Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் மலரும் தனித்தமிழீழம்; அடித்துக் கூறுகிறார் ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images.jpg

எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று  அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.

தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் ஈழ ஆதரவுப் போராட்டம் தொடர்பிலான சிறப்புக் கவனவீர்ப்பு விவாதம் தமிழக சட்டச் சபையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த விவாதத்தில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில்  மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல்களை, இனப்படுகொலையை கண்டித்து இங்குள்ள மாணவ மாணவியர் போரட்டம் நடத்தி வருகின்றனர். 

இவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மாணவ மாணவியரின் ஒட்டுமொத்தப் போராட்டம் அரசியல் கலப்பற்றதாக , இலங்கைத்தமிழர் நலனை மாத்திரமே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த உணர்வு பூர்வமான போராட்டங்கள், கவனவீர்ப்புகள்  தமிழகத்தில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதும், இலங்கை அரசு தமிழர்களைத் தொடர்ந்தும் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றது.

சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளில் சிங்களவர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகின்றது. 

தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் இலங்கையில் அரசு  ஓர் இனவெறி தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.

இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு தமிழ்நாட்டு அரசன் கோரிக்கைக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இது எமக்கு மிகுந்த வருத்தத்தையளிக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிகின்றேன்என்றார்.

இதனையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எமது கோரிக்கைகளை  வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தெரிவித்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தமிழக மாணவர்கள் போராட்டங்களைக் கைவிட்டுப் படிப்புக்குத் திரும்ப வேண்டும் 
மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே சட்ட சபையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை இன்னமும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இதற்காக நாம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருக்க முடியாது. சென்னையில் இடம்பெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் பங்கெடுக்கக்கூடாது என்று பிரதமருக்கு நேற்று (நேற்று முன்தினம்) வலியுறுத்தியிருந்தேன். இதைப் போலத்தான் இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

அவர் தனது உரையில் 2009 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு தமிழர்களை காக்கத் தவறிவிட்டதாகவும் கூறினார்.

உடனடியாக எதிர்ப்பு வெளியட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபாநாயகரின் உத்தரவின் பிரகாரம் தி.மு.க சட்ட உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=526851927128499252

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வரின் பல்வேறுபட்ட ஆக்கபூர்வாமான நடவடிக்கைகளுக்கு நன்றி..!

 

மத்திய அரசின் நிலைப்பாடே எங்களது நிலைப்பாடும் என்று அறிவிக்காமல் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில உறவுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்..! :D

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆரம்பகாலங்களில் எமது விடுதலைப்போருக்கு முட்டுக்கட்டையாகவும் எதிராகவும் இருந்து வந்தாலும் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை உணர்ந்தகாலம் முதல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். பாராட்டத்தக்கது. நன்றி. இப்புடியே தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜெயலலிதாவின் வார்த்தைகளும், செயல்களும் அரசியல் நோக்கம் கொண்டதாக இல்லாத வரை வரவேற்கத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.