Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி சிறிதரனின் அலுவலகம்மீது இராணுவ புலனாய்வாளர்கள்- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி சிறிதரனின் அலுவலகம்மீது இராணுவ புலனாய்வாளர்கள்- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தாக்குதல்

30 மார்ச் 2013

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர் விடுதலை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - இணைப்பு 2

கிளிநொச்சியில் சிறிதரனின் அலுவலகம் இராணுவ புலனாய்வாளர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயததிற்கு முன்னால் அமைந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அறிவகம் அலுவலகம் சற்று முன் இராணுவப் புலனாய்வாளர்களினதும் சிறிலங்கா சுதந்திரகட்சியின் ஆதரவாளர்களினதும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சற்று முன் காலை பதினொரு மணிக்கு (30.03.13.லண்டன் நேரம் - காலை 5.30) கிளிநொச்சியிலுள்ள காக்கா கடைச் சந்தியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டகார்கள் ஊர்வலமாக சென்றனர். இவர்களில் சிறிலங்கா சுதந்திரகட்சி ஆதரவாளர்கள் மற்;றும் இரானுவ புலனாய்வாளர்கள் ஆகியோரே பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகம் மீது கற்களால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன் ஆகியோர் கிளிநொச்சியில் பொதுமக்களுடனான சந்திப்பை நடத்திக்கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக் கொடிகளைத் தாங்கிய புலனாய்வாளர்களும், அரச ஆதரவாளர்களும் இணைந்து நடத்திய மோசமான தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.

1 மணிநேரத்தின் பின் அங்கு சென்ற பொலிசார் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவரை விடுதலை செய்ததோடு வாக்குமூலங்களை மட்டும் பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் பலவற்றிற்கு சேதம் ஏற்பட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர்களும் தாக்குதலின் போது பதுங்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து இன்று ஊடக மாநாட்டை கூட்டிய சுரேஸ் பிறேமச்சந்திரன் தெல்லிப்பளைப் பாணியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவரும் காவற்துறையினரால் பாதுகாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் ஜனநாயகம் மனித உரிமைகள் என வாயளவில் பேசுவது கேலிக்குரியது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90228/language/ta-IN/article.aspx

இந்த நிலையில் ஜனநாயகம் மனித உரிமைகள் என வாயளவில் பேசுவது கேலிக்குரியது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதே கேள்வியை புலிகளின் ஜனநாயகம் பற்றி கதைக்கும் சம்பந்தனிடமும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அடிக்கடி கேட்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

Pirabaganesan-150.jpg

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய கூட்டத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியமை காட்டுமிராண்டித்தனமானதும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலானதும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவித்ததாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமைதியான முறையில் கிளிநொச்சியில் நடத்திய கூட்டத்தின் மீது கல்லெறிந்த சம்பவத்தினை கேள்விப்பட்டவுடன் இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுடன் தொடர்புகளை ஏற்படுத்திய பொழுது அவர் மூலமாக முழுமையான சம்பங்களை தெரிந்து கொண்டேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் அவர்களது அரசியல் ரீதியான கொள்கைகளுடன் எமக்கு முரண்பாடு இருந்தாலும் இவ்வாறான அனாகரீக காட்டு மிராண்டித்தனமான செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய பொழுது அங்கு கடமையிலிருந்த பொலிஸார் கல்லெறிந்தவர்களை கைது செய்யவோ அல்லது தடுக்க முற்படவோ முற்படவில்லை என்பதை பார்க்கும் பொழுது இது திட்ட மிட்ட செயல் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது.

அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய்பாதுகாவலர்கள் முறையான பாதுகாப்பை இவர்களுக்கு வழங்கவில்லை. குறைந்தபட்சம் தமது துப்பாக்கிகளை கூட அவர்கள் வெளியில் எடுக்கவில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும். பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கமைய பிடிபட்ட ஒருவரும் பொலிஸ் புலனாய்வுத் துறையைச் சார்ந்தவர் என்பது அவரது அடையாள அட்டை மூலம் நிரூபணமாகின்றது.

1970களில் தமிழாயச்சி மாநாடு இடம்பெற்ற போது அப்போதிருந்த தமிழ் தலைவர்கள் மீது பெரும்பான்மையின பொலிஸார் நடத்திய தாக்குதலின் மூலமாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முற்பட்டனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இப்படியான ஒரு நிலையை நாட்டில் தோற்றுவிப்பதற்கு இடம் பெறும் முயற்சிகளை உடனடியாக முறியடிக்க வேண்டும்.

இது சம்பந்தமான முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். நடைபெற்ற சம்பவத்திற்கு எனது முழுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இது சம்பந்தமாக விசாரணையை முன்னெடுப்பதற்கு அரச உயர் மட்டத்தின் கவனத்திற்கும் கொண்டு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=79360&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

106910044hospital%20Bottle%20attack%2002

கிளிநொச்சி தாக்குதலில் 13 பேருக்கு காயம்

கிளிநொச்சியல் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரரவணபவன் தெரிவித்தார். 

கற்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் சிதறி ஓடியதாகவும் இதன் காரணமாக பலர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

எனினும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சரரவணபவன் கூறினார். 

இது அரச ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது வெளிப்படையாக தெரிவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரரவணபவன் தெரிவித்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

412578863index.jpg

கிளிநொச்சியில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டனர்: பிரபா காட்டம்

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய கூட்டத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியமை காட்டுமிராண்டித்தனமானதும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலானதும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவித்ததாவது, 

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமைதியான முறையில் கிளிநொச்சியில் நடத்திய கூட்டத்தின் மீது கல்லெறிந்த சம்பவத்தினை கேள்விப்பட்டவுடன் இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுடன் தொடர்புகளை ஏற்படுத்திய பொழுது அவர் மூலமாக முழுமையான சம்பங்களை தெரிந்து கொண்டேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் அவர்களது அரசியல் ரீதியான கொள்கைகளுடன் எமக்கு முரண்பாடு இருந்தாலும் இவ்வாறான அனாகரீக காட்டு மிராண்டித்தனமான செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய பொழுது அங்கு கடமையிலிருந்த பொலிஸார் கல்லெறிந்தவர்களை கைது செய்யவோ அல்லது தடுக்க முற்படவோ முற்படவில்லை என்பதை பார்க்கும் பொழுது இது திட்ட மிட்ட செயல் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது. 

அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய்பாதுகாவலர்கள் முறையான பாதுகாப்பை இவர்களுக்கு வழங்கவில்லை. குறைந்தபட்சம் தமது துப்பாக்கிகளை கூட அவர்கள் வெளியில் எடுக்கவில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும். பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கமைய பிடிபட்ட ஒருவரும் பொலிஸ் புலனாய்வுத் துறையைச் சார்ந்தவர் என்பது அவரது அடையாள அட்டை மூலம் நிரூபணமாகின்றது. 

1970களில் தமிழாயச்சி மாநாடு இடம்பெற்ற போது அப்போதிருந்த தமிழ் தலைவர்கள் மீது பெரும்பான்மையின பொலிஸார் நடத்திய தாக்குதலின் மூலமாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முற்பட்டனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இப்படியான ஒரு நிலையை நாட்டில் தோற்றுவிப்பதற்கு இடம் பெறும் முயற்சிகளை உடனடியாக முறியடிக்க வேண்டும். 

இது சம்பந்தமான முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். நடைபெற்ற சம்பவத்திற்கு எனது முழுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இது சம்பந்தமாக விசாரணையை முன்னெடுப்பதற்கு அரச உயர் மட்டத்தின் கவனத்திற்கும் கொண்டு வருவேன் என குறிப்பிட்டுள்ளார். 

கூட்டமைப்பு காரியாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை அடாவடித்தனமான செயல்: சீனித்தம்பி யோகேஸ்வரன்

கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது திடீரென இனம்தெரியாத கூலிப்படையினர் கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிரஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது இந்த கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி அடாவடித்தனமான தாக்குதலைக் கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 இச்சம்வம் தொடர்பாக அவர் தமது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது ஜனநாயக நாடு என கூறும் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயக செயற்பாட்டை ஒழித்துக்கட்டுவதற்காகவும். அவர்களை தமிழ் மக்களிடமிருந்து பிரித்தெடுப்பதற்காகவும் பல விதமான திட்டமிட்ட செயற்பாடுகளையும், அட்டூழியங்களையும் கடந்த சிலகாலமாக மேற்கொண்டு வருகின்றது.

 இதேவேளை, இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்புக்கு விடப்பட்டவர்களும் இவ்விடயம் சார்பாக கவனம் செலுத்தாமல் இருந்தமை. இந்நாட்டில் எதிர்கட்சிகளில் அமர்ந்துள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு எதுவித பாதுகாப்பும் நியாயமான முறையில் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு தொடர்ந்து சர்வதேசத்தால் மனிதஉரிமை மீறல் குற்றசாட்டை தாங்கிவரும் இவ்வரசாங்கம் தம்மையும், தமது ஒட்டுக் குழுக்களையும் திருத்தி ஜனநாய வழிக்கு கொண்டு வராவிட்டால் இந்நாடு சர்வதேச நாடுகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதை எப்போதும் மாற்ற முடியாது.

 எனவே, இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாட்டை மேற்கொள்ளும் தமது சகாக்களுக்கு இச்செயற்பாட்டை நிறுத்துமாறு அரசாங்கம் கட்டளை பிறப்பதுடன், சகல கட்சிகளும் ஜனநாயக முறையில் ஒன்று கூடவும், கருத்துரைக்கவும், செயற்படவும், கட்சிசார்பாக குழுக்களை எற்படுத்தவும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் தமிழ் மக்கள் பிரதிகளுக்கு பாதுகாப்புக்கு அமர்த்தும் படையிரையும் நியாயமாக தமது கடமைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

 தற்போது நடைபெற்ற இக்காட்டு மிராண்டித் தனமாக செயற்பாட்டை நியாயமாக விசாரிக்கவும், இச்செயற்பாட்டை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=3744

ஜெனீவாவால் வந்த பின்னர் பழி வேண்டுவோம் என கூறி இருந்தது சிங்களம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.