Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப்ரவரி - 04: மீண்டும் ஒரு கரிநாளை எதிர்கொள்ளும் தமிழினம்!

Featured Replies

எரிமலையின் குமுறலோடும், அக்கினியாய் சிவந்த விழிகளோடும் ஈழத் தமிழினம் இன்னொரு பெப்ரவரி நான்கை எதிர்கொள்ளுகின்றது.

 

540153_474179489328603_1787544725_n.jpg

 

அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் சிங்கள நரிகளிடம் எம் இனத் தலைவர்கள் ஏமாந்த தினத்தை சிங்கள தேசம் தங்கள் சுதந்திர தினமாகக் கொண்டாட, ஈழத் தமிழர்கள் தமது இறைமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இன்று ஏதிலிகளாக, நாடற்ற இனமாக வாழ்விழந்து நிற்கின்றது.

 

 

1948 பெப்ரவரி 04 ஆம் திகதி, சிங்கள தேசத்திடம் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கைத் தீவின் இறைமையைக் கையளித்தபோது, தமிழ் மக்களும் வெள்ளையர் ஆக்கிரமிப்பிலிருந்து தாங்கள் விடுபடு வதாகவே மகிழ்ந்திருந்தார்கள். அப்போது, சிங்களக் கொடூரங்கள் தம்மை இரைகொள்ளப் போகின்றது என்று ஈழத் தமிழர்கள் கனவிலும் நினைத்து இருக்கவில்லை. இமயம் முதல் குமரி வரை காந்தியால் இந்திய தேசம் இணைக்கப்பட்ட காலத்தில், சிங்கள தேசத்தையும் நேசத்துடன் பார்த்திருந்த காலம் அது.


அதன் பின்னர்தான், தமிழ்த் தலைவர்கள் தாம் சிங்கள நரிகளிடம் ஏமாந்துவிட்டதை உணரத் தலைப்பட்டாhகள். இலங்கைத் தீவில் தமிழ் மக்களது அரசியல் பலம் குறி வைக்கப்பட்டது. 1949 இல் நாகரிக உலகம் வெட்கித் தலை குனியும் வகையில், நான்கு தலைமுறைகளாக ஏழைத் தொழிலாளர்களாக அடிமை வாழவு வாழ்ந்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமை அன்றைய முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்கவால் பறிக்கப்பட்டது. அவரது அதே ஆட்சிக் காலத்தில்தான், தமிழர்களது பாரம்பரிய வாழ் நிலத்தையும் அபகரிக்கும் சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.

 

உலகில் எந்தத் தலைவனும் தன் நாட்டை வளப்படுத்துவேன், மக்களை வாழ வைப்பேன் என்ற வாக்குறுதிகள், செயல் திட்டங்கள் மூலமாகவே ஆட்சிக்கு உரியவனாகின்றான். சிங்கள தேசம் அந்த உன்னத சிந்தனைகளிலிருந்து விலகி, ஈழத் தமிழர்களுக்கு எவன் அதிக அழிவினைக் கொடுக்கின்றானோ, அவனே ஆட்சிக்குரியவன் என்ற வரலாற்றைத் தொடர்ந்தது. 'நான் ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்ற வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் அடுத்த ஆட்சியாளனாக பண்டாரநாயக்க 1956 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால், 1958 இல் சிங்கள ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டது.


படிப்படியாக சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் தமிழர்களது நிலங்கள் மட்டுமல்ல, உடமைகளும், வேலைவாய்ப்புக்களும் பறித்தெடுக்கப்பட்டது. அதனை சாத்வீகமாக எதிர்த்த தமிழர்கள் மீது 1971 இல் மீண்டும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அதில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலியானார்கள். தமிழாகளது சொத்துக்கள் சூறையாடப்பட்டது. எரியூட்டப்பட்டது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாக் கப்பட்டு, படு கொலை செய்யப்பட்டார்கள்.

 

தமிழர்களது சாத்வீகமான போராட்டங்கள் சிங்கள தேசத்தால் கொடூரமாக நசுக்கப்பட்ட காரணத்தாலும், தொடர்ந்தும் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்ட காரணத்தாலும் சிங்கள தேசத்திடம் தமிழர்களது சாத்வீகப் போராட்டம் தோல்வியுற்ற நிலையில், வேறு தெரிவுகளற்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள ஆட்சியாளர்களது ஆயுத வல்லமைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாயம் தமிழ் இளையோர் மத்தியில் உருவாகியது.


கறுப்பு ஜுலை என நினைவு கூரப்படும் 1983 இன வன்முறை அந்த ஆயுதப் போராட்டம் மீதான அவசியத்தை ஈழத் தமிழர்கள் மத்தியில் வேகப்படுத்தியது. ஈழம் தமிழர்கள் விடுதலைப் புலிகள் ஆனார்கள். விடுதலைப் புலிகள் பின்னே அணி வகுத்தார்கள். சிங்கள வன்கொடுமையாளர்கள் மத்தியில் உருவான பேரச்சம் மீண்டும் ஒரு இனக் கலவரத்தின் மூலம் தமிழர்கள் பலி கொள்ளப்படுவது தவிர்க்கப்பட்டது. தமிழர்கள் மிண்டும் தலை நிமிர்ந்தார்கள். அந்த நிலமை 2009 மே 18 வரை மட்டுமே நீடித்தது.

 

சிங்கள தேசத்தால் மீண்டும் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டது. கொடூரமாக ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கையாக புலம்பெயர் தமிழர்களாகிய நாங்களே உள்ளோம். அவர்களை மீட்கவும், காக்கவும் தமிழ்த் தேசியத்தால் கையளிக்கப்பட்ட கட்டளைகளுடன் நாம் தொடர்ந்து பயணிக்கும் வரலாற்றுக் கடமையைக் கொண்டுள்ளோம்.


இலங்கைத் தீவின் இறைமை சிங்கள தேசத்திடம் சென்றடைந்த பெப்ரவரி 04 இனை ஈழத் தமிழினம் என்றுமே கொண்டாடும் வகையிலான எந்த நியாயத்தையும் சிங்கள தேசம் தமிழீழ மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளைக் கொடுரமாகக் கொன்று குவித்த மே 18 ஐ சிங்கள தேசத்தின் வெற்றி நாளாக அறிவித்து சிங்கள தேசம் இன்னொரு கோர முகத்தைப் பதிவு செய்துள்ளது.

 

சுதந்திர இலங்கைத் தீவில், அதன் சம பங்காளரான ஈழத் தமிழர்களுக்குத் தாம் இழைத்த அநீதி குறித்து சிங்கள தேசம் என்றுமே வருந்தப் போவதில்லை. சிங்களக் கொடூரங்களால் பாதிப்புக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு நியாயம் வழங்கப் போவதில்லை. 21 ஆம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான இன அழிப்பு யுத்தத்தைத் தமிழினத்தின்மீது நடாத்தி இலட்சத்திற்கும் அதிகமான மனிதப் படுகொலைகளையும், வெறியாட்டங்களையும் நிகழ்த்திய சிங்கள தேசம் அதற்காக வெட்கப்படப் போவதில்லை.


இந்த நிலையில், ஈழத் தமிழர்களாகிய நாம், சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தைத் தமிழினத்தின் கரி நாளாகத் தொடர்ந்தும் புறக்கணிப்போம். ஈழத் தமிழர்கள் தன்னாட்சி உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் காலம் வரை முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக, புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் போரை ஜனநாயக வழிகளில் முன்னெடுப்பதில் அனைத்துத் தமிழர்களும் அணி திரள வேண்டும். அந்த அணிதிரள்தல்களுக்கான களத்தினை பிரான்சில் தமிழீழ மக்களவையினராகிய நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

 

முள்ளிவாய்க்காலின் நான்காவது ஆண்டில் தமிழீழ மக்களவைகளினால் நிகழ்த்தப்படும் ஜனநாயகப் போர் அதி உச்ச நிலையை எட்டியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐ.நா. முன்றலில் நிகழ்த்தப்படவுள்ள ஜனநாயகப் பெரும் சமர் எமது தாயக விடுதலைப் பாதையினைத் துரிதப்படுத்தும். அதை நோக்கிய காலப் பகுதியில் வரும் சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நாம் மீண்டும் ஒரு உறுதி எடுத்துக் கொள்வோம்.


எங்கள் தேசத்தின் முகடுகளில் தமிழீழக் கொடி பறக்கும் காலத்தில், அயல் நாடான சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தில் உரி மையுடன் பங்கு கொள்வோம். அதுவரை எங்களது உரிமைக்கான குரல்களை புலம் பெயர் தேசங்களின் வீதிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்து உங்கள் தூக்கத்தைக் கலைப்போம்.

 

எதிர்வரும் பெப்ரவரி 4 அன்று பாரிஸ் நகரில் உள்ள உங்கள் தூதரகத்து வாயில் அடைக்கும் வகையில் நாங்கள் திரண்டு வந்து சிங்களக் கொடூரங்களை உலகிற்கு உரத்துச் சொல்வோம். எங்கள் தாயகத்திலிருந்து இறுதிச் சிங்களப் படையினன் ஓடிச் செல்லும்வரை எங்கள் போராட்டம் ஓயாது. உங்கள் சுதந்திரத்திற்கும் அர்த்தம் கிடையாது.

 

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்ஸ்

  • தொடங்கியவர்

Independence Day 2013

 

This Monday President Mahinda Rajapaksa will celebrate Independence Day in Trincomalee, under the theme Prosperous motherland and an affluent tomorrow.

 

For weeks Trincomalee has been getting a facelift. Roads are being widened, buildings painted, and signs hung. A ‘red alert‘ (Editors note: this link to TamilNet article will not work if accessed in Sri Lanka) was issued by the Secretary of Defense, which has led to a dramatic increase of police and military presence. I’ve been told by a community leader that those with LTTE ties have been detained for the week; remember that in 2002 the LTTE claimed Trincomalee as their capital.  According to business owners, police or military have visited every store in town, telling them to close their shops on Monday.


Schools in the area have been closed so that students could prepare their town, as well as to provide additional space to house military personnel. Buses full of students playing instruments could be heard around town Thursday. The parade on Monday will consist of 3,000 personnel from the tri-forces, and will commence at 9am.  The Culture and Arts Ministry has organised a cultural pageant consisting of 860 performers and several elephants.

 

On Thursday morning a seemingly endless stream of buses started rolling into Trincomalee via Kandy Road. Allegedly Sinhalese are being paid to come to Trincomalee for the festivities. It has been almost half a century since Sri Lanka’s independence has been officially celebrated in Trincomalee.  The government expects 100,000 people to attend the ceremony, which will take place at Fort Frederick. This will be the third time that the holiday is celebrated in Trincomalee, the first was 1953 and the second was in 1965.

 

http://groundviews.org/2013/02/01/independence-day-2013/

  • தொடங்கியவர்

மாசி 4, 1948 - 2013

 

editorial(79).jpg

 

  • தொடங்கியவர்

535552_579821912046931_1813208051_n.jpg

தமிழர்களை முற்றுமுழுதாக அழித்தொழித்து அவர்கள் நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்கள் மீது இனவழிப்பைநடாத்திவரும் சிங்கள இனவாத அரசைக் கண்டித்தும் பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து

 

சிறிலங்காவை நீக்கக் கோரியும்…

இன அழிப்பின் 65வது ஆண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு

 

In front of Commonwealth Secretariat,

Marlborough House

Pall Mall

London

SW1Y 5HX

(Nearest underground “Green Park”)

TCC – UK 020 3371 9313

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! 

  • தொடங்கியவர்

526494_430279030382132_898244163_n.jpg

Today marks Sri Lanka’s 65th Independence, but for the entire Tamil nation it symbolises a very dark day. It is the day when the British handed the control of the entire country to the Sinhalese in the south, which until then had been treated as separate entities by the earlier Portuguese and Dutch rulers. It marked the beginning of Tamil discrimination through various amendments and laws passed through the parliament, which included making Sinhala the official language of the country and standards that required Tamil students to receive higher marks than those students in the south to enter the same university degree.

 

It marks the day that Tamils had their rights, freedom, identity, homeland, self governance and peace taken away from them. It marks a day that resulted in more than 60% Tamils forced to flee their homeland and seeking asylum and refuge in many corners of the globe. It marks the day in which more than 500,000 Tamils will be massacred and marks the day where Tamils will live as second class citizens in their own home. 65 years on Tamils continue to face discrimination,oppression & genocide within the unitary structure of the Sri Lankan state.

 

- Australian Tamil Congress

  • தொடங்கியவர்

600913_549447801741308_226771846_n.jpg

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் பொலிஸாரினால் பலவந்தமாக தேசிய கொடி விற்பனை

 

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பொலிஸாரினால் பலவந்தமான முறையில் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்படுவதாக மேற்படி வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கொடி விற்பனையில் ஈடுபட்டதாகவும் இக்கொடிகள் 150, 200 மற்றும் 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவ்வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

 

நேற்று காலை 10 முதல் 11 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்த கொடிகள் பொலிஸாரினால் பலவந்தமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் வேறு வழியின்றி தாங்கள் அவற்றைக் கொள்வனவு செய்து வர்த்தக நிலையங்களின் முன் பறக்கவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் ஏற்றப்படாத வர்த்தக நிலையங்களில் தேசிய கொடியை பறக்கவிடுமாறு பொலிஸார் அவ்வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தாம் அறிவுறுத்தியதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பல்லேவல தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/58302-2013-02-04-14-41-23.html

  • தொடங்கியவர்

உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா.,தலையீடு :"அனுமதியில்லை' என்கிறார் இலங்கை அதிபர்

 

இலங்கை உள்நாட்டு விவகாரத்தில், ஐ.நா.,தலையிடுவதை அனுமதிக்க முடியாது, என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.இலங்கையின்,65வது சுதந்திர தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது.

 

திரிகோணமலையில் நடந்த விழாவில், அதிபர் மகிந்தா ராஜபக்ஷே பேசியதாவது:

 

நம்நாட்டில்,இன, மத பேதம் இல்லை. அந்நியர் ஆட்சி காலத்தில் இன, மத பேதங்கள் மூலம் நாட்டை பிரித்து ஆட்சி செய்ய முயன்றனர். மத வேற்றுமை உருவாக்க யாராவது முயற்சி செய்தால், அவர்கள் தங்கள் மதத்துக்காக கடமையாற்றுகின்றனர், என சொல்ல முடியாது.

விடுதலை புலிகள் போன்று,நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கின்றனர் என்று தான் அர்த்தம்.ஐ.நா.,சபை சாசனத்தின், 2வது பிரிவில், உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை என, கூறப்பட்டுள்ளது. எனவே, இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிட, ஐ.நா.,வை அனுமதிக்க முடியாது.

 

இலங்கையில், நல்லிணக்க குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள், நேரில் வந்து நிலைமை பார்வையிடலாம்.வெளிநாட்டு விவகாரத்தில், இலங்கை, அணிசேர நாடுகளின் கொள்கையை தான் கடை பிடிக்க விரும்புகிறது.இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%B0-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-173200004.html

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கான சுதந்திர தினம் இன்றில்லை: சிவாஜிலிங்கம்

 

'இலங்கை தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் இன்று சுதந்திரதினம் கொண்டாட முடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர்' என்று தமிழர் விடுதலை இயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

 

இலங்கையின் 65ஆவது சுதந்திரதனம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'தமிழர்களுக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. அதேசமயம் 10 இலட்சம் தமிழர்களின் வாக்குரிமைகள் மீறப்பட்டுள்ளன' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அத்துடன், 'வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றதுடன், தனிச்சிங்கள சட்டம், தனிச்சிங்கள நாடாக இருக்கின்றதுடன், தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சுதந்திர தினத்தினை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றார்கள். எப்போது தமிழர்களுக்கு தனியுரிமை கிடைக்கின்றதோ அன்று தான் தமிழர்கள் சுதந்திர தினம் கொண்டாட முடியும்.

 

இன்று நிலவும் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பட்டு, தமிழர்கள் மீதான படுகொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் இனவாதங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் காலத்தில் தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் அன்றைய தினத்தினைதான் தமிழர்கள் சுதந்திர தினமாக கொண்டாட முடியும். அவ்வாறான நிலைப்பாட்டில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தற்போது இருக்கின்றது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58303-2013-02-04-14-49-31.html

  • தொடங்கியவர்

cartoon-04.02.2013.jpg

  • தொடங்கியவர்

Diplo-mutts put Lanka on world tightrope - Editorial



editorial(80).jpg



  • When Sri Lanka faces a stinging indictment at the upcoming Geneva meeting of the UN Human Rights Council. Last year the UNHRC approved a US-sponsored resolution relating to alleged war crimes, accountability and human rights issues. Dealing a stunning blow to Sri Lanka, India also supported the resolution.
  • This year Sri Lanka finds itself in the same position as the much-abhorred Zionist regime in Israel.
  • Sri Lanka faces censure and possible sanctions not only for the issues mentioned in last year’s resolution but also the illegal and unconstitutional impeachment of Chief Justice Shirani Bandaranayake.
  • The impeachment crisis which has led to a breakdown of the rule of law and an apparent end to constitutional democracy has provoked worldwide condemnation, the possibility of Sri Lanka’s suspension from the Commonwealth and the resultant cancellation of the Commonwealth Summit scheduled to be held in Hambantota in November this year.

  • A strategic partnership with China amid severely-strained ties with India, the US and the European Union have put Sri Lanka on an international undiplomatic tight rope and where we will end up is a diplo-mutt’s guess.


http://www.dailymirror.lk/opinion/172-opinion/25504-diplo-mutts-put-lanka-on-world-tightrope-editorial.html

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முற்படுவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறைகூறினார்.

 

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் பணத்தை கொடுத்து இனவாத மற்றும் மதவாத கலவரங்களை தூண்டி நாட்டை பிரிப்பதற்கு முற்படுவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

திருகோணமலை துறைமுகத்தில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 65ஆவது சுதந்திரதின வைபவத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் அவர் உரையாற்றினார். பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்ட பின்னர் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

 

திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றுவது வெளிநாட்டு படைகளின் நோக்கமாக இருந்ததென கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைத்துலக நாடுகளின் சவால்களை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

 

அனைத்துலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிகளை மதித்து, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாதென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

சுமார் 15 நிமிடங்கள் நிகழ்த்திய உரையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ஜனாதிபதி எதுவும் கூறவில்லை.

 

சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரத்திற்கு பின்னரும் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டிருந்த புத்த விஹாரைகள் மற்றும் அவை தொடர்பான வரலாறுகளை குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யுத்தத்தில் வெற்றிபெற்ற பின்னர் பௌத்த மக்கள் சுதத்திரமாக எங்கும் சென்றுவரக் கூடிய நிலைமை எற்பட்டதென தெரிவித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் சுமார் நான்காயிரம் காவல்துறையினர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். காவல்துறையினருடன் முப்படையினரும் நகரின் முக்கிய சந்திகளில் நிறுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13617

  • தொடங்கியவர்

Cartoon2(122).jpg

  • தொடங்கியவர்

இலங்கையில் இனங்கள் வேண்டாம் இலங்கையர்களே வேண்டும்.

இலங்கையின் 65ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திரம் என்றால் என்ன? என் பதற்கான வரையிலக்கணம் இதுவரை முன் வைக்கப்படவில்லை என்று கூறும் அளவுக்கு சுதந்திரத்தின் நிலைமை உள்ளது.

 

சுதந்திரம் என்பதற்கான ஒரு வரையிலக் கணத்தை வகுக்கும் போது அது ஒரு நாட்டிற்குள் வாழுகின்ற அத்தனை மக்களுக்கும்

பொருத்துடையதாக வேண்டும். ஆனால், நாடுகள் சுதந்திரதினத்தை அனுஷ்டிக் கின்ற போதிலும் இனத்தால் மதத்தால் மொழியால் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு சீரழியும் அவலத்தை சந்தித்தவண்ணமுள்ளன.

 

அவ்வாறாயின் சுதந்திரம் என்பதை எங்ஙனம் வரைவிலக்கணப்படுத்த முடியும் என்ற வினா எழவே செய்யும்.

 

எதுவாயினும் சுதந்திரம் என்பது அடிப்படை மனித உரிமையிலிருந்து ஆரம் பிக்கின்றது. அடிப்படை மனித உரிமை என்ற விடயம் எழு கின்ற போது அங்கு இன, மத, மொழி என்ற பேதங்களுக்கு இம்மியும் இடமிருக்க நியாயம் இல்லை.


 

இதனடிப்படையில் இலங்கை 65ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கின்ற போதிலும் அது முழுமையானதாக உள்ளதா என்று கேட் டால் அங்குதான் அறுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றுத் தவறு தெரியவரும். ஆம், இலங்கை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திரம் அடைந்தது என்று கூறப் படுகின்ற போதிலும் இலங்கை மண்ணில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுக்கான சுதந்திரம் கிடைக்கப்படவேண்டும் என்பதற்காக முப் பது வருடகாலம் ஆயுதப் போராட்டத்தை முன் னெடுத்தனர். அந்தப் போராட்டம் கால அசைவில் நிகழ்ந்த சர்வதேசக் கொள்கை மாற்றங்களில் அடிபட்டு போனாலும், எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற தமிழ் மக்களின் வேணவாவுக்கு இன்னமும் முடிபு கிடைக்கவில்லையயன்றே கூறவேண்டும்.

 

சுதந்திரம் என்பது தனித்து கொடியேற்றிக் கொண்டாடும் நிகழ்வு மட்டுமல்ல மாறாக அது அனுபவிப்பினூடாக உணரப்பட வேண்டிய உள் ளார்ந்தமானதும் கூட.

 

அந்த அனுபவிப்பில் ஒரு பகுதி மக்கள் மட்டும் பங்கேற்பார்களாயின் சுதந்திரம் என்ற அரு மந்த பதம் தமது பெறுமானத்தை இழந்து போகும். எனவே இலங்கையின் சுதந்திரதினம் தனித்து சிங்களவர்களால் கொண்டாடப்படுவதென்ற சிறுபான்மை மக்களின் நினைப்புக்கு முடிபுகட்ட, எதிர்காலத்தில் அழகிய இலங்காபுரியின் சுதந் திரதினம் இலங்கையர்களால் கொண்டாடப்பட வேண்டும். இலங்கையில் சிங்களவர்கள் இருக்கிறார் கள். தமிழர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் இலங்கையர் இல்லை என்ற மாபெரும் குறைபாட்டுக்கு தீர்வுகாண்ப தாக இன்றைய சுதந்திரதின நிகழ்வு அமையட் டும்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=504:2013-02-04-05-00-40&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

  • தொடங்கியவர்

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததென்னு

எப்பண்ணா வந்ததென்னு எனக்கும் தெரியல்லண்ணா

அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள் தானா அண்ணா !

இந்தப் பாடல் சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் கொழும்புத் துறைமுகத்தில் வைத்து ரஜினிகாந்த் நடித்த தீ படத்திற்காக எடுக்கப்பட்டது.

 

பின் திபை;படத்தில் இடம் பெறுவதற்கு தடையும் விதிக்கப்பட்ட பாடல். 30 வருடங்களுக்கு முன் மட்டுமல்ல சிறீலங்காவின் சுதந்திரத்தின் மீது கேள்வி கேட்க இன்றும் இந்தப் பாடல் பொருத்தமாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்

சிங்கள கொடியை நாம் ஏற்கவில்லை, எரிந்தபடியே சிங்கள கொடியை ஏற்றிய தமிழர்கள்

 

சிங்கள கொடியே தமிழர்களின் கொடியும் என பொய் பரப்புரை செய்து வருகின்றது சிங்கள பயங்கரவாத அரசு.


ஆனால் தமிழர்களுக்கு ஆரஞ்சு நிறத்தையும் முஸ்லிம் மக்களுக்கு பச்சை நிறத்தையும் கொடியில் கொடுத்திருக்கின்றோம் என பரப்புரை செய்யும் சிங்கள பயங்கரவாத அரசு அந்த இரண்டு நிறங்களை நோக்கியபடி எச்சரிக்கும் முகமாக வாள் ஒன்றை காட்டியபடி சிங்கம் ஒன்று நிற்பது போல் வடிவமைத்துள்ளது.


ஆனால் தமிழர்கள் நாம் அக்கொடியை ஏற்கவில்லை என பல முறை நிரூபித்திருக்கின்றார்கள். அதை மீண்டும் நிரூபிக்கும் முகமாக சிங்கள பயங்கரவாத அரசின் கொடியை ஏற்றியவாரே தீயிட்டுள்ளார்கள் தமிழர்கள்.

 

அதுவும் சிங்கள சுதந்திர தினமான 04-02-2013 அன்று இந்த அடக்குமுறையின் சின்னத்தை நாம் ஏற்கவில்லை என்பதை இதைவிட சிறப்பாக உணர்த்த முடியாது என சொல்லாமல் சொல்லியுள்ளார்கள்.

 

srilankan-flag-burned-on-04-02-2013-5.jp



http://rste.org/2013/02/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5/

  • தொடங்கியவர்

Cartoon-02.jpg

  • தொடங்கியவர்

சிங்கள பௌத்த இனவெறி அரசாங்கத்தின் ”இன அழிப்பின் 65′வது ஆண்டு” ஆர்ப்பாட்டம் – பிரித்தானியா



தமிழர்களை முற்றுமுழுதாக அழித்தொழித்து அவர்கள் நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்கள் மீது இனவழிப்பை நடத்திவரும் சிங்கள இனவாத அரசைக் கண்டித்தும், பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சிறிலங்காவை நீக்கக் கோரியும் இன்று லண்டன் மாநகரத்தில் பொது நலவாய செயலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் – பிரித்தானியாவில் நடாத்தப்பெற்றது.

 

சிங்கள பௌத்த அரசாங்கத்தின் தமிழர் மீதான ”இன அழிப்பின் 65′வது ஆண்டு” நாளான இன்று மாலை 4 மணியில் இருந்து  6 மணிவரை  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான தமிழ்மக்கள் கலந்துகொண்டனர். சிங்கள இனவாத அரசைக் கண்டிக்கும்படியான பதாதைகளை கைகளில் ஏந்தியபடியும், கோசங்கள் செய்தவாறும் மக்கள் தங்களது ஏதிர்ப்பை தெரிவித்தனர்.


இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.



Tamils-Black-Day-Protest-uk-2.jpg?resize



Tamils-Black-Day-Protest-uk-3.jpg?resize



http://rste.org/2013/02/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.