Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஸ்வரூபம் படத்தின் மீது அரசு விதித்துள்ள தடை சரியானதுதான்- சோ

Featured Replies

31-choramaswamy1-300.jpgவிஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார். கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக ‘தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார். நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு ‘விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்," என்றார்.

http://tamil.oneindia.in/

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு அம்மாவே சரனம்.(எனக்கு விஸ்வரூபம் பற்றி எந்த அக்கறையும் இல்லை)

  • தொடங்கியவர்

கமல் பிறப்பால் ஐயாராய் இருந்தும் பார்ப்பனிய சோவிற்கு பிரயோசனம் இல்லை அதனால் இருக்குற ஒரு சில தமிழ் நடிகர்களையும் தமிழ் நாட்டை விட்டு கலைச்சால் கன்னடன் ரஜனிய முதலமைச்சர் ஆக்கலாம் எண்டு சோ கனா காணுறார்.  ஏனைய தாய் மொழிய தமிழ் இல்லாத தமிழ் நடிகர் களுக்கும் இது சந்தோசம் கொடுக்கும் . கன்னட ரஜனி ,கன்னட அரிஜன்,  மலையாள அஜித், மலையாள ஆர்யா ,தெலுங்கன் தனுஸ், தெலுங்கன் விசால் ,மார்வாடி ஜெயம் ரவி, என்று அனைவரும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கலாம் . ஏனைய தாய்த் தமிழ் நடிகர்கள் சூர்யா கார்த்தி விஜய் சிம்பு போன்றவர்கள் வேற மாநிலம் போய் டி கடை போடலாம் .ஒரு தமிழ் நடிகனுக்கு ஆதரவு கொடுக்காத சக நடிகர்கள் பாடம் படிக்க வேண்டும் .அதனால் புலம் பெயர் சமூகம் தமிழ் இல்லாத தமில் நடிகர்கள் படங்களை புலம்பெயர் நாடுகளில் திரையிடாமல் விலக வேண்டும்.

 

கேரளாவில் முஸ்லிம்கள் வீதம் 24.7%

Religionen in Kerala Religion     Prozent   Hinduismus
  
56,2 % Islam
  
24,7 % Christentum
  
19,0 % Andere
  
0,1 %

 

தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் வீதம் 5.6%

 

Religionen in Tamil Nadu Religion     Prozent   Hinduismus
  
88,1 % Christentum
  
6,1 % Islam
  
5,6 % Andere
  
0,2 % Verteilung der Religionen (Zensus 2001)[7]

கேரளாவில் முஸ்லிம்கள் வீதம் 24.7%,தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் வீதம் 5.6%

ஆனால் தமிழ் நாட்டில் தமிழன் படத்திற்கு தடை . கமல் அவர்கள் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் பற்றி தப்பாக எதுவும் காட்டவில்லை ஆப்கான் தலிபான்கள் பற்றியே அந்த படம் பேசுகிறது . இதில் தமிழநாட்டில் எங்கே வலிக்கிறது என்று தெரியவில்லை? இதை புலம்பெயர் தமிழ் படைப்பாளிகள் சமூகம் வன்மையாக கண்டிக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் சொன்னமாதிரி அம்மா ஆதரவினால் வந்த பினாத்தல் இது. அதுசரி.. மத்திய தணிக்கைக் குழுவே சான்றிதழ் வழங்கிய பின் மாநில அரசு எந்த சட்டத்தின் அடிப்படையில் தடை போடுகிறார்கள்? அப்படியானால் தணிக்கைக் குழுவுக்கு நாட்டில் அக்கறை இல்லை என ஜெயலலிதா சொல்றாவா? என்னங்கடா நியாயம் இது? :D

Jan-30/1948 காந்தி சுடப்பட்டார்…

Jan-30/2013 உன்னத கலைஞன் அரசியல் சாயல்களால் சுட படுகிறார்..

ஆனால் அவர் வீழ்த்தப்பட்டார்…

இவரை வீழ்த்த முயற்சி செய்கிறார்கள்

ஆனால் அது இயலாது…

கமலஹாசன் எனும் மாபெரும் கலையுலக மேதையை உயிரோடு புதைத்திருக்கிறது தமிழ்நாடு.

இதனை நீங்கள் இன்று ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் போது கமல் என்கிற திரையுலக மாமேதை மனம் உடைந்து அழுவதன் மூலமும் இந்த தேசமே எனக்கு வேண்டாம் என்று விரக்தியில் கூறிய வசனங்கள் மூலமும் அறிந்து கொள்ளலாம்.

எப்படி ஒரு சமூகம் திட்டமிட்டு அரசியல் வாதிகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் எல்லோரும் இன்றும் நேற்றும் இடம்பெற்ற சம்பவங்கள் மூலமாக கண்கூடாகப் பார்த்திருக்கின்றீர்கள்.

 

 

அன்பிற்குரிய ( விஸ்வரூபத்தால் மனவலிக்கு உள்ளாகியிருக்கும்) சகோதரர்களே,

அஸ்சலாமு அலைக்கும் ( சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக )..

விஸ்வரூபம் பிரச்சினையின் “உண்மைரூபத்தை” தற்போது அறிந்திருப்பீர்கள்.

நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு அரசின் உள் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெ தொலைக்காட்சி விலை பேசிய போது அரசின் தலைமைக்கு இந்தப் படத்தின் கருவும் காட்சியமைப்பும் தெரியாதா ?

அரசின் தலைமை வேறு, ஜெ டிவியின் தலைமை வேறா ?

அப்போதே தடை செய்யும் எண்ணம் வரவில்லையே, ஏன் ?

திரையரங்க உரிமையாளர்களோடு கமலஹாசனுக்கு பிணக்கு ஏற்பட்ட போதும் அமைதி காத்தார்களே…

டி.டி.ஹெச் மூலமாக வெளியிட முயற்சி நடந்த போது தானே பிரச்சினை வெடித்தது. காரணம், கை நழுவி போகும் என தானே ?

அதற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை லாகவாகமாக சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது யார் ?

நீங்கள் போராடியதால் இந்த அரசு தடை விதித்ததா என சிந்தியுங்கள்….

நீங்கள் போராடிய மற்ற எந்த விசயத்தில் இந்த அரசு காது கொடுத்து கேட்டது ?

” இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்” என்ற ஆங்கில திரைப்படத்தை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய போது இந்த அரசு எப்படி கையாண்டது ?

நீங்கள் போராடியதற்காக இந்த அரசு தடை விதிக்கவில்லை.

ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு அது.

ஜெயா தொலைக்காட்சியின் லாப நட்டக் கணக்கு அது.

நடந்தது உங்களுக்கும் கமலுக்குமான பிரச்சினை அல்ல,

ஜெயா தொலைக்காட்சிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குமான பிரச்சினை.

இதில் கருத்து தெரிவித்த எங்களையொத்த நண்பர்களின் கருத்தை நீங்கள் மதத்திற்கு எதிரான கருத்தாகக் கொண்டீர்கள்.

இதை போன்ற பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இனியும் வரத்தான் செய்யும்.

தன்னை மனிதனுக்குரிய அடையாளம் பெற வைத்த பெரியாரையே, விமர்சனம் செய்கிற புத்திசாலிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்ற காலம் இது.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் கிடையாது.

இது போன்ற படங்கள் வந்த போதும், கோவை போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் சகோதரத்துவம் எங்கும் குலைந்து விடவில்லை.

அனைவருக்கும் தெரியும், ஒரிருவர் செய்கிற காரியங்களுக்கு, ஒட்டுமொத்தமாக எல்லோரும் குற்றவாளியாகிவிடமாட்டார்கள்.

அதேபோல ஒரு திரைப்படம் சொல்வதால், அனைவரையும் தீவிரவாதியாக பார்த்துவிடமாட்டார்கள்.

இப்போதும் சொல்கிறோம், எப்போதும் சொல்வோம் நாங்கள் உங்களின் சகோதரர்கள்,

உண்மையானவர்களை உணருங்கள். ஒரிரு இடத்திற்காக குரலை மாற்றி ஒலிக்க தயங்காதவர்களின் குரலை எதிரொலிக்காதீர்கள்.

கலையின் பெயராலோ, கருத்து சுதந்திரத்தின் பெயராலோ காவி நுழைய இடம் கொடுத்துவிடாதீர்கள்.

ஜெ, ஜெ-வாகத் தான் இருப்பார். கமல், கமலாகத் தான் இருப்பார். நாம் என்றும் நாமாக இருப்போம்.

மீண்டும் சொல்கிறேன், எதிர் கருத்தை எதிர்க்கவில்லை. அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணருங்கள் எனத்தான் சொல்கிறோம்.

அன்போடு…

பெரியாரின் பேரன்

சிவசங்கர்.

விஸ்வரூபம் திரைப்படம் தடை குறித்து சமூக வலைத்தளங்களில் (Facebook, Twitter) வெளியான விமர்சனப் பதிவுகள்! (அனல் பறக்கும் விவாதங்கள்)

* நாடு முழுவதும் மதக்கலவரம் வெடித்தபோது கூட தமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் இருந்தது. (ஜெயலலிதாவின் பாஷையில்) விஸ்வரூபம் படத்தினால் தமிழகத்தில் அமைதி கெடும் என்பது தமிழக மக்களின் சகிப்புத்தன்மையை கேவலப்படுத்தும் செயல்…

* கமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியே பிரச்சனையை முடிக்க வேண்டும் என்றால் நீதிமன்றங்களை இனி கலைத்து விட்டு, நீதிபதிகளுக்கு வேறு அரசு துறைகளில் குமாஸ்தா வேலை கொடுத்திடலாமே.

*தமிழ்நாடு அரசு இதே வேகத்தையும்,வீம்பையும் அணுஉலைக்கு எதிராகவும் காட்டியிருக்கலாம்!! ஒரு வேளை அங்க அகிம்ஸையா போராடுறதால கண்டுக்காம இருக்காய்ங்களோ!!! # நாம் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதை ஆளும்வர்க்கமே முடிவு செய்கிறது.

*ஒருவேளை நீதிமன்றம் விஸ்வரூபத்திற்கு தடையை நீக்கினால், தமிழக அரசு ‘விஸ்வரூபம் படம் பார்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்’னு சொன்னாலும் சொல்லுமோ!

* Sun TV: Vishwaroopam News

Raj TV: Vishwaroopam News

kalaingnar: Vishwaroopam News

NDTV: Vishwaroopam News

Pudiya Thalaimurai: Vishwaroopam News

Times Now: Vishwaroopam News

And

Jaya TV: Parupu Vadai Suduvadhu Eppadi?

* விஸ்வரூபம் படத்தை தடை செய்வதில் இருந்த வேகத்தில் ,விவேகத்தில் ,நுண் அறிவில் ஒரு துளியை பயன்படுத்தியாவது காவேரி நீரில் தமிழர்க்கு சொந்தமான பங்கை தமிழ் நாட்டுக்கு பெற்று தர வேண்டும் என்றும் ,18 மணி நேர மின் தடையில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல ,கருணையே உருவான எம்மை எல்லாம் படைத்தும் காத்தும் அழித்தும் ஆள்கின்ற எல்லாம் வல்ல எம் பெருமாட்டி புரட்சி தலைவி, தங்கத்தாரகை,மற மங்கை எங்கள் அம்மாவை கெஞ்சிக் கூத்தாடி,உருண்டு ,பிரண்டு,பிரதட்டை அடித்துக் கேட்டுக் கொள்கிறேன்..

* பிறர் வாட பல செயல்கள் செய்து

நரை கூடி கிழப்பருவம் எய்தி

கொடும் கூற்றுக்கிரையாகி பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?? Kamalahasan Mind Voice…

* போறப் போக்கைப் பார்த்தா சினிமாவுக்குனு சிறப்பு நீதிமன்ற அமைக்கணும் போலிருக்கே! # சினிமாவுக்கான இந்திய சட்டப்படி ஒரு திரைப்படம் குறித்து சர்ச்சை எழுந்தால் தணிக்கைத் துறையை அழைத்து விளக்கம் கேட்கலாம். அவர்களிடம் ஆலோசனை கூறலாம். தவிர வழக்கு வம்புன்னு எல்லாருடைய நேரமும் வேஸ்ட் !

* இஸ்லாமியர்களை புண்படுத்தும் காட்சிகள் இல்லை.. அடுத்த மாநிலங்களில் இதை அனுமதிக்கும்போது இங்கு மட்டும் ஏன் தடை செய்ய கோருகிறீர்கள்..?

- உயர் நீதிமன்றம் கேள்வி #சூப்பரு…. இன்னும் தீர்ப்பு வெளிவராத நிலையில் இந்த கேள்வியிலிருந்து தீர்ப்பின் இறுதி ஊர்ஜிக்கப்படுகிறது icon_smile.gif

* விஸ்வரூப திரைப்பட தடை யாரால் என்பது இப்போது புரிந்து விட்டது. பாவம் இஸ்லாமிய சகோதரர்கள்.பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.

* முப்பது வருடக் கொடிய யுத்தம் செய்யமுடியாத முஸ்லிம் தமிழ் சகோதர்கள் இடையான வெறுப்புணர்வை ,ஒரு படமும் அதற்கான தடையும் சிலரின் அராஜகரமும் செய்து விடும் போல் தெரிகிறது…:(

* விஸ்வரூபம் பட சர்ச்சைய முன்னிட்டு தமிழகத்தில் முஸ்லீம்கள் மேல் மிகபெரிய வெறுப்புணர்வு தோற்றுவிக்கபட்டு விட்டது.தியேட்டரகள் தாக்கப்படுவது இந்த சூழலுக்கு வலிமை சேர்க்கின்றன. இந்துத்துவா அமைப்புகள் தமிழ்கத்தில் காலூன்ற இதைவிட சிறந்த சூழல் இருக்க முடியாது. யாரோ விரித்த வலையில் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் விழுந்துவிட்டன. இதைத்தான் இன்று தந்தி டிவியில் அழுத்தமாக குறிபிட்டேன். (Writer – Manushya Puthiran)

* கமலை தனிமரம் என்று எண்ணாதீர்கள். அது தோப்பாகும், ஒரு நாள் உங்களுக்கு ஆப்பாகும். யாருக்கு- யாருக்கோ…

* இராணுவத்தால் அழிந்தவர்களை விட ஆணவத்தால் அழிந்தவர்கள் அதிகம் என்ற சந்தானத்தின் பிரபல டயலாக்கை புரட்சி தலைவி தங்க தாரகை எங்கள் இதய தெய்வம் அம்மாக்கு டெடிக்கேட் செய்கிறேன்…

* விஸ்வரூபம் படத்தை தடை செய்வதில் இருந்த வேகத்தில் ,விவேகத்தில் ,நுண் அறிவில் ஒரு துளியை பயன்படுத்தியாவது காவேரி நீரில் தமிழர்க்கு சொந்தமான பங்கை தமிழ் நாட்டுக்கு பெற்று தர வேண்டும் என்றும் ,18 மணி நேர மின் தடையில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல ,கருணையே உருவான எம்மை எல்லாம் படைத்தும் காத்தும் அழித்தும் ஆள்கின்ற எல்லாம் வல்ல எம் பெருமாட்டி புரட்சி தலைவி, தங்கத்தாரகை,மற மங்கை எங்கள் அம்மாவை கெஞ்சிக் கூத்தாடி,உருண்டு ,பிரண்டு,பிரதட்டை அடித்துக் கேட்டுக் கொள்கிறேன்..

* வில்லிவாக்கம் ஏஜிஎஸ் தியேட்டர் மீது கல்வீச்சு. #எரிஞ்சவன் காக்கி ட்ரெஸ் போட்ருந்தானா சார்?

* விஸ்வரூபம் : எப்படியோ மத அடிப்படை வாதமானது எவ்வளவு கொடூரமானது என்பதையும் மத சகிப்புத்தன்மை இல்லாமல் இயங்கும் ஒரு கூட்டம் மண்ணின் பெரும்பான்மை மதத்தினரை எப்படி அலட்சியப்படுத்துகிறது என்பதையும், எப்படி அது தன்னை தனித்து துண்டித்து ஒரு பயங்கர பயத்தை மக்கள் மீது திணிக்கிறது என்பதையும் முதல் முறையாக தமிழக நடுநிலையாளர்களையும் முற்போக்குகளையும் சிந்திக்க வைத்ததோடு அல்லாமல் காவிகளும் சிவப்புகளும் கேரளத்திலும் கைகோர்த்து பாதுகாப்பு கொடுக்கவைத்த அதிசயத்தையும் நிகழ்த்திக்காட்டிய விசுவருபத்தை திரையில் அல்ல நிசத்தில் காட்டியிருக்கிறார் திரு கமலஹாசன் ! அது என்ன மாயமோ தெரியல ! நடுவுல மானே தேனே லாம் போட்டுக்கோங்க!

* தரம் தாழ்ந்தும் , தனி நபரை விமர்சித்தும் பேசி பிரச்சனையை திசை திருப்பி விட்டு விடுகின்றனர் …. தங்கள் கீழ்த்தரமான பேச்சுக்களால் தங்கள் தரப்பு நியாயத்தை இழந்து, தங்களை சார்ந்தவர்களுக்கும் அவப்பெயர் உண்டாக்கி விடுகின்றனர் சிலர் ….

விமர்சனம் என்ற பேரில் மனித தன்மையற்ற கருத்துக்களை வெளியிடுபவர்களை புறந்தள்ள வேண்டும்….

* சரியோ, தவறோ, கமலஹாசனின் படத்தைப் பார்க்கும்,அதனை நிராகரிக்கும் என் உரிமையை, இந்த அரசாங்கம் ஒரு பார்வையாளராக என்னிடமிருந்து பறிக்க முடியாது. அதேபோல, கமலஹாசன் என்றல்ல எந்த ஒரு கலைஞனின் வெளிப்பாட்டு உரிமையையும் ஒரு அரசாங்கம் பறிக்க முடியாது.

ஜெயலலிதா அவர்கள் தனது அருவருப்பான அரசியலுக்காக மதவாதத்தை பயன்படுத்திக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் விஸ்வரூபம் என்ற படத்தைப்பற்றியெல்லாம் விட்டுவிட்டு கமலஹாசன் என்ற தனிப்பட்ட மனிதனை ஒடுக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கமலஹாசன் வெளியேறுவதைப்பற்றிய பேச்சையெல்லாம் விட்டுவிட்டு, தன் மக்களுக்கு தன் படத்தை வெளியிடுவதற்கான உரிமைக்காக இறுதிவரை களம் நின்று போராட வேண்டும்! (Director – Leena Manimekalai)

* கமலுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான பகை இப்போது ஏற்பட்டதல்ல.

“விக்ரம்” திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டது குறித்து ஜெயலலிதா தன் கைப்பட எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருப்பதாவது-

”கமல்ஹாசனின் “விக்ரம்” படத்தின் (பிரிமியர்) சிறப்புக் காட்சியில் நீங்கள் கலந்து கொள்ள சம்மதித்தும், உங்களை அவமானப் படுத்தும் விதத்தில் கமல் விளம்பரமே செய்யாமல் விட்டானே.

கமலஹாசன் படம் ரிலீஸ் ஆன நாளன்று – ஒவ்வொரு நாளேட்டிலும் முழு பக்க விளம்பரங்கள் கொடுத்தானே?

தனக்காக விளம்பரம், முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலஹாசனுக்குத் தெரிகிறது. ஆனால் உங்களை, இவ்வளவு மக்கள் செல்வாக்குடைய முதலமைச்சரை அழைத்து விட்டு விளம்பரமே செய்யவில்லை என்றால் அவன் உங்களைக் கிள்ளுக்கீரை என்றா நினைத்தான்?

இந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ – நான் கவனித்தேன்.

அதை வேறு யாராவது உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தார்களா? நமக் கென்ன என்று மற்ற எல்லோரும் இருந்து விட்டார்கள். ஆனால் என்னால் அப்படியிருக்க முடியவில்லை” – ஜெயலலிதா

இப்போது புரிகிறதா?

* தலைவா இந்த தடையும் கடந்து போகும்…

ஆல மரமான உன்னை வீழ்த்த யாராலும் முடியாது…

ஆணி வேராக உன் ரசிகர்கள் இருக்கின்ற வரை…

* என் முஸ்லிம் சகோதரர்களுடன் நான் பேசி தீர்த்து கொள்கிறேன்…

அவர்கள் ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்கிகொள்கிறேன்…

திருக்குரான் வசனங்களை நீக்கி கொள்கிறேன்…

இனி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை… # இதுக்கு மேல ஒருத்தன் என்ன செய்யணும்…??? அல்லது என்னதான் செய்யமுடியும்…???

* இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளை முன்னின்று தாக்கியது ரத்தத்தின் ரத்தங்களே. # அ.தி.மு.க தொண்டர்களே…

* ஆழ்வார்பேட்டை அதிருகிறது (கமலின் வீடு உள்ள இடம்)!!!!

தலைவர் பேச்சு:

எனக்கு அரசியல் தெரியாது.

தயவு செய்து வீட்ற்கு போங்கள் அமைதியாக..

எந்த தீய சக்திக்கும் விலை போகதிர்கள்..

நான் உங்கள் தலைவன் மூத்த சகோதரன்

நான் உங்களுக்கு அன்பிற்கு நற்பணிக்கு தலைவன்

இங்கு உள்ள முஸ்லிம் சகோதர்கள் எனக்கும் சகோதர்கள்

வீரத்தின் உச்ச கட்டம் அஹிம்சை..

இந்த அரசியல் விளையாட்டு எனக்கு தெரியாது……

கமல்ஹாசன் சிக்கிய அரசியல்

எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட்ட 21 இஸ்லாம் அமைப்புகள் இணைந்து ஸ்வரூபம் படத்தைத் தடை செய்துவிட்டனர் என்று நானும் நீங்களும் நம்பினால் அதுதான் தமிழ்நாட்டு அரசியல்.

ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். 21 அமைப்புகள் அல்ல, 21000 அமைப்புகள் வந்தாலும் அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு தான் நினைத்ததைச் செய்யும் அதிகார ஆணவம் கொண்டவர் ஜெயலலிதா. மறக்கும் வியாதி கொண்ட தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள். அரசாங்க பணியாட்கள் அத்தனை பேரையும் ஒரேநாளில் தூக்குவார். உலகமே எதிர்த்தாலும் நூலகத்தை மருத்துவமனையாக்குவார். மருத்துவமனைக்கு சட்டமன்றத்தைப் போடுவார். அப்படிப்பட்டவர், முஸ்லீம்கள் திரண்டு வந்து புகார் அளித்ததும் பொங்கிவிட்டார் என்பது முழுக்க முழுக்க முட்டாள்தனம் நிரம்பிய அவதானிப்பு.

சென்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு 200கோடி தருதாக ஆசைகாட்டி, அவரை அதிமுக பக்கம் இழுப்பதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாய் அத்தனைப் புலனாய்வு ஏடுகளும் சொன்னது. அப்போதைக்கு எஸ்கேப் ஆன கமல்ஹாசன் இப்போது மாட்டிக்கொண்டார்.

ஜெயலலிதாவிற்கு ஆகவே ஆகாதவர் ப.சிதம்பரம். அப்படிப்பட்ட ப.சிதம்பரத்தின் புத்தக விழா அண்மையில் நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் கலைஞர், கமல்ஹசன், ரஜினி. அதிலும் கமல் பேசுகையில் ’வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும்’* என்று முத்தாய்ப்பு வைக்க, பிறகு பேசிய கலைஞரோ வேட்டி கட்டிய தமிழரே பிரதமர் என்று சொல்லி சேலை கட்டிய தமிழர் பிரதமர் கனவில் இருப்பதற்கு பதில் சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு வைத்த ஆப்பு விஸ்வருபத்துக்கு வந்து நிற்கிறது.

ஜெயா டிவிக்கு விற்கப்பட்ட விஸ்வருபத்தின் தொலைக்காட்சி உரிமை, அதிக விலையின் காரணமாக சன்டிவிக்கு மாறியதாயும் சொல்கிறார்கள். சன் டிடிஎச் ஒளிபரப்பு செய்ய அனுமதியும் வாங்கி இருந்தது.

முஸ்லீம்கள் அவருக்கு எப்போதும் நண்பர்களாய் இருந்ததேயில்லை. கலைஞர் கூட குல்லாய் போட்டு நோன்புக்கஞ்சி குடிப்பார். ஜெயலலிதா ம்ஹூம். மோடிக்கு நண்பராய் இருந்துகொண்டு முஸ்லீமிற்கு கைதூக்க அவர் அவ்வளவு நல்லவரல்ல. ஆனால் இந்த விஷயத்தில் ஏன் பொங்கினார், முஸ்லீம்களுக்காகவா? 2014ல் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள்.

கமல்ஹாசனின் மீது ஜெயலலிதாவிற்கு எப்போதுமே பிரியம் இருந்ததில்லை. தன் சக கலைஞன் என்ற பார்வையிருந்தும் கூட, தான் அதே சினிமா இனம் என்று தெரிந்திருந்தும்கூட! கமல்ஹாசன் கலைஞரின் தமிழ் மீது பிரியம் கொண்டவர், அதனால் கமல் ஜெயலலிதாவிற்கு உள்ளூரப்பகையாகிப்போனவர்.

மாமனை அடிக்க முடியாதவர்கள் மச்சானை அடிப்பார்கள்’ என்பார்கள். படத்தைத் தணிக்கை செய்யும் சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் வருவது. ஏற்கனவே மத்திய அரசை எல்லாவிதத்திலும் தொடர்ந்து புறங்காட்டி அவமதிக்கிறார். டீசல் விலையை உயர்த்தியதற்காக மத்திய அரசின் மீது மாநில அரசு வழக்குத் தொடரப்போவது தனிக்கதை. இதில், இப்படி மத்திய அரசுக்குட்பட்ட ஒரு சென்சார்போர்டு அமைப்புக்கெதிரே, அதாவது மத்திய அரசு அனுமதித்தபிறகும் தன்னால் தடுக்கமுடியும் என்ற கர்வம்.. அதுதான் இது.

விஸ்வரூபத்தை தணிக்கை செய்த குழுவில் இருந்த முகமதிய அதிகாரி, முகமது அலி ஜின்னா, சென்ற தேர்தலில் தி.மு.கவின் சட்டமன்ற வேட்பாளர். தி.மு.க காரர். ஆக, தி.மு.கவுக்கும் ஒரு ஆப்பு வைத்தாகிவிட்டது. முஸ்லீம்களுக்கெதிராய் ஒரு முஸ்லீமே இருந்தார் என்று அறியப்படுத்தி, இனி முஸ்லீம்கள் இவருக்கு ஓட்டுப்போடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

விஸ்வருபத்தின் சேலம் ஏரியா பகுதி உரிமையை உதயநிதிஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கியிருந்தது. உதயநிதி தயாரித்தார் என்பதற்காகவே நீர்ப்பறவை படத்திற்கான வரிவிலக்கை எந்திவித முகாந்திரமும் இல்லாமல் தரமறுத்த அம்மையார், இப்படி ஒரே கல்லில் ஒன்பது ஸ்தானத்தையும் அடிக்க முடியும் என்றால் சும்மா விடுவாரா?

விஸ்வரூபம் படம் வெளீயிட்ட மலேஷியா, NC 16 தணிக்கை அளித்து அனுமதியளித்திருந்த சிங்கப்பூர் நாடுகளும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களும் படத்தை, முஸ்லீகளின் போராட்டத்தாலோ எதிர்ப்பாலோ நிறுத்தவில்லை. உற்பத்தி இடமான தமிழ்நாட்டிலேயே ஒரு சரக்கை தடைசெய்தபின் இறக்குமதி செய்வது ஆபத்தாகலாம் என்பதால் தான். இது, ஜெயலலிதா தெரிந்தே ஒரு கலைஞனுக்கு, பால்ய நண்பனுக்கு, தனது சொந்த விருப்பு வெறுப்பின் மூலம் செய்த மிகப்பெரிய துரோகம்.

- இத்தகைய தசாவதார வியூகத்தில் மாட்டிக்கொண்ட கமல், இனி என்ன செய்யப்போகிறார்?

எல்லாக் கதவுகளும் ஒரு சேர அடைபட்ட கமல்ஹாசன் ஒரு சினிமாப்பைத்தியம். சினிமாவை விட்டு அவரால் வெளிவரவே முடியாது. இத்தகைய சூழ்நிலையில் இனி, இரண்டு வழிகள் இருக்கின்றன, அவருக்கு.

ஒன்று அதிமுக வில் சேரலாம். ராதாரவியைப்போல, ராமராஜனைப்போல, குண்டு கல்யணத்தைப்போல… மேடையேறலாம். பல கோடிகள் கிடைக்கும். அல்லது விஸ்வரூபமே 200 கோடிக்கு ஜெயா டிவியால் வாங்கப்படும். பிரச்சனை எல்லாம் தீரும். கனவுப்படங்களை எடுக்கலாம்.

இரண்டாம் வழி, வா வா என்று இழுக்கப்பட்டும் ஒளிந்துகொண்டிருக்கின்ற ரஜினியை விலக்கி/இணைத்து, இத்தகைய அதிகார, கலாச்சார தீவிரவாதித்திற்கெதிரே, முதல்வன் படத்தில் அர்ஜூன் பொங்கும் காட்சியைப்போல (ஒரு சூழ்நிலையில் இப்போது இருப்பதால்) தீவிர அரசியலில் இறங்கலாம். ஆடு மாடு வழங்கிவிட்டு, முக்கியப்பிரச்சனைகளில் ஒளிந்துகொள்ளும் விஜயைவிட, தலைவனுக்கேற்ற தகைசால் குணம் சிறிதுமில்லாத விஜயகாந்தைவிட, வருமான வரி நேர்மையும் இடறுகளுக்கெதிரே கலங்காது நிற்கும் தைரியமும் இன்றைய இளைஞர்கள் தேடிக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்று கொண்ட ஒரு தலைவனும் நமக்குக் கிடைக்கலாம்.

Viswaroopam movie top 12 Highlights

1. The Movie budget is around 150crores.

2. The film is made in the backdrop of Terrorism.Its an Action thriller film

3. The Star Cast include Shekhar Kapur(Oscar Nominee), Pooja Kumar,

Rahul Bose,Andrea Jeremiah.

4. Kamal hassan is doing the dual role one as stylish kathak dancer and other as

a spy.

5. Shankar Eeshan loy doing music.

6. Its the movie directed by kamal hassan after a long interval of about eight years.

7. Its is made in three languages in Tamil(Viswaroopam),Telugu &

Hindi(Vishwaroop).

8. Viswaroopam comes with the new 11.1 sound technology.

9. The first shot of Viswaroopam movie was directed by K.Balachander.

Kamalhassan is acting as an afghan ultra speaking the arab language.

10.Viswarooapam is expected to release on 11th January 2013

11.New photography technique called Motion still camera is used for the movie.

12. The movie is shot mostly in US and Jordan.

இஸ்லாமிய மதவாதிகளின் நண்பனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் கமலகாசனுக்கு நல்லதொரு பாடம்!

கமல் மான-ரோஷம் உள்ளவரா அல்லது இஸ்லாமிய மதவாதிகளின் காலடியில் விழுபவரா என்பது அவரது வருங்கால நடவடிக்கைகளில் தெரியும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.