Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசுக்கு விழுந்தது பேரிடி-பொதுநலவாய அமைப்பின் இணையத்திலிருந்து இலங்கையின் அனுசரனை இலச்சினை நீக்கம்!

Featured Replies

 சிறீலங்கா அரசுக்கு விழுந்தது பேரிடி-பொதுநலவாய அமைப்பின் இணையத்திலிருந்து இலங்கையின் அனுசரனை இலச்சினை நீக்கம்!             

 

v-mahindarukuperaddi%20%284%29.jpgphoto.gifபொதுநலவாய அமைப்பு தனது உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இதுவரை காட்சிப்படுத்தியிருந்த 'CHOM 2013, SriLanka" இலங்கையின் அனுசரனை இலச்சினையை நீக்கிவிட்டு, 'CHOGM 2011 ,AUSTRALIA" என்ற இலச்சினையை காட்சிப்படுத்தியுள்ளனர்.



 

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கடந்த பெப்ரவரி 10-13 திகதிகளில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

v-mahindarukuperaddi%20%282%29.jpgஅச்சமயம்,
திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பின் தலைவர்களின் மாநாடு வருகிற
நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால்
சர்மாவை மேற்கோள் காட்டி உத்தியோகபூர்வ அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

எனினும்,
'இலங்கையில் பொதுநலவாய அமைப்புக்களின் தலைவர்களின் மாநாட்டை நடத்த
உத்தியோகபூர்வமான முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என சர்மா
தெரிவித்துள்ளார்" என பெப்ரவரி13ஆம் திகதி பொதுநலவாய அமைப்பின் செயலாளர்
நாயகத்தின் அலுவலக, தொடர்பாடல், மக்கள் தொடர்புப் பிரிவின் உயரதிகாரியான
உத்தியோகபூர்வ பேச்சாளர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ராஜதந்திரத் தொடர்புகள் வேறுவிதமாக தெரிவிக்கின்றன.

வெளிவிவகார
அமைச்சின் சார்பில் செயலாளர் கருணாதிலக அமுனுகம மற்றும் ஜனாதிபதியின்
பிரத்தியேகச் செயலாளர் சஜின் வாஸ் குணவர்தனவின் தலைமையில் செயலாளர் நாயகம்
சர்மாவை தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று கடந்த 11ஆம் திகதி காலை 10.00
மணிக்கு நடைபெறவுள்ளதாக CHOGM ஏற்பாட்டுக் குழுவுக்கு
அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்று காலை 10.15வரை அமைச்சர் சசின்வாஸ்
குணவர்தனவோ இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் வேறு எவருமோ
அச்சந்திப்புக்காக சமூகமளித்திருக்கவில்லை. எனினும் செயலாளர் நாயகம் சர்மா,
பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகள் ஐந்து பேருடன் சரியான நேரத்திற்கு
சமூகமளித்திருந்தார்.

எவ்வாறெனினும், அமைச்சின் உயரதிகாரிகள்
வீடியோ காட்சிகள் மூலம் செயலாளர் நாயகத்தை தெளிவுபடுத்த தயாரானபோதும் அவரது
நடவடிக்கைகள் சாதகமானதாக அமைந்திருக்கவில்லை.

இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சரோ பிரதி அமைச்சரோ அன்றி குறைந்த பட்சம் வேறு எந்தவொரு அமைச்சரேனும் கலந்து கொண்டிருக்கவில்லை.

அதேநேரம்,
'செயலாளர் நாயகம் சர்மா பொதுநலவாய அமைப்புகளின் தலைவர்களின் மாநாட்டை
இலங்கையில் நடத்த பரிந்துரை செய்துள்ளார்" என வெளிவிவகார அமைச்சின்
அதிகாரிகளை மேற்கோள் காட்டி குறுந்தகவல் செய்திச் சேவையொன்று
அறியத்தந்திருந்தது.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19193:2013-02-26-16-08-42&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

இந்த செய்தி சரியாக எழுதப்பட்டில்லை.  இலச்சினை நீக்கப்பட்ட நாள், நேரம் குறிப்பிடவில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியில் எதுவித உண்மையும் இல்லை

  • தொடங்கியவர்

இணையவன் இணைத்திருப்பது பழைய செய்தி அவர்களில் தளத்தில் தேடக்கூடியதாகஇருக்கும் புதிய செய்தி  2/11/2013 அறிக்கை. இது யாழில் ஏற்கவே இந்த மாத தொடக்கத்தில் பதியப்பட்டது.

 

http://www.chogm2013.org/ இது பதியப்பட்ட நாளை தெரியவில்லை.

 

http://en.wikipedia.org/wiki/Commonwealth_Heads_of_Government_Meeting_2013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.