Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலிய ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 470 கோடி லஞ்சம்-இந்தியாவில் யாருக்கு கைமாறியது?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12-helicopter1-300.jpg
 
 
 
 

டெல்லி: இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 470 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த லஞ்சம் யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து விமானப் படை வாங்கியது.

இந்த ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் (Finmeccanica) தலைவர் கிஸ்பி ஓர்சி, இதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் (Agusta Westland) தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரை அந் நாட்டு அரசு இன்று கைது செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்த ராணுவ பிரிகேடியர் ஒருவர் மூலமாக இந்த இந் நிறுவனத்தின் தரகர்கள் பேச்சு நடத்தி, இந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்றுள்ளனர்.

பேரம் முடிவடைந்து ரூ. 3,546 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றது இத்தாலிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம். இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்ததையடுத்து ரூ. 470 கோடி அளவுக்கு இந்தியத் தரப்புக்கு லஞ்சமாகத் தந்துள்ளது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம்.

இந்தப் பணம் இந்தியாவில் யார், யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

இது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு இந்திய பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் விரைவில் இந்த வழக்கை சிபிஐ வசம் மத்திய அரசு ஒப்படைக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

எதுவாக இருந்தாலும் சோனியாவை விசாரித்தால் தெரியும்

2ஜி ஊழல், சுரங்க ஊழல், கெலிகோப்ட்ர் ஊழல்.....  வேறு எத்தனை வெளிவர முடியாமல் தவிக்கின்றனவோ.

ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது

ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800 கோடி
கருணாநிதி....................35,000 கோடி
சிதம்பரம்.......................32,000 கோடி
சரத் பவார்.....................28,000 கோடி
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,500 கோடி
JM சிந்தியா......................9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200 கோடி
A ராஜா...........................7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி
http://i.imgur.com/bO3dF.png

  • கருத்துக்கள உறவுகள்

இமயம் முதல் .. குமரி வரை....,

 

 

இன்று காலை முதல் லஞ்சத்  தகவல்கள்தான்.
 
....,
 
ராணுவ தளவாடம் மற்றும் போர் விமான தயாரிப்பு நிறுவனமான ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் இந்திய பாதுகாப்புத் துறையுடன் கடந்த 2010ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கான 12 ஹெலிகாப்டர்களை (ஏ.டபிள்யூ 101 ரகம்) இந்தியாவுக்கு வழங்க வகை செய்கிறது.
 
 3 ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 9ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு மத்தியில் சப்ளை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்தியாவில் உள்ளவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக ஓராண்டுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
ரூ.3,600 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தைப் பெற 10 சதவீதம் (ரூ.360 கோடி) லஞ்சம் வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து  முழுமையாக அறிய,வழமை போல்  சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுடனான ஹெலிகாப்டர் பேரம் தொடர்பாக ரூ.360 கோடி லஞ்சம் வழங்கியதாக இத்தாலி அரசு நிறுவனத் தலைவர் கியூசெப் ஒர்சியை அந்நாட்டு காவல்துறையினர் நேற்று  கைது செய்துள்ளனர்.
 
 ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் தலைவர் புருனோ ஸ்பக்னொலினி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.பின்மெகானிகாவின் 30 சதவீதப் பங்குகளை இத்தாலி அரசுதான் வைத்துள்ளதுலஞ்ச கைதுகளுக்குப் பின்னர் பின்மெக்கானிகாவின் பங்குகளின் மதிப்பு 9 சதவீதம் வீழ்ந்துள்ளது.
இங்கே இந்தியாவில் ரூ 360 கோடிகளை  வாங்கிய உத்தமர்கள் யார்?
முதலில் இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை எதிர்த்த் நிதியமைச்சகம் பின்னர் தனது முடிவை மாற்றியதுடன் உடனே ஹெலிகாபடர்களை வாங்க அனுமதி அளித்தது  ஏ ன்? என்று உங்களுக்கு சந்தேகம் வருகிறது அல்லவா?
அதே சந்தேகம்தான் இங்கேயும்.!
இத்தாலியில் உடனே கைது.சிறை.இந்தியாவில் வழக்கம் போல் சிபிஐ விசாரித்துக்கொண்டே இருக்கும்.அவர்கள் காலம் முடியும்  வரைக்கும்.
 
 
 குமரி வரை....,
 
 அடுத்து நாம் காணவிருப்பது சென்னை அருகேயான ஊழல்.
சென்னை தரமணி சி.எஸ். ஐ.ஆர்., சாலையில்  இந்திய தர நிர்ணய நிறுவனம் உள்ளது.இங்குதான்  "வாட்டர் பிளான்ட்' துவங்க உரிமம் வழங்கப்படுகிறது.ஆனால் இங்கு  புதிதாக  விண்ணப்பிப்போர்களிடமும்-, புதுப்பிப்போரிடமும்  சில  அலுவலர்கள் அன்பளிப்பை கண்டிப்பாக வழங்கக் கோரி அன்பில்லாமல் கேட்பதாக குற்ற சாட்டுகள் வந்தன.
 
இதனால்  இந்நிறுவனத்தில், சி. பி.ஐ., அதிகாரிகள்  திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது, நீரியல் விஞ்ஞானிகள் வெங்கட் நாராயணன், முரளி ஆகியோர், வேளச்சேரி பகுதியை சேர்ந்த, எக்ஸெல் வாட்டர் பிளான்ட் உரிமையாளர் விநாயகமூர்த்தியிடம், அன்பளிப்பு வாங்கிக்கொண்டிருக்கும் போது அன்பளிப்பும் அதை வைத்திருந்த கையுமாக  பிடிபட்டனர்.
அந்த இருவர் களிடம் இருந்தும்  கணக்கில் வராத, ரூ 16,000 பிடி பட்டது.
அ டுத்து, வளசரவாக்கத்தில் உள்ள வெங்கட்நாராயணன் வீட்டில் சோதனையிட்டபோது, கணக்கில் வராத, 15 லட்ச ரூபாய் பணம், 2,000 அமெரிக்க டாலர்கள், 60 யூரோ நோட்டுகள் மற்றும் 28 வெளிநாட்டு மதுபாட்டில்கள்  இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. 
இதேபோல், அம்பத்தூரில் உள்ள முரளியின் வீட்டிலும், சோதனை நடைபெற்றது. இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
 
ஆக ஒரே நாளில் இந்தியாவின் வடகடைசியிலும்-தென் கடைசியிலும்  ஊழல் நீக்கமற நிறைந்திருப்பது தெரிகிறது.
உண்மையிலேயே ஊழல் ஒரு தேசிய வியாதியாகி விட்டது.இனி இது போன்ற அரசு அலுவலர்கள் -அமைச்ச பெருமக்களுக்கு அரசு ஊதியம் வழங்காமல் இப்படி பொறுக்கி பிழைத்துக்கொள்ளட்டும் என்று கூறி விடலாம்.லஞ்சத்தை  ஒழிக்க இப்போதைக்கு இதை விட வே று வழி இருந்தால் சொல்லுங்கள்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
1997 பிப் ரவரி 12ல் தான் போபர்ஸ் ஊழல் பட்டியலும் வெளியானது .இந்த நாளின் சிறப்பை என்னவென்று சொல்லுவது?
பேசாமல் இந்த பிப்ரவரி 12 ஐ ஊழல் தினம் என்று அறிவித்து கொண்டாடி விடலாம்."
 
இந்த ஊழல்  புகாரின் காரணமாகவே 1989 ல் ராஜீவ் காந்தி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார்.பின்பு சி பி ஐ  வசம் சென்ற இந்த வழக்கில் கடந்த 2004 ம் ஆண்டு ராஜீவ் காந்தியை விடுவித்தது தள்ளி உயர்நீதிமன்றம்....இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்துஜா சகோதரர்களும் விடுவிக்கப்பட்டனர்.
  2009 ம் ஆண்டு போதிய ஆதாரங்கள் இல்லை என்று  வழக்கை முடித்து கற்பூரம் காட்டி புதைத்து விட்டது சி பி ஐ .

வாழ்க இந்தியா.வளர்க அதன் ஊழல் தலைவர்கள் புகழ், 

http://www.suransukumaran.blogspot.ca/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா நிராகரித்ததை இந்தியா ஏன் வாங்கியது.. ஹெலிகாப்டர் ஊழலில் 'விஸ்வரூப' கேள்விகள்!
13-orsi-300.jpg
 
 
 
 

டெல்லி: ரொம்ப காஸ்ட்லி என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே வேண்டாம் என்று நிராகரித்த அகஸ்டா வெஸ்ட்லேண்டிட் ஹெலிகாப்டர்களைத் தான் இந்தியா இத்தாலியிடம் இருந்து வாங்கியுள்ளது என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

முக்கியப் பிரமுகர்களுக்காக இந்தியா ரூ. 3,546 செலவில் வாங்கிய 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் இப்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியாவில் ரூ. 450 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாகவும், முன்னாள் விமானப் படைத் தளபதி தியாகியின் குடும்பத்தினருக்கும் லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த ஹெலிகாப்டர்களை 2009ம் ஆண்டு அமெரிக்க கடற்படை வாங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், இவற்றின் தரத்தோடு ஒப்பிட்டால் இதன் விலை மிக மிக அதிகம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட ஒபாமா, இந்த ரகத்தைச் சேர்ந்த 28 ஹெலிதாப்டர்களை வாங்கும் திட்டத்தை நிராகரித்துவிட்டார்.

மேலும் இந்த புதிய ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஹெலிகாப்டர்களை மேம்படுத்தும் பணிக்காக ஒதுக்கிவிட்டார்.

ஆனால், இதைத் தான் இந்திய விமானப் படை, ரூ. 450 லஞ்சம் கைமாறிய நிலையில், வாங்கியுள்ளது.

மொத்தம் 12 ஹெலிகாப்டர்களுக்கு பணம் தரப்பட்டுவிட்ட நிலையில் 3 ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தும் விட்டது இத்தாலிய நிறுவனம். மற்றவை அடுத்த சில மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருந்தன. இந் நிலையில் தான் லஞ்ச விவகாரம் வெடித்துவிட்டது.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் சில முக்கிய கேள்விகள் எழுகின்றன.

1. இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகியும் ஏன் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவில்லை

2. இத்தாலி அரசு இதில் நடவடிக்கைகள் எடுத்த பின்னர் தான் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கண் விழிக்க வேண்டுமா?

3. ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் எந்த ஊழலுக்கும் இடம் இருக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கூறிக் கொண்டே இருக்கிறார். அதையும் தாண்டி இந்த ஊழல் நடந்தது எப்படி?

http://tamil.oneindia.in/news/2013/02/13/india-chopper-deal-corruption-disturbing-questions-169700.html

Adade-13.jpg

அந்த காட்டூன் கதை இடையிலை ஸ்கானரிலை பேப்பர் கட்டாயிடிச்சு.அதாலை சில குழப்பம்.வந்திடிச்சு   :(  கஸ்டப்பட்டு நாம அதை திரும்ப தட்டச்சு செய்து இணைச்சிருக்கோம்.   :D

 

கணவன்: இத்தாலியில் இருந்து ஹெலிகாப்ட்டர் வாங்கியதில் ஊழலாம்.அதான் சந்தேகமா இருக்குதடி, இந்த ஊழல் விஷயத்துல இத்தாலிக்கும் நம்ம நாட்டுக்கும் இடையிலை நிரந்தர ஒப்பந்தம் ஏதாவது இருக்கா என்னு தோனுது. 

 

மனைவி:அப்படி ஒன்னும் பெரிய சமாரசம் இல்லீங்க. பத்திரிகையிலை வாறதை எல்லாம் வரிக்கு வரி தவறாமல் படிச்சுட்டு நீங்க சும்மா ஒப்பந்த கிப்பந்தம் என்னு .......

இன்னிக்கு பகல் நீங்க வேலைக்கு போயியிருந்த சமயம் நம்ம யூனியன் மெம்பேஸ் இந்த பக்கம் வந்து ஒரு கூட்டம் போட்டாங்க. எல்லோரும் ஏக மனதாக இத்தாலியை.  கண்டிக்க வேணுமின்னு பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றிவிட்டு போயிருக்கிறாங்க.

 

கணவன்: அது என்னடி அவங்கட பிரேரணை.  இன்னிக்கு TV யிலை அது இது என்னு ஒரு தொடரும் ஒடேலேயோ? 

 

மனைவி: சமாச்சாரம் என்ன என்றால் இத்தாலிலை மேற்குகாரனுகளுக்கு வேண்டாத குப்பைகளை எல்லாம் நம்ம நாட்டிலை கொண்டுவந்து கொட்டிட்டு போறாங்க என்னு குறைப்பட்டாங்க. இனி நாமள் எல்லாம் என்ன பண்ணப்போகிறோம் என்னு  மணிக்கணக்கிலை தலையிலை கையை வைச்சுட்டு இடிஞ்சு போய் உடகாந்திருந்தாங்க.

 

கணவன்: அதுதானடி நானும் சொல்றேன். நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் கை கூசாம நீட்டி லஞ்சம் வாங்கின அவங்க தங்க குப்பைகளை  இங்கே கொண்டுவந்து கொட்டாம என்ன நடுக்கடலுக்கையா கொட்டுவாங்க?

 

மனவி: அட நீங்க வேறு. நம்ம அரசியல்வாதிகள் ஒரு செம்புச் சதம் சீதனம் கேட்க்க மாட்டேங்கிறாங்க என்னுதான் எல்லோரும் கவலைப்ப்ட்டாங்க . நீங்க போயும் போயும் லஞ்சம் கேட்டு வாங்கிக்கிறங்க என்னு பதிரிகையை படிச்சுட்டு அதை போய் அளக்கிறீங்க.

 

Edited by மல்லையூரான்

Adade-15.jpg

வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது குற்றமில்லை: இத்தாலி முன்னாள் பிரதமர்

 

வணிக நடவடிக்கைகளின்போது லஞ்சம் கொடுப்பது உலக அளவில் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அது குற்றமில்லை என்று இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி தெரிவித்துள்ளார்.

 

 

முக்கிய பிரமுகர்களுக்கு ரூ. 3,600 கோடி மதிப்பில் 12 நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவில் உள்ளவர்களுக்கு இத்தாலி நிறுவனமான ஃபின்மெக்கனிகா ரூ. 360 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நிறுவன அதிகாரி கியூசெப் ஒர்சி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கியூசெப் ஒர்சிக்கு ஆதரவாக இத்தாலி முன்னாள் பிரதமர் குரல் கொடுத்துள்ளார்.


இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு சில்வியோ பெர்லஸ்கோனி கூறியதாவது:÷""லஞ்சம் என்பது  நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம். அவசியம் ஏற்படும் தருணங்களில் லஞ்சம் அளிக்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இது குற்றமில்லை.

 

இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் கொடுத்தது குறித்து நாம் பேசுவதற்கு காரணம், அது அந்நாட்டில் விதிமுறைப்படி தவறு என்றிருப்பதால்தான். உலக அளவில் இத்தாலி நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்ய தொடங்கியிருப்பது பொருளாதார ரீதியாக தற்கொலைக்கு ஒப்பானது.

 

கியூசெப் ஒர்சியை கைது செய்திருப்பது, பிறரை துன்புறுத்தி இன்பமடைவதைப் போன்ற செயலாகும். இந்நடவடிக்கை உலக அளவிலான இத்தாலி நிறுவனங்களின் வணிகத்தைப் பாதிக்கும். இனிமேல் "ஃபின்மெக்கனிகா, எனி (எண்ணெய் நிறுவனம்), எனெல் (எரிசக்தித் துறை நிறுவனம்) ஆகியவற்றுடன் வணிகத்தில் ஈடுபட யாரும் முன்வர மாட்டார்கள்.

 

இது ஒரு ஒழுக்கநெறி சார்ந்த நடவடிக்கை எனக் கூறுவது நகைப்புக்கிடமானது. இது போன்ற ஒழுக்கநெறிகளை

பின்பற்ற முயன்றால், உலக அளவில் தொழில் முனைவோராக உங்களால் செயல்பட முடியாது'' என்றார் பெர்லஸ்கோனி.

 

இதற்கிடையே கியூசெப் ஒர்சியின் வழக்குரைஞர் எனியோ அமாதியோ, இத்தாலியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""ஒர்சியை கைது செய்ததை அரசு நியாயப்படுத்த முடியாது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் முரண்பாடானதாக உள்ளன'' என்றார்.

 

http://dinamani.com/world/article1464529.ece

ஐ.நாவின் வியாபாரப் பதிக்குள்ளால் இப்படியான சட்டங்கள் வந்து சேர வேண்டும். இது மட்டும் இன்னமும் தனித் தனி நாடுகளின் சட்டம் மட்டும்தான் என்று நினைக்கிறேன். கொடுக்கும் நாடும், வாங்கும் நாடும் ஐ.நாவால் கண்டிக்கப்படவேண்டும். இல்லையேல் எழை நாடுகளின் பொருளாதாரம் சின்னாபின்னமாகிவிடும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.