Jump to content

வைரஸ்.. பக்ரீரியா எல்லாம் கிளவராகிட்டே போறாங்க. நமக்கு ஆப்புத் தான் போல..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/kFdbiOGVQ_Q

 

பிரித்தானிய உயிரியலாளர்.. சேர் அலக்ஸாண்டர் பிளமிக்.. எதேட்சையாக கண்டுபிடித்த பென்சிலினில் இருந்து ஆரம்பித்த மருந்துகளுக்கு எதிரான  போராட்டத்தில் பக்ரீயாக்கள் மற்றும் நுண்ணங்கிகள்.. வெற்றிகரமாக ஆனால் உறுதியான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால்.. மனித இனம் உலகில் மிகப்பெரிய நெருக்கடி ஒன்றைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

m_jpg120051fa.png

 

மனித வரலாற்றின் ஆரம்ப காலத்தில் ஏன் அந்தளவிற்குப் போவான்.. உலகப் போர்களுக்கு முன்னைய காலத்தில் கூட நோய்க் கிருமிகளின் தொற்றுக்கு மருந்து எடுத்தால் சுகமாகிடும் என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் உலகப் போர்கள் தந்த பல பாதகமான விளைவுகள் மத்தியில் இருந்து பிறந்த நோய்க்கிருமிகளுக்கு எதிரான மருந்துகளின் பாவனை என்பது நோய்த் தொற்றுக் கண்டால் குறிப்பாக பக்ரீரியா தொற்றுக் கண்டால்.. மருந்தெடுத்தால் சுகமாகிடும் என்ற நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது.

 

h-pylori.jpg

 

ஆனால் பகிரீரியாக்களோ மிகவும் புத்திசாலிகளாக உள்ளன. நாம் எந்த மருந்தை அவற்றைக் கொல்லப் பாவிக்கிறோமோ அதே மருந்திற்கு எதிர்ப்புக்காட்டும் வரையில் அவை தம்மை இயற்கையில் குறிப்பாக அவற்றின் பிறப்புரிமையியலில் மாற்றத்தினை உருவாக்கி அதன் மூலம் பெறப்படும்.. பலவேறு பொறிமுறைகளையும் பாவித்து மருந்துகளைச் செயலிழக்கச் செய்யும் நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டு.. மருந்துகளுக்கு சவால்விடும் நிலைக்கு வந்துவிடுகின்றன.

 

antibiotresist.gif

 

இதனால்.. முன்னர் அவற்றிற்கு எதிராகப் பாவித்த மருந்துகளை தொடர்ந்து பாவிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. புதிதாக உருவாகும் பக்ரீரியாக்களை கொல்ல மருந்துகளை தேடி ஓட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றி எமது உடலுக்கும் அவற்றை எதிர்க்கிற ஆற்றலை நாம் மருந்துகளை எடுத்து வழங்காமல் செய்துவிடுகிறோம். இப்படி பல குழறுபடிகளால்.. இன்று மனித இனம் நாடியில் கைவைச்சிட்டு இருக்கிற அளவிற்கு.. நோய் உருவாக்கும் நுண் உயிரினங்கள் (வைரஸ்.. பக்ரீரியா.. மலேரியாவை உருவாக்கும் புரட்டோசோவன்கள் மற்றும் பங்கசுகள்) தம்மை தகாத சூழலுக்குள் இருந்து வெற்றிகரமாக விடுவித்துக் கொண்டு பல்கிப் பெருகி வருகின்றன.

 

1whatIsDrugResistance.gif

 

நுண்ணுயிரிகளின் வாழ்க்கை வட்டம் சிறிது என்பதால்.. அவற்றில் பிறப்புரிமையியல் விகாரங்கள்.. மாறல்களாக விரைவாக சந்ததிகளை கடந்து வருவதால்.. புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கிடையில்.. அவை நோய்களால் மனிதர்களை விழுத்திவிடும் ஆபத்து.. உலகின் மீது பயங்கர அணு குண்டு ஒன்று எந்த நேரமும் வீசப்படலாம் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது.

 

இதில் இருந்து விடுபட வேண்டின்.. மருந்துகளின் பாவனையில் ஒரு முறையான ஒழுங்கமைப்பும்.. புதிய மருந்துகளின் வருகையும்.. மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் நுண்ணியிரிகள் மீதான கவனமும்.. தொடர்ந்து உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எமது உடலை இவற்றிற்கு எதிராகப் போராட தயார்ப்படுத்தும் நிலையும் (குறிப்பாக வாக்சின்கள் - vaccines மூலம்) அவசியமாகியுள்ளது.

 

உண்மையில்.. இது.. மனிதர்கள் உயிரின அறிவியலின் பூரணத்துவம் இன்றி.. ஆரம்பத்தில் விட்ட தவறுகளின் தொடர்ச்சி என்றால் மிகையல்ல..!

 

நன்றி மற்றும் மேலதிக விபரங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீள நினைவூட்டுவது வரலாற்றின் கடமை: ( மறப்பது மனிதனின் இயல்பு? )   தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.   ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.   - தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2007   நன்றி: Sakthy Sabaratnam
    • வணக்கம் வாத்தியார் . ........! பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்   பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்…   பெண் : வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது…....!   --- புத்தம் புது காலை பொன்னிற வேளை ---
    • நீங்கள் எப்போது இந்த காவுதலை நிறுத்தி சாதாரண நிலைக்கு வரப் போகிறீர்கள்,??? 
    • வாக்கெடுப்பு மந்த கதியில் நடைபெறுகிறது? சனங்கள் எல்லாரும் வாக்கு அளிப்பார்களோ? விடுமுறைதினம் ஆகையால், ஒவ்வொரு பாதையில்.. கோயில்/குளம்/புரட்டாதி சனி விரதகாரர்/மற்றும் கோழிக்கறி/புரியாணி உண்போர்/ஊர் சுற்றி பார்ப்போர் என ஆளாளுக்கு.. பப்பாவில் ஏற்றிய பொது வேட்பாளருக்கு நாமம் வைத்து விடுவார்களோ.
    • ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் இருந்த நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது இதேவேளை இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது களுத்துறை – 32% கம்பஹா – 25% கேகாலை – 15% நுவரெலியா – 30% இரத்தினபுரி – 20% அம்பாறை- 30% மன்னார்- 29% முல்லைத்தீவு – 25% வவுனியா – 30% கொழும்பு – 20% கண்டி – 20% காலி – 18% மாத்தறை – 30% மட்டக்களப்பு – 17% குருநாகல் – 30% பொலனறுவை – 38% மொனராகலை – 21% பதுளை – 21% https://athavannews.com/2024/1400397
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.