Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது பல சேனா அமைப்பின் கருத்துக்கு முஸ்லிம்கள் மறுப்பு

Featured Replies

இலங்கையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் கடும்போக்குவாதமும் தீவிரமடைந்துவருவதாகவும் அதனால் மற்ற சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொது பல சேனா என்ற கடும்போக்கு பெளத்த அமைப்பு சுமத்துகின்ற குற்றச்சாட்டை முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மறுக்கிறார்கள்.

 

முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைக் காலங்களாக நாட்டில் நடந்துவரும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் முஸ்லிம் தலைவர்கள் பொது பல சேனா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

 

முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக பிபிசி தமிழோசையிடம் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 

முஸ்லிம்கள் மத்தியில் மத அடிப்படை வாதமும் கடும்போக்கு வாதமும் தீவிரமடைந்து வருவதாகவும் அதனால் பெரும்பான்மை பௌத்தர்கள் பாதிக்கப்படுவதாகவும் ஞானசார தேரர் கூறினார்.


ஹலால் சான்றிதழ் பெறவேண்டுமென்று வர்த்தக நிலையங்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அதனால் பௌத்தர்களின் உணவுப் பழக்கமும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

 

உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெறுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் ஞானசார தேரர் தமிழோசையிடம் கூறினார்.

 

சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்குரிய சட்டங்களுக்கு பெரும்பான்மை பௌத்தர்களும் கட்டுப்பட வேண்டியதை ஏற்க முடியாது என்ற வாதத்தையும் அவர் முன்வைத்தார்.

 

இதேவேளை, முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருள் வாங்கக் கூடாது என்றும் பள்ளிவாசல்களை அகற்ற வேண்டுமென்றும் நாட்டின் பல இடங்களிலும் நடக்கும் போராட்டங்களுக்கும் பொது பல சேனா அமைப்புக்கும் சம்மந்தம் இல்லையென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.



120420094708_muslim_sri_lanka_304x171_ap

 

இலங்கையில் முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான சூழலில்

தான் இப்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்: எஸ்.எல்.எம். ஹனீஃபா



முஸ்லிம் தரப்பு விளக்கம்

 

ஆனால் பொது பல சேனா அமைப்பின் குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் தலைவர்கள் மறுத்துள்ளார்கள்.


முஸ்லிம்கள் ஒருபோதும் சிங்களவர்களையோ மற்ற மதத்தவர்களையோ மதம் மாற்றுவதற்காக பிரச்சாரம் செய்துவரவில்லை என்று முஸ்லிம் சமூக எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீஃபா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

 

உண்மையான மார்க்க விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் விலகிச் செல்லும் இஸ்லாமியர்களை நெறிப்படுத்தும் நோக்குடனேயே முஸ்லிம் மத அமைப்புகள் பிரச்சாரம் செய்துவருவதாகவும் ஹனீஃபா தெரிவித்தார்.

 

உணவுப் பொருட்கள் தவிர்ந்த வேறுபொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெறவேண்டுமென்ற எந்தவிதமான நடைமுறையும் இலங்கையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130125_bodhubalamuslim.shtml



05(41).jpg



முஸ்லிம் தலைவர்கள் பொது பல சேனா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.


முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அண்மைய போராட்டங்கள் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் பிபிசி தமிழோசை கேள்வி எழுப்பியது.

 

அவர் கூறிய கருத்துக்களை இங்கு கேட்கலாம்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130125_bodhubalasena.shtml



24012013-md-hr-2%20copy.jpg

தமிழ் மக்கள் தமக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இடைவெளி என்று குறை கூறுகிறார்கள். அதனுடன் ஒப்பிட்டால் முஸ்லீம்மக்களுக்கு கட்சிகளே இல்லை என்ற அளவுக்கு இடவெளி. பௌசி, அஸ்வர் போன்றோர் மேடைகளில், பாரளுமன்றத்தில் பேசும் போது இவர்கள் அடிவருடிகள் அல்ல, சித்த சுவாதீனம் தன்னும் உள்ளவர்களா என்று ஆச்சரியப்படவேண்டியிருக்கிறது.

 

இவர்கள் கடும் போக்கு அரசுடன் இணைத்து இயங்கிவிட்டு தம்மிடம் கடும் போக்கு இல்லை என்றால் அதில் பொருள் இல்லை. சிங்களமக்கள் தமது அரசு தம்மிடம் கடும் போக்காக நடந்து கொண்டால் அதை துவேசம் என்றா அழைக்கப் போகிறார்கள்.

 

பதியுதின் போன்றொர் தாம் கடும்போக்கு முஸ்லீம்கள் இல்லை என்று தமிழரிடம் கூறினால் அதை மீறிக் கூற யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் பதியுதினை எல்லா சிங்களமக்களுக்கும் அவர் யார் என்று தெரியும். 

 

மகிந்தா தனது குடும்பத்துக்கு 2000 பதவிகள் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் இன்று முறையாக பௌத்தத்தை தழுவி உள்ளவர்கள். ஆனால் அந்த கடும் போக்கு அரசுடன் சேர்ந்த்து எல்லா நீதி அமைச்சின் பதவிகளையும் திருடி தனது கையாட்களுக்கு கொடுத்துவிட்டு கக்கீம் சிங்கள மக்களை மோடையாக்கள் என்று ஏமாற்றினால் அவர்கள் நம்ப மாட்டர்கள். பதவித் திருட்டுக்கள் மகிந்தவுக்கும் கக்கீமுக்கும் இடையில் நடந்த உடன்படிக்கையே. இது சிங்கள முஸ்லீம் சமூகங்களுக்கிடையான உடன் படிக்கை இல்லை.

 

இனவாதத்தை விதிக்கும் பதியுதின் அஸ்வார் போன்றோர் வெளியே வந்து பொதுபல சேனவுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். அது, இந்த அரசில் நடவாவிட்டாலும் இன்னொரு சிங்கள அரசு பதவிக்கு வந்தால் அதில் தன்னும் இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். கக்கீம் பின் கதவால் நடத்தும் பதவித் திருட்டுக்களை சிங்களமக்கள் அறியவரமாட்டர்கள் என்று நினைத்து அவற்றை செய்யாமல் முறைப்படி தமிழருடன் சேர்ந்து கிழக்கு மாகாண அரசை அமைத்து தொழில் வசதி முன்னேற்றங்கள் செய்த்திருக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

காவியுடை அணிந்தோரின் காட்டுமிராண்டித்தனத்தை தட்டிக்கேட்காத முஸ்லிம் தலைவர்கள் இருந்து என்ன பயன்?: றம்ழான்



காவியுடை காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தட்டிக்கேட்காத முஸ்லிம் தலைவர்கள் இருந்து என்ன பயன் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது

 

அன்மைக்காலமாக நாட்டில் நலா புரங்களிலும் புனித இஸ்லாத்திற்கும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான பௌத்த தீவிரவாதம் மிக மோசமாக தலைதூக்கியுள்ளது. அனுராதபுரம் சியாரம் உடைப்புடன் சில பௌத்த காவியுடை காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட புனித இஸ்லாத்திற்கு எதிரான அடக்குமுறை இன்று பள்ளிவாயல்கள் உடைப்பு, பாங்கு சொல்வதற்கு தடை, தொழுகைக்கு தடை, முஸ்லிம் கிராமங்களிலிருந்து  வெளியேற்றுதல், வியாபார நிலையங்களுக்கு சீல்வைத்தல், ஹலால் சான்றுதல்களை தடை செய்தல். என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்வதுடன் அதற்கு  எதிரான போராட்டங்களும்.  ஆர்ப்பாட்டங்களும் தினம் தினம் படிப்படியாக விஸ்பரூபம் எடுத்துவருகின்றது.


இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான திட்டமிட்ட போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எந்தவொரு அரசின் ஆட்சிக் காலத்திலும் இடம்பெறவில்லை. கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்து   முஸ்லிம்களினதும் புனித இஸ்லாத்தினதும் கன்னியத்தையும்  கௌரவத்தையும் பாதுகாத்து வந்துள்ளனர்.

 

இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அதிகளவிலான பாராளமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஏன் முதலமைச்சர், ஆளுநர், மாகாண சபை உறுப்பினர்கள் என முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு பஞ்சமே இல்லை இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக தலைவிரித்தாடும் மத அடக்கு முறையை தடுத்து நிறுத்தவோ அல்லது அதற்குகெதிராக குரல் கொடுக்கவோ எவருமில்லாத அரசியல் அனாதைகளாக இன்று முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது 


தேர்தல் காலங்களில் மூலை முடுக்குகளெல்லாம் மேடை போட்டு மேடைக்கு மேடை உரிமைகளை வென்றுதருவோம் என்று வீர முலக்கமிடும் கட்சிக்கரர்களாகவும், உரிமைகளோடு அபிவிருத்தியையும் பெற்றுத்தருவோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் வரலாறு கூறுவோர்களாகவும், ஆளும் கட்சியோடு சேர்ந்து இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் என தனித்துவத்தை தாறுமாராக விமர்சனம் செய்பவர்களாகவும் தேர்தல் காலத்தில் முஸ்லிம்களை பரஸ்பரம் ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பெறும்பான்மையை பெற்றுக் கொடுக்கும் நீங்கள் முஸ்லிம் சமூகம் பற்றியோ அல்லது படிப்படியாக பறிக்கப்பட்டு வரும் உரிமைகளைப்பற்றியோ சிந்திக்காமல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்களுக்கு கண்னை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கி தங்களது அமைச்சுப் பதவிகளை காப்பாற்றிக் கொள்கின்றவர்களாக இன்று முஸ்லிம் அரசியலை மாற்றியமைத்து விட்டீர்கள்.

 

இன்று தங்களுக்காக வாக்களித்த முஸ்லிம் சமூகத்தினதும் புனித இஸ்லாத்தினதும் அடையாளங்களும் உரிமைகளும் பௌத்த மத வெறியர்களினால் படிப்படியாக பறிக்கப்பட்டு  வருகின்றது என்பதை மனச்சாட்சியோடு நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

இந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைப் பொறுப்பை இறைவன் உங்களிடம் அமானிதமாக வழங்கியுள்ளான். தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் பதவியையும் கொண்டு இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி அனைத்து சமூகத்திற்கும் இழைக்கப்படும் அநிதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு அவர்களது உரிமைகளை வென்;றெடுப்பதில் அல்லாஹ_க்கு மாத்திரம் பயந்தவர்களாக செயற்பட வேண்டும்

 

பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநிதிகளை தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கோ முதுகொலும்பு இல்லாத  முஸ்லிம் தலைமைகளாக நீங்கள் இருப்பீர்களானால் நாளை இறைவனின் சன்னிதானத்தில் குற்றவாளிகளாக முழு சமூகத்திற்கும் அநீதி இழைத்தவர்களாக எழுப்பப்படுவீர்கள.;


இன்று வரைக்கும் நீங்கள் பௌத்த கடும் போக்காளர்களினால் இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட மத அடக்குமுறைக்கு எதிராக நீங்கள் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைதான் என்ன? ஜனாதிபதியுடன் பேசினோம் குழு அமைத்தோம் என்று கூறலாம் அது வெறும் கண்துடைப்பு

 

இந்த நாட்டில் எங்கோ ஒரு மூலையில் சிறியதொரு அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக தகவல் அறிந்து கொள்ளும் வல்லமையுள்ள பாதுகாப்பு திறமையை கொண்டவர்களால் பகிரங்கமாக இஸ்லாத்திற்கு எதிராக போராட்டம் நடாத்துகின்றவர்களுக்கு பின்னால் யார் இருக்கின்றனர் என்று குழு அமைத்து கண்டு பிடிப்பதென்பது வேடிக்கையானது.


அது மாத்திரமன்றி 30 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த உலகத்திலோ மிகப் பலம் வாய்ந்ததாக வர்னிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதத்தினை வெற்றி கொண்ட நிறைவேற்று அதிகாரத்தினை தன்னகத்தே கொண்ட ஜனாதிபதியும் எந்த சட்ட மூலத்தையும் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றும் சகல அதிகாரத்தினையும் கொண்ட அரசாங்கமும் இந்த நிராயுதபானியான பௌத்த கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியாது என்பது நகைப்புக்குறியது

 

நீங்கள் நினைத்தால் ஏன் முடியாது அரசியல் கட்சி ரீதியாக ஒன்றுபடாவிட்டாலும் அநீதிகளுக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் ஒன்றுபட்டு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பலமான அழுத்தங்களை கொடுங்கள் இல்லாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள் இந்த அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்திற்காக நீங்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளை விட  இருந்தவைகளை இழந்ததே அதிகம் இன்னும் இழப்பதற்கு எதுவுமில்லை உங்களை அரியாசனம் ஏற்றிய இந்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்காக நீங்கள் உங்களது அமைச்சுப் பதவியை ஏன் துறக்க முடியாது?


எனவே உங்களது மௌனம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்களினால் மேற்கொள்ளப்படும்    போராட்டங்கள் நியாயமானது என ஏற்றுக் கொண்டதாகி விடும் உங்களது மௌனத்தை கலைந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இன்று கட்டவிழ்து விடப்பட்டுள்ள அநிதிளுக்கு எதிராக குரல் கொடுத்து எமது சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமையையும் பெற்றுக் கொடுக்க அரசியல் கட்சி வேறுபாட்டிக்கு அப்பால் ஒன்றினைந்து செயற்படுமாறு அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2721

அது மாத்திரமன்றி 30 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த உலகத்திலோ மிகப் பலம் வாய்ந்ததாக வர்னிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதத்தினை வெற்றி கொண்ட நிறைவேற்று அதிகாரத்தினை தன்னகத்தே கொண்ட ஜனாதிபதியும் எந்த சட்ட மூலத்தையும் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றும் சகல அதிகாரத்தினையும் கொண்ட அரசாங்கமும் இந்த நிராயுதபானியான பௌத்த கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியாது என்பது நகைப்புக்குறியது

கக்கீம் மாதிரியே தேர்தலில் உரிமை பேச தகுதியான அரசியல் வாதி. கக்கீம் மதவேறியர் போலத்தென்படவில்லை. இவர் அதுவும்தான்.

 

வாழ்க முஸ்லீம் சமுதாயம்.

  • தொடங்கியவர்

இலங்கையில் சிறுபான்மை மக்கள் எதிர்காலத்தில் வாழ முடியாத நிலை உருவாகும்; முஜிபுர் ரஷ்மன் தெரிவிப்பு



இலங்கையில் சிறுபான்மை  மக்கள் எதிர்காலத்தில் வாழ முடியாத நிலை உருவாகும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஷ்மன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொள்வதற்கு சிங்கள பேரினவாதிகளை அராசாங்கம் ஏவிவிட்டுள்ளது.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஆளும் தரப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் செயற்படுகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்தது முஸ்லிம்களுக்கு எதிரான  வன்முறைகளை கட்டுப்படுத்த அல்ல. மாறாக முஸ்லிம்களின் நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவேயாகும்

எதிர்காலத்தில் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் வாழ முடியாத நிலையே ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



http://onlineuthayan.com/News_More.php?id=103471794226509573

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையில் சிறுபான்மை  மக்கள் எதிர்காலத்தில் வாழ முடியாத நிலை உருவாகும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஷ்மன் தெரிவித்துள்ளார்.

 

 

ஏன் இவர் இதில எங்களையும் சேர்க்கிறார்? "இலங்கையில் முஸ்லிம்  மக்கள் எதிர்காலத்தில் வாழ முடியாத நிலை உருவாகும்" எண்டு சொன்னாச் சரிதானே? இப்ப மட்டும் என்ன தமிழர்கள் வாழக்கூடிய மாதிரியே இருக்குது?

 

நல்லாத் தொப்பியை மாறிமாறிப் பிரட்டுவான்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏன் இவர் இதில எங்களையும் சேர்க்கிறார்? "இலங்கையில் முஸ்லிம்  மக்கள் எதிர்காலத்தில் வாழ முடியாத நிலை உருவாகும்" எண்டு சொன்னாச் சரிதானே? இப்ப மட்டும் என்ன தமிழர்கள் வாழக்கூடிய மாதிரியே இருக்குது?

 

நல்லாத் தொப்பியை மாறிமாறிப் பிரட்டுவான்கள்.

 

நாங்கள்  திரும்ப திரும்ப சொன்னோம்

கெஞ்சினோம்

இது எல்லோருக்கும் வரப்போகுது என்று.

 

புரியல  அவர்களுக்கு.

இப்ப உறைக்கத்தொடங்குது.

பயன்.............???

 

ஏன் இவர் இதில எங்களையும் சேர்க்கிறார்? "இலங்கையில் முஸ்லிம்  மக்கள் எதிர்காலத்தில் வாழ முடியாத நிலை உருவாகும்" எண்டு சொன்னாச் சரிதானே? இப்ப மட்டும் என்ன தமிழர்கள் வாழக்கூடிய மாதிரியே இருக்குது?

 

நல்லாத் தொப்பியை மாறிமாறிப் பிரட்டுவான்கள்.

J.R. இன் அரசில் தமிழர்கள் பங்கெடுக்கவில்லை. இந்த சிங்கள கட்சி UNPயின் அரசியல்வாதி சிறுபான்மை இனம் என்று தங்களைத்தான் கூறிப்பிடுகிறார்.

 

மார்ச்வரும் வரையும் சிங்கள கட்சியில் ஒட்டியிருப்பார். மார்ச்சில் விடிவு வந்தால் தமிழீழ ஜின்னாவாக மாறி தனி அலகு கேட்பார்.

  • தொடங்கியவர்

நாம் பிரிந்து நின்பதால் அதை வைத்தே சிங்களம் அழித்து வருகின்றது.

 

முஸ்லீம் மக்களை தமிழர் கூட்டமைப்பு அரவணைக்கும் வழி மூலங்களை ஆராயவேண்டும்.

  • தொடங்கியவர்

முஸ்லிம்கள் விவகாரம்; ஜனாதிபதியிடம் பொதுபல சேனா அமைப்பு விளக்கம்

 

01(764).jpg



'இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராக நாம் போராடவில்லை. பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' என்று பொதுபல சேனா அமைப்பு, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளது.

 

நாட்டில் தற்போது எழுந்துள்ள இனவாதப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


இன்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், மேற்படி அமைப்பின் அங்கத்தவர்களான விமலஜோதி தேரர், விதாரன்தெனியே நந்த தேரர், கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோருடன் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பசில் ராஜபக்ஷ, தினேஸ் குணவர்தன ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் விரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

 

இதன்போது, முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வமைப்பினரிடம் கோரியுள்ளார்.


இதற்கு பதிலளித்த அவர்கள், 'பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' என்று கூறியுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57811-2013-01-27-14-24-55.html

  • தொடங்கியவர்

 இதன்போது, முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வமைப்பினரிடம் கோரியுள்ளார்.

 

 

மகிந்தவின் இந்த நடவடிக்கைக்கு வரப்போகும் ஐ.நா. மனித உரிமை தொடரில் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் இழந்துவிடுவோமோ? என்ற பயமும் இருக்கவேண்டும்.

மகிந்தவின் இந்த நடவடிக்கைக்கு வரப்போகும் ஐ.நா. மனித உரிமை தொடரில் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் இழந்துவிடுவோமோ? என்ற பயமும் இருக்கவேண்டும்.

பிரேரணையில் தாங்கள் தோற்க  கூடும் என்றால் மேற்கொண்டு முஸ்லீம் நாடுகளை கெஞ்ச மாட்டார்கள். தேயிலை ஆடை எல்லாவற்றையும் சீனாவுக்குள்ளால் சரிக்கட்ட முயல்கிறார்கள்.

 

ஈரானுடனான எண்ணை பிரச்சனை தீர்ந்தால் சவுதியையும் திரும்பி நிற்க சொல்லிப்போட்டு பின்னுக்கு உதை நடக்கும்.

 

பொருளாதாரத்தால் இனி இனி இலங்கையை கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் பாதுகாப்பு சபையில் ஒரு சின்ன தீர்மானத்தை கொண்டுவந்தாலும் அதற்கு இலங்கையால் சமாளிப்பது கஸ்டம். அப்படி ஒன்று வர இலங்கை முழுவதாக சர்வாதிகாரமாக வேண்டும்.

 

அவர்கள் ஏற்கனவே தெரியப்பட்ட அரசு இருப்பதாலபதன் பாராளுமன்ற, அதிபர் பதவிகாலங்களை நீடித்து நீதிமன்றத்தில் ஆதரவு வாங்கிவிடுவார்கள். எனவே சர்வாதிகாரத்தையும் தெரிவு செய்ய பட்ட அரசை வைத்து இன்னும் ஒரு 10-15 வருடங்கள் இலகுவாக ஓட்டுவார்கள்.

now muslims sending their  wealth from sri lanka as money and diffrent wys. they got the fear that buddhist is going to steal everything from them.

muslims can not buy as did earlier. but they get everything from tamil areas _mullaitivu jaffna kilinochchi vavuniya byforce some tamils also doing the samething_ tail of ;;;;r     this is real. the suffering people are from tamil areas 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.