Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விரிசலடையும் இந்திய சிங்கள உறவுகள்

Featured Replies

இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கின்றது: கோட்டாபய
 

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடானது ஆச்சரியமளிக்கும் அதேவேளை மிகவும் ஏமாற்றமடைய செய்துள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவந்த பிரேரணைகளை இந்தியா ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61274-2013-03-22-03-47-59.html

Edited by நிழலி
தலைப்பில் சிறு மாற்றம்

  • தொடங்கியவர்

திருகோணமலையில் உள்ள இந்திய எண்ணெய் குதங்களை சிங்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது

 

http://www.youtube.com/watch?v=0YwINBXi_1o

இங்கு இணைக்கப்பட்ட தலைப்பு மட்டுமே உண்மை.

உள்ளடக்கங்கள் வெறும் நாடகம்!

நீண்டகால தமிழின விரோதிகளை நம்பி ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டே இருப்பார்கள்!

  • தொடங்கியவர்

‘ அச்சப்படும் பேய்கள் மயானத்தில் குடியிருக்காது’- ராஜபக்சேவின் புதிய கண்டுபிடிப்பு

 

இந்தியா- இலங்கை உறவு ஒருபோதும் குறையாது என்றும் , இந்தியா நம்மை விட்டு விலகிப்போகாது என்றும் இது தொடர்பான சூழ்ச்சிக்கு நாம் அச்சப்படத்தேவையில்லை என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் இந்த பேச்சில் ஒரு பழமொழியை கோடிட்டு காட்டினார். அதாவது ; அச்சப்படும் பேய்கள் மயானத்தில் வீடுகள் கட்டுவதில்லை என்றார். இந்த பழமொழி அழிக்கப்பட்ட புலிகள் குறித்து விமர்சித்தாரா அல்லது இந்திய அரசியல் கட்சியினரை விமர்சித்தாரா என்ற சஸ்பென்சை வைத்தார். விரிவாக எதுவும் விளக்கவில்லை.


இவரது லங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:


எங்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியா, இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.இது தொடர்பாக நாம் ஒருபோதும் அச்சமடைய தேவையில்லை. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவு ஒருபோதும் குறையப் போவதில்லை. இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்கி என்னை பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

 

நமது கட்சி பயங்கரவாதத்தை இல்லாமல் அழித்துள்ளது. அச்சப்படும் பேய்கள் மயானத்தில் குடியிருக்காது. பிளவடைந்திருந்த நாட்டை ஒரே தேசமாக மாற்றியுள்ளோம்.பொய்களுக்கு வதந்திகளுக்கு பெருமளவு சக்தி காணப்படுகின்றது.எனினும் இதனை வெற்றிகொள்ள கட்சி என்ற ரீதியில் எங்களால் முடியும். கட்சியை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

இலங்கையில் ஆளும் தமது கட்சியில் பிளவு ஏற்படுகிறது என்பதை அவர் மறுத்தார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=672738

Edited by akootha

  • தொடங்கியவர்

இந்தியாவுடனான தொடர்புகளை துண்டிக்க வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

 

இலங்கையின் இறைமையை மதிக்காத இந்தியாவுடனான ராஜதந்திர மற்றும் வர்த்தக தொடர்புகள் துண்டிக்கப்பட  வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

இந்தியா இல்லாத ஆசிய சகோராத்துவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் கொள்கையை அரசாங்கம் வகுக்க வேண்டும்.

 

பயங்கரவாதத்தை இல்லாதொழித்து அனைத்து மக்களுக்கும் உயிர் வாழும் வரத்தை அளித்த குற்றத்திற்காக அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன.


ஜாதிக ஹெல உறுமய கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

வெளிநாட்டு தீர்மானமொன்றின் அடிப்படையில் உள்நாட்டில் விசாரணை நடாத்த அனுமதியளிக்கப்படக் கூடாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி பாராட்ட வேண்டும்.


அமெரிக்காவும், இந்தியாவும் பயங்கரவாதத்தை போஷிக்க முயற்சிக்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்பட்டு வரும் நிலையில் அவரது ஒத்துழைப்புடன் விசாரணை நடத்துமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3599

இந்தியா இல்லாத ஆசிய சகோராத்துவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் கொள்கையை அரசாங்கம் வகுக்க வேண்டும்.

 

இந்தியாவை அண்டிய பல நாடுகள் வரவேற்கும். ஆசிய நாடுகள் என்பதால் சீனா, ஆப்கானிஸ்தான்.... பல நாடுகள் பங்கேற்கும். சிங்கபூர், மலேசியா... மத்திய கிழக்குஇல் சில நாடுகள் இணையாது. ஈரான் முடிவெடுக்க கஸ்டப்படும்.

 

இன்றைய அரசின் இலங்கை-இந்திய உறவு பொருளாதார, கலாச்சார, பிராந்திய நல ... கோட்பாட்டு தத்துவங்களை வைத்து கட்டி எழுப்பப்பட்டதல்ல. சோனியா குடும்பத்திற்காக திருடுவதற்கு சக கள்ளனாக கருணாநிதியை கண்டு பிடித்தபின்னர் "தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள்" என்ற பொன்சேக்காவின் வேத வாக்கை வைத்து உருவாக்கபட்ட பிராந்திய cult. இதனால் இ்லங்கை, இந்தியா என்ற இருநாடுகளும் இருக்கும் போது இந்த மதம் தளிர்த்திருக்கும்.

  • தொடங்கியவர்

No more dealings with Tamil Nadu - Defence Secretary Gotabhaya Rajapaksa

by Norman Palihawadana

 

The Defence Secetary Gotabhaya Rajapaksa said on Wednesday (20) that Sri Lanka will have no more dealings with Tamil Nadu.

 

'Considering the harassment meted out to our Sri Lankans, we will ensure maximum punishment is given to the Tamils arriving from Tamil Nadu' he said.


'Tiger sympathisers accuse us for not having compassion and kindness. Yet it is they who lack all these qualities. They are trying to misuse our humanity.'

 

'I hope the Indian central government will take appropriate measures to arrest those Tiger sympathisers who harassed our Sri Lankans and Buddhist monks. They must be apprehended and maximum legal punishment should be meted out' the Defence Secretary further said.


Source: 'Divaina' Sinhala daily | 21.03.2013
URL: http://www.divaina.com/2013/03/21/news23.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மீனவர்களை கட்டாயம் பழி வாங்குவார்கள்.

இவர்கள் இப்படி சவால் விடுவது ஜெயலலிதாவுக்கு கடுப்பேற்றும். மத்திய அரசு மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டு கொள்ள மறுத்தால் அதன் மேல் தமிழ்நாட்டு அரசு உடனடியாக செய்யத் தக்கதொன்றும் இல்லை. 

 

பதியுதின் தரபடுத்தலை கொண்டுவந்துதான் பள்ளிமாணவர்கள் ஆயுத போராட்டத்தில் இறங்கியவர்கள். அதுதான் இலங்கையில் முதல் முதல் தனி நாடு கேட்க தூண்டிய செய்கை.கருணாநிதியின் அடக்கு முறையால்தான் இன்றைய மாணவர் போராட்டம். இதை வேண்டுமென்றே மத்திய அரசு தட்டிக்களித்தால் இலங்கையின் நிலைமை அங்கும் தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மீனவர்களை கட்டாயம் பழி வாங்குவார்கள்.

அப்படி பழிவாங்கப்பட்டாலும் அதையும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் ஹிந்திய மத்திய காங்கிரஸ் அரசு   :(

இவர்கள் இப்படி சவால் விடுவது ஜெயலலிதாவுக்கு கடுப்பேற்றும். மத்திய அரசு மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டு கொள்ள மறுத்தால் அதன் மேல் தமிழ்நாட்டு அரசு உடனடியாக செய்யத் தக்கதொன்றும் இல்லை. 

 

பதியுதின் தரபடுத்தலை கொண்டுவந்துதான் பள்ளிமாணவர்கள் ஆயுத போராட்டத்தில் இறங்கியவர்கள். அதுதான் இலங்கையில் முதல் முதல் தனி நாடு கேட்க தூண்டிய செய்கை.கருணாநிதியின் அடக்கு முறையால்தான் இன்றைய மாணவர் போராட்டம். இதை வேண்டுமென்றே மத்திய அரசு தட்டிக்களித்தால் இலங்கையின் நிலைமை அங்கும் தோன்றும்.

அப்படி தோன்றினால் நல்லாய் இருக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தைத்தான் நாங்களும் பார்த்து கொண்டிருக்கின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.