Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினாதீவு நாகவிகாரை இறங்குதுறை நவீன முறையில் புனரமைப்பு

Featured Replies

நயினாதீவு நாக விகாரைக்கு செல்லும் இறங்குதுறை நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.  நாகவிகாரை விகாராதிபதியின் ஏற்பாட்டில் 250 மில்லியன் ரூபா பெறுமதியில் இவ் இறங்குதுறை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

 

9(1573).jpg



8(1733).jpg



http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57646-2013-01-24-09-32-29.html

  • தொடங்கியவர்

தமது குடியேற்ற திட்டங்களுக்கும் தேவைகளுக்கும் பணத்தை வாரி இறைக்கும் சிங்களம்.

பொங்கலுக்கு மகிந்த வந்து திறக்க இருந்த வைத்தியசாலை கட்டிடம் ஒன்று கூட திறக்கப்படாமல் உள்ளது  :(

 

 

 

முள்ளிவாய்க்கால் +4 :  http://www.yarl.com/forum3/index.php?showtopic=115637  

  • தொடங்கியவர்

'யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவு' அமைப்பு நடுவிலே நிற்கிறது. இப்படித்தான் சகல தமிழர் அபிவிருத்திகளும்  :( 



6(1742).jpg

கொழும்பு கல்யாணி நதியின் அருகில் உள்ள களனி விகாரையைப் போலவே, பழைய தமிழ் கோவிலை நாக விகாரையாக மாற்றியுள்ளார்கள்!

அதை மீண்டும் கோயிலாக மாற்ற வேண்டும்!!!

  • தொடங்கியவர்

அடிப்படை வசிதியின்றி வாழும் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மீள்குடியேறிய மக்கள்

 

6(1770).jpg



வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

 

 

கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்த சூழல் காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் 11 வருடங்களுக்குப் பின்னர் அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த பிரதேசத்தில் 75 இற்;கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றபோதும் அப்பகுதிக்கு எந்தவிதமான அடிப்படைவசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், வீட்டுவசதிகள் எதுவும் அற்ற நிலையில் தாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறித்த பகுதியில் வாழும் 75 குடும்பங்களும் ஒரு இடத்திலேயே குடிநீர்பெற்று வருவதாகவும் வரட்சியான காலங்களில் குடிநீர்பெறுவதில் பெரும் சிரமங்களை தாங்கள் எதிர்நோக்கி வருவதாகவும் அவர்;கள் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் தங்கள் தேவைகளை பெறுவதற்கு வேறுபிரதேசங்களுக்குச் செல்லவேண்டும் என்றால் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பருத்தித்துறை மருதங்கேணி வீதிக்குச் நடந்து சென்றே போக்குவரத்து செய்யவேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

7(1857).jpg



8(1755).jpg



10(1169).jpg



http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57804-2013-01-27-11-15-09.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனை நெடுக குறைசொல்லி என்னபிரயோசனம்? 

இப்படியே தான் எல்லாம முடிய போகின்றது .

எண்பத்திநாலில் இருந்த நிலையில் இப்ப நான் இல்லை .

  • தொடங்கியவர்

சிங்களவனை நெடுக குறைசொல்லி என்னபிரயோசனம்? 

 

அவர்களை அங்கு பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளால் ஒன்றுமே செய்யமுடியாத நிலை. இருந்தாலும் அவர்கள் இவ்வாறான நிலைமைகளை சர்வதேச கண் முன்கொண்டுவரவேண்டும்.

 

மேலும் புலம்பெயர் அமைப்புக்களும் தம்மால் முடிந்தளவிற்கு சிங்கள புலனாய்வாளர்களை சீண்டாமல் உதவவேண்டும். ஒரு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை அவர்களை வாழ வைக்க வழிகளை தேடல் வேண்டும்.

  • தொடங்கியவர்

மண்டைதீவுக்கு மின்சாரம் எப்போது கிடைக்கும்?; பணிகள் முடிந்தும் காத்திருப்பு எதற்கு என்கின்றனர் மக்கள்

 

மண்டைதீவுக்கான மின்விநியோகம் எப்போது கிடைக்கும் என்று கூறமுடியாது என மின்சார சபை ஊழியர்கள் அங்குள்ள மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து மண்டைதீவு மக்கள் விசனம் தெரிவித்தனர். மண்டைதீவுக்கான மின்விநியோகம் வழங்கக்கூடியதாக மின்சார இணைப்பு வேலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

எனினும் மின் விநியோகம் ஆரம்பிப்பது தாமதமாகிறது. இதுவரை சுமார் ஐம்பதுக்கும் அதிகமான வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளுக்கு மின் இணைப்புக்கள் வழங்கக் கூடியதாக தமது வேலைகளைப் பூர்த்தி செய்து அதற்கான விண்ணப்பங்களையும் சபையிடம் கையளித்துள்ளனர். தொடர்ந்தும் மின்சார இணைப்புக் கோரி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 

தண்ணீர் அருகில் இருந்த போது தாகத்தைத் தீர்க்க முடியாத நிலையாக நாம் உள்ளோம் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அரசியல்வாதிகள் வரும் வரை நாம் இருளில் மூழ்கிக் கிடக்க வேண்டியது தான் என்கிறார்கள் அந்த மக்கள்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=185601798228155516

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.