு’ நிறுவனம் வழங்கியது. 1987 ஆம் ஆண்டு ஆக.22 ஆம் தேதி, இந்திய ராணுவத்தின் விசேட விமானத்தில் ‘ரா’ அதிகாரிகள் வவுனியா வந்து, உமாமகேசுவரனை சென்னைக்கு அழைத்து வந்து பேரம் பேசினர். மாலத் தீவில் அதிபருக்கு எதிராக தாக்குதல் திட்டத்தை வகுத்துக் கொடுத்து விட்டு, தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், பிறகு இந்தியாவே தனது படைகளை அனுப்பி, தாக்குதல் நடத்திய புளோட் இயக்கத்தினரை கைது செய்து, மாலத் தீவு அதிபருக்கு உதவியது போல் நாடகம் நடத்தி, மாலத் தீவு அதிபரை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

உளவுத் துறை விரித்த வலையில் வீழ்ந்தார் முகுந்தன். (குறிப்பு: மாலத்தீவு ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி விரிவான செய்திகளை நான் எழுதிய ‘ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி’ நூலில் படிக்கலாம்) பிறகு, கொழும்பு நகரில் முகுந்தன் கொல்லப்பட்டார்.

இந்தியா சதி செய்த ரகசியங்கள், முகுந்தன் வழியாக வெளியே தெரிந்து விடாமல் தடுக்க வேண்டிய அவசியம், உளவுத் துறைக்கு இருந்தது. 1989 ஜூலையில் உமாமகேசுவரன் கொழும்பில் ரயில் நிலையத்தில் சுடப்பட்டு, பிணமாகக் கிடந்தார். அப்போது புளோட் அமைப்பு இரண்டாகப் பிரிந்து நின்று, தங்களுக்குள் சகோதர யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தன. முகுந்தனின் எதிரணி குழுவைச் சார்ந்தவர்களையே - முகுந்தனை “அமைதியாக்குவதற்கு” உளவு நிறுவனம் பயன்படுத்தியது. கொழும்பு ஊடகங்கள் முகுந்தனின் போட்டிக் குழுவைச் சார்ந்தவர்களே இதை செய்திருக்கக்கூடும் என்று எழுதின.

முகுந்தன் கொலைக்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. புலிகளுக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் எழுதிய ‘முறிந்த பனை’ நூலும், முகுந்தன் கொலையை புலிகள் மீது போடவில்லை. ‘முகுந்தன் கொல்லப்பட்டார்’ என்ற ஒற்றை வரியோடு முடித்துக் கொண்டுவிட்டனர். ஆனால், ராஜீவ் சர்மா, எந்த ஆதாரமுமின்றி புலிகள் மீதே பழி போட்டு விடுகிறார். 1988-90 காலகட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்வுகளுக்கு விடுதலைப் புலிகளை மட்டுமே குற்றவாளியாக்கி இந்திய உளவுத் துறையின் ‘பிரச்சாரகர்களாக’ நூல்களை எழுதிய ராஜீவ் சர்மாவும், நாராயணசாமியும் ‘ரா’ உளவு நிறுவனம் அக்கால கட்டத்தில் நடத்திய திரைமறைவு சதிகளை திட்டமிட்டே மறைக்கிறார்கள்.

நாங்கள் கேட்கிறோம்; இந்த காலகட்டத்தில் -

• விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை உயர்த்திப் பிடித்து, அதை வடகிழக்கு மாகாணத்தில் தங்களின் ‘எடுபிடி’ ஆட்சியாக உட்கார வைத்தது யார்?

• 1990 இல் சிறுவர்களைக் கொண்டு ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற அமைப்பை உருவாக்கி,அதற்கு இந்திய ராணுவ முகாம்களில் பயிற்சி தந்து ஆயுதங்களையும் வழங்கியது யார்?

மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘முறிந்த பனை’ நூலிலிருந்தே எடுத்துக் காட்டுகிறோம்:

“1989 ஜூன் மாதத்தில் - இந்தியா கட்டாய ஆள் சேர்ப்பு மூலம் இளம் பையன்களைக் கொண்டு (சிறுவர்கள்) தமிழ் தேசிய ராணுவத்தை உருவாக்கியது. இவர்கள் போர் புரிய விருப்பமில்லாதவர்கள் என்பதோடு, சண்டையிடுவதற்கான தார்மீகக் காரணங்களையும் நம்புவதற்குத் தயாராக இல்லை. இவ்வாறு மிகப் பெரும் சமூக நாசத்திற்கான தயாரிப்பிற்கு அரசாங்கம் தயாராக இருந்தது. இவர்களுக்கு இந்திய அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்பட்டது.” - (நூல் ‘முறிந்த பனை’ - பக்.538)

இப்படி இந்திய ராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டு, உளவு நிறுவனத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த தமிழ் தேசிய ராணுவம் தான் அம்பாறையில் 40 முஸ்லீம்களைக் கொன்று குவித்தது. ‘முறிந்த பனை’ நூல் இதை உறுதி செய்கிறது.

“1989 அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் அம்பாறையில் ஒரு கூட்டத்தில் இருந்த தமிழர்களை தமிழ் தேசிய இராணுவப் படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டு, அங்கிருந்த 40 முஸ்லீம் மக்களை அங்கேயே கொன்று குவித்தனர். தமிழ் ராணுவப் படையின் சில உறுப்பினர்கள் சரணடைய முயற்சி செய்தபோது, சக ஆட்களாலேயே, அவர்கள் சுடப்பட்டனர்.” - (‘முறிந்த பனை’ நூல். பக்.539)

- இப்படி இந்திய உளவு நிறுவனம் நடத்திய சதிராட்டங்களை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள்?

• விடுதலைப்புலிகளுக்கு எதிராக மாத்தையாவை உருவாக்கி, பிரபாகரனையே தீர்த்துக் கட்ட சதி செய்தது யார்?

• ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மான் பெயரை மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்துவிட்டு, இயக்கத்தில் இரண்டாம் இடத்திலிருந்த மாத்தையா பெயரை மட்டும் சேர்க்காமல் விட்டது யார்?

- மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை திரைமறைவில் அரங்கேற்றிய உளவு நிறுவனம் பற்றி, இந்த நூல்கள் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?

அடுத்தப் பிரச்னைக்கு வருவோம். விடுதலைப் புலிகள் சில அன்னிய உளவு நிறுவனங்களுக்காக ராஜீவ் கொலையை நடத்தி முடித்து, அதற்காக ஆயுத உதவிகளையும், கப்பல் வசதிகளையும் பெற்றுக் கொண்டனர் என்பதுதான் ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்’ நூலின் மய்யமான கருத்து. விடுதலைப் புலிகள் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான ‘மொசாட்’ அமைப்பிடம் பயிற்சிப் பெற்றார்கள் என்று ராஜீவ் சர்மா குற்றம் சாட்டுகிறார்.

ராஜீவ் சர்மாவின் குற்றச்சாட்டு உண்மைதானா?

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15961:1988-90-8&catid=1355:2011&Itemid=602

  • கருத்துக்கள உறவுகள்

உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! 

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி -6)

 

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகளை நடத்தியது புலிகள்தான் என்று பழிபோட்டது போல், அதற்கு முன்பே 1985 ஆம் ஆண்டில் இரண்டு நாடாளுமன்ற தலைவர்கள் கொல்லப்பட்டபோதும், புலிகள் மீதே வீண் பழி சுமத்தினர். கொல்லப்பட்ட வி.தர்மலிங்கம், எம்.ஆலால சுந்தரம் என்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தனர். தர்மலிங்கம் 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தமிழர்களுக்கு தொண்டு செய்தவர். அதேபோல் ஆலாலசுந்தரம் நியமன முறையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மிகவும் நயவஞ்சகமாக இவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஆலால சுந்தரம் வீட்டில் இருந்தபோது நன்னடத்தை சான்றிதழ் கேட்கச் சென்ற இரண்டு பேர், அவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து காரில் கடத்தினர். தர்மலிங்கம் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது, ஆலால சுந்தரம் அவரை அவசரமாக சந்திக்க விரும்புவதாகக் கூறி வெளியே அழைத்து வந்து  காரில் பலவந்தமாக ஏற்றி கடத்தினர். அடுத்த நாள் - தர்மலிங்கம் சடலம் கல்லறை ஒன்றின் அருகே நெற்றியில் குண்டுக் காயங்களோடு கிடந்தது. அருகே கிடந்த ஒரு துண்டு காகிதத்தில், “தமிழினத்துக்கு துரோகமிழைத்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை இது. ஈழத்தை அடகு வைப்பவர்களுக்கு குறிப்பாக தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணிக்கு - இப்படிக்கு தன்மானமுள்ள தமிழர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

 

ஆலால சுந்தரத்தின் சடலம் மார்பில் குண்டு காயங்களோடு யாழ்ப்பாணம் நகரில் கைப்பற்றப்பட்டது. இந்த படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. அதிலும் தர்மலிங்கம், டி.யு.எல்.எப். தலைவர் அமிர்தலிங்கம் போக்கு பிடிக்காமல் அதிலிருந்த விலகி, அதிருப்தியாளர்கள் உருவாக்கியிருந்த தமிழ் ஈழ விடுதலை முன்னணி அமைப்பில் இணைந்திருந்தார். பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர். பல ஏழைக் குழந்தைகளை தனது சொந்த செலவிலேயே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவர். அவரிடமிருந்த ஒரே வாகனம் சைக்கிள் தான். ஆலால சுந்தரம் - வழக்கறிஞர்; ஆனாலும் மிகவும் ஏழ்மையாகவே வாழ்ந்தவர். தன்னுடைய மகள், ஒரு சைக்கிள் கேட்டபோது, மனைவியின் நகையை விற்றுத்தான் வாங்கித்தர வேண்டிய நிலையில் இருந்தார். இந்த இருவரின் கொடூரமான கொலையும் யாழ்ப்பான மக்களின் நெஞ்சை உலுக்கியது. விடுதலைப் புலிகள் தான் ஈவிரக்கமின்றி, இந்தக் கொலையை செய்தார்கள் என்ற பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. பழிகள் புலிகள் மீது விழுந்தது.

இந்த சம்பவம் நடந்த 1985 ஆம் ஆண்டு கால கட்டத்தைப் பார்க்க வேண்டும். 1984 ஆம் ஆண்டுகளில் இந்திரா பிரதமராக இருந்தபோது போராளிகளுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி தர முன் வந்தார். ‘ரா’ உளவு நிறுவனம், அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அப்படிப்  பயிற்சி பெறுவதற்கு ‘ரா’முதலில் தேர்ந்தெடுத்த அமைப்பு சபாரத்தினம் தலைமையில் இயங்கிய ‘டெலோ’ தான்! காரணம். இந்தியா சொல்வதை அப்படியே நிறைவேற்றும் அமைப்பாக ‘டெலோ’ இருந்தது. பிறகு படிப்படியாக ஏனைய அமைப்புகளுக்கும் பயிற்சி தர ‘ரா’ முன் வந்தது. ‘விடுதலைப்புலிகள்’ மட்டும் தனித்து விடப்பட்டனர். விடுதலைப் புலிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள் என்ற உறுதியான முடிவில் உளவு நிறுவனம் இருந்ததே இதற்குக் காரணம். ஏனைய குழுக்கள் இந்தியாவின் பயிற்சி மற்றும் ராணுவ உதவிகளோடு பலம் பொருந்தியவைகளாக மாறும்போது விடுதலைப் புலிகள் அழிக்கப்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த பிரபாகரன், இந்தியாவின் ராணுவப் பயிற்சியில் புலிகள் இயக்கத்தையும் இணைக்கவேண்டும் என்று வற்புறுத்தி இணைத்தார்.

 

இந்த சூழ்நிலையில் 1984இல் இந்திரா, தனது மெய்க் காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் பிரதமரானவுடன் இந்திராவின் ஈழத் தமிழர் ஆதரவு அணுகுறையில் அதிருப்தியுற்றிருந்த பார்ப்பன அதிகார வர்க்கம், ராஜீவை தங்கள் வழிக்கு திருப்பினர். அதுவரை ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்கு பொறுப்பேற்றிருந்த பார்த்தசாரதி என்ற அதிகாரி மாற்றப்பட்டு பண்டாரி என்ற அதிகாரி, அந்த பொறுப்புக்கு வந்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் சமரசத்துக்கு உட்படாத இந்தியாவின் வலையில் விழ மறுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, அவர்களை பலவீனப்படுத்தும் திட்டங்களை உளவு நிறுவனம் உருவாக்கியது. தர்மலிங்கம், ஆலால சுந்தரம் படுகொலைகள் அந்த நேரத்தில்தான் நடந்தன. இந்தப் படுகொலைகளை விடுதலைப் புலிகள் மறுத்தாலும் எந்த ஆதாரமும் இன்றி புலிகள் மீது பழி போட்டே பிரச்சாரங்கள் நடந்தன.

 

ராஜீவ் சர்மாவும் இந்த நூலில், “1980-1990-க்கும் இடைப்பட்ட காலத்தில் சக தமிழ் இயக்கங்களைச் சார்ந்த 300 போராளிகளை மற்றும் எல்.டி.டி.ஈ. இயக்கத்திற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பல முக்கிய தலைவர்களை பிரபாகரன் கொன்றார்” என்று எந்த ஒரு சிறு ஆதாரமும் இன்றி புலனாய்வுத் துறை பரப்பிய அதே பொய்களை அப்படியே வாந்தி எடுத்து எழுதுகிறார். இதிலிருந்தே இந்த நூல், எந்த ‘எஜமானருடைய’ குரலை எதிரொலிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். எதைச் சொன்னாலும் நம்ப வைத்து விடலாம் என்று தமிழினம் ஏமாந்து இருந்த காலம் இப்போது இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பொய் புனைவுகளை கிழித்தெறிந்து மக்கள் மன்றத்தில் நாம் உண்மைகளை அம்பலப்படுத்தியே தீருவோம்.

 

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் படுகொலைகளைப் போலவே, தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் படுகொலைகளும் புலிகள் மீது வீண்பழி சுமத்தவே அரங்கேற்றப்பட்டன. இதற்கு இரண்டு ஆதாரங்களை முன் வைக்க விரும்புகிறேன். ஒன்று - உளவு நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய ஆய்வாளர் நாராயணசாமி, விடுதலைப்புலிகளுக்கு எதிராக எழுதி, உளவுத் துறையால் போற்றப்படுகிற, அவரது நூலிலேயே இந்தக் கொலையில் டெலோ கண்டனத்துக்கு உள்ளானது என்று கூறுகிறார். ஆனால் உளவு நிறுவனங்கள் விடுதலைப் புலிகளையே குற்றம் சாட்டியதாக குறிப்பிடுகிறார். சுட்டுக் கொல்லப்பட்ட தர்மலிங்கத்தின் மகன் ‘புளோட்’ என்ற போராளிகள் குழுவில் சேர்ந்திருந்தார். அவரும் விடுதலைப் புலிகள் தான் இதைச் செய்தார்கள் என்று கூறவில்லை. அப்போது ‘எல்.டி.டி.ஈ - டெலோ - ஈரோஸ் - ஈ.பி.ஆர்.எஃப்.’ அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியிருந்தன. இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள ஏதோ ஓர் அமைப்பே தனது தந்தையை கொலை செய்ததாகவே கூறினார். ஆனால் உண்மையில் இந்தக் கொலையை செய்ய உத்தரவிட்டவர், இந்திய உளவு நிறுவனத்தின் உத்தரவுகளை ஏற்று செயல்பட்டு வந்த ‘டெலோ’ அமைப்பின் தலைவர் சிறீசபாரத்தினம் தான். இதற்கு சான்று விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்து எழுதப்பட்ட நூலான ‘முறிந்த பனை’ என்பதாகும்.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ராஜன் ஹுல் உள்ளிட்ட 4 பேராசிரியர்கள் எழுதிய இந்த நூல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எழுதப்பட்ட நூலாகும். அந்த நூலே தர்மலிங்கம், ஆலால சுந்தரம் படுகொலைகளைச் செய்தவர்களை பற்றி  இவ்வாறு எழுதியுள்ளது:

 

“தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணி, நாடாளுமன்ற உறுப்பினர்களுள் திருவாளர்கள் தர்மலிங்கமும், ஆலால சுந்தரமும், யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வசித்து வந்தவர்கள். இந்தியாவில் வாழ்ந்து வந்த டெலோ, இயக்கத்தினருடன் பேசிய அநேகரின் சான்றாதாரங்களின்படி, இக் கொலைகள் பின் வருமாறு நடந்தனவென்று தெரிய வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரன், தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியைக் கடுமையாக மிரட்டி உரையாற்றியபின், பிரபாகரன் இக் கொலைகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு, மதிப்பிழக்கப்படுவார் என எதிர்பார்த்த டெலோ தலைவர் சிறீசபாரத்தினம், இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்யுமாறு தனது ஆட்களுக்கு இரகசியமாக ஆணையிட்டார். எதிர்பார்த்ததுபோல், விடுதலைப் புலிகளே பெரும்பாலும் இக் கொலைகளுக்கு குற்றஞ்சாட்டப்பட்டனர். திரு.தர்மலிங்கத்தின் வீட்டுக்கு அண்மையில் காவல் நின்ற ஒரு புளோட் உறுப்பினர் கொலையாளிகள் வந்த வாகனம் ‘டெலோ’ வுக்குச் சொந்தமானதென இனங் கண்டார்.” - “முறிந்த பனை”, பக்.82

 

இதுதான் புலிகள் எதிர்ப்பாளர்களே தங்களது நூலில் எழுதியுள்ள உண்மை. இந்தியாவின் போராளிகளுக்கு பயிற்சி தரப்பட்ட காலகட்டங்களிலும் சரி, அதைத் தொடர்ந்து, ஈழத்தில்  கொலைகள் நடந்த காலத்திலும், அவற்றில் இந்திய உளவு நிறுவனங்களின் பங்கு உண்டு என்பதற்கு, மற்றொரு முக்கிய தகவலை நாம் மக்கள் மன்றத்தில் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு போராளிகள் குழுக்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு ராணுவப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்த தரவேண்டிய பொறுப்பு ‘ரா’ உளவு நிறுவனத்தின் கள அதிகாரியாக டி.அய்.ஜி. நிலையில் பணியாற்றிய உன்னிகிருஷ்ணன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உன்னி கிருஷ்ணன்தான் பயிற்சிக்கு முதல் அணியாக ‘டெலோ’வை தேர்ந்தெடுத்தார். இந்த உன்னி கிருஷ்ணனின் பின்னணி என்ன என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும்.

“1981 இல் உன்னிகிருஷ்ணன் கொழும்பில் ‘ரா’வுக்காக வேலை செய்த போது - அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருடன் நட்பு கொண்டார். இருவரும் நெருக்கமாகி, பல ‘ஒழுக்கக் கேடான’ செயல்களில் ஈடுபட்டனர். பல பெண்களுடன், பாலியல் உறவுகளை வைத்திருந்தனர். அப்போது - அமெரிக்க தூதரக அதிகாரி வழியாக - இந்திய உளவுத் துறையின் செய்திகளை அமெரிக்க உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’க்கு அனுப்பி வந்தார். 1983 களில் தமிழ்ப் போராளிக் குழுக்களுடன் - நேரடி தொடர்பு கொண்டிருந்த காலத்தில், உன்னிகிருஷ்ணன், ‘ரா’வின் அதிகாரி மட்டுமல்ல; ‘சி.அய்.ஏ.’வுக்கும் உளவாளி! தமிழ்ப் போராளிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்ற பிறகு, அவர் - சிறீலங்கா உளவுத் துறைக்கும் நெருக்கமானார். கொழும்பில் - அவருக்கு பல பெண்களுடன் இருந்த உறவை சிறீலங்கா உளவுத் துறைப் பயன்படுத்திக் கொண்டு, மிரட்டி, உன்னிகிருஷ்ணனை தனது வலையில் சிக்க வைத்தது.

 

ஒரே கட்டத்தில் ‘ரா’ - ‘சி.அய்.ஏ.’ - சிறீலங்கா உளவுத் துறைகளுடன், ரகசியமாக செயல்பட்டுக் கொண்டும், அதே காலத்தில் ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுடனும் நேரடி தொடர்பு கொண்டும் உன்னிகிருஷ்ணன் செயல்பட்டுள்ளார். 1985 இல் சென்னையில். இவர் தமிழ் ஈழப் போராளிக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தபோது - பம்பாயில் - அமெரிக்காவின் ‘பான் விமான சேவை’யில் வேலை செய்த ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தவரும் உன்னி கிருஷ்ணனின் நண்பரான கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரக அதே அதிகாரிதான். சென்னையிலிருந்து - பம்பாய்க்குப் பறந்து கொண்டு, விமானப் பணிப் பெண்ணுடன், அடிக்கடி சிங்கப்பூருக்குப் போய், உல்லாசமாக இருந்தார், உன்னி கிருஷ்ணன். ஆனால் எப்படியோ இவர்கள் இருவரும் ‘இணைந்த நிலையில்’ இருந்த படங்கள் ரகசியமாக எடுக்கப்பட்டன. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள்; இந்தியாவின் வெளியுறவுத் துறை முடிவுகள்; ‘ரா’வின் திட்டங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் - உன்னிகிருஷ்ணன் வழியாக - சிறீலங்கா அரசுக்குக் கிடைத்து வந்தன.

 

கொழும்பில் இந்திய தூதராகவிருந்த ஜே.என்.தீட்சித் இதை ஒப்புக் கொண்டு தனது நூலில் பதிவு செய்துள்ளார். தீட்சித் எழுதியிருப்பதைப் படிக்கிறேன்.

 

“1986 ஆம் ஆண்டுகளில் - முதல் 6 மாதங்களில் - நான் லலித் அதுலத் முதலியுடன் (இவர் இலங்கையில் செல்வாக்குள்ள அமைச்சர்) நடத்திய உரையாடல்களில் - அவர் தெரிவித்த கருத்துக்கள் - என்னை வியப்பில் ஆழ்த்தின. இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அதிகாரிகள்; உளவு நிறுவன அதிகாரிகள்; இவர்களின் செயல்பாடுகள் பற்றி, ஏராளமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டது. என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது. உடனே நான், இதுபற்றி டெல்லிக்கு தகவல் கொடுத்தேன்” -  என்று எழுதியுள்ளார். (நூல்: Assignment Colombo) இப்படி - இந்திய உளவுத்துறை ரகசியங்களை சிறிலங்காவுக்கு கொடுத்தது யார் என்பதையும் - ஜே.என்.தீட்சித் குறிப்பிடுகிறார்.

 

“சிறீலங்காவுக்கு, இந்தத் தகவல்களைத் தந்தது, எங்களது உளவு அமைப்பில் பணிபுரிந்த அதிகாரி உன்னி கிருஷ்ணன்தான் அவர். அமெரிக்க விமானப்பணிப்பெண் ஒருவர் மூலமாக, அமெரிக்கர் வலையில் வீழ்ந்து விட்டார். அவரது ‘எதிர்மறையான’ நடவடிக்கைகள் 1986 மத்தியில் தெரிய வந்தது. தொடர்ந்து - அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உன்னிகிருஷ்ணன் “அமைதியாக்கப்பட்ட” பிறகு, சிறீலங்காவுக்கு இந்தியா பற்றி கிடைத்து வந்த தகவல்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. சிறீலங்காவுக்கு உன்னி கிருஷ்ணன்தான் ரகசியத் தகவல்களைத் தந்தார் என்பது இதன் மூலம் உறுதியானது” - என்று மேலோட்டமாக - விரிவாக உண்மைகளை வெளியிடாமல், ஆனால் உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார், ஜே.என். தீட்சித்.

 

“The Sri Lanka source of information was a senior operative of our own intelligence agency, Unnikrishnan, who had been subverted most probably by the Americans through a foreign lady working for Pan-American Airlines. His negative activities were discovered sometime towards the middle of 1986, which was followed by appropriate procedural action against him. The fact that the Sri Lankan Government’s advance knowledge about Indian policies and intentions clearly diminished after Unnikrishnan was neutralized proved that he was a major source of information to the Sri Lankans. (Assignment Colombo-(1998) pg. 61)”

 

உண்மைகளை மறைக்க முடியாமல் - மென்மையான வடிவில் ஜே.என்.தீட்சித் தந்துள்ளார் என்றாலும், கே.வி.உன்னி கிருஷ்ணனின் நடவடிக்கைகளை அவரால் மறைக்க முடியவில்லை.

 

- ஆக அமெரிக்கா, இந்தியா, இலங்கை என்று மூன்று நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் உளவு வேலை பார்த்த ஒரு ‘ஒழுக்கசீலரிடம்’ தான், போராளி குழுக்களுக்கு பயிற்சி  தரும் பொறுப்புகள் தரப்பட்டன. இந்த ‘தர்மபுத்திரர்களுக்கு’ தலைமையேற்று சென்னையில் செயல்பட்டவர் பார்த்தசாரதி என்ற வெளியுறவுத் துறையைச் சார்ந்த பார்ப்பன அதிகாரி! இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த காலத்தில், இவர், உளவுத் துறையினருடன் இணைந்து ஒவ்வொரு நாளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு தந்து வந்தார். அரசு கட்டுப்பாட்டிலிருந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒவ்வொரு நாளும் புலிகளுக்கு எதிரான செய்திகளைப் பரப்பி வந்தன. (குறிப்பு : இந்த பார்த்தசாரதி என்ற பார்ப்பன அதிகாரி இப்போது ஓய்வு பெற்று விட்டார். கடந்த வாரம் ‘சேனல் 4’ தொலைக்காட்சி சிங்கள ராணுவத்தின் இனப்படுகொலை காட்சிகளை ஒட்டி ‘ஹெட்லைன்ஸ் டுடே’ நடத்திய விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, ‘பிரபாகரன் கோழை; அவர், மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி யதால் தான், இலங்கை ராணுவத் தாக்குதலில் மக்கள் பலியாக நேர்ந்தது’ என்று இறுமாப்போடு கூறி இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தி பேசினார்.)

 

இப்படிப்பட்ட ‘உன்னிகிருஷ்ணன்களைக்’ கொண்ட நயவஞ்சக இந்திய உளவு நிறுவனத்தின் பார்ப்பன முகத்தை  ராஜீவ் சர்மா தனது நூலில் எழுதாமல் எல்லா கொலைகளுக்குமான பழியையும் விடுதலைப் புலிகள் மீதே போடுவது என்ன நியாயம்? எது எவரின் குரல்?

 

•    தர்மலிங்கம்,  ஆலாலசுந்தரம் என்ற மக்கள் செல்வாக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வஞ்சகமாகக் கொன்று பழியை புலிகள் மீது போட்டது - ‘டெலோ’ என்ற அமைப்பு.

•    புலிகளை எதிர்ப்பவர்களே இந்த உண்மைகளை பதிவு செய்து விட்டனர்.

 

•    அந்த ‘டெலோ’ உளவுத் துறையின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கிய அமைப்பு.

•    இந்தியா, இலங்கை அமெரிக்கா என்று ஒரே நேரத்தில் 3 நாடுகளின் உளவாளியாகவும், அதே நேரத்தில் பல்வேறு போராளி குழுக்களுடனும் நெருக்கமாக உறவாடி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக திட்டங்களை வகுத்த உன்னி கிருஷ்ணன் தான் கொலைகளின் பின்னணியாக செயல்பட்டிருக்கிறார்.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15749:-6&catid=1342:2011&Itemid=589

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் செய்த  உற்கொலைகளால் புளொட் அழிந்தது உண்மை ஆனால் புலிகள் செய்த  கொலைகளால் புலிகள்மட்டுமில்லை பல லட்சம் மக்களும் அழியவேண்டி போனது.,

 

உண்மைதான்.. அந்தப் பல லட்ச மக்களில் ஜப்பானியர்களும் அடங்குவதுதான் வேதனை..! :(

 

அகாசி சமாதானம் பேச செலவழித்த காசில் அணு உலைகளைப் பாதுகாப்பாக்கி இருந்தால் ஃபுகுஷீமா விபத்து நேர்ந்திருக்குமா? :unsure:

 

Spoiler
:lol: :lol: :lol:

 

உண்மைதான்.. அந்தப் பல லட்ச மக்களில் ஜப்பானியர்களும் அடங்குவதுதான் வேதனை..! :(

 

அகாசி சமாதானம் பேச செலவழித்த காசில் அணு உலைகளைப் பாதுகாப்பாக்கி இருந்தால் ஃபுகுஷீமா விபத்து நேர்ந்திருக்குமா? :unsure:

 

Spoiler
:lol: :lol: :lol:

 

முடியல

Spoiler

:lol:  :lol:  :lol::D  :D  :D:icon_idea:  :icon_idea:  :icon_idea:

   

 

Edited by தமிழ்சூரியன்

உண்மைதான்.. அந்தப் பல லட்ச மக்களில் ஜப்பானியர்களும் அடங்குவதுதான் வேதனை..! :(

 

அகாசி சமாதானம் பேச செலவழித்த காசில் அணு உலைகளைப் பாதுகாப்பாக்கி இருந்தால் ஃபுகுஷீமா விபத்து நேர்ந்திருக்குமா? :unsure:

 

Spoiler
:lol: :lol: :lol:

 

பலரது வேஷம் கலையும் நேரம் இது  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • தொடங்கியவர்

 

 

முன்னிலை சோசலிச கட்சியை புகலிடதிலிருக்கும் அரச ஆதரவாளலர்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்களே என்ன காரணம்? சுயநிர்னய உரிமையை ஏன் எதிர்கிறார்கள்?

சசி

frontline-socialist-party.jpgஇதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை நண்பரே.மகிந்தா அரசு சொல்லும் அதே ‘’கோசத்தையே’’ இவர்களும் வைப்பதால், அடிப்படையில் முன்னிலை சோசலிச கட்சியும், மகிந்தாவும் ஓரே புள்ளியில் சங்கமிக்கின்றனர். மேலும் இந்த புகலிட அரச ஆதரவாளர்கள் தமது சுய திருப்திக்கான விருப்பங்களிலிருந்து, மகிந்த அரசிடமிருந்து தாங்கள் பெறும் ‘’உச்ச கட்ட லாபங்களிலிருந்தே’’ தமது அரசியலை தீர்மானிக்கின்றார்கள்.

முன்னிலை சோசலிச கட்சியை ஆதரிப்பவர்களின் பெயர்களை ஒரு தடவை பட்டியல் இட்டுப்பாருங்கள். ஆள்கடத்தல், கப்பம் , கொலை என்று இலங்கை புலனாய்வுத் துறையோடு சேர்ந்து இயங்கும் கும்பல்களும், கே.பி யோடு இயங்கும் நபர்களும், பெருவியாபாரிகளாக இருந்துகொண்டு “மார்க்ச்சிய” முகமூடிபோடுபவர்களும், பிள்ளையானின் அடியாட்களும், ‘’தலித்தியம்’’ என்ற போர்வையில் ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டி ; மகிந்தா அரசுக்கு சேவகம் செய்பவர்களுமே இப் பட்டியலில் பெரும் இடத்தை பிடிப்பார்கள்.

இவர்களுக்கும் இலங்கையில் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களுக்கும் என்னதான் உறவு?

இன்னும் சிலர் புலிகளின் அரசியலின் எதிர் நிலையிலிருந்து முடிவுகளுக்கு வருகிறார்கள்.

இதன் விளைவே தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை கோட்பாட்டின் மீதான இவர்களின் எதிர்வினைகளாகும். புலிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய கோட்பாட்டை தமக்கு உகந்த அரசியல் நலன்களுக்கு, தங்களின் அபிலாசைகளுக்கு கீழ்நிலைப்படுத்தி, புதிய வியாக்கியானங்களை கொடுத்ததன் விளைவே இதுவாகும். சுயநிர்ணயக் கோட்பாடு என்பது ‘பிரிந்துபோதல் மாத்திரமே’ என்ற அவர்களின் ஒற்றைப் பரிமாண சொல்லாட்சி ஏற்படுத்திய தாக்கம் இதுவாகும்.

உண்மையில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு என்பது ; ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்கள் தமது அரசியல் உரிமைகளை, தமது சுதந்திரத்தை, தமது அரசியல் வடிவத்தை தீர்மானிப்பதற்கான வழிமுறையாகும். இதில் ‘பிரிந்துபோதல்’ என்பது ஒரு அம்சமே அன்றி சுயநிர்ணய கோட்பாடு என்பதே ‘’பிரிந்துபோதலும் தனி அரசு அமைத்தலும்’’ என்பதல்ல.

இதனை நாம் இவ்வாறு விளங்கிக்கொள்ளமுடியும்.குடும்ப உறவில் மனைவி கணவன் இருவருக்கும் இடையில் உள்ள விவாகரத்து என்ற சட்ட உரிமை போன்றதே இதுவாகும். விவாகரத்து உரிமை இருக்கின்றது என்பதற்காக மனைவியும் கணவனும் பிரிந்து செல்ல வேண்டுமென்று முடிவெடுப்பதில்லை. மனைவி கணவன் இருவருக்கும் இடையில் இணைந்து வாழ்வதில் உடன்பாடற்ற தன்மைகள் முரண்பாடுகள் பகமைகள் தோன்றி ஐக்கியப்பட்ட உறவு சாத்திய இன்மையாகி சகிக்க முடியாத நிலமை தோன்றும்போதே விவாகரத்து உரிமை பயன்படுத்தப்படுகின்றது. இதே தன்மையை ஒத்ததே சுயநிர்ணய உரிமை கோட்பாடாகும்.

இறைகுமாரன் உமைகுமாரன் கொலைக்கு சந்ததியார்தான் காரணம் என்று

சொல்லப்படுகிறது. உண்மையா?

மகேஸ்

santhathiyar.jpgஇதில் தோழர் சந்ததியார் சம்பந்தம் பற்றி என்னிடம் தெளிவான முடிவு எதுவுமில்லை. ஆனால் இப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் சந்ததியாரின் மிக நெருக்கமான ஆட்கள் என்பது தெரியும். இக் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளையும் சந்ததியார், உமாமகேஸ்வரன் போன்ற அதிகாரத்தில் இருந்த எவரும் எடுக்கவில்லை என்பதும், கொலையாளிகள் புளொட்டில் இந்த இருவரின் ‘செல்லப்பிள்ளைகளாக’ இருந்தார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.

இக் கொலை நடந்தகாலத்தில் நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளராக இருந்தேன்.

இறைகுமாரன் எனது நண்பர் என்பதும், இப் படுகொலை எனக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்ததினாலும் இப் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் ஓர் கண்டன கூட்டத்தை நடாத்தினேன். புளொட்தான் இக் கொலையை செய்தது என்ற சந்தேகம் எனக்கிருந்தாலும் அதனை அந்நேரத்தில் உறுதியாக தீர்மானிக்க முடியவில்லை. எனினும் கூட்டத்தை நடாத்தினேன். இதன்பின் இக் கூட்டம் நடாத்தியது தொடர்பாக நான் புளொட்டினால் விமர்சிக்கப்பட்டேன்.

இதைப்பற்றி நான் நிறைய எழுத முடியும். எனது வரலாற்றை எழுதும்போது நிச்சயம் இது பற்றி எழுதுவேன்.

அதிகமான தலித் அமைப்புக்கள் வலதுசாரி பிற்போக்கு அரசியலையே கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலைக்கு இன்றைய இடதுசாரி அமைப்புக்களின் அரசியலும் காரணம்தானே இது பற்றிய உங்கள் கருத்து என்ன.

விஜயன்

dalit.jpgஇது தத்துவார்த்த நடைமுறை சார்ந்த பிரச்சனை. முழமையாக ஆராயப்படவேண்டியது. கேள்வி பதிலில் என்னால் முழுமையாக ஒரு புரிதலை கொண்டுவரமுடியுமோ தெரியவில்லை.

தலித் இயக்கங்கள் இவ்வாறான வலதுசாரி அரசியல்போக்கை கொண்டு இயங்குவதற்கு அடிப்படைக் காரணம் இன்றைய அடையாள அரசியல் தன்னகத்தே கொண்டு இயங்கும் அதன் “அரசியலே” என நினைக்கிறேன். வர்க்கம், இனம், பால், நிறம், மொழி போன்ற பன் முக அடையாளங்களுக்கூடாக இனம் காணப்படும் ஒடுக்குமுறைகள், முரண்பாடுகள் ,புறக்கணிப்புக்கள் போன்றவை எவ்வாறன அரசியல் நலன்சார்ந்து மதிப்பிடப்படுகின்றன என்ற வழிமுறையில் இருந்தே இதன் அரசியல் கட்டமைக்கப்படுகின்றது.

நீங்கள் சொல்வதுபோல் இவ் இயக்கங்கள் அநேகமானவை வலதுசாரி அரசியலை பின்புலமாகக்கொண்டு இயங்குவதற்கு இவ் அமைப்புக்களை வழி நடாத்துகின்ற நபர்கள் வலதுசாரிகளாகவும், பிற்போக்காளர்களாகவும், தலித் அரசியலை தங்களுடைய அரசியலுக்கு ‘’மூலதனமாக’’ கொள்பவர்களாகவும் இருப்பதுவே காரணமாகும். சமூகங்களை பற்பலவாறாக கூறுபோடவும், சமூகங்களிடையே காணப்படும் அடையாளம் சார்ந்த வேறுபாடுகளை ; முரண்பாடுகளாக, மோதல்களாக கூர்மை அடையச் செய்யும் பின் நவினத்துவ அரசியல் சிந்தனையின் போக்கும் இன்னொரு காரணமாகும்.

அதே வேளை இந்த பன்முக ஒடுக்குமுறைகளை விளங்கிக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் தீர்வு காணவும் முயலாத சில இடதுசாரி அமைப்புக்களின் போக்கும் காரணம் என்றே சொல்லவேண்டும். எமது தலித் மக்கள் சாதிய ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கபடுகிறார்கள். வர்க்கத்தளத்திலான போராட்டங்கள் மட்டுமன்றி ; சாதியத் தளத்திலான சாதிய ஆதிக்க எதிர்ப்பு அரசியலை, போராட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும். அதே நேரம் சாதியம் இன்றைய உற்பத்தி முறைகளிலும் ,அரச அதிகாரங்களிலும், கருத்துருவங்களிலும் மிகவும் இறுக்கப்பட்டு காணப்படுகின்றது. எனவே தலித் அரசிலை, சாதிய ஆதிக்க எதிர்ப்பு அரசியலை, மாக்சியத்தின் வழிகாட்டலோடு ; பெரியாரியம்- அம்பேக்காரியம் போன்றவற்றின் கூறுகள் இணைக்கப்பட்டு ஒரு புரட்சிகர தலைமையில் போராட்டங்கள் வழிநடத்தப்படவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் கேட்கும் இக் கேள்வி காலம்பூராகவும் கேட்கப்படும் கேள்வியாகவே மாறக்கூடும்.

மட்டக்களப்பு பில்லி சூனியம் மந்திரம் பற்றி சொல்லுங்களேன். அறியவிரும்புகிறேன்.

வாசன்

billy_sooniym.jpgமட்டக்களப்பு போடியார்கள் பற்றிய கேள்வியையும் நீங்களே கேட்டிருந்தீர்கள். இப்போது இக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். நன்றி.

உண்மையில் அரசியல் கேள்விகளைவிட இக் கேள்விகளே என் மனதிற்கு சந்தோசம் அளிப்பதாய் உள்ளது. நீங்கள் மட்டக்களப்பு கலை, கலாச்சார ,பண்பாட்டு விழிமியங்களை அறிய ஆவலானால் பின்வரும் புத்தகங்களை வாசிக்க முயலவும். மட்டக்களப்பு தமிழகம் – வீ.சி. கந்தையா , மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் – எவ்.எக்ஸ். நடராஐர், மட்டக்களப்பு குகன் குல முக்குவர் வரலாறு- ஞா. சிவசண்முகம், அக்கரைப்பற்று வரலாறு – ஏயாரெம் சலீம் , மட்டக்களப்பு மான்மியம்.-எவ்.எக்ஸ். நடராஐர், மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் – வெல்லவூர்கோபால், மகோன் வரலாறு- க.தங்கேஸ்வரி.

நீங்கள் இந்த பில்லி ,சூனியம் பற்றிய கேள்வியை என் பால்ய பருவத்தில் கேட்டிருந்தால் இது பற்றி விதம் விதமான கதைகளை பலவகைப்பட்ட ‘தினிசிகளோடு’ சொல்லியிருப்பேன். என்னிடம் இவ்வகைப்பட்ட கதைகள் நிறையவே இருந்தன. பில்லி- சூனியம்- மந்திரம் பற்றி சொல்லும் நல்ல அழகான “கதை சொல்லியாக” நான் இருந்தேன்.

இளமையில் சின்ன வயதில் எனக்கொரு “ஆளே” இருந்தான். (‘ஆளே’ என்பது மட்டக்களப்பு கிராமிய வழக்கில் நெருங்கிய கூட்டாளியை, நண்பனை குறிப்பது) அவனின் தாத்தா மந்திரவாதியாக இருந்தார். அவன் மிகச் சிறந்த ‘கதை சொல்லி’. தினம் தினம் கதை சொல்வான். அவன் சொல்லும் கதைகளை கேட்பதற்காக நாங்கள் ஒரு கூட்டமே அவன் பின்னால் அலைவோம். பில்லி விட்ட கதை, சூனியம் செய்த கதை, மருந்துபோட்ட கதை, மை போட்டுப் பார்த்த கதை, பேய் ஆட்டக்கதை என்று ஆயிரம் கதைகள் அவன் வைத்திருந்தான்.

நானும் அவனால் பில்லி- சூனிய கதை சொல்லியாய் மாறினேன். காலத்தின் வளர்ச்சி ; அறிவியலும், அரசியலும் என்னோடு இருந்த “கதை சொல்லியை” என்னிடம் இருந்து அந்நியப்படுத்திவிட்டது.

இன்றைய காலம் மட்டக்களப்பு மந்திரவாதிகள் அருகிவிட்ட காலமாக மாறிவிட்டது. அவர்களின் மறைவுகளோடு கிராமிய வைத்தியங்களும் சிகிச்சை முறைகளும் சடங்குகளும் அருகிவிட்டன. இந்த மந்திரவாதிகள் மிகவும் சிறந்த மூலிகை வைத்தியர்களாகவும், சிறந்த ஏடு படிப்பவர்களாகவும் இருந்தார்கள். நண்பரே உங்கள் கேள்விக்கு பதிலளிக்க கிளம்பி எங்கோவந்துவிட்டேன்.

இன்று நீங்கள் கேட்கும் இக் கேள்விக்கு ; என்னை வளம்படுத்திய அறிவியலையும், அரசியலையும் கொண்டு பதிலளிக்க முயல்வேனானால் உங்கள் கேள்விக்குப் பின்னால் உள்ள “சுவாரசியம்” அழிந்துபோகும். அது வேண்டாம். எனினும் மட்டக்களப்பில் இதன் மீதான நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் தொடர்வதாகவே நான் நினைக்கின்றேன். உங்களின் கேள்வி என் பால்ய பருவ நினைவுகளை ‘இரைமீட்க’ உதவிற்று. நன்றி நண்பரே.

 

ww.inioru.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.