Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் கடலில் சண்டை

Featured Replies

மன்னார் கடலில் சண்டை

மன்னார் கடற்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய மோதலில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். 55 நிமிட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு போராளி வீரச்சாவைடந்தார். இரு போராளிகள் காயமடைந்தனர்.

  • தொடங்கியவர்

Rebels 'attack' Sri Lanka navy

Tamil Tiger rebels have attacked a Sri Lankan naval patrol off the country's west coast, the military says.

Three Sri Lankan sailors were wounded, the navy said. The rebels said one of their fighters had died and blamed the navy for provoking the clash.

Navy spokesman DKP Dassanayake said about 20 rebel small craft had attacked two naval vessels near Kalpitiya, about 140km (86 miles) north-west of Colombo.

Worsening violence has claimed about 700 lives in Sri Lanka this year.

Commander Dassanayake said the rebels attacked near a small naval base by a lagoon in Kalpitiya.

"As they approached, our craft went and engaged with them," he told Reuters news agency.

"One of our craft got damaged. Three sailors were injured. Two of their boats were destroyed."

Air support was then called in, he said, and the rebels repulsed.

The rebels said they had sunk the navy vessel.

"Our boats were moving in that area when the Sri Lankan navy interrupted them and opened fire," rebel spokesman Daya Master told Reuters news agency.

-BBC

  • தொடங்கியவர்

இன்று காலை 11.45 மணியளவில் புத்தளம் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் கடற்புலிகளிற்கும் சிறீலங்கா கடற்படைக்கும் இடையே நடைபெற்ற நேரடி மோதலில் சிறீலங்கா கடற்படையினர் நீரூந்து விசைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் போராளி ஒருவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

குறித்த கடற்பரப்பில் பயணத்தில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படை தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்பிற்குமிடையே நேரடி மோதல் நடைபெற்றது.

இதனால் சிறீலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்று கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறீலங்கா கடற்படைக்கு ஏற்பட்ட உயரிழப்புக்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடற்புலிகளின் பதில் தாக்குதலில் சிறிலங்கா கடற்படை கலம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (28.06.2006) 11.25 மணிக்கு புத்தளம் கற்பிட்டிக்கும் குதிரைமலைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் நடந்தது.

போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் கலங்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

கடற்புலிகளின் பதில் தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கலம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

- சங்கதி

இதில் ஐந்து படையினர் பலி என்று புலிகள் தரப்பு செய்திகள் சொல்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

7 படையினர் பலியானதாக சங்கதி தரும் புதிய இணைப்புச் செய்தி தெரிவிக்கின்றது!

----------------------------------------------------------------------------------------

இன்று காலை 11.45 மணியளவில் புத்தளம் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் கடற்புலிகளிற்கும் சிறீலங்கா கடற்படைக்கும் இடையே நடைபெற்ற நேரடி மோதலில் சிறீலங்கா கடற்படையினர் நீரூந்து விசைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சிறீலங்கா கடற்படையைச் சேர்ந்த ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

(மேலதிக விபரம் 2வது இணைப்பு)

இந்த மோதலில் போராளி ஒருவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

குறித்த கடற்பரப்பில் பயணத்தில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படை தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்பிற்குமிடையே நேரடி மோதல் நடைபெற்றது.

இதனால் சிறீலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்று கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மன்னார் மாவட்டத்தின் எமது நிர்வாக கடற்பரப்பில் வழமையான கடற்பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் படகு ஒன்றின் மீது தமிழீழ கடல் இறைமையையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறும் வகையில் நீர்உந்து விசைப்படகுகளில் வந்த சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

இன்று புதன்கிழமை காலை 11.25மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து சுமார் 55 நிமிட நேரம் நீடித்த கடற்சமரில் தாக்குதலை நடத்த வந்த சிறிலங்கா கடற்படையின் நீர்உந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டது. அதிலிருந்த ஐந்து சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

கடற்புலிகளின் கடும் எதிர்த் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத ஏனைய சிறிலங்கா கடற்படை படகுகள் சேதமடைந்த மற்றைய படகு ஒன்றையும் இழுத்துக்கொண்டு அவ்விடத்திலிந்து பின்வாங்கிச் சென்றன.

இம் மாதத்தில் சிறிலங்கா கடற்படையினர் தமிழீழ கடற்பரப்பில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பலவீனப்படுத்தும் பாரிய மோதல்களை ஏற்படுத்துவது இத்தோடு மூன்றாவது முறையாகும்.

-சங்கதி-

ம்.. சூசையின்ரை அறிக்கை சொல்லுற சங்கதி வேறை.. :P

அப்படி என்ன சொல்லுது தாத்தா..தெளிவாச் சொல்லுங்கோவன். விளங்கேல்ல..! :wink: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒண்டுமில்லை. குருவி!

கதை ஒண்டு விடப் போகின்றாராம்! அதுக்கு தான் சூசையண்ணையை இழுக்கின்றார். அண்ணரின் கரெட்டரையே புரிய மாட்டேன் என்கின்றீர்களே! :wink:

அது ஒண்டுமில்லை. குருவி!

கதை ஒண்டு விடப் போகின்றாராம்! அதுக்கு தான் சூசையண்ணையை இழுக்கின்றார். அண்ணரின் கரெட்டரையே புரிய மாட்டேன் என்கின்றீர்களே! :wink:

அதுதான் கேட்டுப் பாத்தம். தாத்தா நல்லா கதை விடுவார். சுவாரசியமாவும் இருக்கும் சுகமில்லாததுகள் போலவும் இருக்கும். :P :)

அதுதான் கேட்டுப் பாத்தம். தாத்தா நல்லா கதை விடுவார். சுவாரசியமாவும் இருக்கும் சுகமில்லாததுகள் போலவும் இருக்கும். :P :)

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

சுகமில்லாததுகள் கதைக்கின்ற விதம் சுவையாகவும், கேலியாகவும் தானே இருப்பது. ஆனால் அதற்காகப் பரிதாபப் படுங்களப்பா!! :cry: :cry:

வெற்றிக்கொண்டாட்டம் ஒருபக்கம் ஒவ்வொரு கடலடிககுப் பிறகும் இந்தியநேவி அவங்களுக்கு உதவிசெய்யிதெண்ட புராணம் மறுபக்கம்.. இது இங்கையுள்ள விசரருக்கு விளங்கேல்லையே எண்டு விளங்கப்படுத்தினன். வேறையொண்டுமில்லை..

:P

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவையின் காலைப் பிடிச்சுக் கொண்டு வீரம் கதைப்பவைக்கும், நீ செய்கின்றது தப்பு என்ற தெளிவாகக் கதைப்பதற்கும் வித்தியாசம் தெரியாது போல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.