Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மீது பாலியல் வன்முறை" - ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச்

Featured Replies

இலங்கைப் பாதுகாப்புப் படையினர் , விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்பட்டு , போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, சர்வதேச மனித உரிமைக் குழுவான, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியிருக்கிறது.


இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை ஒன்றில், 2006லிருந்து 2012ம் ஆண்டு வரை, இலங்கை அரசின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட்தாக்க் கூறுகிறது.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை கிரிமினல் விசாரணைகளை நட்த்தவேண்டும் என்றும் அது கூறுகிறது.

 

இலங்கை படையினரால் நட்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் 2006க்கு பின்னரான கால கட்ட்த்தில் மிகவும் அதிகரித்த்தாக அந்த அறிக்கை கூறுகிறது.

 

இதில் பெரும்பான்மையான வன்முறைகள் அரசியல் ரீதியான நோக்கங்கள் கொண்டவை என்றும் அது கூறுகிறது.

 

இது குறித்து 75 சம்பவங்களை , ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் , ஆராய்ந்திருப்பதாக்க் கூறுகிறது. இதில் பாதிக்கப்பட்ட 31 ஆண்கள், 41 பெ\ண்கள் மற்றும் மூன்று சிறார்களிடம் அது ரகசியமாக விசாரணைகளை நட்த்தியிருப்பதாகவும் கூறுகிறது.

 

இந்த விசாரணைகள் ஒரு வருட காலகட்டத்தில், ஆஸ்திரேலியா, ஐக்கிய ராச்சியம், இந்தியா, ஜெர்மனி மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட இந்த நபர்களிடையே நட்த்தப்பட்ட்தாக அது கூறுகிறது.

 

பாலியல் வல்லுறவை, இலங்கைப் படையினரும் போலிசாரும், போரின் போதும் போருக்குப் பின்னரும், விடுதலைபுலிகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு ஒரு சட்டவிரோதமான ஆயுதமாகவே பயன்படுத்தினர் என்று அது கூறுகிறது.

 

இந்த ஆய்வு, அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக, முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது

விடுதலையான நபர்களிடையே மட்டுமே நட்த்தப்பட்ட்தாகவும், தற்போதும் அரசின் சிறைகளில் இருப்பவர்களின் நிலை மிகவும் கவலை அளிப்பதாகவே இருப்பதாகவும் அது கூறுகிறது.

 

இந்தக் குற்றச்செயல்களில் அரச படையினர் மற்றும் போலிசார் தவிர, அரசுக்கு ஆதரவான இணை ராணுவக்குழுக்களும் ( ஆயுதக்குழுக்கள்) ஈடுபட்டனர் என்று நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் அடிப்படையில் தெரியவருவதாக அது கூறுகிறது.

 

 

இந்த எல்லா சம்பவங்களிலும் , பாலியல் வன்முறை தவிர, இவர்கள் மற்ற வகை சித்ரவதைகள், மனித கண்ணியத்துக்கு கீழான வகையில் நட்த்தப்படுதல் போன்றவற்றுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அது கூறியது.

 

இலங்கை அரசு இந்த சம்பவங்க்ள் குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படகூடிய நியாயமான முறையில் விசாரணைகளை நட்த்தி, சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவேண்டும் என்று அது கூறுகிறது.

 

மேலும், குற்றச்சாட்டுக்கள் பதியப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்ப்வர்களை அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் , மனித உரிமைக்குழுக்களுக்கு நாட்டின் வட பகுதிக்கு செல்ல அனுமதி தரவேண்டும், அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அது முன்வைத்திருக்கிறது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130226_slhumanrights.shtml

  • தொடங்கியவர்

Sri Lanka: Rape of Tamil Detainees - HRW



Sri Lankan security forces have been using rape and other forms of sexual violence to torture suspected members or supporters of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Human Rights Watch said in a report released today. While widespread rape in custody occurred during the armed conflict that ended in May 2009, Human Rights Watch found that politically motivated sexual violence by the military and police continues to the present.

 

The 141-page report, “‘We Will Teach You a Lesson’: Sexual Violence against Tamils by Sri Lankan Security Forces,” provides detailed accounts of 75 cases of alleged rape and sexual abuse that occurred from 2006-2012 in both official and secret detention centers throughout Sri Lanka. In the cases documented by Human Rights Watch, men and women reported being raped on multiple days, often by several people, with the army, police, and pro-government paramilitary groups frequently participating.

 

“The Sri Lankan security forces have committed untold numbers of rapes of Tamil men and women in custody,” said Brad Adams, Asia director at Human Rights Watch. “These are not just wartime atrocities but continue to the present, putting every Tamil man and woman arrested for suspected LTTE involvement at serious risk.”

 

http://www.hrw.org/news/2013/02/26/sri-lanka-rape-tamil-detainees

மனித உரிமைகள் காப்பகத்தின் தமிழ் அறிக்கை

http://www.hrw.org/node/113915


 

“பாலியல் வல்லுறவு பலியானவர்களுக்கான மருத்துவ மற்றும் உளவியல்
சிகிச்சைகளையும் அரசாங்கம் முடக்கியது” என அடம்ஸ் கூறினார். “வடக்கில்
அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகித்
தப்பிப்பிழைத்தவர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள்
வழங்குகின்ற சேவைகளையும் இராணுவம் சூட்சுமமான முறையில் தடைசெய்துள்ளது”.


போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் அல்லது போர் முடிவுக்குப் பின்னர்
சிறையில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள்  தொடர்பில் ஆயுதப் படைகளில்
எவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படவில்லை என்பதுடன் குற்றம் செய்தவர்கள்
குற்றத்திற்கு தண்டனையின்றி சுதந்திரமாகவிருக்கின்றனர் எனவும் மனித
உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.


தாங்கள் அரச பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் என்பதை மறைப்பதற்கு
இராணுவமும் போலீஸும் மிகக் குறைந்தளவு முயற்சியையே மேற்கொண்டனர் என
நேர்காணப்பட்டவர்கள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்கள்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (C.I.D.)பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு
(T.I.D.) போன்ற விசேட பிரிவுகள் உள்ளிட்ட இராணுவத்தினர், இராணுவத்
துப்பறியும் பிரிவினர் மற்றும் போலீஸ் முதலிய தரப்புகள் இவர்களில்
அடங்குகின்றனர். இந்த அரச திணைக்களங்களின் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்தும்
தகாத முறையில் விசாரணைகளை நடாத்தினர் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும்
அறிக்கையிட்டனர். இவர்கள் துஷ்பிரயோகம் நிகழ்ந்த குறித்த முகாம்களையும்
தடுப்பு ஸ்தலங்களையும் அடையாளம் காட்டினார்கள்.


பாலியல் வன்முறையைப் பிரயோகித்தல் என்பது ஒரு சாதாரண கீழ்மட்டத்து
நிகழ்வாகவோ அல்லது அயோக்கியத்தனமான பாதுகாப்புப் படையினர் சிலரின்
செயல்களாகவோ காணப்படவில்லை, ஆனால் மாறாக உயர் மட்ட அதிகாரிகளினால் அறிந்த
அல்லது அறிந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டியதான  பரந்தளவில் நிகழ்ந்த வழக்கமான
ஒரு செயலாக காணப்பட்டுள்ளதையே இந்தச் சம்பவங்கள் சுட்டிக்காட்டுவதாக மனித
உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. மனித உரிமைகள் கண்காணிப்புக்
குழுவுக்கு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் இலங்கையின் வட பிராந்திய யுத்தகளப்
பகுதிகளில் மாத்திரமன்றி தலைநகரமான கொழும்பிலுள்ள இராணுவ முகாம்களிலும்,
போலீஸ் நிலையங்களிலும் அதே நேரம் யுத்த பிரதேசங்களுக்கு தூரத்திலுள்ள
தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் ஏனைய இடங்களிலும் நிகழ்ந்தன.
கொழும்பிலுள்ள C.I.D  தலைமை அலுவலகத்தின் கெடுதிக்குப் பெயர்போன நான்காவது
மாடியும் T.I.Dஆறாவது மாடியும் இவற்றில் அடங்கியிருந்தன.

 

  • கருத்துக்கள உறவுகள்

v-humanrightswatch.jpg

போரின் போதும் போருக்குப் பின்னரும், விடுதலைப் புலிகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கான, ஒரு சட்டவிரோத ஆயுதமாக, பாலியல் வல்லுறவை சிறிலங்கா ஆயுதப்படையினரும் காவல்துறையினரும், பயன்படுத்தியதாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

 

சிறிலங்காப் படைகளின் பாலியல் கொடுமைகள் தொடர்பான, 75 பேரின் சாட்சியங்கள் அடங்கிய விரிவான 140 பக்க அறிக்கையை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற சந்தேகிக்கப்பட்ட, போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை, சிறிலங்கா ஆயுதப் படையினர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

2006ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டு வரை, சிறிலங்கா அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் இவ்வாறு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சிறிலங்கா படையினரின் பாலியல் வன்முறைகள், 2006ம் ஆண்டுக்குப் பின்னர், மிகவும் அதிகரித்ததாக கூறும் இந்த அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா குற்றவியல் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட 31 ஆண்கள், 41 பெண்கள் மற்றும் 3 சிறார்களின் சாட்சியங்களைத் தாம் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ள மனிஉரிமைகள் கண்காணிப்பகம், இதில் பெரும்பான்மையான வன்முறைகள் அரசியல் ரீதியான நோக்கங்கள் கொண்டவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

அவுஸ்ரேலியா, பிரித்தானியா, இந்தியா, ஜேர்மனி, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சிறிலங்கா அரசின் அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆய்வு கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையானவர்களிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதும் சிறிலங்கா அரசின் சிறைகளில் இருப்பவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பாலியல் குற்றச்செயல்களில் சிறிலங்கா அரசபடையினர் மற்றும் காவல்துறையினர் தவிர, அரசஆதரவு துணை இராணுவக் குழுக்களும் ஈடுபட்டதாக நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் மூலம் தெரியவருவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட கூடிய நியாயமான முறையில் விசாரணைகளை நடத்தி, சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்க வேண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. 

அத்துடன், குற்றச்சாட்டுக்கள் பதியப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனிதஉரிமைக் குழுக்களுக்கு நாட்டின் வடபகுதிக்கு தடையின்றிச் செல்வதற்கு அனுமதி தரவேண்டும் என்றும் அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Let's see what ban ki moon is going to say !!

  • கருத்துக்கள உறவுகள்
ruwan%20wanikasooriya_CI.jpg

 

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் சந்தேக நபர்களை பாலியல் ரீதியாக படையினர் துன்புறுத்தியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைப் பாதுகாப்புப் படையினர் எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாலியல் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சில படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், ஆதாரங்கள் இன்றி இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைப் படையினர் கடுமையான ஒழுக்க விதிகளை பின்பற்றி வருவதாகவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவ்வாறு குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

தோழமையுடன் தமிழ்ச்செல்வன் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள் குறித்து மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடம்பெற்றுள்ள 75 பேரின் சாட்சியங்களில், மூவரினது சாட்சியங்களை இங்கு பதிவிடுகிறேன்... சாட்சியம் 01 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பிலுள்ள தனது வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிடித்துச் செல்லப்பட்ட 31 வயதான தமிழ்ப்பெண், “கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு பணியகத்துக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். எனக்கு குடிக்க நீரோ, உணவோ தரப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்த ஒரு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் என்னைப் படம் பிடித்தனர். எனது கைவிரல் அடையாளங்களை பதிவுசெய்தனர். வெற்றுத்தாளில் எனது கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டனர். எனது கணவர் பற்றிய எல்லா விபரங்களையும் தாம் வைத்துள்ளதாகவும், அவர் எங்கே பதுங்கியுள்ளார் என்ற விபரத்தை கூறிவிடுமாறும் அவர்கள் என்னிடம் கேட்டனர். எனது கணவர் வெளிநாடு சென்று விட்டதாக அவர்களுக்கு கூறினேன். அவர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக, அவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர். பல்வேறு பொருட்களால் நான் தாக்கப்பட்டேன். விசாரணையின் போது, வெண்சுருட்டினால் சுடப்பட்டேன். மணல் நிரப்பிய குழாயினால் தாக்கப்பட்டேன். அடித்துக் கொண்டே எனது கணவர் பற்றிய விபரங்களை கேட்டனர். ஒரு இரவில் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டேன். சாதாரண உடையில் இரண்டுபேர் எனது அறைக்குள் வந்தனர். எனது ஆடைகளை அவிழ்த்து விட்டு இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். அவர்கள் சிங்களத்தில் பேசினர். வேறு எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது இருளாக இருந்ததால், அவர்களின் முகங்களை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.” என்று விவரிக்கிறார். சாட்சியம் 02 2012 ஓகஸ்ட் மாதம் பிடிக்கப்பட்ட இன்னொரு 23வயது இளைஞர். அவர்கள் எனது கண் கட்டை அவிழ்த்து விட்டபோது, நான் ஒரு அறைக்குள் இருப்பதை கண்டேன். அங்கு மேலும் நால்வர் இருந்தனர். நாற்காலி ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டேன். அண்மையில் வெளிநாடு சென்றதற்கான காரணம் என்ன என்று கேட்டனர். என்னைக் கட்டி வைத்து அடிக்கத் தொடங்கினர். மின் வயரினால் அடித்தனர். வெண்சுருட்டினால் சுட்டனர். பெற்றோல் நிரப்பிய பொலித்தீன் பைக்குள் அமுக்கினர். பின்னர் அன்றிரவு, நான் சிறிய அறை ஒன்றுக்குள் கொண்டு செல்லப்பட்டேன். தொடர்ந்து மூன்று நாட்களாக நான் பாலியல் ரீதியாதத் துன்புறுத்தப்பட்டேன். முதல் நாள் இரவு ஒருவர் தனியாக வந்து வல்லுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் இரண்டு ஆண்கள் எனது அறைக்கு வந்தனர். அவர்கள் என்னை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியதுடன் வாய் வழி உறவு வைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்தித்தனர். பாலியல் வல்லுறவுகளை அடுத்து எனக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறும் ஆவணத்தில் நான் கையெழுத்திட்டுக் கொடுத்தேன் என்று விவரிக்கிறார். சாட்சியம் 03 2009 மே மாதம் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மற்றொரு இளைஞர். “இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்புறம் பிடித்திருக்க, ஒருவர் எனது ஆணுறுப்பைப் பிடித்து அதனுள் உலோகத்துண்டு ஒன்றை செலுத்தினார். எனது ஆணுறுப்பினுள் அவர்கள் சிறிய உலோகக் குண்டுகளை செலுத்தினர். சிறிலங்காவில் இருந்து நான் தப்பி வந்த பின்னர் அவை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.” இதற்கு ஆதாரமான மருத்துவ அறிக்கையும் உள்ளது என்று விவரிக்கிறார். இதுபோன்ற சித்திரவதைகள், பாலியல் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் பலரும் தமக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக ஒப்புக்கொள்ளும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாறு சாட்சியமளித்துள்ளவர்கள் எவரும் முறைப்படியாக விடுதலையாகவில்லை. அதிகாரிகளுக்கு உறவினர்கள் இலஞ்சம் கொடுத்தத்தை அடுத்து தப்பிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்... நன்றி -முகப்புத்தகம்

  • கருத்துக்கள உறவுகள்



இந்த விடியோ பற்றி என்ன சொல்லப்போகிறார் 

Edited by தமிழரசு

:( :( :(

இறந்த பெண்கள் மீதே பாலியல் வன்புணர்வு செய்த இலங்கை இராணுவத்தினர் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மீது பாலியல் வல்லுறவை, சித்திரவதைகளை மேற்கொள்வார்கள் என்பது சொல்லி தான் தெரிய வேண்டுமா?

 

இதற்கெல்லாம் எப்பொழுது தான் தீர்வு கிடைக்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை எப்பொழுது போன்ற கேள்விகளுக்கு பதிலில்லை. :(

  • தொடங்கியவர்

 2006ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டு வரை, சிறிலங்கா அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் இவ்வாறு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த கொடுமையை பாருங்கள் . இலங்கை ராணுவம் பெண்களை மட்டும் வன்புணர்வு செய்யவில்லை ஆண்களையும் வன்புணர்வு செய்துள்ளது !

 

 

உலகில் எங்கும் காண முடியாத கொடுமையை இந்த வெட்கம்கெட்ட நாடு செய்துள்ளது . இப்படியான போற்குற்றங்களையும் படுகொலைகளையும் தொகுத்து சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமை கண்காணிப்புக் குழு 141 பக்கம் அறிக்கை தயார் செய்து வெளியிட்டுள்ளது . இதை விட சிறந்த சாட்சி ஆவணம் வேறொன்று தேவை இல்லை!

 

- முகநூல்

Edited by nunavilan

மேலும் இந்த ஆவணம், இவற்றிலிருந்து உயிருடன் தப்பி வெளிநாடுகளுக்கு ஒட முடிந்தவர்களை பற்றியது மட்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். மற்றவர்களின் நிலையை பற்றி அவர்கள்  ஊகத்துக்கு விட்டுவிடுகிறார்கள்.

  • தொடங்கியவர்

நடந்த பாலியல் வன்முறைகள் - போர்க்குற்றங்களின் ஒரு பகுதி

 

தொடரும் பாலியல் வன்முறைகள்  - இனவழிப்பின் ஒரு பகுதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

UK is deporting 65 Tamils on Thursday 28th by charter flight, including 2 female & w male rape victims (sorry. I can't in Tamil on google tamil on my phone. Don't know why)

http://m.freedomfromtorture.org/news-blogs/7104

Damning evidence obtained by Freedom from Torture confirms that since the end of the Sri Lankan civil war, the UK has granted refugee status to at least 15 people who were previously removed from the UK to Sri Lanka where they claim to have been tortured or otherwise harmed.

http://m.freedomfromtorture.org/sites/default/files/documents/FOI%20Response.pdf

http://www.channel4.com/news/britain-to-deport-tamils-despite-evidence-of-torture

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.