Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த மீது போர்க்குற்ற விசாரணை அவசியம்: பஞ்சாப் அரசியல் கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
876253737panjab.jpg
 
இந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம்வெளியிட்டுள்ளது. .
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து சனல் 4 ஒளிப்படம் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி தெரிவித்துள்ளார். 
.
சனல் 4 வெளியிட்ட 12 வயது சிறுவனின் கொலை ஒளிப்படம் இலங்கை மனித உரிமை மீறல் புரிந்துள்ளமைக்கு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார். 
.
இது ஒரு தமிழ் மக்கள் பிரச்சினை அல்ல எனவும் மனிதாபிமான பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி வலியுறுத்தியுள்ளார். 
.
அடுத்த மாதம் ஜெனீவாலில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க பிரேரணைக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் இதுவிடயம் குறித்து இந்தியா அமைதிகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
.
இந்தியாவின் மௌனம் புதிய ஒன்று அல்ல எனவும் பல தடவைகள் இந்தியா இரட்டை நிலைப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளதாகவும் டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி கூறியுள்ளார். 
.
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிறுவர்கள், குழந்தைகள் என பாராது செயற்பட்டதுபோல் 1984களில் இந்தியா சீக்கியர்களுக்கு எதிராக செயற்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
.
1984 தர்பார் சாஹிப் மோதலில் இந்திய அரசு படைகள் சீக்கிய போராளிகள் மற்றும் யாத்திரிகர்கள் சிறிய குழந்தைகள் ஆகியோரை பிரித்துப் பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 
.
இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகள போட்டிகளை தமிழ்நாட்டில் நடாத்த முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதாகவும் அவர் ஒரு தைரியமான பெண் எனவும் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடயத்தில் தமிழக சட்ட சபையின் தீர்மானம் நிறைவேற்றி தனது தைரியத்தை உறுதிப்படுத்தியவர் எனவும் டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி தெரிவித்துள்ளார்.
 
Well- மாநிலகட்சிகள்தாம் மத்தியில் ஒரு காரணமுள்ள, நோக்கமுள்ள, பிரயோசனப்படத்தக்க, குறிக்கோள் உள்ள அரசு ஒன்றை மத்தியில் அமைக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. மானிலக்கட்சிகள் உயிர்த்தெழுந்து தமக்குள் உள்ள பேதங்களை மறந்து மத்தியில் ஆட்சியை அமைக்க வேண்டிம். மத்திக் கட்சிகள் என்பது வெறும் பம்மல் ஆட்டங்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

876253737panjab.jpg
 
இந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம்வெளியிட்டுள்ளது.
.
சனல் 4 வெளியிட்ட 12 வயது சிறுவனின் கொலை ஒளிப்படம் இலங்கை மனித உரிமை மீறல் புரிந்துள்ளமைக்கு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார். 
.
இது ஒரு தமிழ் மக்கள் பிரச்சினை அல்ல எனவும் மனிதாபிமான பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
.
.
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிறுவர்கள், குழந்தைகள் என பாராது செயற்பட்டதுபோல் 1984களில் இந்தியா சீக்கியர்களுக்கு எதிராக செயற்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
.
1984 தர்பார் சாஹிப் மோதலில் இந்திய அரசு படைகள் சீக்கிய போராளிகள் மற்றும் யாத்திரிகர்கள் சிறிய குழந்தைகள் ஆகியோரை பிரித்துப் பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

என்னுடன் ஒரு சீக்கிய நண்பன் வந்த புதிதில் ஒன்றாக சோதினைகளுக்கு ஒன்றாக படித்தவர், அவர் சொன்னார், ராஜீவ் காத்தி கொல்லப்பட்ட போது பஞ்சாப்பில் சில இடங்களில் வெடி கொளுத்தி மகிழ்ந்ததாக...அந்த நிலைய, அவர்களுடனான உறவை மீள தொடக்க வேண்டும்..பிராம்ப்டன் சீக்கியர்களின் கோட்டை ...அங்குள்ளவர்கள்/ முடிந்தால் அவ்விடத்து MP ஐ - ஒரு சீக்கியர் என்று நினைக்கிறன்-(தனிபட்ட நன்மை தீமை தெரியாது)  இதற்கு உதவ கேக்கலாம்..

இவரின் பேச்சு

இரட்டிப்பு அர்த்தத்தில் உள்ளது

நாம் கவனமாக  இருக்கவேண்டிய  காலப்பகுதி.

இவர் இந்தியாயும் இதற்குள் அடக்குகிறார்

சிறிலங்காவுக்கும் இது உற்சாகத்தைத்தரக்கூடும்

Edited by விசுகு

ஆதரவிற்கு நன்றிகள்.

எம்மை போன்று நசுக்கப்பட்ட ஒரு இனம், படுகொலை செய்யப்பட்ட மக்கள்.

எம்மை விட பண மற்றும் அரசியல் செல்வாக்கை உலக அளவில் கொண்டிருந்தாலும் இவர்களால் எம்மளவிற்கு  தமது பிரச்சனையை உலகளவில் கொண்டுவர முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.