Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறிவரும் யாழ். பல்கலைக்கழகம்

Featured Replies

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இப்படி மாறிவிட்டது என நினைக்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது.

 

எத்தனையோ கல்வி மகான்களை உருவாக்கும் இந்த வளாகம் இன்று 28 ஆவது பட்டமளிப்பிற்காக கூடியிருந்தது.

 

எனினும் பல்கலை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் வரவேற்பு பதாகை பிரிட்டிஷ் காரருக்கா பட்டமளிப்பு என ஒரு கணம் சிந்திக்க வைத்தது.

 

549228_610749495607078_2033136093_n(1).j

 

ஏன் இந்த மாற்றம் இது தமிழர்கள் வாழும் பகுதி அழகாக எமது தமிழ் மொழியால் பட்டமளிப்பு விழா என எழுதப்படாதமை மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது அத்துடன் அதன் வடிவமைப்புக்களும் யாழ்ப்பாணக் கலாச்சாரங்களைக் காட்டுவதாக காணப்படவில்லை.


அத்துடன் நாட்டில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்த பட்டிருக்கும் நிலையில் பல்கலைகழக வாயிலில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்று பாதகை தனியே ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன் அங்கு கட்டப்பட்டிருந்த தென்னை ஓலைகளால் செய்யப்பட்ட தோரணங்கள் பல மரண வீட்டிற்கு கட்டப்பட்டதுபோல தலைகீழாக கட்டப்பட்டிருந்தன.


துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கூறினார் இந்த பட்டமளிப்பு விழா அவசர அவசரமாகவே ஏற்பாடு செய்யப்பட்டது என்று எனவே அவரின் கூற்றுக்கு இது சரியாகவே உள்ளது. எனினும் இது ஒரு சிறிய நிகழ்வு அல்ல பல மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள்  கூடிய இடத்தில் ஏற்பாட்டு காரர்கள் சரியான முறையில் இல்லாது விழாவினை ஏற்பாடு செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இவர்கள் ஆயிரம் தான் கூறினாலும் தற்போது யாழ். பல்கலைக்கழகம் மாறி விட்டது என்ற விமர்சனக்கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்றைய தினமும் பலர் பேசிக் கொண்டதனைக் காணக்கூடியதாக இருந்தது.

http://onlineuthayan.com/News_More.php?id=681231866301398666#sthash.v3T5yOqn.dpuf

Edited by akootha

  • தொடங்கியவர்

யாருமே அடிமை இல்லை; யாழ். பல்கலை பட்டமளிப்பில் மாற்றம் 

 

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 28ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர், உபவேந்தர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற கொடி, குடை, ஆலவட்டம் முதலான ஆலாபரணங்கள் போன்றன வழமைக்கு மாறாக இம்முறை நீக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

 

 

முன்னைய ஆண்டுகளில் நடைபெற்ற பட்டமளிப்பு வைபவங்களில் வேந்தர், உபவேந்தர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற கொடி, குடை, ஆலவட்டம் முதலான ஆலாபரணங்கள் பிடிக்கப்படுவது வழக்கம் எனினும் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இந்த நடைமுறையினை நிறுத்திக் கொள்ளுமாறு பல்கலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து இம்முறை குறித்த நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.


இது குறித்து யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரிடம் கேட்டபோது,

 

ஆண்டான்- அடிமை முறையில் இருக்கக் கூடிய அடையாள சின்னமாக இருக்கும் இத்தகைய ஆலாபரணங்களை இம்முறையும் எதிர்வரும் காலங்களிலும் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாக்களில் விலக்கிக் கொள்ளுமாறு பல்கலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


அத்துடன் நிகழ்வினைச் சிறப்பிக்கும் முகமான வரவேற்பு முறைகளை பின்பற்றுமாறும் நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றனர்.

 

 http://onlineuthayan.com/News_More.php?id=273261865701815312#sthash.MyAzKFcg.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

துவாரபாலகர் இரண்டு பேர், வாசலிலை நிக்கிறதைக் காணவில்லையா, அகூதா!

 

இவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே, பல்கலைக்கழகம் தாளம் போடுகின்றது! :o  

  • தொடங்கியவர்

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை பள்ளி மாணவா்கள் பார்க்க வேண்டும்

 

ஒரு சிறுவனை அவனது தந்தை கையில் பிடித்தவாறு கொற இழுவையுடன் வேகநடையில் செல்கின்றார். அந்தச் சிறுவனோ! அப்பா...ஏன்தான் இப்படி வேகமாக ஓடுகிறீர்கள் என்று கேட்கிறான். மகனே! எங்கள் ஊரில் இன்று ஒரு பெரியவர் வந்து பேசுகிறார். அந்தப் பேச்சை நீயும் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேகம் என்கிறார் தந்தை.

 

அப்பா அவரின் பேச்சை நான் ஏன் கேட்க வேண்டும்? என்கிறான் மகன். நீயும் அவர் போல வரவேண்டும் என்பதற்கா கத்தான் என்று பதிலளித்தார் தந்தை. பெரியவரின் பேச்சை தன் மகன் கேட்க வேண்டும் என்று தந்தை நினைத்ததன் காரணமாக தமிழகம் நாவலர் நெடுஞ்செழியன் என்ற ஒரு நடமாடும் பல்கலைக்கழகத்தை பெற்றுக் கொண்டது.

 

நல்லவற்றைப் பார்ப்பது, நல்லவற்றைக் கேட்பது என்பன நல்ல சமூக உருவாக்கத்துக்கு மிகவும் அவசியமானதாகும்.

அவ்வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கத்தின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28-ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

 

பட்டமளிப்பு விழாவிற்காக யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம் விழாக்கோலம் பூண்டிருக்கும். பட்டப்படிப்பை நிறைவு செய்து பட்டத்தை பெறுகின் றவர்களிடம் இருக்கும் கல்வி அழகு அற்புதமானது. பட்டமளிப்புக்காக பல்கலைக்கழகவேந்தர், துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் என அனைவரும் கோல உடையில் மங்கல வாத்தியம், குடை, ஆலவட்டம் சகிதம் பட்டமளிப்பு விழா நடைபெறும் மண்டபத் துக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற காட்சி கல்விக்கு கொடுக்கின்ற மிக உன்னதமான கெளரவத்தை வெளிப்படுத்தி நிற்கும்.

 

இத்தகைய பட்டமளிப்பு விழாவை எங்கள் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக வளா கத்தில் நின்று பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது கல்வியின் பெருமையை மாணவர்கள் உணர்ந்து கொள்வதற்கு உதவும்.

பாடசாலை மாணவர்கள் அனைவரும் பட்ட மளிப்பு விழாவை பார்ப்பது சாத்தியமற்றதாயி னும் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற் கின்ற மாணவர்களேனும் பட்டமளிப்பு விழாவைப் பார்ப்பதற்கான ஒழுங்கு முறைகள் செய்யப்படு வது சாலச்சிறப்புடையது. இத்தகைய ஒழுங்குமுறைகள் ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவின்போதும் நடைமுறைப் படுத்தப்படுமாயின், நாங்களும் இப்படியாக வேண் டும் என்ற நல்ல சிந்தனைகள், இலக்குகள் மாண வர்களின் மனங்களில் கட்டியயழுப்பப்படும். இரா. நெடுஞ்செழியன் நாவலர் என்ற பட்டத்தை பெறுவதற்குப் பின்னணியாக இருந்ததை, அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த மகாத்மா காந்தி உண்மை பேசுவது எனச் செய்த சத்திய வாழ்வை ஒருகணம் சிந்திக்கும் போது, தொடர் நாடகங்கள், சமூகச் சீர்கேடான தக வல்கள், கையடக்கத் தொலைபேசிகளின் தொந் தரவுக்குள் சிக்கித் தவிக்கும் எங்கள் பிள்ளை களுக்கு வழிகாட்டக்கூடிய நிகழ்வுகளில் பட்ட மளிப்பு விழாவும் ஒன்றென்று கருதிச் செயற்படு வது நன்று.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=616:2013-02-26-05-03-40&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

துவாரபாலகர் இரண்டு பேர், வாசலிலை நிக்கிறதைக் காணவில்லையா, அகூதா!

 

இவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே, பல்கலைக்கழகம் தாளம் போடுகின்றது! :o  

 

உண்மை தான் புங்கை, இன்னும் எவ்வளவு காலத்திற்கு உவை எம்மண்ணை ஆட்டப் போகினம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.