Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுசில் புலம்பெயர்ந்தவர்களால் புதிய அரசியல் கட்சி

Featured Replies

புலம்பெயர்ந்தவர்களால் புதிய அரசியல் கட்சி

2013 ஃபெப்ரவரி மாதம் 11 திங்கட் கிழமை- பி.ப 07:52

 

அவுஸ்திரேலியாவிற்கு குடியேறிய இலங்கையர்கள் அங்கு அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளனர்.

 

'அவுஸ்திரேலிய எழுச்சி கட்சி" என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் தற்போது ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.


இந்தநிலையில் எதிர்வரும் பிராந்திய தேர்தலில் 65 வேட்பாளர்களை நிறுத்த இந்த கட்சி தீர்மானித்துள்ளது.

 

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட டெனியல் நல்லையா என்பவரினால் இந்த அவுஸ்திரேலிய எழுச்சி கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியாவிற்குள் நுழைபவர்கள் அந்த நாட்டிற்கு விஸ்வாசமான முறையில் தம்மை மேம்படுத்துவதுடன் அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டு;ம் என்ற முக்கிய கொள்கையை இந்த புதிய கட்சி கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.hirunews.lk/tamil/53204

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வைக்கக்கூடியளவு எண்ணிக்கையில் தமிழ் வாக்காளர்கள் உள்ளனரா É

  • தொடங்கியவர்

New party seeks to curb Muslim immigration

 

A Sri Lankan migrant has launched a political party that runs on an anti-multiculturalism platform.

 

 

Rise Up Australia already boasts about 1,500 members and plans to run 65 candidates in the upcoming federal election.


"Rise Up Australia Party, which is committed to keeping Australia for Australians, is utterly and completely opposed to multiculturalism," says Rise Up Australia's founder Daniel Nalliah.

 

http://www.sbs.com.au/news/article/1735966/New-party-seeks-to-curb-Muslim-immigration/



பல்லின கலாச்சார கொள்கைக்கு எதிராக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த நல்லையா  :icon_idea:



Pastor Daniel Nalliah

 

pastor-daniel-nalliah-of-catch-the-fire-

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லையாவைத் திருப்பியனுப்புவதே நல்லது போலக் கிடக்கு! :o

  • கருத்துக்கள உறவுகள்

நுணா அண்ணா இணைத்த காணொளி 31.05.2011 இணைக்கப்பட்டிருக்கு. இவர்கள்
பலகாலமாக இருக்கிறார்கள் போல இருக்கு ஆனால் தேர்தலை ஜூலியா
அறிவித்திருப்பதால் இவர்களின் பெயரும் அடிபடத் தொடங்கியிருக்கு. அநியாயமாக
மூக்குடைபடப் போகிறார்கள்.

வெற்றி பெற வைக்கக்கூடியளவு எண்ணிக்கையில் தமிழ் வாக்காளர்கள் உள்ளனரா É

 

 

அன்பின் நுணா, மற்றும் கள உறவுகள்,

ஹிரு இணையத்தில் வந்த தலைப்பும் ('புலம்பெயர்ந்தவர்களால் புதிய அரசியல் கட்சி') அதன் உள்ளடக்கமும் ('அவுஸ்திரேலியாவிற்கு குடியேறிய இலங்கையர்கள் அங்கு அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளன'ர்.) முற்றிலும் தவறானதுடன் ஒருவித விஷமத்தனமான பிரசாரமாகவும் எனக்கு படுகின்றது. இதை ஒத்த தலைப்பில் தமிழ்வின் இணையமும் செய்தியை போட்டது. அந்த செய்தியில் டானியல் நல்லையா இஸ்லாமியருக்கு எதிராக கூறிய கருத்துக்களை போட்டது மட்டுமில்லாமல் அந்த செய்தியை தவறாக புரிந்து கொண்ட இஸ்லாமிய வாசகர்களின் தமிழருக்கு எதிரான கருத்துக்களும் அங்கே கொட்டப்படுகிட்டகின்றன. இந்த செய்தி பிழையான கோணத்தில் வரையப்படிருப்பது பற்றி நான் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது நான் போட்ட கருத்தையும் நீக்கிவிட்டார்கள். சரி இனி விடயத்துக்கு வருவோம்.

டானியல் நல்லையா கிறிஸ்தவ பெந்தகொச்டல் பிரிவை சேர்ந்த ஒரு மத போதகர் (evangelical

pastor). இவர் 1990ல் இலங்கையில் இருந்து தனது மனைவியுடன் சவூதி சென்று அங்கு சவூதி சட்டங்களுக்கு சவாலாக தனது மதப்போதனைகளை செய்ய முயன்றார். ஆனால் அது சரிவராது போகவே இலங்கை சென்று பின்னர் அவுஸ்திரேலியா வந்து சேர்ந்தார். இங்கும் ஒரு தேவாலயத்தை ஆரம்பித்து அவர் மத போதனைகளை தொடங்கினார். இங்கு தான் அவர் தனது போதனைகளால் கவரப்படவர்களின் உறுதுணையுடன் அரசியலிலும் நுழைய முயன்றார். Family First என்ற கட்சியில் இணைந்து செனட்டர் ஆக முயன்றார். ஆனால் அவரின் சர்சைக்குரிய கருத்துக்களால் அந்த கட்சின் ஆதரவை இழந்ததுடன் பின்னர் அந்த கட்சியையே விமர்சிக்க தொடங்கினார். விபசார விடுதிகளும், சூதாட்ட மையங்களும், இந்து, பவுத்த, இஸ்லாமிய மத தலங்களும் சாத்தான் வாழுமிடம் என்றும் குவீன்ச்லந்தில் வந்த பாரிய வெள்ள அனர்த்தம் ஆண்டவன் செயல் என்றும் பல கருத்துகளை கூறி இவர் பலரின் கோபத்துக்கும் நகைப்புக்கும் உள்ளனர். 

கடந்த வாரம் இவர் Rise Up Australia என்ற கட்சியை ஆரம்பித்து வைத்து இஸ்லாமிய சமூகம் பற்றியும் குடியற்ற வாசிகள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார். இவரை தலைமையாக கொண்ட இந்த கட்சியில் இருக்கின்ற 1500 பேரில் பெரும்பாலனவர்கள் அவுஸ்திரேலியா பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். ஒரு சிறு தொகையினர் ஆசியர்கள். 

இது தான் செய்தி. அந்த கட்சியின் இணையம் மற்றும் செய்திதாள்களில் வந்த செய்திகள் கிழே உள்ளன. அதை விடுத்து எதோ புலம்பெயர்ந்த, அதுவும் தமிழ் பெயரைகொண்ட ஒருவர் புலம்பெயர்ந்தவர்களை கொண்ட கட்சி உருவாகியுள்ளது போல இணையங்கள் செய்தி போடுவது தவறு. அதுவும் இவரின் ஆபத்தான கருத்துகளை தமிழரின் கருத்துக்களாக மற்றவர் எண்ணும்படியாக இந்த இணையங்கள் செய்தி போடுவது விஷமத்தனம் அன்றி வேறில்லை

மூலங்கள்:

http://en.wikipedia.org/wiki/Danny_Nalliah

 

Pastor's abortion dream

inflames bushfire tragedy: http://www.smh.com.au/national/pastors-abortion-dream-inflames-bushfire-tragedy-20090210-832f.html

Rise Up Australia: Who is Danny Nalliah?: http://www.sbs.com.au/news/article/1736346/Who-is-Danny-Nalliah-and-what-is-Rise-Up-Australia

Danny Nalliah: Paranoid

Conspiracy Nut: http://www.mycolleaguesareidiots.com/archive/2009/11/09/443.aspx

riseupaustraliaparty.com/

டானியல் நல்லையா கிறிஸ்தவ பெந்தகொச்டல் பிரிவை சேர்ந்த ஒரு மத போதகர் (evangelical pastor).

 

இந்து, பவுத்த, இஸ்லாமிய மத தலங்களும் சாத்தான் வாழுமிடம் என்றும் குவீன்ச்லந்தில் வந்த பாரிய வெள்ள அனர்த்தம் ஆண்டவன் செயல் என்றும் பல கருத்துகளை கூறி இவர் பலரின் கோபத்துக்கும் நகைப்புக்கும் உள்ளனர்.

 

மதவெறியர் டானியல் நல்லையா பற்றி மேலதிக தகவல்கள் தந்த புதல்வனுக்கு நன்றிகள்.

இவரது போக்கைப் பார்க்க இவர் "கூல் கும்பலின்" இன்னொரு வடிவமாக தெரிகிறார். அவர்களும் ஆரம்ப காலத்தில் இதுபோன்ற ஒரு மதவெறிப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய கவசம் மனித உரிமை ஆர்வலர்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.