Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டமே இலங்கையில் சிவப்பு மழைக்கு காரணம் - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டமே இலங்கையில் சிவப்பு மழைக்கு காரணம் - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்! 
[saturday, 2013-02-02 21:32:49]
 
பொலன்னறுவை - அரலகங்கவில பிரதேசத்தில் அண்மையில் கிடைக்கப்பெற்ற விண்கல்லின் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்த சிவப்பு மழையிலும் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான உறுதிப்பாடுகள் தென்படுவதாக நாசா நிபுணர் தெரிவித்துள்ளார். சிவப்பு மழை மற்றும் விண்கல் பகுதிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள நாசா நிறுவனத்தின் நிபுணர் பேராசிரியர் சந்ரா விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவருடன் பேராசிரியர் ரிச்சட் பீ ஹுவர் ஆகியோர் நேற்று மாலை சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்கவை சந்தித்துள்ளனர். அதன்போது, இதுவரை இடம்பெற்ற பரிசோதனைகள் தொடர்பான முன்னெற்றம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
சிவப்பு மழை உட்பட ஏனைய பகுதிகளில் பல வர்ணங்களில் பெய்த மழை தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான இயற்கைக்கு மாறான மழை வீழ்ச்சி காரணமாக பொது சுகாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதே இந்த ஆய்வின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மழையின் நீர் மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவற்றில் நுண்ணுயிர்கள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, அரலகங்வில பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட விண்கல் பகுதிகளிலும், சிவப்பு மழையிலும் உள்ள ஒற்றுமை குறித்து நாசா நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். நவீன தொழினுட்ப உபகரணங்களை பயன்படுத்தி சோபோன் மற்றும் காடிஸ் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய குறித்த விண்கள் மாதிரிகளில் உள்ள நுண்ணுயிர்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அழிந்து போன உயிரினங்கள் என தெரியவந்துள்ளது. இது பூமிக்கு வெளியில் அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று புகழ்பெற்ற நட்சத்திர ஆய்வாளரான ஸ்ரீமத் பெஃட் ஹொயில் முன்வைத்துள்ள பென்ஸ்பர்மியா அடிப்படை கொள்கை இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வந்துள்ள நாசா நிபுணர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். வரலாற்றில் கடந்த 500 வருடங்களுக்குள் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரகங்கவிலயில் விண்கல் பகுதிகள் வீழ்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருந்தபோதும், பொலன்னறுவை - அரலகங்வில பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற விண்கல் பாசானத்தில் வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதை கண்டறிய முடியவில்லை என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அத்துல சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.http://seithy.com/breifNews.php?newsID=75170&category=TamilNews&language=tamil

இருந்தபோதும், பொலன்னறுவை - அரலகங்வில பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற விண்கல் பாசானத்தில் வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதை கண்டறிய முடியவில்லை என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அத்துல சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்

அட வேணா போன பேராசிரியர். வேற்றுகிரக வாசிகள் வந்து தங்கம் தங்கமா எல்லாம் கொடுத்துட்டு போயிருக்கிறாங்கள். அதை வாங்கினவங்க நல்லா இருக்கிறாங்க. இவர் மறுத்து அது எல்லாம் பொய் ஆகிடுமா? எதோ நாசா சயன்ஸிடுக்கு தெரியாததெல்லாம் தனக்கு தெரியும் என்று சும்மா விதண்டவாதம் பண்ண்றாரு.

 

அடுத்த ஆச்சலுக்கு "Black Gold" ப்ரொமிஸ்பண்ணியிட்டுதான் போயிருக்கிறாங்க. விரவிலை வருவாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
52606.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நாசா நிபுணர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

அரலகங்கவிலயில் கிடைக்கப்பெற்ற விண்கல்லின் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்த சிவப்பு மழையிலும் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான உறுதிப்பாடுகள் தென்படுவதாக நாசா நிபுணர் தெரிவித்துள்ளார்.
சிவப்பு மழை மற்றும் விண்கல் பகுதிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள நாசா நிறுவனத்தின் நிபுணர் பேராசிரியர் சந்ரா விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவருடன் பேராசிரியர் ரிச்சட் பீ ஹுவர் ஆகியோர் நேற்று மாலை சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்கவை சந்தித்துள்ளனர்.
அதன்போது, இதுவரை இடம்பெற்ற பரிசோதனைகள் தொடர்பான முன்னெற்றம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிவப்பு மழை உட்பட ஏனைய பகுதிகளில் பல வர்ணங்களில் பெய்த மழை தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான இயற்கைக்கு மாறான மழை வீழ்ச்சி காரணமாக பொது சுகாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதே இந்த ஆய்வின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மழையின் நீர் மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவற்றில் நுண்ணுயிர்கள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, அரலகங்வில பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட விண்கல் பகுதிகளிலும், சிவப்பு மழையிலும் உள்ள ஒற்றுமை குறித்து நாசா நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
 
நவீன தொழினுட்ப உபகரணங்களை பயன்படுத்தி சோபோன் மற்றும் காடிஸ் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய குறித்த விண்கள் மாதிரிகளில் உள்ள நுண்ணுயிர்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அழிந்து போன உயிரினங்கள் என தெரியவந்துள்ளது.
 
இது பூமிக்கு வெளியில் அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று புகழ்பெற்ற நட்சத்திர ஆய்வாளரான ஸ்ரீமத் பெஃட் ஹொயில் முன்வைத்துள்ள பென்ஸ்பர்மியா அடிப்படை கொள்கை இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வந்துள்ள நாசா நிபுணர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
 
வரலாற்றில் கடந்த 500 வருடங்களுக்குள் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரகங்கவிலயில் விண்கல் பகுதிகள் வீழ்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆம்பி பூத்த வீடும் ஆமை புகுந்த வீடும் விளங்காது.

 

இலங்கை கூட விண்வெளிக்கு செய்கலம் அனுப்புகிறது. அமெரிக்க விண்வெளிக்கப்பல்கள் மட்டும் தரை இறக்கபட்டுவிட்டன. அமெரிக்கா இப்போது விண்வெளிக்கு அனுப்ப ரூசியாவிடம் உதவிக்கு போகிறது. அடுக்க கூடாததுகளை அடுத்தால் அதில் ஒரு நாணம் இருந்து எல்லாவற்றையும் துலைச்சுப் போடும். 

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு மழைக்கு காரணம் புலிகளே -- அதிபர் ராஜபக்சே அறிவிப்பு..

குழம்பு 3

இன்று நாட்டில் மூன்று தசாப்த காலமாக நடந்தேறிய பயங்கரவாதத்தினை முறியடித்து நல்லிணக்க செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் வேளையில் எமது
ஆக்க பூர்வமான பணிகளை முறியடிக்கும் வேலைகளை புலிகள் மேல் உலகத்தில் இருந்து எடுத்து வருகின்றனர். எவ்வாறாயினும் இவ்வாறான சதிகள் முறியடிக்கபடும் என கல்தா மாளிகையில் உரையாற்றும் போதே தெரிவித்தார்


செய்தி மூலம் - புளுவாயின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.