Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜாலியா பேசலாம் கொஞ்சம் வாங்களேன்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் யாழ் கள உறவுகளே.....

நாளைக்கு ஏப்ரல் பூல் யார் யார எப்பிடிலாம் ஏமாத்தலாம் என்று ரூம் போட்டு யோசிச்சிட்டு இருப்பிங்க........

இதெல்லாம் நாங்க ஊரில இருந்த பொழுது தான் சிறப்பா ஏமாத்தி இருப்பம்.... இல்லை ஏமாந்து இருப்பம்....

So நான் கேக்க வாறது என்னனா......

உங்க அனுபவங்களா எங்களோடும் பகிர்ந்துக்கலாமே.......

யார் யார எப்பிடிலாம் fool பண்ணினிங்க?

யார் கிட்ட நீங்க ஏமாந்திங்க?

அதனோட அனுபவங்கள்.....

இந்த வருஷம் யாருக்கு எப்பிடி அல்வா கொடுக்க இருக்கிங்க.....

மனசுல வாரத்தை எல்லாம் எடுத்து விடுங்க.....

கேக்க நாங்க ரெடி....

சொல்ல நீங்க ரெடியா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க செய்யிற மிகப்பெரிய கூத்து அப்பிடினா பொண்ணுங்களுக்கு திறத்தி திறத்தி இங் அடிக்கிறது......

அயோ அவங்க கெஞ்சும் போதெல்லாம் எங்களுக்கு கொஞ்சலா இருக்கும்..... :D:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாளே சோப் சுத்தி வார உரை மற்றும் lakspray மில்க் பவுடர் கவர் எல்லாம் சேர்த்து வைச்சு அழகா கல்லு கட்டி மண் போட்டு.... ரோடு ல கொண்டு போய் வைச்சிட்டு மறைஞ்சு நிண்டு பாப்பம்....

அப்பலாம் பொருளாதாரத்தடை இருந்த காலம்.....

வேலைக்கு போகின்றவர்களும் இறங்கி வடிவா எடுத்து பாத்து ஏமாந்து போய்டுவினம்......

அது எங்களுக்கு அப்ப மகிழ்ச்சியா தெரிந்தாலும் ஒரு வயது வரும் போது மிக கவலையா இருக்கும்.....:( :(

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இந்த முட்டாள் தினத்தில தான் அநேக ஆண்கள் முட்டாள் ஆகிறவை. குறிப்பாக பள்ளி மாணவர்கள். றோட்டால போற பள்ளி மாணவிகளுக்கு பேனா மை தெளிக்கிறது... உடுப்புக்குப் போடுற நீலத்தை வாளில (bucket) கரைச்சு வைச்சு ஊத்துறது.. கூழ் முட்டை அடிக்கிறது என்று.. கொடுமை சரவணா. நாங்கள் வளர்ந்து அந்தப் பருவத்துக்கு வரும் போது.. நீலமே இல்லை. அந்தளவுக்கு நாட்டின் மீது சிங்களத்தின் பொருண்மியத் தடை..! அதனால எல்லாமே குவைட்டா தான் போயிச்சுது.

புலம்பெயர் நாடுகளில்.. யுனில பெரும்பாலும்.. ஒரு சந்தடியும் இல்லாமல் இந்த நாள் கழிந்து போகும். பள்ளிகளில்.. சின்னச் சின்ன குழப்படிகளோடு போகிறதாக் கேள்வி..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
ஏலெவல் படிக்கும்போது ஒருமுறை வந்த ஏப்ரபூல் அன்று பாடசலையில் நிகழ்ந்த சம்பவம்..முதல்நாள் இரவே வீட்டில் இருந்த உஜால சொட்டு நீல ப்ளஸ்டிக்போத்தலில் ஒன்றை எடுத்து அமத்தினால் நீண்டதூரத்துக்கு நீலம் வெளியேறிப்பாயக்கூடியவாறு ஊசியால் கணக்கான ஒரு ஓட்டைபோட்டு வைத்திட்டு அடுத்த நாள்பாடசாலைக்கு பொக்கற்றில் வைத்து எடுத்துபோனேன்..ஆனால் நான் செட் அப் பண்ணி வச்சிருந்த நீலப்போத்தல் முதல் தாக்குதலை என்மேலேயே நிகழ்த்திவிட்டிருந்தது.. :D இரவு அவசரத்தில் மூடும்போது மேல் மூடி ஏறுமாறாய் மூடுபட்டு ஒருபக்கமாய் சரிஞ்சு இருந்திருக்கு..சைக்கில் ஓடும்போது இறுக்கமான பொக்கற்றுக்குள் இருந்து நசிபட்டு புதுப்போத்தல் என்பதால் முட்ட முட்ட இருந்த நீலம் வெளியேறி எனது உடுப்பு பொக்கற்பக்கத்தால் நீலமாகிவிட்டது... :( பள்ளிக்குடத்துக்கு அசடு வழிய போய் சேர்ந்தன்..
 
சரி நான் தான் நனைந்துவிட்டேனே மதியம் இடைவேளை ரைம் மற்றவர்கள் யாரையாவது நீலத்தால் முழுகவைக்கவேணும் என்ற வெறியோடு நீலப்போத்தலை உள்ளங்கைகளுக்கிடையே மறைத்துவைத்து கைகளைப்பின்னால் கட்டிக்கொண்டு ஆள்தேடி பாடசாலை
கன்ரினுக்கு பக்கத்தில் அலைந்துகொண்டிருக்க..எங்கள் வகுப்பில் ஒரு குழப்படி எனக்கு பின்னால் நைசாக வந்து என்னிடம் இருந்த நில்லபோத்தலை பறித்து யாரையோ நோக்கி ஏம் பண்ணிகொண்டிருந்தான்..இன்ரேவல் ரைம்..பெடியள் பெட்டையல் எல்லாம் கன்ரினுக்கு சாரிசாரியாக வந்துபோய்கொண்டிருந்தனர்..ஸ் ஸ் என்று ரெண்டுதரம் இவன் உஜால நீலப்போத்தலை அமத்தியதை பர்த்தன் பின்னர் எப்படி அந்த கூட்டத்துக்க இவன் லாவகமாக மறைந்தானோ தெரியல..நான் தான் கையில உடுப்பில என்று எல்லா இடமும் நீலத்தோட விழிபிதுங்க எதிர்பாராமல் நடந்ததால் எக்குதப்பாய் மாட்டுபட்டுபோய் நிக்கிறன்..இவன் நீலத்தை அடித்தது எம் பிரதேச முக்கிய அரசபதவியில் இருக்கும் ஒருவரின் மகளுக்கு..அடித்த இடம்..ம்கும்..நேர இரண்டு நெஞ்சுப்பகுதியிலும்..பெட்டை என்னை பார்த்துவிட்டது..நான் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் வேகமாக மறைந்துவிடேன்..ஆனால் பயந்துகொண்டிருந்தேன்..பள்ளிக்குடவாத்திமாருக்கல்ல..ஏனெனில் நாம் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தோம்..வாத்திமார் யாரும் எம்முடன் கொழுவதில்லை..ஆனால் பயந்தது அவ அப்பனுக்கு..ஏனெனில் பின்னாடி பல அலுவல்களுக்கு அந்தாளிடம்தான் போகணும்...போட்டுக்குடுத்திட்டாளோ என்று பயந்து திரிந்தகாலம்கள் அவை..இப்ப நினைத்தால் சிரிப்பாக இருக்கு.. :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நெடுக்ஸ் அண்ணா.....

குறிப்பாக எமது காலப்பகுதி முழுக்க முழுக்க புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த நேரம்.... இப்பிடியான சம்பவங்களை புலிகள் ஊக்கிவிக்க வில்லை என்றாலும் கூட மாணவர்களின் சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு குறுக்கே அவர்கள் நின்றது கிடையாது.....:D

ஹஹஹஹா சுபேஷ் நல்ல ஒரு அனுபவ பகிர்வு நன்றி.....

டீச்சர் மாருக்கே நீலம் அடிச்சவங்களும் இருக்காங்க.....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏப்ரல் fool ல வைச்சு சின்ன சின்ன விஷயங்கள் தான் நடந்திருக்கு எண்டா .....

தப்புங்க..... இதையும் ஒருக்கா படிச்சு பாருங்களன்....

சதாம் உசேனின் ராஜதந்திரியாக இயங்கிய அமேரிக்காவின் இரட்டை-உளவாளி ஒருவரின் சங்கேதப் பெயர் April Fool. இவர் அமேரிக்க படை வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்த உள்ளது என்கிற தவறான தகவல் தந்து, ஈராக்கிய படைகளை வடக்கிலும் மேற்கிலும் நகரச் செய்துவிட்டு, குவைத் வழியாக அமேரிக்கபடை நுழைந்ததே பாக்தாத்தை பிடிப்பதற்கு வசதியாகிவிட்டது. ஈராக் படைபிரிவின் தலைவர்களை தவறான தகவல்களில் குழப்பியது அந்த அமேரிக்க அதிகாரிதான்.

மேலதிக தகவலுக்கு-

American 'double agent' sold Baghdad false war plans, Telegraph.co.uk, August 2, 2004

Agent April Fool tricked Saddam, TimesOnline, August 1, 2004

2001 ஏப்ரல்-1 ல் நெதர்லாண்ட் உலகில் முதல் தேசமாக ஓரினத்-திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து.:D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய ஏப்ரல் முட்டாள் தினத்தன்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மனதில் தோன்றிய விஷயங்கள்..

ஆனால் நேற்றைய விடுமுறை நாள் வீட்டில் ஒரு குடும்ப ஒன்றுகூடல் நாளாக மாறிப்போனதால் ஒரு நாள் தாமதமாக இந்த இடுகை..

அதனால் என்ன.. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி எனது இந்த இடுகை உங்களுக்கு ஞாபகம் வரட்டும்..

அதேபோல எனது வழமையான இடுகைகளை விட இந்த இடுகையில் ஒரு விசேடமும் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமும் உள்ளது. கால,நேரம் வருகையில் உங்களோடும் பகிர்கிறேன்..

ஏப்ரல் முட்டாள் தினம் இல்லாமல் போகிறதா?

வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் நவீன உலகில் நாங்கள் முன்னைய முட்டாள் தினக் குறும்புகள், மற்றவர்களை முட்டாளாக்கும் முயற்சிகளில் இருந்து மாறி/ விலகி ஊடக வழி, இணைய வழிக் குறும்புகள், இணைய வழியாக ஏமாற்றும் முயற்சிகளிலேயே (media driven jokes & Internet tomfoolery) அதிகமாக இறங்கிவிட்டோம் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

காலம் அப்படி இருக்கே.. நாங்கள் என்ன செய்யலாம் என்று நாமே சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் சின்ன வயதிலிருந்து ஒருவரை ஏப்ரல் பூல் ஆக்கி நாம் மகிழ்ந்து சிரித்த அந்த சின்ன, சின்ன சந்தோஷங்கள், சுவாரஸ்யங்கள் இனி முடிந்துவிடுமோ என்றொரு சிறு கவலை வரவில்லையா?

வாழ்க்கை முழுவதும் முட்டாள்களாகவே வாழ்ந்துவரும் எமக்கு மற்றவர்களை முட்டாளாக்க ஒரு தினம் இருப்பதால் ஒரு சந்தோசம் தானே?

இது எங்கே எப்படி ஆரம்பித்தது என்றெல்லாம் அறியாமலே சுவாரஸ்யத்துக்காக உலகம் முழுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்..

என்னைப் பொறுத்தவரை இந்த மற்றவரை முட்டாளாக்குவதற்கு ஒரு நாள் தனியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எப்போதும் கலகல என்று இருக்கவேண்டும்.. முடியுமானவரை சிரித்து, மற்றவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் எனக்கு ஒவ்வொரு நாளும் தான் மற்றவரை முட்டாளாக்க முடிகிறது ; நானும் முட்டாளாக முடிகிறது. (போதாக்குறைக்கு விடியலும் இருக்கே)

முட்டாள்கள் தினம் பற்றி முன்பொரு முட்டாள் தினத்தில் எழுதிய எனது இடுகை..

முட்டாள்களே நில்லுங்கள்! - http://www.arvloshan.com/2009/04/blog-post.html

ஆனாலும் ஆண்டாண்டு காலம் இருந்த ஒரு வழக்கம் வழக்கொழிந்து போகின்றது என உணரும்போது கொஞ்சம் மனதில் ஏதோ போல இல்லை?

இந்த முறை கூட எங்களை சுற்றி அவதானித்துப் பாருங்கள்..

முன்பைப் போல செயல்களால் ஏமாற்றும் practical jokes இம்முறை பெரிதாக எம்மைச் சுற்றி நிகழவில்லை; சின்னச் சின்ன வாய் வழிப் பொய்களால் ஏமாற்றிக் குதூகலிக்கும் அந்த சிறுபிள்ளைத்தனம் இல்லை.

இதற்கான காரணங்கள் என்ன?

ஒன்றில் நாம் (எமது ஒட்டுமொத்த சமூகமே) முதிர்ச்சியடைந்துவிட்டது அல்லது நகைச்சுவையுணர்வை நாம் இழந்துவருகிறோம்.. அல்லது இதற்கான நேரம் இல்லை எனும் அளவுக்கு எங்கள் வாழ்க்கை வேகமாக இருக்கிறது.

உலகின் அத்தனை சமூகங்களுக்குமே இந்த நகைச்சுவை உணர்வு முக்கியமானது. அதிலும் எம்மவர்கள் ஆதிகாலம் தொட்டு இந்த நகைச்சுவையுணர்வில் திளைத்திருக்கிறார்கள்.

இதனால் தான் ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ள ஒரு விடயத்தை இங்கே கொஞ்சம் அழுத்தி சொல்லலாம் என்று இருக்கிறேன்..

முட்டாள்கள் தினம் மன அழுத்தத்திற்கு நல்லது...

முட்டாள்கள் தினம் மன அழுத்தத்திற்கு நல்லதா? அது எப்படி? என்று வினவத் தோன்றுகிறதா? அதாவது, நாம் முட்டாள்கள் தினத்தைக் கொண்டாட வேண்டும். நகைச்சுவை என்பது நம்முடைய கலாசாரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றது. காரணம், இதுவே மனிதர்களுக்கிடையேயான பரஸ்பரத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.

நகைச்சுவை உணர்வானது, எங்களுடைய பதற்றத்தைக் குறைத்து ஆற்றலை வளர்க்கக்கூடிய ஒரு அருமையான கலை. நகைச்சுவை என்பது மட்டும் இல்லாமல் போயிருந்தால் நமது சமுதாயம், வன்முறைகள் பலமடங்கில், அதிகரித்ததோர் சமுதாயமாக இருந்திருக்கும். காரணம், நகைச்சுவை உணர்வு, சமுதாயத்தோடு நாம் கொண்டுள்ள அழுத்தங்களை இலகுவாக்கும்.

சமுதாயத்தோடு மட்டுமல்ல, உங்கள் உடன்பிறப்புகளுடனும், குறும்புத்தனமாக இருப்பது கூட உங்களுக்கிடையிலான உறவை, பிணைப்பை மேம்படுத்தி வலுப்படுத்தும். நகைச்சுவை உணர்வென்பது, எம்மையும் உற்சாகமாக வைத்திருப்பதோடு, நம்மை சுற்றி இருப்பவர்களைக்கூட சந்தோஷமாகவே வைத்திருக்கும். ஏற்கனவே நம்முடன் உள்ள நபர்களை மேலும் நெருக்கமாக்குவதோடு, புதிய நண்பர்களையும் சேர்க்கும்.

நகைச்சுவை உணர்வால் ஏற்படக்கூடிய சிறு புன்னகை, மற்றவரை வரவேற்பதாகவும், மற்றவர்களுக்கு எம்மிடத்தில் ஒரு அங்கீகாரம் இருப்பதாக வெளிக்காட்டுவதுமாக அமையும், இந்தப் புன்னைகையால் ஏற்படக்கூடிய சந்தோஷமான உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மற்றவருக்கு வழங்குவதற்கு மிக இலகுவான, இலவசமான விடயம் இந்த நகைச்சுவை தானே?

முட்டாள்கள் தினமன்று, ஒவ்வொருவரும் தங்களது நண்பர்கள், அலுவலகத்தின் சக ஊழியர்கள், பாடசாலையில் நண்பர்கள் என்று பலரையும் முட்டாளாக்குவது தான் சிறப்பு. இம்மாதிரியான கேலிகள், நக்கல் என்பன பரஸ்பரம் ஒரு நல்லுறவையும் அன்னியோன்னியத்தையும் ஏற்படுத்தும்; நம்முடைய வளர்ச்சியையும் உறுதிப் படுத்தும்.

ஆனாலும் இம்மாதிரியான நக்கல்களும் கேலிகளும், அதைப்பெரிதாக எடுத்துக் கொள்ளாத நபர்களிடம் காட்டுவது முக்கியமாகும். அளவு கடந்த, பொருத்தமில்லாத நகைச்சுவை உணர்வுகள், உறவுக்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும்.

நகைச்சுவை உணர்வுகள், நக்கலுடன் நிற்பாட்டப்பட வேண்டுமே தவிர யாரையும் ஏமாற்றுவதாகவோ, புண்படுத்துவதாகவோ அமையக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும் அதேவேளை, நாமும் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆனாலும் இந்த விடயத்தில் சிறுபிள்ளைகள் இலகுவில் ஏமாந்துவிடுவார்கள். காரணம், பெரியவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என நம்பிவிடுவார்கள்.

நகைச்சுவை உணர்வுக்காக மற்றவர்கள் சொல்லும் சிறு சிறு பொய்களை இலகுவில் நம்பிவிடாது, பகுத்தறியும் திறன் நமக்கு வேண்டும் என்பது தான் இங்கு மிக முக்கியமானது.

முட்டாள்கள் தினத்தில், நாம் வலிந்து ஏற்படுத்தும் நகைச்சுவை உணர்வு கூட நமது ஆன்மாவிற்கு நன்மையானதாகவே அமைகின்றது. சிறுபிள்ளைகள் போல சிரித்தும், மற்றவர்களை ஏமாற்றியும் நாம் விளையாடும் போது, நமது கவலைகள், கஷ்டங்களை ஒருநாளேனும் மறந்து நாம் சிறுபிள்ளைகளாக மாறி விடுவதே இதற்குக் காரணமாகும்.

நீங்கள் பண்ணுவது குறும்பா அல்லது கொடுமையா?

இது கட்டாயமாக நாங்கள் எமக்குள்ளே எழுப்பிக்கொள்ளவேண்டிய ஒரு கேள்வியாகும்.

சிலசமயங்களில் நம்முடைய குறும்புத்தனம் எல்லை மீறுவதால் அது அபாயமானதாக மாறிவிடுகின்றது.

சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய குறும்புத்தனங்கள் மட்டுபடுத்தப்பட வேண்டும் / வரம்பிற்குட்டபட்டதாய் அமையவேண்டும். அல்லது இம்மாதிரியான எல்லை மீறிய குறும்புத்தனங்களால் நகைச்சுவை உணர்வு கூட வெறுக்கப்பட்டு விடும். சில சந்தர்ப்பங்களில், நாம் செய்யும் குறும்புத்தனம் கொடுமைப்படுத்துவதை போன்று அமைந்து விடக்கூடும். ஆகவே, கொடுமைப்படுத்துவற்கும், குறும்புத்தனத்திற்கும் இடையுள்ள மெல்லிய கோட்டினை அறிந்தே குறும்புத்தனங்களை நாம் செய்யவேண்டும். இருந்தாலுமே இந்த மயிரிழை போன்ற கோட்டினைக் கண்டுபிடித்து நடப்பதே சாமர்த்தியமாக இருந்தாலும், சமூகத்தில் பலபேருக்கு அது கடினமானதாக அமைந்து விடுகின்றது.

சில சமயங்களில் குழுவினருடன் சேர்ந்து செய்யப்படும் குறும்புத்தனங்களும் எல்லையுடன் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு விடயங்களும் தனித்துவம் வாய்ந்தாகக் கருதுவதன் மூலம் இந்த பிரச்சினையைத் தவிர்க்க முடியும். ஆனாலும், குறிப்பிட்ட குறும்புத்தனத்தை ஒருவர் செய்ததுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது சரியானது. ஆனாலுமே, சமுதாயம் என்ற வகையில் இவ்வாறான தனித்துவமான நோக்கு அவ்வளவு தூரம் சாத்தியமாகாது. அப்படியாயின் சமூகத்தின் மீதான எல்லாருக்கும் பொருந்தும் விதிகளை எவ்வாறு கண்டறிவது? இதற்கான இலகுவான வழிமுறை, முட்டாள்கள் தினத்தன்று கண்டறியப்பட முடியும்.

முட்டாள்கள் தினம் ஒரு தவறான அல்லது கண்டுகொள்ளப்படாமல் விடக்கூடிய நாளல்ல. நகைச்சுவை / குறும்புகள் இல்லாத உலகமே இருக்காது. இருந்தாலுமே இவ்வாறான தினங்களில் மட்டும் அதிகளவான நகைச்சுவை உணர்வுகளோடு இருந்தால் கூட உலகம் ஓரளவு நல்லதாக இருக்க முடியும். மாறாக, கட்டுப்பாடுகளை மக்களில் விதித்தாலும் மக்கள் இயல்பாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியாது.

என்னதான், தனிப்பட்ட ஒவ்வொருத்தருக்கும் இருக்ககூடிய நகைச்சுவை உணர்வுகள் மறைந்து / இறந்து கிடந்தாலுமே, முட்டாள்கள் தினத்தின் சிறப்பு / முக்கியத்துவம், இன்னமும் நகைச்சுவைக்கதைகளினூடாகவும், இணைய வலைத்தளங்களினூடாகவும் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.

இன்னும், விளம்பரதாரர்கள் நிறுவனங்கள் மூலமாகக் கூட இந்த முட்டாள்கள் தினம் இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த முட்டாள்கள் தினம், மேற்பட்டவாறான நிறுவனங்களுக்கு பெரியதொரு இலாபத்தை உழைத்துத் தரும் ஓர் சந்தை வாய்ப்பாகக் கூடக் காணப்பவதுதான் காரணமாக இருக்கலாம். - Corporate pranking

முட்டாள்கள் தினத்தன்று பிரபலமான நகைச்சுவைகளை தங்களது நிறுவனங்கள் வலைத்தளங்களினூடாக வழங்குவதன் மூலம் மறைமுகமாக தங்களது நிறுவனம் மற்றும் வலைத்தளங்களையும் இலவசமாக பிரபலமடையச் செய்கின்றனர்.

எல்லாத் தினங்களுமே இப்போது வர்த்தக மயப்படுத்தப்பட்டு, வியாபாரம் மையப்பட்டு நிற்கும் காலத்தில் April Fool's day மட்டும் தப்பி விடுமா?

முட்டாள்களாகவே வாழ்வதைப் பெருமையாக நினைக்கும் ஒரு உலகில் வாழும் எங்கள் அனைவருக்குமே இந்த இடுகை வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறது.

இந்த இடுகையுடன் ஆரம்பிக்கும் நான் மேலே சொல்லியுள்ள 'சிறப்பம்சம்' உங்கள் ஆசிகளுடனும், எனது ஆசையுடனும் தொடரும் என நம்புகிறேன். :)))

http://www.oneblogs.in/முட்டாள்/1/showtags.html

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்கள் தினம் மங்கிப்போய்விடவில்லை. அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்து நாங்கள் அரச அவைக்கு அனுப்பும் ஒவ்வொரு தேர்தல் தினமும் முட்டாள்கள் தினமாகப் பொங்கிவழிகிறது. ஜாலியாகக் கொண்டாடலாம் கவலை வேண்டாம். வருகிறது அடுத்த தேர்தல்.

கிகிகி..பஞ்..உண்மையை சொன்னீங்க போங்க :D ..அதுவும் நம்ம பக்கத்துவீடு இந்தியாவிலை ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் முட்டாளாக்கிடுவாங்கள் எண்டால் பாருங்களன் :D ..ஆனால் ஈழத்தமிழன் மட்டும் இன்னும் அந்த நிலைக்கு போகவில்லை..போகமாட்டான் என்பது பெருமைப்படவேண்டியது :) ..சனத்திண்ட அறிவை சோதிக்க சுண்டல் ஒருக்கா றைபண்ணிபாக்கலாமே அடுத்த தேர்தலுக்கு :icon_mrgreen: ..எதுக்கும் எண்ட ஆலோசனையை ஒருக்கா சுண்டல் சீர்துக்கி பார்க்கவும் :icon_mrgreen: ..வென்றால் எனது பங்கை வெட்ட மறக்கவேண்டாம்.. :D 
 
என்னங்கோ...அப்ப நான் கிளம்புறன்....

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல்-1 லேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562-ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13-வது கிரகரி பழைய ஜூலியன் ஆண்டுக்கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்த புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1582-ம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்த புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டன.

ஆனால் பல ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் காலனி நாடுகளும் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர். அத்தோடு நில்லாமல், ஏப்ரல் -1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளை சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். இது தான் காலப்போக்கில் ஏப்ரல் -1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைபிடித்ததாக வரலாறு கூறுகிறது.

1508-ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதே போல் டச்சு மொழியிலும் 1539-ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. 1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 1-ந் தேதி மக்களை முட்டாளாக்கும் வேலையில் பிரபல நிறுவனங்கள் கூட சில சமயம் ஈடுபடுவதுண்டு. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005-ம் ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டது. “மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்” என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதி வைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அதை சும்மா தமாசு என்றது நாசா. ஆனால் சில நேரங்களில் ஏப்ரல்-1 அன்று காமெடி என்ற பெயரில் சிலர் செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

2003-ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை கொன்றுவிட்டார்கள் என சில இணைய தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச்சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது நினைவிருக்கலாம். ஆனால் வரலாற்றில் பல நல்ல விஷயங்களின் துவக்க நாளாக இருந்ததும் இதே ஏப்ரல்-1 தான் என்பதை மறக்கக்கூடாது. காரணம் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கமாக ஏப்ரல்-1 அமைந்திருப்பதால் தொழிலிலும் வணிகத்திலும் ஏப்ரல்-1 முக்கிய நாளாக கருதப்படுகிறது.

Maalaimalar

  • கருத்துக்கள உறவுகள்

சுண் டுவுக்கு இவ்வளவு விடயங்கள் தெரியுமா ??? 

இம்முறை ஏப்ரல் 1
என்னை யாரும் முட்டாளாக்கவில்லை. நானும் யாரையும் முட்டாளாக்கவில்லை.
நீங்கள் கூறியதுபோல் பல விடயங்கள் மறக்கப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன.
அதை என்னாலோ  அல்லது உங்களாலோ தடுக்கவும் முடியாது

அடடா ஊரிலை இப்பிடியெல்லாம் நடந்ததா? நாமதான் சின்ன வயசிலை புலம்பெயர்ந்ததாலை இதெல்லாத்தையும் இழந்திட்டம். ஐரோப்பாவில் இந்த நாளுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. சாதாரண நாட்களாகவே கழிந்திருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.