Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகொரியா மீது ஐநா (UNHRC) மனித உரிமை விசாரணை.. சிறீலங்கா மீது மட்டும் இல்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் வெளிப்படை ஆதாரங்களோடு மனித உரிமை மீறல்கள் நடந்தும்.. ஐநா மூவர் குழு அதனை அறியத்தந்தும்.. ஒரு வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத ஐநா மனித உரிமைகள் அமைப்பு..(UNHRC) வெறும் செய்மதிப் படங்களை வைச்சுக் கொண்டு வடகொரியா மீது மனித உரிமை மீறல் விசாரணை செய்யப் போகுதாம்..! (குறிப்பா சிறீலங்கா மீது குற்றம் கண்ட தருஷ்மனே இங்கும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!)

 

வடகொரியா ஐநாவை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க.. நாட்டின் உள் வர அனுமதிக்காது என்பதால் ஐநா செய்மதிகளைக் கொண்டு இந்த விசாரணைகளை மேற்கொள்ளப் போகுதாம்..!

 

ஜப்பான் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட.. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் எல்லா 47 நாடுகளும் ஆதரவளித்துள்ளன.

 

வடகொரிய பகிரங்கமாகவே அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்காவுக்கு சவால் விட்டதும்.. அணு ஆயுதங்களைப் பரிசோதித்ததும்.. நீண்ட தூர ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியதும்.. அமெரிக்க சார்பு நாடுகளுக்கும் ரஷ்சியா போன்ற சட்டாம்பிகளுக்கும் கடுப்பை ஏற்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஆக.. ஒரு நாடு எந்தளவு மனித உரிமை மீறல்களைச் செய்யுது என்பதல்ல.. ஐநா விசாரணையை தீர்மானிக்குது. அந்த நாடு எந்தளவுக்கு அமெரிக்காவை உலக சட்டாம்பிகளை அச்சுறுத்துது என்பதில் தான் இவை தீர்மானிக்கப்படுகுது. நாம் தமிழர் தான் இருந்த ஒரு பலத்தையும் இழந்து நிற்கிறோமே. எங்களை கொன்றால் என்ன வெட்டிப் புதைத்தால் என்ன..???! எங்கள் மீது கண்துடைப்புத் தீர்மானங்கள் தான் வந்து போகும்.

 

மேலும்.. சிறீலங்கா வடகொரியாவின் நட்பு நாடு என்பதும்.. தமிழினப் படுகொலையில் வடகொரியா சிறீலங்காவிற்கு உதவி நின்ற நாடுகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த உதாரணத்தை அடுத்த முறை நாம் ஐநாவின் முன் நிறுத்தி உலகிடம்... நீதி கேட்போம்............ அணு ஆயுத.. ஏவுகணைப் பலம்மற்ற நாம்.. மக்கள் எழுச்சி மூலமே வடகொரிய அணுகுண்டின்.. ஏவுகணையின் பலத்துக்கு ஒப்பான ஒரு பலத்தை உலகிற்கு காட்ட முடியும்..! நீதி கோர முடியும்..!

 

UN to investigate North Korea human rights abuses.

 

The UN human rights council has set up an inquiry into human rights abuses in North Korea for the first time.

The council unanimously voted for the probe, which will examine allegations of prison camps, slave labour and food deprivation in the country.

North Korea denounced the resolution as a political ploy.

It is highly unlikely the team will be granted access to North Korea, so they will have to rely on satellite imagery and accounts from defectors.

North Korea's human rights record will now be under intense scrutiny, and evidence gathered by the team could be used in future prosecutions for crimes against humanity.

UN special rapporteur Marzuki Darusman, who presented the initial report on North Korea and will be a member of the inquiry, said that a key focus should be the country's prison camps.

 

http://www.bbc.co.uk/news/world-asia-21891299

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொரியாவுக்கும், ஐ.நாவுக்கும் இடையில், நந்தியில்லையே, நெடுக்கு! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரியாவுக்கும், ஐ.நாவுக்கும் இடையில், நந்தியில்லையே, நெடுக்கு! :o

 

சீனா இருக்குது. ஆனால் சீனாக்கு உள்ளூர ஒரு நெருக்கடி.. வடகொரியாவோடு சேர்த்து.. தன்னையும் மேற்கு நாடுகள் தண்டிக்கப் போனால்.. பொருண்மியம்.. சரிஞ்சு.. உலகின் இரண்டாவது பணக்காரன் என்ற நிலை.. பறிபோயிடுமோ என்று....! ஆனால் சீனாக்கும் இப்படி ஒரு நிலை வரும். மென் இலக்கான எங்களை வைச்சு பயிற்சி எடுத்திட்டு..அமெரிக்கா அதனை வடகொரியா மீது திணிக்கிறது. சிறீலங்கா அளவிற்கு அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.  நாம் மேற்குலக சக்திகளின் ஐநாவின் பயிற்சிக்களம்.. மட்டுமே..! இந்த நிலையை மாற்றனும் என்றால் நாம் நிறைய சாதிக்க.. போராட  வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பது பொருள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்ன செய்வது? தானும் படுக்கான் தள்ளியும் கிடவான்? என்ற நிலையில் இந்தியா இருக்கிறது.இந்தியாவை ஆட்டம் காணவைத்தால் எமக்கு வெற்றி சாத்தியமாகும்.மாணவர்கள் போராட்டத்தை தொய்வில்லாமல் நடத்த எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் இந்தச் செயலை எதிர்த்து கருத்து வைக்க வேண்டும்..!  :rolleyes:  குறிப்பாக மத்யூ லீ போன்றவர்களுக்கு எடுத்துக் கொடுத்தால் சிலசமயம் போட்டுக்கொடுப்பார்..!  :D 

 

பான்கிமூன் தென்கொரியா.. வட கொரியாவைப் பிடிக்காதுதானே..!

எமக்கு நீதி நியாயம் கிடைப்பதை தடுக்கும் தடைக்கற்களை சுக்கு நூறாக உடைக்கும் வரை முன்னேறுவது சிரமம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.