Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் இந்தியாவின் ‘றோ’ உளவாளிகள் – சுற்றிவளைத்துப் பிடிக்க நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

INDIA_EMPLEM.jpg

சுற்றுலா நுழைவிசைவிலும் மற்றும் புடவை வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற போர்வையிலும் சிறிலங்காவுக்குள் நுழைந்துள்ள இந்திய உளவாளிகளைக் கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வின் முகவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இவர்களை சுற்றிவளைத்துப் பிடித்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. 

வடக்கு, கிழக்கில், புடவை வியாபாரிகள், விவசாயிகள் என்ற போர்வையில் திரியும் ‘றோ’ சந்தேகநபர்களை பிடிக்கும் இந்த நடவடிக்கைக்கு, சிறிலங்கா படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பில் முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், இவர்கள் அதிகளவில் செயற்படுவதாகவும் சிறிலங்கா குடிவரவுத் திணைக்களம் கூறியுள்ளது. 

ஏற்கனவே, சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பலர் உடனடியாக நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே. வடக்கு,கிழக்கில் அறுவடை வேலைகளுக்கு இந்தியத் தொழிலாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவுள்ளதாக, மற்றொரு கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது. 

பெருமளவானோர் வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச்சென்றுள்ள நிலையில், சிறிலங்காவில் விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதனைக் கருத்தில் கொண்டே, இந்திய விவசாயத் தொழிலாளர்கள் 3 மாத கால நுழைவிசைவுடன், இந்தப் பணிகளில் ஈடுபட அனுமதி அளிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

அண்மையில் சிறிலங்கா குடிவரவுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் வடக்கு கிழக்கு பகுதிகளில், நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், இந்திய விவசாயத் தொழிலாளர்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னேற்பாடாக, வடக்கு, கிழக்கில் உள்ள பிரதேச செயலர்களிடம் இருந்து தேவைப்படும் தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை கோரியுள்ளார்.

 

திருப்பதியில் மகிந்தாவை ரோ சந்தித்தன் விளைவா?? 

  • கருத்துக்கள உறவுகள்

INDIA_EMPLEM.jpg

சுற்றுலா நுழைவிசைவிலும் மற்றும் புடவை வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற போர்வையிலும் சிறிலங்காவுக்குள் நுழைந்துள்ள இந்திய உளவாளிகளைக் கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

 

அந்த கொழும்பு ஆங்கில ஊடகம் எது என்று யாருக்கும் தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய படியும் வேதாளம் முருங்கை மரத்தில எருதாக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய படியும் வேதாளம் முருங்கை மரத்தில எருதாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே தமிழர் தாயகத்தில் மக்களை ஏமாற்றும் போலிச் சோதிடர்களையும் திருப்பி அனுப்பினால் மிகவும் நன்றாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.