Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் இல்லை; ருவன் வணிகசூரிய தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் இல்லை; ருவன் வணிகசூரிய தெரிவிப்பு

 

e104546a7e2b0e41e57993f7e96f18c2.jpegவடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது. அவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டலில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எந்தவித தங்குதடையின்றி சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்தியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தென்பகுதியைப் போன்று வடக்கில் வாழக்கூடிய பொதுமக்களும் தமது அன்றாட வாழ்க்கையை எந்தவித தடையுமின்றி சந்தோஷமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோன்று சகல அரசியல் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை பயமின்றி முன்னெடுத்து வருகின்றன.யாழ். குடாநாடு உட்பட சகல பிரதேசங்களிலும் சுமார் 15 ஆயிரம் இராணுவ வீரர்களே தற்போது சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாத வகையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய அந்தந்த பிரதேச கட்டளைத் தளபதிகளினால் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்,

மக்கள் நலன் வேலைத் திட்டங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளில் இராணு வத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்டளை களையும், நிர்வாக நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ஒழுக்கம் மற்றும் தொழில் ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் இராணுவம் என்ற வகையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியாகவோ, இரகசியமாகவோ எந்த ஒரு ஆயுதக் குழுக்களையும் வைத்திருக்க வேண்டிய எந்தவித தேவைகளும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது யாழ். இராணுவ தளபதியின் கீழ் இரகசிய ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.tbclondon.com/2013/02/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5/

  • கருத்துக்கள உறவுகள்

வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தம்மிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் தெரிவித்ததுள்ளது.

 

இந்த செய்திக்கு என்ன சொல்லப்போகின்றார்கள் ?

13,500 இராணுவத்தினர் இருக்க எனக்கு எதற்கு இரகசிய ஆயுதக்குழு : ஹத்துரு சிங்க

 

யாழ். குடாநாட்டில் 13,500 இராணுவ வீரர்கள் துப்பாக்கி சகிதம் எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்நிலையில் இரகசிய ஆயுதக் குழுக்களை வைத்திருக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்.

 

 

எதிர்க் கட்சித் தலைவர் அடிப்படையற்ற வகையில் இரகசிய ஆயுதக்குழுக்கள் யாழில் உள்ளதாகவும் அதனை இராணுவம் பின்னின்று செயற்படுத்துவதாகவும் பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளார். இதனை யாழ். கட்டளைத் தளபதி என்ற வகையில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3082



18022013-md-hr-2%20copy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது

 

சரியாகத்தான் சொல்கிறார்

நாங்களே ஒட்டுக்குழுக்கள்

கள்ளர்

தெருப்பொறுக்கிகள் தானே.

பிறகு  எதற்கு வேறு ஆட்கள்???

 

(ஆனால் இரண்டுமில்லாது கொஞ்சம் எங்களுடன்  இருக்கு. அதை எந்தக்கணக்கிலும் சேர்ப்பதில்லை கொஞ்ச நாளில் பலியாக்கிவிடுவதை கணக்கில்  போடமுடியுமா?).

Edited by விசுகு

யாழ்ப்பாணத்தில 13500 இரானத்தினர் தான் இருக்கிறார்களாம்.... வேறு ஆயுதக்குளுக்கள் இல்லையாம்....

 

 

ஆக இரானுத்தைதில் 13500  போனால் மிச்சமெல்லாம்  சட்டவிரோத 26500 ஆயுதக்குளுக்கள் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

 

நீங்கள் நம்பாவிட்டால் ஐ.நா படைகளை கொணர்ந்து எண்ணிப்பார்க்க தயாரா மிஸ்டர் ரம்புக்வெல? 

எதற்கும் தனக்கு கஜபாகு படையணியில் உள்ள செல்வாக்கை பாவித்து தாக்கியவர்களின் பெயர்களை ஐ.தே.க. வெளியிடுவதே நல்லது. அப்பொழுதுதான் அந்த கட்சியின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும்  :D

எனவே நாடு முழுவதிலும் உள்ள இராணுவமே இரகசிய ஆயுதக் குழுவாகவும் செயற்படுவதாக இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.