Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைக்கு ஐ.நாவில் விசேட பொறிமுறை! - ஜெனிவாவில் ஆட்டத்தை ஆரம்பித்தது ஒபாமா நிர்வாகம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணைக்கு ஐ.நாவில் விசேட பொறிமுறை! - ஜெனிவாவில் ஆட்டத்தை ஆரம்பித்தது ஒபாமா நிர்வாகம்!!

 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் விசேட பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது.

 

ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது அமெரிக்கா கொண்டு வரவுள்ள புதிய தீர்மானத்தில் இந்த விடயமே முதன்மை பெறும் என அறியமுடிகின்றது.

 

அதேவேளை, சிறிலங்கா மீதான இப்புதிய தீர்மானம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையையும் அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பில் ஜெனிவாவில் முகாமிட்டு பரப்புரைகளை முன்னெடுத்து வரும் வொஷிங்டனின் விசேட இராஜதந்திரிகள் குழு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனும் கலந்துரையாடி வருவதாக தெரிய வருகின்றது.

 

சிறிலங்கா மீதான அமெரிக்காவின் புதிய தீர்மானத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் 'போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நாவின் ஆணை' என்ற விடயமே முதன்மை பெறுவதாக அறியமுடிகின்றது. எனவே, ஜெனிவாத் தொடரில் இம்முறை சிறிலங்கா அரசாங்கம் கடந்த தடவையை விட கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என மேற்குலக இராஜதந்திரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 22வது கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் ஜெனிவாவில் பரப்புரைகளை முன்னெடுத்துள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் குழு, 'ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்மொழிவுகளை ஏற்றுக் கொள்ளாத சிறிலங்கா அரசாங்கம், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தவறிவிட்டது.

 

குறிப்பாக உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனினும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அதன் காரணமாகவே இம்முறை மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

 

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் வழிசமைக்கும் வகையிலேயே இத்தீர்மானம் அமைந்துள்ளது. எனவே, சர்வதேச சமூகம் அதை ஆதரிக்கவேண்டும்' என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு விளக்கியுள்ளனர்.

 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர் குழு ஒன்றை நியமித்து அது தொடர்பில் அறிக்கையை பெற்றிருந்தாலும், அவர் இதுவரை அது தொடர்பிலான அடுத்த நடவடிக்கை என்ற கட்டத்துக்கு செல்லவில்லை.

 

சிறிலங்கா அரசாங்கத்தால் தாருஸ்மன் அறிக்கை என விவரிக்கப்படும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளியாகி பல மாதங்கள் கடந்துள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது ஐ.நா இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

 

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற போரின் போதான தமது செயற்பாடுகள் குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு ஐ.நா செயலாளர் உள்ளக விசாரணைக் குழுவொன்றை அமைத்தார். அந்தக்குழு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் பொதுமக்களைப் பாதுகாப்பதில் இருந்து ஐ.நா தவறிழைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த பின்னர்கூட நடவடிக்கை என்ற கட்டத்துக்கு ஐ.நா செல்லவில்லை.

 

இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இம்முறை நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தைக் கருத்திற்கொண்டு போரின் போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் கோரிக்கையாக உள்ளது. இந்த விடயத்தை மையப்படுத்தியே சிறிலங்கா மீதான அமெரிக்காவின் புதிய தீர்மானம் அமையும் என மேலும் அறியமுடிகின்றது.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=e4c48e86-58f8-4976-9d41-ba174a519952

சர்வதேச விசாரணைக்கு ஐ.நாவில் விசேட பொறிமுறை! - ஜெனிவாவில் ஆட்டத்தை ஆரம்பித்தது ஒபாமா நிர்வாகம்!!

 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் விசேட பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது.

 

எமது ஆயுதப்போராட்டம் தந்த வெற்றி இதுவே!!

 

அரசியல் அணுகுமுறை, அதனால் வரும் வெற்றி என்பன மிக மிக மெதுவாகவே வருபவை.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் உடனடியாக நாம் ஐ.நா. நடவடிக்கைகளை எதிர்பார்த்தவர்கள் நாம்.

கடந்த வருடங்களில் நாம் சற்று ஏமாந்தும் போனவர்கள்.

ஆனால் இன்று நிலைமைகள் எமக்கு சாதகமாக மாறி வருகையில் அவற்றை கைப்பற்றவும் முயற்சிக்கவேண்டியவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான  காலகட்டம்

எமது  ஒற்றுமையான பணிகள் தொடரணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.