Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க இறுதி வரைவு தீர்மானம் வெளியீடு: சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க இறுதி வரைவு தீர்மானம் வெளியீடு: சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை! 
[Tuesday, 2013-03-19 07:33:03]
 
இலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில். அமெரிக்கா வெளியிட்டது. இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. முன்னதாக இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை 18 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்தார்.
  
அதில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதாக அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து பல்வேறு திருத்தங்களுடன் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின் போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது. போர்க்குற்றம் ‌தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும். எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை. இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி ,நல்லிணக்கம் முழுமையாக செயற்படவில்லை. மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும். இவ்வாறு அந்த வரைவுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் தமிழர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கையான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த போதிலும், எல்.எல்.ஆர்.சி. திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை மதியம் அல்லது வியாழக்கிழமை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்ததே நடந்துள்ளது, மீண்டும் தமிழர்விரோததேசமாம் இந்தியாவும், சர்வதேச போலீசுக்காரன் அமெரிக்காவும் தமிழர்கள் முதுகில் குத்தியது. யாரவது ஒபாமாவுக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு வராதீங்கப்பா, ஒரு வெள்ளை இனத்தவர் அமெரிக்கராக இருக்கவேண்டுமாகவிருந்தால், நூறு வீத அமெரிக்க விசுவாசம் போதும், ஆனால் கறுப்பர் இர்க்கவேண்டுமாகவிருந்தால் ஆயிரம் வீத அமெரிக்க விசுவாசம் வேண்டும் அல்லது அல்லக்கையாக மாறவேண்டியதுதான்.

தமிழர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை வரைவு கூறாது. இதில் ஏமாறுவதற்கு எதுவுமில்லை. சர்வதேசம் நல்லிணக்கம் என்ற பதத்தைப் பிரயோகிப்பது சிறிலங்கா , சிறிலங்கா மக்கள் என்ற கருத்து நிலைப்பாட்டையே. இதைப் பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் விளங்கிக்கொள்ளல் வேண்டும். எமக்காகத்தான் அமெரிக்கா தீர்மானத்தைக் கொண்டு வருகிறது என்ற நினைப்பு தமிழர்கள் யாருக்குமே வரக் கூடாது. அப்படி வந்தவர்களுக்கு அது ஏமாற்றமாகத்தானிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.colombopage.com/CGImgs_obj/UNHRC_US_Resolution_V1.pdf

 

 

 

(please go this link to read)
 
 
 

அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது!
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்களவர்களுக்கு சாதகமாக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே 3 முறை திருத்தங்களுடன் வரைவு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 4-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் இறுதி தீர்மானம் ஆகும். (someone posted this on facebook)

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

“The revised US draft resolution is much softer in the context of the overwhelming volume of new evidence that has been unearthed since the 21st session of UNHRC last year.

There is a lot of evidence in this draft resolution to clearly show the imprint of Indian influence. There is a significant downgrading of the international community's concerns regarding human rights violations in Sri Lanka.

The draft resolution places the onus on Sri Lanka to set up a mechanism for a credible, independent investigation given that GoSL has had 4 years to show progress it is disappointing that the resolution does not call for an International investigation.” - G. Ananthapadmanabhan, Chief Executive, Amnesty International India

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Indian government seems to have been successful in watering down the proposed second US resolution against Sri Lanka at the UNHRC.

The revised US draft, which was tabled on Monday, is much softer and "there is a lot of evidence to clearly show the imprint of Indian influence," said G Ananthapadmanabhan, Chief Executive of Amnesty International in India.

"There is a significant downgrading of the international community's concerns regarding human rights violations in Sri Lanka," he said. Compared to the original draft, the demand for an international investigation has been given up and now the onus to set up a mechanism for investigation in on Sri Lanka.

This is a significant departure from the international community's tough stand on Sri Lanka ahead of the discussion on the resolution at the UNHRC session on 22 March.

The Amnesty called it a "massive setback" for the campaign for justice in Sri Lanka and a "massive victory for Indian diplomacy and Sri Lanka" since it significantly downgraded the international community's concerns.

The other changes that dilute the resolution are these:

1. Government of Sri Lanka has been replaced with "each State" thereby making it a general observation than being specific to Sri Lanka.
2. Three new paragraphs that support Sri Lanka have been inserted into the revised draft.
3. The new text welcomes the announcement by the Government of Sri Lanka to hold elections to the Provincial Council in the Northern Province in September 2013
4. New text also refers to rebuilding infrastructure in Northern Sri Lanka and how LLRC report can be the basis of national reconciliation.

As Amnesty charges, the revisions certainly show "the imprint of Indian influence" and "sets the tone" for the rest of the draft. Encouraging Government of Sri Lanka to investigate the alleged crimes and rights abuses takes the sting out of the resolution.

 

UNOHCHR (Office of the High Commissioner of Human Rights) had wanted an independent international investigation. Even the UN High Commissioner for Human Rights Navanethem Pillay had raised this demand. This demand made its way into the original resolution.


India, on the other hand, has maintained that such an investigation should come from within Sri Lanka itself. The revised draft reflects India's position.

Although in principle it might sound right, in the case of Sri Lanka, it amounts to colluding with a state that is accused of not only war crimes, but also reneging on its commitment to its citizens and international community. As recent reports by OHCHR and Human Rights Watch showed, instances of abductions, disappearances, rights-abuses and torture continued unabated in Sri Lanka even in 2012.

Despite heaps of evidence of rights abuses and war crimes during the last four years, the country has done precious nothing to fix accountability. Giving it more time and the same responsibility that it misused time and time again is a severe setback for rights activists and the international community.

Karunanidhi's withdrawal of support to the UPA looks certainly compelled by this development. Aligning with the Congress, which is doing the bidding for Sri Lanka, will be suicidal for any party in Tamil Nadu. He could have got wind of the Indian intervention this morning and perhaps that is why he hurriedly convened a press conference and announced his pull-out.

It was India that reportedly diluted the text of the last resolution at UNHRC making the whole exercise inefficient. Since Sri Lanka has done nothing to honour even a non-biding resolution, the US decided to move a second resolution with tougher text. The original draft of this resolution was indeed stronger and would have been really bad for Sri Lanka.

In the second resolution, the most significant - and clearly the most worrisome for Sri Lanka - was the call for an international investigation and what is

called a "truth-seeking mechanism" suggested by the OHCHR. It also asked for unfettered access to special rapporteurs of the UN. Further, it supported OHCHR intervention in Sri Lanka. Both the call for investigation and the entire text on the access to rapporteurs have been deleted in the revised draft.


Wherever there is a mention of international investigation, it has been meticulously deleted.

Besides all this, it expressed concern at the ongoing violation of human rights, non-implementation of the LLRC recommendations. It even went a step ahead saying LLRC report did not adequately address the rights concerns.

The revised draft will make the entire UNHRC process completely perfunctory, yet again. it's indeed puzzling why and how the US agreed for such drastic revisions. Perhaps Indian diplomacy is much more influential than we all think.

Compare the original resolution and the revised draft below. The changes in the revised draft are marked in Red. Firstpost obtained the revised draft from Amnesty International.

The revised draft:

 

 

 

http://m.firstpost.com/politics/original-vs-revised-has-india-watered-down-un-resolution-against-sl-yet-again-666750.html

 New Delhi: 3:09pm: Amendment in UNHCR resolution on Sri Lanka to be moved by India. The amendment will make the resolution more stringent. But no decision has been taken on inclusion of the word "genocide". The resolution in Parliament will be moved only if there is consensus and the government is speaking to all political parties.     திமுக தலைவரின் கோரிக்கையை ஏற்று ஐநா தீர்மானத்தில்(Amendment in UNHCR resolution on Sri Lanka to be moved by India) திருத்தம் கொண்டு வர மத்திய அரசு சம்மதித்திருக்கிறது. பாராளுமன்ற தீர்மானம் குறித்து அனைத்து கட்சியினரிடையே ஒருமித்த கருத்து ஏற்ப்பட்ட பின் கொண்டு வரப்படும்- நம்ப தகுந்த வட்டாரங்கள்!

பி.கு: இன்னும் தி மு க மத்தியமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் நாடகத்தின் பலவகைப்பட்ட காட்சிகள்தான்..! :D

 

புலிகள்தான் சமாதானத்துக்குக் குறுக்கே நிற்கிறார்கள் என்பதுதான் 2009 வரையிலான அரசியலாக இருந்தது..! அந்த அரசியல் நிறைவடைந்து இப்போது நான்கு ஆண்டுகள் முடியப்போகின்றன. :rolleyes: இந்த அமெரிக்கா, இந்தியா, 13+ எல்லாம் வேலைக்கு ஆகாது என்பது இன்னொரு அரசியல் பரிமாணமாக நிறுவப்பட்டு வருகிறது..! :rolleyes: மௌனம் என்பதற்கு எவ்வளவு பலம் உண்டென்பதற்கு இது சாட்சி..! சித்தர்களே மௌன விரததத்தை மேற்கொண்ட வரலாறு நமக்கு உண்டல்லவா??! :D

 

இன்று ஈழம், தமிழகம், மலேசியத் தமிழினம் புலம்பெயர் தமிழினம் என்று அனைத்து மூலக்கூறுகளுமே ஒன்றாக நிற்கின்றன..!

 

அதாவது காய்கறிகள், இறைச்சி எல்லாம் அவியலுக்குத் தயாராக உள்ளது..! :wub: சமைப்பதற்குத்தான் ஆள் வரவேண்டும்..! :D

 

அதாவது நல்ல தலைமை ஒன்று வேணும் என்கிறன்..! :D கலைஞரை நம்ப முடியாது.. அப்பாடா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போராட்ட வடிவங்களுக்கு தனித்தலைமை என்பது இல்லை. அது துனிசியா ஆகட்டும்.. எகிப்தாகட்டும்.. சிரியா ஆகட்டும்.. லிபியா ஆகட்டும்.. யாரும் தனித்தலைமையின் கீழ் போராடவில்லை.

 

இப்போ மக்களை தலைமை தாங்குவது.. மக்களில் பெரும்பான்மையானோர் மத்தியில் இருக்கும் எண்ணங்களே. அந்தப் பொது எண்ணம் இப்போ உலகத் தமிழினத்திடம் பெறப்பட்டிருக்குது. எனி நல்ல வடிகாட்டல்களோடு அந்த எண்ணத்தை சர்வதேசத்தின் முன் வலிமையாக முன்னெடுத்துச் செல்வதே அவசியம். அந்த வழிகாட்டல்களை வழங்கக் கூடிய பலர் எம்மிடையே உள்ளனர். அவர்கள் ஒருங்கிணைந்து ஒரு பொது கூட்டமைப்பின் கீழ் செயற்பட்டால் செயற்பாடுகளை ஒருங்கமைக்கவும் மக்கள் பலத்தை எண்ணத்தை சிதறடியாமல் ஒருங்கு குவிக்கவும் செய்ய முடியும்.

 

மக்களின் சுயாதீன சிந்தனைகளும் செயற்பாடுகளுமே இன்று வரவேற்கப்படுகின்றன.அவர்களுக்கு  அவசியம் நல்ல வழிகாட்டல்களே அன்றி தலைமை என்பதன் கீழான.. கட்டுப்படுத்தல் அல்ல..! மக்கள் ஒரு தலைமை என்ற சிந்தனைக்கு அப்பால் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் புதிய வழிமுறைகளை இப்போ கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு தொழில்நுட்ப சமூக வலையமைப்புக்கள்.. மக்களை எண்ணங்களால் ஒருங்கிணைத்துச் செயற்பட உதவி நிற்கின்றன. இந்த மாற்றத்தை தமிழினமும் உள்வாங்கிக் கொண்டுள்ளது.

 

தேசிய தலைவரே என்றும் எமது தலைவர். அதில் மாற்றமில்லை. அதுவே மக்களின் பொது எண்ணத்தில் ஊறிவிட்ட ஒன்றும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.