Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவை பார்வையிட்ட மீனவர்களிடம் தலா 5000 ரூபா அறவீடு – வடக்கு மீனவர்களின் பரிதாபம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்தவை பார்வையிட்ட மீனவர்களிடம் தலா 5000 ரூபா அறவீடு – வடக்கு மீனவர்களின் பரிதாபம்:-
 
04 பெப்ரவரி 2013
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்வையிட்டமைக்கு யாழ்ப்பாணத்தினில் ஜயாயிரம் கட்டணம் அறவிடப்படுவதாக திடுக்கிடும் தகவலொன்று வெளியாகியுள்ளது. 
 
அண்மையில் தேசிய மீனவ சம்மேளனமொன்றை அமைப்பதற்கான கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடந்திருந்தது. இதற்கென வடக்கிலிருந்து மட்டும் 600 மீனவ பிரதிநிதிகள் பேருந்துகளில் அடைக்கப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டனர்.
 
அவர்களுள் யாழ்ப்பாணத்திலிருந்து 200 பேரும் மன்னரிலிருந்து 200 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலிருந்து தலா நூறு பேரும் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். 
 
பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களை கண்ணீர் மல்க ஜனாதிபதி சந்தித்தது உள்ளிட்ட கண்ணீர் கசியும் படங்கள் ஏற்கனவே பத்திரிகைகளினில் வெளிவந்துமிருந்தது.
 
ஆனால் வீடு வந்து திரும்பிய பின்னரே சனியன் தம்மை விடாது பிடித்தாட்டுவதாக மீனவர்கள் கவலை கொண்டுள்ளனர்; 
 
ஜனாதிபதியை பார்வையிட்டு திரும்பிய வகையால் ஒவ்வொரு மீனவரும் படகொன்றிற்கு ஜயாயிரம் படி கட்டணம் செலுத்த வேண்டும் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் பணித்துள்ளனர்.
 
அத்துடன் எரிபொருள் மானியம் பெறும் மீனவர்கள் தலா நூறு அன்பளிப்பு செய்யுமாறும் அதிகாரிகள் கோரியுள்ளனர். குறித்த மீன்பிடி எரிபொருள் மானிய அனுமதியை பெற்ற அனைவரிடமும் இருந்து அடாத்தாக இக்கட்டணங்கள் அறவிடப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகின்றது.
 
எனினும் இவ்வறவீடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சம்மேளனங்களிற்கே வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தான் ஜனாதிபதியின் சந்திபபிற்கான செலவுகளை செய்ததாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 
 
ஆயினும் குறித்த சம்மேளனங்கள் முற்று முழுதாக அரசியல் தரப்பின் எடுபிடிகளாகவுள்ளதாக மீனவாகள் தரப்பில் குறறம் சாட்டப்படுகின்றது. 
 
குறிப்பாக போக்குவரத்துக் கட்டணங்கள் போன்றவை அமைச்சினாலேயே வழங்கப்பட்டு விட்டதால் எதற்காக இவ்வறவீடுகள் என மீனவ அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன. 
 
கடந்த கால யுத்தத்தினால் கடுமையான பாதிப்பை  வடக்கு மீனர்களே சந்தித்துள்ளனர். தற்போதே தமது வாழ்வை மீளக் கட்டி எழுப்ப அவர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதியை அவரவர் விளம்பரத்திற்கு சந்தித்து வி;ட்டு தங்கள் தலைகளிலேயா மிளகாய் அரைக்கிறார்கள்  அரசியல் தரப்பினர் என மீனவ அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88271/language/ta-IN/article.aspx
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்கார மகிந்த அரசு.

லம்போகினி வாங்கி ரேஸ் ஓடி, ரோல் ரோயஸ் வாங்கி உள்ளூரில் பயணம் செய்து, கால்நடையாக கிளிநொச்சியில் சேவை செய்வதாக விவரிக்கும் பிச்சைகாரர்.

அதேவேளை பணத்தை கொடுத்து தென் இலங்கை சிங்கள மக்களை முள்ளிவாய்க்காலுக்கும்  வல்வெட்டித்துறைக்கும் அனுப்புகிறார்கள்   :icon_mrgreen:

இது கப்பம், கடத்தல் ரவுடி டக்லஸ் கும்பலின் பணப்பறிப்பு!

அத்துடன் ஐயாயிரம் தமிழ் பட்டதாரிகளை கொழும்பிற்கு, அரச வைபவத்திற்கு அழைத்தார்கள். சொந்த செலவில்.

வந்தவர்களுக்கு எதிர்பார்த்த நியமனமும் இல்லை, ஏமாற்றமே மிச்சம்  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.