Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பிறந்தமண்

Featured Replies

நான்

பிறந்த

மண்ணைப்

பற்றி கவிபாட

என்

கண்ணிரையே

மையாக்கீனேன்

இங்கே

முததுமாரி

அம்மனை

மனதில்

நினைக்க

என் இதயத்தில்

புதிய

உற்சாகம்

வருகுது இங்கே

ஊரை,உறவை

விட்டு வந்து

அகதியாகி சிதறி

விட்டோம் இங்கே

சொந்தம்

எல்லாம்

மறந்து

போச்சு

யார் சொந்தம்

என்று

தெரியவில்லை

எனக்கு இங்கே

ஊரை

உறவை

விட்டு

வந்தும்

இன்னும்

திருந்தவில்லையாம்

கொஞ்சம்

இங்கே

குரும்பசிட்டியின்

இணையத்

தளத்தை

பார்த்து

புத்துணர்ச்சி

வந்தது

எனக்கு

இங்கே

என் மனதில்

இருந்த

உணர்வை

வெளிப்படுத்த

அழுது

கொண்டு

கவிதை

எழுதுகின்றேன் இங்கே

என்

நண்பனின்

ஊர்

பற்றினால்

ஊரின் பெயர்

இன்னும் உயிருடன்

இருக்கிறது

காற்றலையில் இங்கே

அறுந்து

போன

உறவுகள்

எல்லாம்

வந்து

இணையுங்கள்

இந்த இணையத்

தளத்தில்இங்கே

www.kurumbasiddyweb.com

  • தொடங்கியவர்

ஊரை,உறவை

விட்டு வந்து

அகதியாகி சிதறி

விட்டோம் இங்கே

சொந்தம்

எல்லாம்

மறந்து

போச்சு

யார் சொந்தம்

என்று

தெரியவில்லை

எனக்கு இங்கே :roll:

ஊரை

உறவை

விட்டு

வந்தும்

இன்னும்

திருந்தவில்லையாம்

கொஞ்சம்

இங்கே :wink:

அது சரி கண்டியலே உங்கடை உறவுகள் எப்படி என்று சொல்லுங்கோ பிள்ளைகள் :idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த மண்ணை விட்டு அகதியாக வேறு ஊர்களிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் எம்மைவிட இலக்கியனின் கவலை மிகவும் வருந்தத்தக்கது. போர் நிறுத்தக்காலமான கடந்த 4 வருடங்களில் யாழ்ப்பாணத்திற்கு பலர் சென்று தங்கள் பிறந்த ஊரினைப்பார்த்தார்கள். குரும்பசிட்டி மக்கள் சொந்த நிலத்துக்கு சென்று பார்க்கமுடியாமல் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குரும்பசிட்டி அடங்கியிருக்கிறது. கட்டுவன், மயிலிட்டி,பலாலி மக்கள் 90க்குப் பிறகு சொந்த நிலங்களுக்குச் செல்லமுடியாது வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் செய்த குற்றம் என்ன

ஊரை,உறவை

விட்டு வந்து

அகதியாகி சிதறி

விட்டோம் இங்கே

:idea:

உங்கள் உள்ளத்து உணர்வுகளை அழகாகக் கவி மூலம் கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

உங்கள் ஊரை வைத்து எழுதின கவி நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள். இது உங்களின் ஏக்கம் மட்டுமல்ல எங்களின் ஏக்கங்களும் தான்.

ஏக்கத்துடன் எழுதிய கவிதை நன்றாய் இருக்கின்றது. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து அனைவரது உணர்வுகளைத்தொட்டாலும், கருத்து சொன்ன விதம் "கவிதை" என்பதற்க்குள் அடக்க முடியுமா? அல்லது இணையத்துக்கான விளம்பரம் என்பதற்க்குள் அடக்க முடியுமா?

  • தொடங்கியவர்

பிறந்த மண்ணை விட்டு அகதியாக வேறு ஊர்களிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் எம்மைவிட இலக்கியனின் கவலை மிகவும் வருந்தத்தக்கது. போர் நிறுத்தக்காலமான கடந்த 4 வருடங்களில் யாழ்ப்பாணத்திற்கு பலர் சென்று தங்கள் பிறந்த ஊரினைப்பார்த்தார்கள். குரும்பசிட்டி மக்கள் சொந்த நிலத்துக்கு சென்று பார்க்கமுடியாமல் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குரும்பசிட்டி அடங்கியிருக்கிறது. கட்டுவன், மயிலிட்டி,பலாலி மக்கள் 90க்குப் பிறகு சொந்த நிலங்களுக்குச் செல்லமுடியாது வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் செய்த குற்றம் என்ன

நன்றி கந்தப்பு ஜயா உங்கள் விமர்சனத்துக்கு :lol:

  • தொடங்கியவர்

உங்கள் உள்ளத்து உணர்வுகளை அழகாகக் கவி மூலம் கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றி ரசிகை உங்கள் வாழ்த்துக்கு :lol:

  • தொடங்கியவர்

உங்கள் ஊரை வைத்து எழுதின கவி நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள். இது உங்களின் ஏக்கம் மட்டுமல்ல எங்களின் ஏக்கங்களும் தான்.

ஏக்கத்துடன் எழுதிய கவிதை நன்றாய் இருக்கின்றது. பாராட்டுக்கள்.

நன்றி ரமா விமர்சனத்துக்கு

  • தொடங்கியவர்

கருத்து அனைவரது உணர்வுகளைத்தொட்டாலும், கருத்து சொன்ன விதம் "கவிதை" என்பதற்க்குள் அடக்க முடியுமா? அல்லது இணையத்துக்கான விளம்பரம் என்பதற்க்குள் அடக்க முடியுமா?

குருவிகளே

குருவிகளே

கொஞ்சம்

நில்லுங்கள்

எங்கள்

உணர்வுகளை

கொஞ்சம் புரிந்து

கொள்ளுங்கள்

கிணத்து தவளை

போல சும்மா

காத்துவதை

நிறுத்துங்கள்

சரணாலயத்தில்

இருந்து கொண்டு

சும்மா

உளறாதிர்கள்

கூடு இல்லாத

குயில்கள்

போல இங்கு

பாடதீர்கள்

காகத்தின்

கூட்டில் சும்மா

முட்டை

போடாதிர்கள்

கவிதையின்

இலக்கணம்

எனக்கு

சொல்லித்தாருங்கள்

நான் விளம்பரம்

செய்யவில்லை

அதை நீரும் புரிந்து

கொள்ளுங்கள்

அறுந்துபோன

உறவுகளை

இங்கே

இணையச்செய்யுங்கள்

கூட்டின் அருமை

தெரியாத

குயில்கள் போல

சும்மாபாடதீர்கள்

இலக்கியனின் பிறந்த மண்ணான குரும்பசிட்டியின் பக்கத்துக்கிராமமான குப்பிளானில் நான் பிறந்தேன்.(பலாலி உயர் பாதுகாப்புவலய எல்லைகிராமமான குப்பிளானில் மக்கள் இராணுவ அடக்கு முறையினால் சந்தித்த சோதனைகள் எண்ணிலடங்காதவை. சென்ற வருடம் குப்பிளானுக்கு சென்ற போது எடுத்த படங்களும் ஏற்கனவே யாழில் இணைத்துள்ளேன். பார்க்க பின்வரும் இணைப்பிற்கு செல்லவும்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=154617#154617

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=149551#149551

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=149537#149537

எனது வீட்டின் இன்றைய நிலையினை சென்ற வருடம் சென்று பார்த்தபோது எனது கமராவில் எடுத்த படங்களினை இங்கே பார்க்கவும்.

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...=185587#185587)

குப்பிளானில் ஒரு பகுதி உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் அமைவதினால் அங்கும் மக்கள் செல்ல முடியாது.

அளவெட்டிக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் அதிகமாக ஆசிரியர்கள் பிறந்த மண்ணாக குரும்பசிட்டி விளங்குகிறது. நான் டீயூசன் படிக்கவும், மிருதங்கம் கற்கவும் சென்ற இடம் குரும்பசிட்டி. குரும்பசிட்டி சன்மார்க்க சபை,உதயதாரக வாசிகசாலை, நடராஜா ஆசிரியரின் வாசிகசாலை, காளிதாசன் ஆசிரியர் நடாத்தும் வாசிக சாலையில் நான் பத்திரிகை படிக்கச் செல்வதுண்டு.குரும்பசிட்டி மண்ணைச் சேர்ந்த ஈழத்தில் புகழ் பெற்ற நாடகக் கலைஞர் கலைப்பேராசு பொன்னுத்துரை அவர்களின் நாடகங்களிலும் நடித்ததில் பெருமை கொள்கிறேன்.

சிறுவர்களாக இருக்கும் போது நண்பர்களுடன் துவிச்சக்கர வண்டியில் கல்லன், பொலிஸ் விளையாடிய இடத்தினையும் மறக்க முடியுமா?. குரும்பசிட்டியில் டீயூசனில் என்னுடன் படித்த எனது இரு நண்பர்களான மயூரன், கிருஸ்ணகுமார் இப்பொழுது மாவீரர்கள். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டியினைப் பார்க்கச் சென்றபோது நண்பன் மயூரன்(என்னுடன் மிருதங்கமும், யூனியன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்) ஆழ்ந்த யோசனையுடன் இருக்க, யாரை நினைத்துக்கொண்டிருக்கிறாய், எதாவது காதல், கீதல் இருக்கா என்று கேக்க, இல்லை என்று சிரிப்புடன் பதில் அளித்தார். அன்று தான் நான் மயூரனுடன் கடைசியாகக் கதைப்பேன் என்று அப்பொழுது எனக்குத் தெரியாது. பாடசாலையில் படிக்கும் போது தனக்கு வந்த பதவி ஒன்றினை எனக்கே தரவேண்டும் என ஆசிரியருடன் வாதிட்ட உயர்ந்த நண்பன் அவன். சில நாட்களின் பின்பு குப்பிளானில் 4 போராளிகள் துவிச்சக்கரவண்டியில் செல்லும் போது அதில் மயூரனையும் கண்டேன். என்னைப்பார்த்தும் தெரிந்தமாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. அன்று தான் நான் என் நண்பனைக் கடைசியாகச் சந்திதேன். நாட்டின் பிரச்சனை காரணமாக தமிழகம் சென்ற போது அவன் மாவீரனாகி விட்டான் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது.

தெல்லிப்பளையில் பரிட்சை முடிந்து பேருந்திற்காக நிற்கும் போது என்னிடம் இருந்த காசுகளினை எங்கேயோ தொலைத்துவிட்டதினால் இனி 1 மணித்தியாலம் நடந்து தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என நினைக்கும் போது கிருஸ்ணகுமார் தன்னிடமிருந்த பணத்தினை எனக்குத்தந்து உதவினான். பிறகு அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சரியாக 2,3 கிழமைகளில் கட்டுவனில் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்துவிட்டான் என்ற செய்தி எனக்குக்கிடைத்தது. அப்பொழுதுதான் எனக்குத் தெரியும் அவனும் ஒரு போராளி என்று. என்னுடன் மிருதங்கம் படிக்க வந்த குரும்பசிட்டி அச்சுதனும் ஒரு மாவீரன்.

குரும்பசிட்டியினை நினைக்கும் போது என்னுடன் படித்த நண்பர்கள், சன்மார்க்க சபையுடன் முத்துமாரி அம்மன் கோவிலும் யாபகத்துக்கு வருகிறது. குரும்பசிட்டி மக்களுடன், குப்பிளான், கட்டுவன் மக்களும் அம்மனின் திருவிழாவுக்குச் செல்வார்கள். திருமுருக கிருபானந்த வாரியாரிடமிருந்து அவர் பிரசங்கத்தின் போது கேட்ட கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொன்னதினால் அம்மன் கோவிலில் பரிசினைப் பெற்ற யாபகமும் வருகிறது. டீயூசனில் எனக்கு படிப்பித்த விஞ்ஞான ஆசிரியர்(மன்னிக்கவும் பெயர் மறந்து போய் விட்டது) அம்மனின் பக்தர். போரின் போது அம்மன் கோவில் தரை மட்டமாக்கப்பட்டதினைக் கேள்விப்பட்டு கவலையுடன் தற்கொலை செய்து கொண்டவர் இந்த ஆசிரியர்.

டீயூசனுக்குப் பக்கத்தில் உள்ள வீட்டில் விடியோவில் புதிய படங்கள் காட்டுவதினால் படம் பாக்கப்போய் வகுப்புக்குப் பிந்தி போய் நண்பர்களுக்கும் அடி விழ, துவிச்சக்கரவண்டி பஞ்சராகிவிட்டதினால் குப்பிளானில் இருந்து இப்ப தான் நடந்து வந்தனான் என்று பொய் சொல்லி அடி வாங்காமல் தப்பிய சம்பவங்களும் யாபகத்துக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குரும்பசிட்டி மண்ணைச் சேர்ந்த ஈழத்தில் புகழ் பெற்ற நாடகக் கலைஞர் கலைப்பேராசு பொன்னுத்துரை அவர்களின் நாடகங்களிலும் நடித்ததில் பெருமை கொள்கிறேன்.

கலைப்பேராரசு A.T.பொன்னுத்துறையின் நாடகங்களில் தாளக்காவடி புகழ் பெற்று பல இடங்களில் மேடை ஏறியது. இன்னாடகத்தில் தன்னோடு காங்கேசன் துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்பித்த ஆசிரியர்களினையும் சேர்ந்து நடிக்கவைத்தவர் A.T.பொன்னுத்துறை.

அரவிந்தன் உங்கள் சிறிய கட்டுரை மூலமாக என்னை என்னுடய ஊருக்கே அழைத்து சென்றீர்கள். நீங்கள் சொல்லுகின்ற இடங்கள் எல்லாம் என் மனக்கண் முன் தோன்றுகின்றது. அந்த உறவுகளுடய முகங்கள் திரும்பவும் ஞாபகப்படுத்தப்படுகின்றது. அதில் நண்பர்கள் உறவுகளுடய பிரிவுகள் வாட்டுகின்றது. நான் பிறந்தமண் இலக்கிய நயம் வாய்ந்தது அந்தகாற்று பட்டபடியினால்தான் நானும் ஒரு சிறிய கவிஞனாக முயற்சி செய்கின்றேன். குப்பிளான் எங்கள் அயல்கிராமம் நீங்கள் இணைத்த படங்கள் பார்த்தேன் அங்கு பட்டாம் பூச்சிபோல பறந்து திரிந்த ஞாபகங்கள் எல்லாம் மீட்க கூடியதாக இருக்கிறது. நான் வயாவிளான் மத்தியமகாவித்தியாலயம் , தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியில் படித்த பொழுது நிறைய குப்பிழான் நண்பர்கள் இருந்தார்கள் தேடுகின்றேன் அவர்களை காணவில்லை அவர்களை. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி

இலக்கியன் உங்கட மன உணர்வுகள் எனக்கும் புரியுது

எனனதான் சின்ன வயதிலயே ஊரை விட்டு வந்தாலும் எனது குடும்பத்தினர் இப்பவும் வீட்டில ஊரைப்பற்றியும் தங்களது பழைய நண்பர்கள் உறவினர்களை பற்றி கதைக்கும் போது இப்படி ஈரமான உணர்வுகளை தரக்கூடிய ஊரிர வுhழும் சந்தர்பத்தை எனக்கு மறுக்கப்பட்டு விட்டதே என்று கவலை தான் வரும்

  • தொடங்கியவர்

கலைப்பேராரசு A.T.பொன்னுத்துறையின் நாடகங்களில் தாளக்காவடி புகழ் பெற்று பல இடங்களில் மேடை ஏறியது. இன்னாடகத்தில் தன்னோடு காங்கேசன் துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்பித்த ஆசிரியர்களினையும் சேர்ந்து நடிக்கவைத்தவர் A.T.பொன்னுத்துறை.

கந்தப்பு எல்லாம் தெரிந்து வைத்துக்கிறீங்கள்

:)

  • தொடங்கியவர்

இலக்கியன் உங்கட மன உணர்வுகள் எனக்கும் புரியுது

எனனதான் சின்ன வயதிலயே ஊரை விட்டு வந்தாலும் எனது குடும்பத்தினர் இப்பவும் வீட்டில ஊரைப்பற்றியும் தங்களது பழைய நண்பர்கள் உறவினர்களை பற்றி கதைக்கும் போது இப்படி ஈரமான உணர்வுகளை தரக்கூடிய ஊரிர வுhழும் சந்தர்பத்தை எனக்கு மறுக்கப்பட்டு விட்டதே என்று கவலை தான் வரும்[/quote

உண்மையான உணர்வுகள்

கலைப்பேராரசு A.T.பொன்னுத்துறையின் நாடகங்களில் தாளக்காவடி புகழ் பெற்று பல இடங்களில் மேடை ஏறியது. இன்னாடகத்தில் தன்னோடு காங்கேசன் துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்பித்த ஆசிரியர்களினையும் சேர்ந்து நடிக்கவைத்தவர் A.T.பொன்னுத்துறை.

இந்த நாடகத்தினை நான் மூன்று தடவை நாடகமாகப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

மருதனார்மடம்/சுன்னாகம் இராமனாதன் கல்லூரி, குரும்பசிட்டி சன்மார்க்க சபை, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் அல்லது நடேஸ்வராக் கல்லூரி(சிறுவனாக இருக்கும் போது பார்த்தது, இடத்தினை மறந்து விட்டேன்). 85ல் ரூபவாகினி தொலைக்காட்சிக்காக மீண்டும் இன்னாடகத்துக்கு பயிற்சியில் நானும் காவடி ஆடும் சிறுவனாக பயிற்சியில் கலந்து கொண்டேன். பிறகு இடம்பெயர்வு காரணமாக நாடகம் தயாரிக்கப்படாமல் கைவிடப்பட்டது

எனது ஊருக்கு போக வேண்டும் போல் இருக்கு.

அம்மாவிடம் கேட்டு பேச்சு வாங்கினன்..

"போய் வந்து 7 மாசம் கூட ஆகவில்லை..அதற்குள் போவணுமா?? மார்க் வரட்டும் முதலில்"

உங்களால் எனக்கு பேச்சு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊருக்கு போக வேண்டும் போல் இருக்கு.

அம்மாவிடம் கேட்டு பேச்சு வாங்கினன்..

"போய் வந்து 7 மாசம் கூட ஆகவில்லை..அதற்குள் போவணுமா?? மார்க் வரட்டும் முதலில்"

உங்களால் எனக்கு பேச்சு :lol:

புள்ளிகள் என்ற அழகிய தமிழ் வார்த்தை உங்களுக்குத் தெரியாதா தூயா

Apple க்கு யாராச்சும் தமிழில் எப்படிச் சொல்வதென்று சொல்லுங்களேன்.....:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆப்பிள்" என்று சொல்வார்கள். இது எமது நாடுகளில் முன்னர் இல்லாதபடியினால் அப்படியே அழைக்கிறார்கள்.

England - இங்கிலாந்து என்போம் ஆனால் London - இலண்டன் என்றுதானே அழைப்போம். அப்படியென்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் "புள்ளிகள்" என்ற அழகான தமிழ்ச்சொல் "மார்க்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இருக்கையில் ஏன் பாவிக்கக்கூடாது?

ஒரு தமிழ்த்திரைப்பட இயக்குநர் ஒரு பாடலாசிரியர் எழுதிய பாடலைப் பார்த்துவிட்டு "ஏனையா "பிரட்" (Bread) என்ற அழகான தமிழ்ச்சொல் இருக்கும்போது அதனைப் "பாண்" என்று எழுதுகிறீர்கள்?" என்று கேட்டாராம்.

இது எப்படியிருக்கு?

நன்றி ஆசிரியரே...

ஒரு 7 வயதுச்சிறுவன் அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கும்போது

''அ'' வுக்கு Apple என்று சொல்லலாமா எனக் கேட்டார் நான் இல்லை அது ஆங்கிலச்சொல் அதனால் ''அ'' வுக்கு அம்மா தான் சரியானதெனச் சொன்னேன்..''A'' for ''Apple'' என்றுதானே சொல்வார்கள் அப்படி என்றால் ''Apple'' க்குத் தமிழ் என்ன ? என்று என்னைக் கேட்டார் எனக்கு புரிய வைக்க முடியவில்லை...அசடு வழிந்தேன் :D அதனால்தான்....இங்கு கேட்டேன் ..சில நேரங்களில் சிறுவர்களின் கேள்விகள் சிந்திக்க வைப்பதுண்டு.

இதில் புள்ளிகள் எனப் போடச்சொன்னதற்காக கேட்கவில்லை

ம்ம் இந்த கேள்வியை நானும் யோசித்து பார்த்திருக்கன் யார்கிட்டவோ யாழ் மெம்பர்ஸ் கிட்டவே கேட்டதா ஞாபகம் யாருட்ட கேட்டன் எண்டு தெரியல....!

விளக்கத்துக்கு நன்றி செல்வமுத்து அங்கிள்...... அப்படியே இந்த பிறந்தநாள் க்கு கட்டுற "பலூண்ஸ்" களுக்கு என்னவென்று தமிழ்ல சொல்லுறது அதையும் முடிந்தால் சொல்லுங்க....! :roll: :roll:

  • தொடங்கியவர்

எனது ஊருக்கு போக வேண்டும் போல் இருக்கு.

அம்மாவிடம் கேட்டு பேச்சு வாங்கினன்..

"போய் வந்து 7 மாசம் கூட ஆகவில்லை..அதற்குள் போவணுமா?? மார்க் வரட்டும் முதலில்"

உங்களால் எனக்கு பேச்சு :lol:

எனக்கும் ஆசைதான் ஊருக்குப்போக :roll: :lol:

  • தொடங்கியவர்

ம்ம் இந்த கேள்வியை நானும் யோசித்து பார்த்திருக்கன் யார்கிட்டவோ யாழ் மெம்பர்ஸ் கிட்டவே கேட்டதா ஞாபகம் யாருட்ட கேட்டன் எண்டு தெரியல....!

விளக்கத்துக்கு நன்றி செல்வமுத்து அங்கிள்...... அப்படியே இந்த பிறந்தநாள் க்கு கட்டுற "பலூண்ஸ்" களுக்கு என்னவென்று தமிழ்ல சொல்லுறது அதையும் முடிந்தால் சொல்லுங்க....! :roll: :roll:

அனித்தா நல்ல கேள்வி கேட்டிர்கள். இதை கண்டு பிடித்தது வெளிநாட்டவர் அவர்கள் இட்ட பெயர்தான் பலூன் அதை நாங்களும் தமிழில் பலூன் என எழுதுகின்றோம். கட்டுமரம் என்பது தமிழர்களுடய கண்டுபிடிப்பு ஆங்கில அகராதி பாருங்கள் அதன் பெயர் கட்டுமர என்று போட்டு இருப்பார்கள். சில தமிழ் வல்லுனர்கள் வெளிநாட்டுகண்டு பிடிப்புக்கு தமிழில் பெயர்வைத்து இருக்கிறார்கள் உதாரணமாக குமிழ்முனைப்பேனா, கணனி,மின் விசிறி இப்படியான பல பெயர்கள் உண்டு. தமிழில் நிறைய பிறமொழிக்கலப்புக்கள் உண்டு. என்னைப்பொறுத்தவரையில் பழயன கழிதலும் புதியன புகுதலும் மரபு என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஆனால் கூடியவரையில் சுத்தமான தமிழில் எழுதுவது மிகவும் அழகாக இருக்கும். திரு கந்தப்பு நல்ல தமிழில் புள்ளிகள் என்று சொன்னார் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.