Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினக்குரல் விநியோகஸ்தர் மீது யாழில் தாக்குதல்

Featured Replies

தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் புத்தூரில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் விநியோகிப்பதற்கு எடுத்துச்சென்ற பத்திரிகையும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளுக்கும் எரியூட்டப்பட்டுள்ளது.


சம்பவத்தில் படுகாயமடைந்த விநியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/58422-2013-02-07-01-44-39.html

  • தொடங்கியவர்

நிச்சயம் இந்த கேவலமான கோழைத்தனமான  தாக்குதலுக்கு டக்ளசும் துணை இருந்திருப்பார்  :icon_mrgreen:



ஊடகவியலாளர்களை ஒரு பக்கம் அடிப்பது, வெருட்டுவது கொல்லுவது ...
மறுபக்கம் பணத்தால் அவர்கள் மீது வழக்கு போட்டு அலைக்கழிப்பது, வந்குரோத்தாகுவது ...



ஆங்கில பத்திரிகையான சண்டே லீடர் ஆசிரியரை கொலை செய்தார்கள். அதுவும் சரிவராமல் போக பணத்தால் அதி கூடிய பங்குகளை வாங்கி தமது பொம்மையாக்கி விட்டார்கள்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

  குடாநாட்டில் பத்திரிகைகள் மீது தொடரும் வன்முறை ! தப்பியது உதயன் - சிக்கியது தினக்குரல்!!
DSCF9037.JPG

 

தப்பியது உதயன் - சிக்கியது தினக்குரல்!
 
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பத்திரிகை விநியோகப் பணியை முடக்கும் நோக்குடன் மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறியிருக்கின்றது. தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் தாக்கப்பட்டு பத்திரிகைகள் அவரது மோட்டார் சைக்கிளோடு வைத்து நடுவீதியில் எரியூட்டப்பட்டிருக்கின்றது.
 
யாழ். பருத்தித்துறை விநியோக மார்க்கத்தில் புத்தூர் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :
 
வழமைபோல குடாநாட்டிலுள்ள பத்திரிகைகள் விநியோகப் பணிகளுக்கான பணியாளர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் கோப்பாய்க்கும் நீர்வேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 
உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளரை தாக்கும் நோக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை வழி  மறித்த போதும்  நிற்காமல் ஓடிச் சென்ற வேளையில் தினக்குரல் பத்திரிகையின் பணியாளர் புத்தூர் பகுதியில் வழிமறிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகள் தீயிடப்பட்டிருக்கின்றது. 
 
குறித்த நபர் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இச்சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் குறித்த இடத்தினை பார்வையிட்டுள்ளதுடன். இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
 
DSCF9030.JPG
 
DSCF9032.JPG
 
DSCF9034.JPG
 
DSCF9037.JPG
 
  • தொடங்கியவர்

சிறிதரன் அவர்களின் காரியாலத்தில் 'கண்டுபிடிக்கப்பட்டது' போன்று சரவணபவான் காரியாலயத்திலும் 'கண்டுபிடிக்கப்படலாம்'  <_<

  • கருத்துக்கள உறவுகள்
2ம் இணைப்பு – யாழ்ப்பாணத்தில் யாழ்.தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல்
07 பெப்ரவரி 2013
 
யாழ்.குடாநாட்டினில் ஊடகங்கள் மீதான வன்முறை என்றுமில்லாத வகையில் மீண்டும் அதிகளவில் அண்மைக்காலமாக கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றது.இவ்வகையில் இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.அத்துடன் பத்திரிகை விநியோகப்பணியாளரும் கண்மூடித்தனமாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.தாக்குதலில் காயமடைந்த நிலையில் வீதியோரமாக வீசப்பட்டிருந்த அவரை வீதியால் பயணித்த பொதுமக்கள் சிலர் மீட்டெடுத்து  அனுப்பி வைத்துள்ளனர்.இதனிடையே கூடச்சென்ற மற்றொரு நாளிதழ் விநியோகப்பணியாளர் மீதும் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்ற போதும் அவர் தப்பித்து சென்றுள்ளார்.யாழ்-பருத்தித்துறை வீதியின் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியினில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
 
 
விநியோப்பணியாளரால் எடுத்துச்செல்லப்பட்ட யாழ்.தினக்குரல் பத்திரிகை பிரதிகளை பறித்தெடுத்த அடையாளம் காணப்படாத நபர்கள் பின்னர் அவற்றை தீ வைத்து எரித்துள்ளனர்.சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அவை தீப்பற்றி எரிந்த வண்ணமிருந்தது.தாக்குதலாளிகள் நீண்ட நேரமாக அப்பகுதியில் தரித்து நின்றதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதனிடையே அண்மையில் வடமராட்சியின் மாலுசந்திப்பகுதியினில் இதே பாணியினில் உதயன் நாளிதழ் தீக்கிரையாக்கப்பட்டள்ளது.அத்துடன் விநியோகப்பணியாளர் தாக்கப்பட்டிருந்ததுடன் நாளிதழை விநியோகத்திற்கு எடுத்து சென்றிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.இச்சம்பவம் இடம்பெற்ற சிறிது காலப்பகுதியினுள் யாழ்.தினக்குரல் நாளிதழ் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 
  • தொடங்கியவர்

பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதல்; ஹத்துருசிங்கவே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும்; சரவணபவன் எம்.பி

 

பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதலுக்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும் என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

யாழிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் விநியோக பணியாளர் இன்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போதே சரவணபவன் இதனை தெரிவித்தார்

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படுகிறது இதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி விட்டு தற்போது ஊழியர்களை தாக்க தொடங்கிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,







http://onlineuthayan.com/News_More.php?id=289571819507137283

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.