Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம் எனக்கு தேவையில்லை: பின்னணி பாடகி ஜானகி

Featured Replies

காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம், எனக்கு தேவையில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, பத்ம பூஷன் விருதை, ஏற்கப் போவது இல்லை, என, பிரபல பின்னணி பாடகி, ஜானகி, அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 75. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே... நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.தேசிய அளவில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, நான்கு முறை பெற்றிருந்தாலும், பத்ம விருதுகளை, இதுவரை, மத்திய அரசு தனக்கு கொடுக்கவில்லையே என்ற மனக்குறை, அவருக்கு இருந்தது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அரசு, நேற்று முன்தினம் இரவு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, பத்ம விருதுகளை அறிவித்தது.இதில், பின்னணி பாடகி, ஜானகிக்கும், பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், கேரள மாநிலம், ஒட்டப்பாலத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஜானகி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த, 55 ஆண்டுகளாக, திரைத் துறையில், புகழ் பெற்ற பாடகியாக இருந்தேன்; ஆனாலும், மத்திய அரசு, என்னை அங்கீகரிக்கவில்லை. நான் பாடிய அனைத்து பாடல்களுமே, அந்தந்த மாநில ரசிகர்களால், பெரிதும் ரசிக்கப்பட்டன.என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், மலையாள வார்த்தை உச்சரிப்பு, சரியாக இருப்பதாக, பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இவ்வளவு காலம் தாழ்த்தி, எனக்கு கிடைத்துள்ள கவுரவத்தை ஏற்க, எனக்கு மனம் வரவில்லை. பத்ம பூஷன் விருதை ஏற்க போவது இல்லை.

 

அதற்காக, மத்திய அரசு மீது, எனக்கு எந்த கோபமும் இல்லை; அரசு, தவறு செய்துவிட்டதாகவும் கருதவில்லை. ஆனாலும், விருதை வாங்கப் போவது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன்.இவ்வாறு ஜானகி கூறினார்.

ஜானகியின், மகன் முரளி கிருஷ்ணா கூறுகையில்,என் தாயாருக்கு, காலம் தாழ்த்தி விருது வழங்கப்பட்டுள்ளது. இதை எப்படி ஏற்பது? விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை கூட, அரசு சார்பில், யாரும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை; மற்றவர்கள் கூறித் தான், தெரிந்தது, என்றார்.

 

 

பத்மஸ்ரீவிருது: ஸ்ரீதேவி பெருமிதம்:@@பத்மஸ்ரீவிருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, பிரபல நடிகை ஸ்ரீதேவி, 49.கூறியதாவது:மத்திய அரசின் விருதை, அடக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மாநில மொழி ரசிகர்களும், எனக்கு அளித்த ஆதரவுக்கு, இந்த நேரத்தில், நன்றி தெரிவிக்க வேண்டியது, என் கடமை.நீண்ட இடைவெளிக்கு பின், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தேன்.

 

அதற்கும், ரசிகர்களின் பாராட்டு கிடைத்தது. தற்போது, பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இந்த நேரத்தை, மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.தமிழில், 1967ல், கந்தன் கருணை என்ற படத்தில்,குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, ஸ்ரீதேவி, அதற்கு பின், 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா உள்ளிட்ட, ஏராளமான தமிழ் படங்களிலும், மிஸ்டர் இந்தியா, சாந்தினி, லக்மே உள்ளிட்ட, பல இந்தி படங்களிலும், நடித்துள்ளார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B4%E0%AF%8D-%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8D-191000990.html

Edited by akootha

  • தொடங்கியவர்

S.Janaki refuses to accept Padma Bhushan

 

Expressing dissatisfaction over the number of people from South India figuring in the Padma awards list for 2013, southern playback singer Sreeramamurthy Janaki Friday refused to accept Padma Bhushan award announced for her on the eve of 64th Republic Day.

"I'm saddened by the fact that north India has been given more prominence than south India. I'm extremely disappointed and I refuse to accept the award," Janaki told IANS.

 

The 74-year old veteran made her singing debut in 1957 Tamil film "Vidhiyin Vilayattu". She has crooned over 15,000 songs in a career spanning five decades across all southern languages and in Hindi.

 

She has a long association with singer S.P. Balasubramanyam. The two have sung more than 1,000 songs together.

 

She has won four National Awards and the prestigious "Kalamamani" state award of TamilNadu.

 

http://timesofindia.indiatimes.com/entertainment/music/news-and-interviews/S-Janaki-refuses-to-accept-Padma-Bhushan/articleshow/18194309.cms?

  • கருத்துக்கள உறவுகள்

தன்மானமுள்ள பாடகி ஜானகி அம்மா இந்த விருதை நிராகரித்தது அவர் மீது மேலும் மதிப்பையும் மரியாதையையும் உண்டாக்குகின்றது.

  • தொடங்கியவர்

இதே சுய கௌரவத்தை மற்றையவர்களிடமும் இரசிகர்கள் எதிர்பார்கின்றனர்  :D

  • கருத்துக்கள உறவுகள்

:)  :)

 

734969_559935384018599_1255677695_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இசைத்துறையில் இவ்வளவுகாலமும் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்தது மட்டுமல்லாமல்

தனது இனிய குரலினால் ரசிகர்களைக் கவர்ந்த ஜானகி அம்மாவின் முடிவு வரவேற்கத்தக்கது.


ஹிந்தியாவில் திறமைக்கு இருக்கும் மதிப்பு

அரசியல்வாதிகளின் கைகளில் என்பது கவலைக்கிடம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.