Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்சல் குரு மனைவிக்கு 2 நாள் கழித்து கிடைத்த கடிதம்

Featured Replies

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், தண்டனை அளிக்கப் போவதாக குறிப்பிடப்பட்ட கடிதம் அப்சல் குருவின் மனைவிக்கு, இன்று கிடைத்துள்ளது.
 
டெல்லி தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்ட இந்த கடிதம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 9ம் தேதி கிடைத்துள்ளது. அன்று தான் அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டார். அந்த கடிதம் இன்று காலையில் தான், அவரிடம் கொடுக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் தலைமை தபால் அதிகாரி ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அந்த கடிதத்தை ஒப்படைக்க இயலவில்லை என அவர் கூறியுள்ளார். அப்சல் குருவை தூக்கிலிடப்போவது குறித்த செய்தியை, அவரது மனைவுக்கு தெரியப்படுத்துவதற்காக மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதம் அது என்பது தமக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டது குறித்து அவரது மனைவிக்கு விரைவு அஞ்சல் அனுப்பட்டதாக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த கடிதம் மிகவும் தாமதாக கிடைத்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, தபால் துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
 
http://puthiyathalaimurai.tv/letter-from-delhi-delivered-to-afzal-gurus-wife-2-days-after-execution

  • தொடங்கியவர்

Adade11.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அண்டைக்குத் தபால் கொஞ்சம் கூடிப்போச்சு! :wub:

 

donkey.jpg

  • தொடங்கியவர்

20 ஆண்டுகளுக்கு பின் திகார் சிறையில் தூக்கு

 

டில்லி திகார் சிறையில், 1989ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொன்றவர்கள் தூக்கிலிடப்பட்டனர். அதன்பின், இப்போது, அப்சல் குரு தூக்கிலிடப்பட்டுள்ளான்.

 

டில்லி திகார் சிறை டைரக்டர் ஜெனரல், விமலா மெக்ரா கூறியதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்களான, சத்வந்த் மற்றும் கேகர் சிங், 1989ம் ஆண்டில், திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அதன்பின், 20 ஆண்டுகளுக்கு மேலாக, யாரும் இந்த சிறையில் தூக்கிலிடப்படவில்லை. இன்று தான் (நேற்று) அப்சல் தூக்கிலிடப்பட்டுள்ளான்.

 

அப்சல் குருவை தூக்கிலிட்ட நபரின் பெயரை வெளியிட முடியாது. அதேபோல், அப்சல் குருவின் கடைசி ஆசை என்ன என்பது போன்ற விவரங்களையும், இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. இவ்வாறு விமலா மெக்ரா கூறினார்.

 

http://tamil.yahoo.com/20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%8D-182700518.html

  • தொடங்கியவர்

65581_10200504050022029_534759418_n.jpg

  • தொடங்கியவர்

அப்சல்குரு குடும்பம் திகார் சிறைக்கு வந்து நமாஸ் செய்யலாம்: ஆர்.கே.சிங்

 

அப்சல் குருவின் குடும்பத்தினர் திகார் சிறைக்கு வந்து நமாஸ் செய்யலாம் என்று உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்.9ம் தேதி தில்லி திகார் சிறையில் நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கில் இடப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டார்.

 

திகார் சிறையில் உள்ள அந்த இடத்தில் அவரது குடும்பத்தினர் விருப்பப் பட்டால் வந்து இறுதி அஞ்சலி மற்றும் மதச் சடங்குகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

 

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த அப்சல் குரு அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு என்று வந்து பார்த்து நமாஸ் செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்புகிறார்களோ அன்று அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அப்சல் குருவின் உடைமைகளை அவரது குடும்பத்தாரிடம் அளிக்கவும், குடும்பத்தாரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் நேற்று உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறியிருந்தார்.

 

http://dinamani.com/latest_news/article1460885.ece

  • தொடங்கியவர்

திகார் சிறைக்கு வர மத்திய அரசு அனுமதி : அப்சல் குடும்பத்தார் நிராகரிப்பு

 

திகார் சிறைக்கு வந்து, அப்சல் குரு புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த மத்திய அரசு அளித்த அனுமதியை அப்சல் குருவின் குடும்பத்தார் நிராகரித்துள்ளனர்.

 

அப்சல் குரு புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தவும், அப்சல் குரு பயன்படுத்திய பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும், அப்சல் குருவின் குடும்பத்தாருக்கு அழைப்பு விடுத்திருந்தார் உள்துறை செயலர் ஆர்.கே. சிங்.


இந்த அழைப்புக்கு மறுப்புத் தெரிவித்துள்ள அப்சல் குருவின் உறவினர், உண்மையிலேயே எங்கள் மீது கருணை இருந்தால், அப்சல் குருவின் உடலை எங்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுங்கள். எங்கிருந்தாலும், எவ்வளவு செலவானாலும் அங்கு வந்து நாங்கள் உடலை பெற்றுக் கொள்கிறோம். ஆனால், வெறும் அஞ்சலி செலுத்த அங்கு வர வேண்டியதே இல்லை, எங்கிருந்து வேண்டுமானாலும் நாங்கள் அஞ்சலி செலுத்திக் கொள்வோம் என்று தெரிவித்துவிட்டனர்.

 

http://dinamani.com/latest_news/article1461969.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.