Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஸ்வரூபம் - ஜெயலலிதா அவசர ஆலோசனை

Featured Replies

விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

 





  • கருத்துக்கள உறவுகள்
விஸ்வரூபம் தடைக்கு, தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை'- ஜெய
130128100556_kamal_kamalahasan_kamal_haa

தடை விதித்ததற்கு தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை-- ஜெயலலிதா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்படுவதற்கு எதிராக தமிழக அரசு விதித்த தடை,மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு காரணங்களாலேயே விதிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

இந்தத் தடை விதித்ததற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை, , தனக்கு நடிகர் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை என்றும் அவர் இன்று வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

 

எதிர்ப்பு தெரிவித்து வரும் முஸ்லீம் அமைப்புக்களுடன் பேசி சுமுகத்தீர்வு காண கமல் தரப்பினர் முன்வந்தால் தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் முதல்வர் கூறினார்.

விஸ்வரூபம் தொடர்பான பிரச்சினைகள் அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். பொதுவாகவே ஆங்கிலத்தை தாராளமாகக்க் கலந்தே செய்தியாளர் சந்திப்பில் பேசுவது அவரது வழக்கமென்றாலும் இன்று ஏறத்தாழ முற்றிலுமாகவே ஆங்கிலத்தில் பேசியது திரைப்படத்தின் மீதான தடையினை கடுமையாக விமர்சனம் செய்துவரும் ஆங்கிலத் தொலைக்காட்சி சானலுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே என நோக்கர்கள் கூறுகின்றனர்.

120307140650_jayalalithaa_tamilnadu_304x

தடை நியாயம்தான் --ஜெயா

சந்திரலேகா செவ்வி
 

"கடந்த சில நாட்களாக, விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. எதையும் முறையாக அறிந்து கொள்ளாமல் இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதையடுத்து, இதற்கு விளக்கமளிப்பது எனது கடமை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே எனது முதல் கடமை. இதை சிலர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தங்களது வேலைகளை செய்ய வேண்டும். விஸ்வரூபத்திற்கு அனுமதி அளித்திருந்தால் வன்முறைகள் ஏற்படும் என உளவுத்துறை அளித்த அறிக்கையின் காரணமாகவே அப்படம் தடை செய்யப்பட்டது. அதை மீறி, அது திரையிடப்பட்டிருந்தால், வன்முறை ஏற்பட்டிருக்கும். தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் வெளியாகும் 524 தியேட்டர்களுக்கு பாதுகா

 

130131161025_chandralekha_ias_304x171_bb

சந்திரலேகா

ப்பு அளிக்க 31 ஆயிரத்து 440 போலீசார் தேவை. ஆனால் தமிழகத்தில் உள்ள மொத்த போலீசாரின் எண்ணிக்கையே 91 ஆயிரத்து 807 தான். அசம்பாவிதங்களை தடுப்பது தமிழக அரசின் கடமை. நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே படம் தடை செய்யப்பட்டது. ஜெயா டி.வி., அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த டி.வி.,யில் எனக்கோ, அ.தி.மு.க.,வுக்கு எந்த பங்கும் இல்லை. மேலும், கமல் மீது எனக்கு எவ்வித தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. கடந்த 1980ம் ஆண்டுகளில் நடந்ததாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறும் விஷயங்கள் மிகவும் கேலியானது. அப்படி ஒரு கடிதத்தையே நான் எம்.ஜி.ஆருக்கு எழுதவில்லை. எம்.ஜி.ஆரை தினமும் சந்தித்த எனக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பற்றி தவறான செய்தியை தெரிவித்த கருணாநிதி மீது நடவடிக்கை எடுப்பேன். வேட்டி கட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவார் என கமல் பேசியதாலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது. நான் கடந்த 30 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன். யார் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். நாட்டிலுள்ள 100 கோடி மக்களே பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள். கமல் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர் எனக்கு போட்டியாளரும் இல்லை. எனவே இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது உண்மையல்ல. சினிமா ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் ஒரு படத்திற்கு மாநில அரசு நேரிடையாக தடை விதிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் கமல் ஒரு காட்சியைக் கூட நீக்க தயாராக இல்லை. சமரசத்துக்கும் கமல் முன்வரவில்லை. கமல் பெரிய முதலீட்டில் படம் எடுத்திருந்தாலும், அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். படத்துக்கு அனுமதி அளித்து பெரிய கலவரம் ஏற்பட்டிருந்தால் அப்போதும் மீடியாக்கள் என்னை விமர்சித்திருக்கும். அரசு எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க முடியாது எனவும் வாதிட்டார் அவர்.

சந்திரலேகா எதிர்ப்பு

அதேவேளை சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசாங்கம் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய எடுத்த முடிவு தவறானது என்று தமிழக அரசின் முன்னாள் செயலரும், ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான வி.சந்திரலேகாவின் கூறியுள்ளார்.

வாக்கு வங்கியை மனத்தில் வைத்து நடத்தப்படும் ஒரு அரசியல் என்று இதனை விபரிக்கும் அவர், இந்த விடயத்தில் தமிழக அரசு மற்றும் முஸ்லிம் குழுக்களின் செயற்பாடு தவறானது என்றும் கூறியுள்ளார்.

அனைத்து திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று முடிவு செய்த அரசு, படம் திரையிடப்படாததால் ரசிகர்களால் அந்த திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருக்கும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறிய குழுக்களின் மிரட்டலுக்காக ஒரு படத்தை தடை செய்ய முற்படுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/01/130131_jayaviswaroopam.shtml

கமல் பிறப்பால் ஐயாராய் இருந்தும் பார்ப்பனிய சோவிற்கு பிரயோசனம் இல்லை அதனால் இருக்குற ஒரு சில தமிழ் நடிகர்களையும் தமிழ் நாட்டை விட்டு கலைச்சால் கன்னடன் ரஜனிய முதலமைச்சர் ஆக்கலாம் எண்டு சோ கனா காணுறார்.  ஏனைய தாய் மொழிய தமிழ் இல்லாத தமிழ் நடிகர் களுக்கும் இது சந்தோசம் கொடுக்கும் . கன்னட ரஜனி ,கன்னட அரிஜன்,  மலையாள அஜித், மலையாள ஆர்யா ,தெலுங்கன் தனுஸ், தெலுங்கன் விசால் ,மார்வாடி ஜெயம் ரவி, என்று அனைவரும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கலாம் . ஏனைய தாய்த் தமிழ் நடிகர்கள் சூர்யா கார்த்தி விஜய் சிம்பு போன்றவர்கள் வேற மாநிலம் போய் டி கடை போடலாம் .ஒரு தமிழ் நடிகனுக்கு ஆதரவு கொடுக்காத சக நடிகர்கள் பாடம் படிக்க வேண்டும் .அதனால் புலம் பெயர் சமூகம் தமிழ் இல்லாத தமில் நடிகர்கள் படங்களை புலம்பெயர் நாடுகளில் திரையிடாமல் விலக வேண்டும்.

 

கேரளாவில் முஸ்லிம்கள் வீதம் 24.7%

Religionen in Kerala Religion     Prozent   Hinduismus

  

56,2 % Islam

  

24,7 % Christentum

  

19,0 % Andere

  

0,1 %

 

தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் வீதம் 5.6%

 

Religionen in Tamil Nadu Religion     Prozent   Hinduismus

  

88,1 % Christentum

  

6,1 % Islam

  

5,6 % Andere

  

0,2 % Verteilung der Religionen (Zensus 2001)[7]

கேரளாவில் முஸ்லிம்கள் வீதம் 24.7%,தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் வீதம் 5.6%

ஆனால் தமிழ் நாட்டில் தமிழன் படத்திற்கு தடை . கமல் அவர்கள் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் பற்றி தப்பாக எதுவும் காட்டவில்லை ஆப்கான் தலிபான்கள் பற்றியே அந்த படம் பேசுகிறது . இதில் தமிழநாட்டில் எங்கே வலிக்கிறது என்று தெரியவில்லை? இதை புலம்பெயர் தமிழ் படைப்பாளிகள் சமூகம் வன்மையாக கண்டிக்க வேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.