Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெனிசூலா ஜனாதிபதி மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி அனுதாபங்கள் தெரிவிக்கச்சொல்லி யார் அழுதார்?

 

புலிகள் தலைவருக்கே அஞ்சலி செலுத்த வக்கில்லை. முப்பது வருடமாக போராடி மடிந்த மாவீரர்களுக்கு ஒற்றுமையாக அஞ்சலி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் என்னுமொருநாட்டு அரச தலைவருக்கு அஞ்சலி செலுத்தவே முதலில் தகுதி இருக்கின்றதா?

 

எந்த ஒரு அரச தலைவர் இறந்தாலும் உடனே அவரையும் இலங்கை அரசையும் தொடர்புபடுத்தவேண்டியது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் தமிழர் போராட்டத்தை அங்கீகரித்ததில்லை. தமிழர் பிரச்சனையை அடிப்படையாகக்கொண்டு இலங்கை அரசின் நட்புறவை முறித்தில்லை. இன் நிலையில் உலகின் அனைத்து நாட்டு அரச தலைவர்களும் உங்களுக்கு எதிரானவர்களே !

 

ஒப்பீட்டளவில் இலங்கையில் தமிழர்களின் அழிவில் சீனாவை விட இந்தியாவின் பங்களிப்பு அதிகம். அதற்கு அடுத்தபடியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மேற்குநாடுகளின் பொருளாதார ஆயுத உதவிகள் அதிகம். போரை ஆதரித்தல் பங்களித்தல் என்றதில் வெனிசூலா கியுபா போன்ற நாடுகள் கடசி இடத்திலேயே இருக்கின்றது. எந்த நாடுகள் இலங்கை அரசுடன் கூட நின்று தமிழர்களை அழித்ததோ அந்த நாடுகளில் இருந்துகொண்டு புளிச்சல் ஏவறை கருத்துக்கள்.

 

உலகின் எந்த நாடும் அங்கீகரிக்க முடியாதளவு சமூகச் சிதைவை கொண்டுள்ளனர் தமிழர்கள். தற்கொலைத் தாக்குதல் உட்பட்ட பயங்கரவாதத்தின் முன்னோடிகள் என்று உலகத்தின் அவிழ்க்க முடியாத சிக்கலில் போராட்டத்தை உட்படுத்திய தமிழர்கள். கடந்த காலங்களிலும் எந்த ஒரு நாடும் அங்கீகரித்ததில்லை இனியும் மகிந்த கோத்தா போன்ற சிங்கள அரச தலமைகளை அப்புறப்படுத்தி அல்லது நிர்ப்பந்தங்களுக்க உட்படுத்தி  ஓரளவு ஜனநாயகத் தன்மையுள்ள தலமைகளை ஏற்படுத்தி இலங்கையுடன் தொடர்ந்து நட்புறவை பேணுவது ஒன்றே உலகின் ஏனைய நாடுகளுக்கு உள்ள ஒரே தெரிவு. அந்த வகையில் நீங்கள் அஞ்சலி செலுத்தக்கூட உலகில் எந்தத் தலைவரும் இல்லை.

 

 

டக்ளஸ் செத்தால் அஞ்சலி செலுத்தலாமோ?   :unsure:  :unsure:  :rolleyes:  :rolleyes:

எனக்கு தமிழகத்தில் இருந்து ஒரு நண்பர் முகப்புத்தகத்தில் அனுப்பிவைத்த கட்டுரை இது
 
சாவேஸ் ஏன் ராஜபட்சே பக்கம் நின்றார்?

(நீண்ட பதிவு இது. உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதற்கு வருந்துகிறேன். ஆனால் முக்கியமான பதிவாக இருக்கும் என நம்புகிறேன்.)

மறைந்த வெனிசூலா அதிபர் ஹூகோ சாவேஸுக்கு அஞ்சலி செலுத்தப்போய் சில நண்பர்களிடம் மாட்டிக்கொண்டேன். போயும் போயும் ராஜபட்சேவுக்கு ஆதரவளித்த, இனப்படுகொலையின்போது ஈழமக்களுக்கு எதிராக நின்ற ஒரு அதிபரின் மரணத்துக்கு நாம் ஏன் இரங்கல் தெரிவித்தாகவேண்டுமா
ம் என்று அந்த நண்பர் கேட்டார். இன்று காலை ஃபேஸ்புக்கில் பார்த்தால் பலரும் இவ்வாறான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள் . இதுபோன்றதொரு கேள்விக்கு நேற்று திருமுருகன் காந்தி மிகச்சிறந்த ஒரு பதிலைப்போட்டிருக்கிறார்.

தமிழீழத்துக்கு எதிராக சாவேஸ் ஏன் நின்றார்? இந்த சந்தர்ப்பத்தில் கொஞ்சம் உலக அரசியலைப் பேசுவோமா? 

நாம் வாழும் இந்த பொன்னான காலத்தில் உலகில் நிலவும் அவலமான ஓர் உலக அரசியல் போக்கின் பிரதிநிதியாக இருந்ததால்தான் சாவேஸ் ராஜபட்சேவை உச்சிமுகர்ந்தார். சீனா தலைமையிலான மாற்று உலக ஒழுங்குக்கான அரசியலின் ஒரு வெளிப்பாடுதான் சாவேஸின் ராஜபட்சே ஆதரவு நிலைப்பாடு. சாவேஸ் போன்ற ஒரு "கம்யூனிஸ்ட்", கியூபா போன்ற ஒரு "கம்யூனிஸ்ட்" நாடு எப்படி இலங்கைக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்திருக்கமுடியும் என்று நமது அப்பாவி தோழர்களும் மக்களும் இங்கே அதிர்ச்சி அடைந்து கேட்கிறார்கள். சாவேஸ் ஒரு கம்யூனிஸ்ட்டும் அல்ல கியூபா ஒரு கம்யூனிஸ்ட் நாடும் அல்ல என்கிற உண்மை ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் கியூபாவும் வெனிசூலாவும் இலங்கையை ஆதரிக்கவேண்டிய அவசியம்தான் என்ன என்ற கேள்வி சந்தேகமேயில்லாமல் நமது மூளைகளை கசக்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தக் கேள்வியை நீங்கள் நீட்டவேண்டும்: ஓரிஜினல் ஏகாதிபத்தியவாதிகளான அமெரிக்கர்களும் தெற்காசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியாவும் ராஜபட்சே பக்கம் நிற்கிறதென்றால் அதில் ஆச்சரியமில்லை. இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்திக்கொள்வதற்காக சீனாவும் பாகிஸ்தானும் ராஜபட்சே ஆகரவு நிலையில் இருப்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் எங்கோ இருக்கும் ஈரானும் கியூபாவும் ரஷ்யாவும் வெனிசூலாவும் ஏன் ராஜபட்சேவை ஆதரித்தன? ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை செய்த போர்க்குற்றவாளியான அவருக்கு பாராட்டு தெரிவித்தன? 

இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியலை நாம் நடத்தவேமுடியாது. அதனால்தான் இங்கே சில விஷயங்களை விவாதிக்க விரும்புகிறேன்.

கடந்த இருபதாண்டுகளாக உலக அரசியலில் அமெரிக்காவின் ஒற்றை துருவ உலகமயமாதலுக்கு எதிராக பல்துருவ உலக அரசியலைக் கட்டமைக்க முயன்ற நாடுகளில் சீனா, ரஷ்யா, வெனிசூலா, துருக்கி, பிரேசில், இந்தியா போன்றவை முக்கியமானவை. இதில் சீனாவின் இடம் மிகவும் விசேஷம். ஏனென்றால் அமெரிக்காவுக்கு ஈடுகொடுக்கக்கூடிய புதிய வல்லரசு என்கிற பலம் சீனாவுக்கு மட்டுமே இன்று இருக்கிறது. சீனாவும் இது தன்னுடைய நூற்றாண்டு என்கிற நம்பிக்கையில் உலக அரசியலில் தீவிரமாக களமிறங்கியது.

உலகில் தனக்கென ஒரு அணியை உருவாக்குவதில் சீனா முயற்சி செய்தபோது அந்த அணிக்கான ஒரு அரசியல் கோட்பாட்டையும் முன்வைக்கவேண்டியிருந்தது. ஏகாதிபத்திய அரசியல் என்றால் சும்மா இல்லை! துப்பாக்கியும் துட்டும் மட்டும் போதாது, அதற்கென அரசியல் தத்துவ பின்புலமெல்லாம் வேண்டும்! 

சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயகம் என்கிற வார்த்தைகள் மூலமும் நாகரீக உலகம் என்ற அடையாளத்தின் மூலமும்தான் அமெரிக்கா தன்னுடைய உலக அரசியலை உருவாக்கிவைத்திருந்தது. (சோஷலிசம், மூன்றாம் உலக ஒற்றுமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற முழங்கங்களின் அடிப்படையில் முன்னாள் சோவியத் யூனியன் தனது உலக அரசியலை உருவாக்கி வைத்திருந்ததை நாம் அறிவோம்). 

அமெரிக்காவுக்கு எதிராக சீனாவுக்கும் ஒரு அரசியல் கோட்பாடு தேவைப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு என்பது மிகவும் சுலபமாக விற்கப்படக்கூடிய சரக்கு என்பதால் சீனா அதை முதலில் எடுத்துக்கொண்டது. ஆனால் அது மட்டுமே போதவில்லை. அப்போது அரசு மையவாதம் என்கிற ஒரு புதிய கோட்பாட்டை தன் கோட்பாடாக சீனா உருவாக்கியிருந்தது. அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளை எடுப்பதில் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் சநதைதான் மையமாக இருக்கிறது என்றால் சீனாவி்ல் அரசுதான் மையமாக இருக்கிறது. அமெரி்க்காவின் நிலையை வாஷிங்டன் கருத்தொருமிப்பு என்றும் சீனாவின் பாணியை பெய்ஜிங் கருத்தொருமிப்பு என்றும் ராஜதந்திர வட்டாரத்தில் கூறுவார்கள். இதை சுருக்கமாக அரசு மையவாதம் என்று கூறலாம். அரசு மையவாதம் எப்போதும் ஆட்சியாளர்களுக்கு பிடிக்கும். ஏனென்றால் ஜனநாயகம், சுதந்திரம் போன்ற "பிரச்சனைகள்" அதில் இல்லை. சிங்கப்பூரிலிருந்து துபாய்வரை அரசுமையவாதம்தான் மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக நெடுங்காலமாக இருந்துவருகிறது. எனவே எந்தெந்த நாடுகளில் ஆட்சியாளர்கள் தங்கள் பிடிகளை விடாமல் எதேச்சாதிகார ஆட்சியை செலுத்த விரும்புகிறார்களோ, அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக சீனா கைநீட்டியது. 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்தளாவிய ஆதிக்கத்துக்கு எந்த கேடும் வராமல் அதே சமயம் முதலாளித்துவத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வல்லரசாக உயரும் உத்தியில் சீனா ஏற்கனவே வெற்றிபெற்றிருந்தது. அதன்படி ஒரே சமயத்தில் அதிகார மையங்களாகவும் பில்லியனர்களாகவும் இருக்கும் கலையில் சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் வெற்றிபெற்றார்கள். சீனக் கம்யூனி்ஸ்ட் கட்சியின் தலைவர்கள் எப்படி புதிய பிரபுக்களாக ஆனார்கள் என்பதெல்லாம் தனிக்கதை. இன்றைய சீனத்தலைவர்கள் பலர் வாரிசு அரசியல்வாதிகள் என்பதையும் நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள். சீனாவில் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் இடமே இல்லை. சாதாரண பாராளுமன்ற ஜனநாயகத்தில் மக்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களைக்கூட ஏற்காமல், ஆசிய விழுமியம் என்ற பெயரில் புதிய பிரபுத்துவ ஆட்சியைத்தான் கம்யூனிஸ்ட் ஆட்சி என்ற பெயரில் சீனா நடைமுறைப்படுத்திக்கொண்டுவருகிறது. இந்த சர்வாதிகார அரசியல்தான் உலக அரங்கில் இப்போது சீனாவின் ஹாட் எக்ஸ்போர்ட் அயிட்டம்.

ஆசியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் உள்ள அரசு மையவாதிகளுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் ஜனநாயகம், மனித உரிமை என்றாலே அவை அமெரிக்கச் சரக்குகள் எனக்கூறி நிராகரிக்கும் ஜனநாயக விரோதிகளுக்கும் முஸ்லீம் நாடுகளில் உள்ள காலிபேட் அரசியல் ஆதரவாளர்களுக்கும் சீனா உருவாக்கிய பெய்ஜிங் கருத்தொருமிப்பு மிகவும் பிடித்திருந்தது. இத்தகைய சர்வாதிகாரிகளை முட்டுக்கொடுத்து நிறுத்துவதற்கு சீனாவும் தயாராக இருக்கிறது. அத்துடன் சீனாவே ஒரு பெரும்பான்மை இனவாத நாடுதான் என்பதால் ரஷ்யா, இலங்கை, பர்மா, ஈரான் போன்ற பேரினவாத சமூகங்களில் சீனாவுக்கு நல்ல வரவேற்புமுண்டு. 

வல்லரசுப் போட்டி களத்தில் "உலக சர்வாதிகாரிகளே ஒன்று சேருங்கள்" என்ற முழக்கத்தின் அடிப்படையி்ல்தான் சீனா களமிறங்கி பத்தாண்டுகளுக்கும மேலாகிவிட்டது. முதலில் ஆசியாவில் - குறிப்பாக மத்திய ஆசியாவில் - அமெரிக்காவின் ஆதிக்கம் வந்துவிடக்கூடாது எனக் கருதிய விளதிமீர் புதினின் ரஷ்யாவும் முகமது அகமதிநிஜதின் ஈரானும் சீனாவுடன் கைகோர்த்தன. அமெரிக்க எதிர்ப்பு என்கிற அடிப்படையில் மட்டும் இவர்கள் ஒன்று சேரவில்லை என்பதையும் கவனியுங்கள். உள்நாட்டில் எந்தவிதமான ஜனநாயக அரசியலும் உருவாகிவிடக்கூடாது என்பதிலும் தத்தம் எதேச்சாதிகார அரசுகள் அல்லது அரசு முறைமைகள் அப்படியே தொடரவேண்டும் என்பதிலும் இந்த புண்ணியவான்கள் மிகவும் குறிக்கோளாக இருக்கிறார்கள். ஜனநாயகம் என்பதே அமெரிக்க சதி எனக்கருதும் இந்த மூன்று நாட்டுத் தலைமைகளும் தங்கள் நாடுகளில் மிகமோசமான மனித உரிமை மீறல்களைச் செய்துவருபவை.

அமெரிக்காவும் மேற்குலகமும் தங்கள் நலன்களுக்காக "ஜனநாயக முகமூடி" போட்டுக்கொண்டு களத்தில் இறங்கும்போது, சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் "ஏகாதிபத்திய எதிர்ப்பு முகமூடி" போட்டுக்கொண்டே இறங்குகிறார்கள். இதுதான் நிஜம். அதனால்தான் இவ்வளவு போட்டிகளுக்கும் இடையில் சீனா அமெரிக்காவின் நெ.1 வர்த்தகக்கூட்டாளியாக தொடர்ந்து நீடிக்கிறது. ரஷ்யாவில் அமெரிக்க முதலீடு தடையின்றி தொடர்கிறது. (ஈரான் மட்டுமே விதிவிலக்கு. அதற்கு காரணம் மேற்காசிய அரசியலும் இஸ்ரேலும்). 

இவர்களுக்கு முதலில் வெற்றி கிடைத்தது மத்திய ஆசியாவில். சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் சேர்ந்து பலப்படுத்திவரும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு என்கிற கூட்டமைப்பே அடிப்படையில் யூரேஷியா கண்டத்தி்ன் மிகப்பெரிய சர்வாதிகார நாடுகளின் கூட்டமைப்பாகும். மத்திய ஆசியாவின் முன்னாள் சோவியத் குடியரசுகள் (கஜகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் போன்றவை) பலவும் இந்த அணிக்குள் சேரும் நிர்பந்தமும் உருவானது. பாகிஸ்தானும் அன்போடு கைநீட்டியது. தெற்காசியாவில் அமெரிக்கா ஆதரவு நிலையெடுத்த இந்தியா இந்த அணியில் பெரிதும் பங்கேற்கவில்லை. விருப்பம் காட்டவுமில்லை. 

வல்லரசுப் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதையே ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக பசப்பி (ஆனால் அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளில் மட்டும் எந்த மாற்றமும் இன்றி) சீனா செய்துவரும் போலி ஏகாதிபத்திய எதிர்ப்பு வெற்றிபெற்றிருக்கிறது. அமெரிக்க எதிர்ப்பு என்கிற கவர்ச்சிகரமான அரசியல் முழக்கத்துடனும் ஏராளமான பொருளாதார பலத்துடனும் புறப்பட்ட சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் ஆசியாவின் பிற பகுதிகளில் பல தோழர்கள் கிடைத்தார்கள். சீனாவுக்கு வடகொரியாவும் மியான்மரும் உற்றத்துணைவர்களாக இருப்பதற்கு அதுவே காரணம். அடுத்ததாக ராஜபட்சேவின் இலங்கை. ஏதோ இந்தியாவை குறிவைப்பதற்காகத்தான் சீனா ராஜபட்சேவுக்கு உதவுகிறது என எல்லோரும் நினைக்கிறார்கள். அது உண்மைதான் என்றாலும், அது முழுமையான காரணம் அல்ல. தெற்காசியாவில் அமெரிக்காவின் பலத்தை சிதறடிக்கும் முயற்சியில் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணியின் நலன்களை பேணுவது என்கிற முயற்சிக்கு வசதியாக ராஜபட்சே அவர்களுக்கு கிடைத்தார். முத்துச்சரக் கொள்கை எனப்படும் சீன அரசின் இந்தியப் பெருங்கடல் பிரதேச பாதுகாப்புக் கொள்கைக்கு நடுநாயமாக ராஜபட்சே அமைந்தார். எனவே அதற்கு பிரதிபலனாக ராஜபட்சேவுக்கு இந்த சீ-ர-ஈ கூட்டணி உதவி செய்ய தயாராக இருந்தது. புலிகளையும் ஒரு லட்சம் தமிழர்களையும் கொல்லவேண்டும் என ராஜபட்சே விரும்பியபோது உடனடியாக ஆயுதங்களையும் ஆசிர்வாதங்களையும் அரசியல் பாதுகாப்பையும் அளித்தன சீனாவும் அதன் கூட்டணி நாடுகளும். யுத்தத்துக்கு பிறகு எல்லா அரசியல் அரங்குகளிலும் இலங்கைக்கு ஆதரவாக அவை துணைநின்றன. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இலங்கைக்கு அதன் சக்திக்கும் பலத்துக்கும் விஞ்சிய அளவில் டயலாக் பார்ட்னர் என்கிற அந்தஸ்தும் கிடைத்தது. 

இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட்களும் யோசித்தார்கள்: எது முக்கியம்? சீனா-ரஷ்யா போன்ற முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளின் நலன்களுக்கான(போலியான) அமெரிக்க எதிர்ப்பு அரசியலா, ஏதோ சில லட்சம் தமிழர்களின் உயிரா? பிரகாஷ் காரத் உலக அரசியலைக் கரைத்துக்குடித்தவர். பொதுவாக கம்யூனிஸ்ட்கள் தங்களைப் பற்றி அவ்வாறே சொல்லிக்கொள்கிறார்கள். அமெரிக்க எதிர்ப்புக்காக அவர் அமெரிக்காவுடனேயே கூட நாளை கூட்டுச்சேரத்தயாராக இருப்பவர்கள் அவர்கள். அவ்வளவு சுத்தமானவர்கள். காரத்துக்கு துணையாக உள்நாட்டில் என்.ராம் முதல் உலக அளவில் நோம் சாம்ஸ்க்கி வரை இருக்கிறார்கள். அமெரிக்க எதிர்ப்பே பிரதானம் என்கிற அடிப்படையில் அவர்கள் செயல்பட்டார்கள். பாவம் அமெரிக்காவின் ஆசியுடனேயே ராஜபட்சே களத்தில் இருந்தார் என்பதைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. மாறாக சீனாவின் தலைவர் என்ன சொல்கிறாரே அதுவே வேதவாக்கு என்கிற அடிப்படையிலும் இந்தியாவின் தெற்காசிய அரசியலின் நலன்களின் அடிப்படையிலும் இந்திய கம்யூனிஸ்ட்கள் செயல்பட்டார்கள். (புலிகளை பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்திய அமெரிக்காவுக்கு எதிராக புலிகள் புரட்சியாளர்கள் எனக்கூறி இந்திய கம்யூனிஸ்ட்கள் போராடியிருக்கவேண்டும் என்று உங்களில் யாருக்காவது தோன்றியிருக்கிறதா?. இன்னுமொரு விஷயம்: சோவியத் யூனியன் காலத்திலிருந்தே இந்த அரசியல் இலங்கையில் செயல்பட்டு வந்தது. "சோஷிலிச இலங்கை" அரசுக்கு எதிராக போராடிய "வலதுசாரி பயங்கரவாத அமைப்பு" என்று புலிகள் அமைப்பை சோவியத் யூனியன் விமர்சித்ததை 1989-90 வாக்கில் சோவியத் வெளியீடு ஒன்று நான் படித்திருக்கிறேன்)

சீனா ராஜபட்சேவுக்கு ஆதரவு தருவதில் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமுடியும். ஆனால் ரஷ்யாவும் ஈரானும் ஏன் ராஜபட்சேவுக்கு துணையாக நின்றன என்ற கேள்விக்கான பதில் இங்கேதான் இருக்கிறது. அமெரிக்க எதிர்ப்பு என்கிற பெயரில் ஆசியாவில் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி அமெரிக்கா-இந்தியா-ஐப்பான் கூட்டணிக்கு எதிராக நடத்தும் அரசியலின் ஒரு பகுதிதான் இது. 2009 முள்ளிவாய்க்காலில் ஈழத்தில் அரங்கேறியது இருபெரும் உலக அரசியல் சக்திகளுக்கிடையிலான பலப்பரீட்சை. பலியானது மட்டும் அவ்விரு அணிகளும் அல்ல, நாம். 

இந்த அரசியல் பின்புலத்தில்தான் லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க எதிர்ப்பு என்கிற நியாயமான அரசியல் செய்துவந்த கியூபாவும் வெனிசூலாவும் "தங்கள் நலன் கருதி" ராஜபட்சேவுக்கு துணைபோயின. ஏற்கனவே சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை உருவாக்கிவந்த போலியான மாற்று உலக ஒழுங்கில் இந்த நாடுகளும் இடம்பெற்றிருந்தன. அந்த சர்வாதிகார கூட்டத்தில் இலங்கை நுழைந்தபோது, அதன் தலைவரை அவர்கள் கைநீட்டி கைதட்டி கைகூப்பி வரவேற்றார்கள். 


தங்கள் நாட்டின் விடுதலைக்காக போராட ஒருவர் சோஷலிஸ்டாகவோ கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் தேசியவாதிகளாகவே இருந்தால் போதுமானது என்பதுதான் நானறிந்த லெனினிய பாலபாடம். ஆனால் சாவேஸும் காஸ்ட்ரோவும் கம்யூனிஸைத்தை எப்போதே குழிதோண்டி புதைத்துவிட்ட சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வால்பிடித்தது பச்சையான சுயநல அரசியல். இதில் பாட்டாளி வர்க்க சக்வதேசியமோ மண்ணாங்கட்டியோ ஏதுமில்லை. 

இவர்கள் நிலைமையே இப்படியென்றால் தேசபக்தி ஆட்டத்தில் காங்கிரசையும் காவிக்கட்சியினரையும்விட அதி தீவிரவாதிகளாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினரையும் அவர்களது மீடியா முகமான த இநதுவையும் பற்றி சொல்லவாவேண்டும்! அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒற்றை வார்த்தையில் எல்லோர் வாயையும் மூடிவிடக்கூடிய சக்திவாய்ந்த நோம் சாம்ஸ்கி, என்.ராம் தொடங்கி தமிழகத்தில் அ.மார்க்ஸ் வரை எல்லோரும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டமைப்பின் இந்த அரசியலைத்தான் இங்கே எதிரொலித்தார்கள்: போலியான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஒரு இனத்தை களபலியாக்கினார்கள். அதை இன்றுவரை கூட ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். 

இவை திடீரெனவும் நடந்துவிடவில்லை. 2000 தொடக்கத்திலிருந்தே சந்திரிகா, ரணில், ராஜபட்சே அரசுகள் மிகவும் வெற்றிகரமாக நடத்திவந்த "எல்டிடிஈ ஒரு பயங்கரவாத அமைப்பு" என்கிற பிரச்சாரம் முன்பே வெற்றிபெற்றிருந்தது. புலிகளின் பலமும் குறைந்த சமயத்தில், அவர்களை நம்பி ராஜதந்திர பந்தயத்தில் இறங்க யாரும் தயாராக இல்லை. இந்த கட்டத்தில் அமெரிக்கா மிகத்தீவிரமான இலங்கை ஆதரவு நிலைப்பாடு எடுத்திருந்தது. அப்போதெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சீன அணியில் ராஜபட்சே வெற்றிகரமாக இடம்பெற்ற உடனேயே புலிகளை அமெரி்க்க ஆதரவு சக்தியாக சித்தரிப்பதில் மட்டும் அவர்கள் வெற்றிகரமான ஈடுபட்டார்கள். 

தமிழ்நாட்டில் இந்த உலக அரசியலின் ஒரு பகுதியாகவே சில அறிவுஜீவிகள் தங்களுடைய புலி எதிர்ப்பு அரசியலை கட்டமைத்துக்கொண்டார்கள். அதனால்தான் யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போது - இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கும்போது - அவர்கள் ஈழம் அமைவதின் அசாத்தியம் என்றும் இலங்கையில் தமிழ் தேசியம் என்ற ஒரு வஸ்து தோன்றவே இல்லை என்றும் சொன்னார்கள். தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவு பற்றியும் புலிகள் தலித் ஆதரவாளர்களா இல்லையா என்பது பற்றியும் பிரபாகரனுக்கு தெரிதாவை தெரியுமா தெரியாதா என்பது பற்றியும் புலிகளின் தவறுகள் பற்றியும் பிரபாகரனின் எதேச்சாதிகார போக்கே எல்லாவற்றுக்கும் காரணம் என்பது பற்றியும் கூறிக்கொண்டிருந்தார்கள். அந்த இக்கட்டான தருணத்தில் எல்லா விமர்சனங்களையும் தூ்ககிவைத்துவிட்டு ஈழத்துக்காக குரல்கொடுக்கவேண்டும் என்கிற அடிப்படை நியாயம்கூட இல்லாமல் உலகின் இரு தரப்பு ஏகாதிபத்திய அணியினரும் இந்தியாவும் என்ன கூறினவோ அவற்றையே தங்கள் கூற்றாக அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். தமிழீழ ஆதரவாளர்கள் எல்லோரையும் புலிகளின் ஏஜென்ட்கள் என சோவும் சுப்பிரமணியசுவாமியும் இந்து ராமும் கூறிவந்தை அப்படியே கடன்வாங்கி தமிழ்நாட்டிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் மீது இறைத்தார்கள். 

இந்த அரசியல்தான் லத்தீன் அமெரிக்காவில் சாவேஸின் கண்களை மறைத்தது. அவரும் சீன பாணி எதேச்சாதிகார போக்கினை உடையவர். அவர் "விஷயம் தெரியாமல்" ராஜபட்சேவுக்கு ஆதரவு தெரிவித்துவிடவில்லை. அதைத் தெரிந்தேதான் செய்தார். 

ஆனாலும் இன்று அவருக்கு நாம் செவ்வஞ்சலி செலுத்துகிறோம் என்றால் இதை ஒரு பிறழ்ச்சி எனக்கருதி விட்டுவிடவேண்டும் என்பதால்தான். என்ன இருந்தாலும் அமெரிக்கக் கண்டத்திலேயே அமெரிக்காவுக்கு எதிரான அரசியலை வெற்றிகரமாக செய்தவர் என்பதாலும் வெனிசூலாவின் மக்களுக்கு நன்மை செய்தவர் என்பதாலும் லத்தீன் அமெரிக்காவில் 21 ஆம் நூற்றாண்டு சோஷலிசம் என்கிற கருத்தாக்கத்தை பரப்பியவர் என்பதாலும் அவருக்கு நாம் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். இடதுசாரி அரசியலுக்கு எதிர்காலம் இல்லை என்று அமெரிக்க லிபரல் தத்துவஞானிகள் சொல்லித்திரிந்த காலத்தில், ஒரு நாட்டை அல்ல, ஒரு கண்டத்தை இடது பக்கம் நகர்த்தியவர் என்பதால் சாவேஸின் தாக்கம் காஸ்ட்ரோவின் தாக்கத்தையும்விட சே குவேராவின் தாக்கத்தையும்விட மிகவும் வலுவான ஒன்றாகவே எதிர்காலத்தில் இருக்கும்.

எல்லா தலைவர்களும் குறைபாடுகளுடனேயே இருக்கிறார்கள். நூறு சதவீதம் அரசியல் சுத்தம் கொண்ட தலைவர்கள் என்பதெல்லாம் கற்பிதம் என அறிந்த நிலையில்தான், ஈழ விஷயத்தில் அவர் நமக்கு எதிராக எதிர்முகாமலிருந்தவர் எனத் தெரிந்தாலும், குணம்நாடி குற்றம்நாடி அவற்றில் மிகை நாடி மிக்கக்கொளல் என்கிற அளவில், நாம் அவருக்கு செவ்வணக்கம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.

சாவேஸ் உள்பட இந்த உலகில் ராஜபட்சேவிடம் ஏமாந்தவர்கள் நிறைய பேர். அவர்களில் பலருக்கு இப்போதுதான் இனப்படுகொலை குறித்த உண்மைகள் தெரியவந்துள்ளன. "எல்லாம் தெரிந்த" மேற்கு ஐரோப்பாவே இப்போதுதான் கொஞ்சம் அசைந்துகொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இனவாதம் இலங்கையில் இன்று முஸ்லீம்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. அநேகமாக முஸ்லீம் நாடுகள் விரைவில் ராஜபட்சேவை புரிந்துகொள்ளக்கூடும். ராஜபட்சேவின் போர்க்குற்றங்களுக்கும் குடும்ப எதேச்சாதிகாரத்துக்கும் எதிரான ஒரு அலை மேலை நாடுகளில் ஒரு தரப்பினர் மத்தியில் வேகமாக வீசுகிறது.

அமெரிக்க சார்பாகவும் சீனா-ரஷ்யா சார்பாகவும் பிரிந்திருக்கும் இந்த பிளவுண்ட உலக அரசியலை மிகச்சரியாக கையாளவேண்டிய கடமை ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு அர்த்தம் சீனாவுக்கு எதிராக எனச் சொல்லிக்கொண்டு அமெரிக்காவிடம் சரணடைவது அல்ல. இரு தரப்பினரிடமும் ராஜபட்சேவுக்கு எதிராக வேலை செய்வதே முக்கியமாகும். ஆனால் மோதும் களங்களில் இப்போதைக்கு மேற்கு நாடுகளுடன் இணைந்து ராஜபட்சே அரசுக்கு எதிராக செயல்படுவது காலத்தின் கட்டாயம். சாவேஸுக்கு சுய நலம் இருக்கலாம், நமக்கு இருக்கக்கூடாதா? மற்றபடி 
ஈழ ஆதரவாளர்கள் தங்களுடைய பலத்தை அதிகரித்தால் சீனா, ஈரான், ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளைக்கூட இலங்கை விஷயத்தில் நியூட்ரலாவது செய்யமுயற்சிக்க வேண்டும். 

ராஜபட்சேவை தனிமைப்படுத்துவதும் இலங்கை அரசாங்கத்தை இனப்படுகொலை விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்துவும்தான் இன்றைய மிக முக்கிய கடமைகள். 

பின்குறி்பபு: 1

ராஜபட்சேயின் அரசியல் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இந்த மாத தமிழ் ஆழி இதழில் எழுதியிருக்கிறேன். வாய்ப்பிருந்தால் வாங்கி படியுங்கள்.


பின்குறி்பபு: 2

அவசரமாக எழுதினேன். எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
 

டக்ளஸ் செத்தால் அஞ்சலி செலுத்தலாமோ?   :unsure:  :unsure:  :rolleyes:  :rolleyes:

 

இவருக்கும் எமது பிரச்சனை பற்றி யாரும் பிரச்சாரம் செய்யவேண்டும்  :wub:

 

ஆனால் இவருடன் நேரத்தை செலவழிப்பதை விட சாவேசின் தெரிவான துணை சனாதிபதியுடன் செலவழிப்பது புத்திசாலித்தனம் .

மனவருத்தம். இப்போ யாழில் நிறைய குப்பைகள் மட்டும். ஏன் சாவேஸ் ராசபக்சாவை ஆதரித்தார் என்பது தெரியும். ஆனால் இந்த கட்டுரை மட்டும் புரியவில்லை.

 

சாவேசுடன் வெனிசியூலா போய்விடும். காஸ்டோக்கள் மாதிரி கன நாள் வாழ்கை நடந்தியிருந்தால் வெனிசியூலாவின் வெற்றியும் ஆரம்ப சோவியத், கியூபாவின் வெற்றி மாதிரி இல்லா அழிந்தொழிய சந்தர்ப்பம் இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் தனது சம்பளத்தை சமுக சேவைக்கு கொடுத்த சவேஸ் அரச பணத்தில் ஆடம்பரங்கள் காட்டுபவர் எனவும் குற்றம் சட்டப்படிருந்தார்.  பாரிய கம்பனிகளை தேசிய மயமாக்கி அந்த  வருவாய் பணத்தை ஏழைகளுக்கு பங்கிடும் போது சோசலிசம் ஆரம்பத்தில் வெற்றி மதிரி பல நாடுகளில் தோற்றமளிப்பது. பின்னர் கம்பனி பணங்களை அரசியல் தலைவர்கள் சுரண்ட தொடங்க, தொழிலாளிகளை வழிநடத்தாமல் சோம்பேறிகளாக விட, ஊழல் தலையெடுக்கத்தான் சோவியத், கியூபா பொருளாதர நிலை தோன்ற தொடங்குவது.

  • கருத்துக்கள உறவுகள்
'நான் சாக விரும்பவில்லை, என்னைக் காப்பாற்றுங்கள்-மரணத் தறுவாயில் சாவேஸ்!
வெள்ளி, 8 மார்ச் 2013( 13:27 IST )
 
மரணமடைந்த வெனிசூலாவின் புரட்சி அதிபர் சாவேஸ், தன்னை எப்படியாவது காப்பாற்றும்படியும் சாக விட்டு விடாதீர்கள் என்று கெஞ்சியதாகவும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
வெனிசூலா அதிபரின் தலைமை மெய்க்காவலர் இந்தத் தகவலை சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் இதனைக் கூறியுள்ளார்.
 
அவரால் பேச முடியாவிட்டாலும் அவரது உதட்டசைவை நெருங்கி கேட்டப்போது, "நான் சாகவிரும்பவில்லை, என்னை மரணமடைய விட்டுவிடாதீர்கள் என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியில் சிக்கி வறுமையில் தத்தளித்த நாட்டை தனது 14 ஆண்டுகால நல்லெண்ண சாதனை ஆட்சி மூலம் மாற்றி அமைத்து உலகத்த் தலைவர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்த சாவேஸ் மரணத்தை தொடர்ந்து வெனிசூலாவின் எதிர்காலம் தற்போது நிச்சயமின்மையை எட்டியுள்ளது.
 
சாவேஸின் சாவில் சந்தேகம் இருப்பதாக துணை அதிபரும் இந்த செய்தியைக் கூறிய தலைமை மெய்க்காப்பாளரும் தெரிவித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.