Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித் தமிழீழம் வாக்கெடுப்புக் கேட்டு நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம் - படங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

powerstar-02-04-2013-001.jpg

 

நன்றி நக்கீரன்.



உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் பிஸியாம்!

சென்னை: சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், கொளுத்தும் வெயிலில் சில மணி நேரங்கள் வந்து அமர்ந்துவிட்டு, தன் ஆதரவைத் தெரிவித்துச் சென்றார். அஜீத், சூர்யா, கார்த்தி உள்பட பெரும்பாலான நடிகர்கள் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் விஜய் மட்டும் வரவில்லை.

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, "தலைவா பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் விஜய். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை," என கடிதம் அனுப்பியுள்ளார் என்றார். இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வசதியாகத்தான் உள்ளூர், வெளியூர்களில் நடக்கும் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக நடிகர் சங்கம் அறிவித்தது. மேலும் இது வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கும் பொருந்தும் என்றனர்.

இதனால் தன் சீனப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றார் விக்ரம். சூர்யாவும் அஜீத்தும் தன் படப்பிடிப்புகளை தள்ளி வைத்துவிட்டு இடையில் இந்த உண்ணாவிரதத்துக்காக கிளம்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே ரஜினி இந்த உண்ணாவிரதத்துக்கு வராமல் காரணம் கூறியிருந்தால், காற்றில் கத்தி சுழற்றும் இந்த காகித போராளிகள் என்னமா பொங்கியிருப்பார்கள் என்பது உண்ணாவிரதத்தைப் பார்க்க வந்தவர்களின் முணுமுணுப்பாக இருந்தது!

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/04/vijay-is-the-notable-absent-nadigar-sangam-fast-172686.html



மேலும் படங்கள்..

 

http://gallery.oneindia.in/tamil-events/actors-hunger-strike-for-sri-lankan-tamils/42591.html

hero-1.JPGஈழத்

தமிழருக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு

வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும்

இன்று நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனித்

தமிழீழம் ஒன்றே உரிய தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற

கோரிக்கை வலுத்து வருகிறது. இது தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு

மிக்க தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதால், அனைத்துத் தரப்பினரும் தனி

ஈழத்துக்கு ஆதரவாகத் திரண்டு இருந்தனர்.

இப் போராட்டங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அனைத்து நடிகர்- நடிகைகளும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர் .

இப்போராட்டம்

இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர்

சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் தொடங்கியது. இதில் ரஜினி, . சத்தியராஜ் ,

அஜித்,ஜெயம் ரவி , சூர்யா, , விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ்,

ஜீவா,  பரத், செந்தில் ,பிரகாஸ் ராஜ் ,ஆனந்தராஜ் ,பிரசாந்த் ,சிவா

கார்த்திகேயன் ,

நடிகைகள் ராதிகா ,நமீதா ,லச்சுமி ,பாத்திமா பாபு

,தன்சிகா,கோவை சரளா  உள்ளிட்ட முன்னணி நடிகை ,நடிகர்கள் உண்ணாவிரதத்தில்

பங்கேற்றனர்.

மேலும் முன்னணி நடிகைகளும் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ரனர்.

தென்னிந்திய

திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இயக்குனர்

சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு

உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள்

பங்கேற்கின்றனர் .

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர்

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்ற விதம்,

படங்களாக வெளிவந்த பிறகு அதுவரை தமிழ் உணர்வாளர்களின் போராட்டமாக இருந்தது

மக்கள் போராட்டமாக மாறிவிட்டது.

 

இங்கு அழுத்தவும்.Exclusive - 500+ Photos

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13737:hero-strick&catid=36:tamilnadu&Itemid=102

 

http://youtu.be/85Zwa1c5VmI

 

hero.jpg

படங்களில் கமல் விஜய் போன்ற பலரை காணோம் ?

வரமாட்டார் என்று சொன்ன அஜித் வந்திருக்கின்றார் !

பவர் ஸ்டாரை போலிஸ் தேடுகின்றது என்று அவர் அந்தமானுக்கு தப்பி ஓடியதாக எங்கையோ வாசித்தேன் அவர் இருக்கின்றார்  :D

 

பங்கு பற்றிய எல்லா நடிகர் நடிகைகளுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Nadikarsankam-020413-482-unnanilai-150.j

ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்று நடிகர் சங்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், ஜீவா, சிம்பு, பரத், விமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.இவர்களுடன் நயன்தாரா, ஸ்ரேயா, ஹன்சிகா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

  

வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் படப்பிடிப்புகளில் ஈடுபட்டிருந்த நடிகர்,நடிகைகளும் இந்த போராட்டத்துக்கென தமதுபடப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற விதம், படங்களாக வெளிவந்த பின்னர் தமிழ் உணர்வாளர்களின் போராட்டமாக இருந்த போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியுள்ளது. தனித் தமிழீழம் ஒன்றே உரிய தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதால், அனைத்துத் தரப்பினரும் தனி ஈழத்துக்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர்.

இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அனைத்து நடிகர்-நடிகைகளும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Nadikarsankam-020413-482-unnanilai-(5).j

 

 

Nadikarsankam-020413-482-unnanilai-(6).j

 

 

Nadikarsankam-020413-482-unnanilai-(7).j

 

 

Nadikarsankam-020413-482-unnanilai-(8).j

 

 

Nadikarsankam-020413-482-unnanilai-(9).j

 

 

Nadikarsankam-020413-482-unnanilai-(3).j

 

 

Nadikarsankam-020413-482-unnanilai-(4).j

 

 

Nadikarsankam-020413-unnanilai-482-(1).j

 

 

Nadikarsankam-020413-482-unnanilai-(2).j

 

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=JoqyHlcO2sM

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79546&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் : நடிகர் விஜய் கடிதம்

images31.jpg

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் – நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.  நடிகர் விஜய் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிர போரட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் போராட்டம் குறித்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அக்கடிதத்தில் அவர்,  ‘’தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எண்ணி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர்.   அந்த உணர்வுகளை பயிர் செய்யும் விதத்தில் கலைஞர்கள் ஒன்று திரண்டு உங்கள்( சரத்குமார்) தலைமையில் உண்ணாவிரதம் நடத்துவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

 

இந்த போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள வேண்டு என்ற உணர்வு இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் படப்பிடிப்பில் இருப்பதால்  உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதது குறித்து வருத்தமடைகிறேன். ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

http://tamil24news.com/news/?p=55537

ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்று நடிகர் சங்கம் உண்ணாவிரதம் நடத்துகிறது.

 

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொள்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்ற விதம், படங்களாக வெளிவந்த பிறகு அதுவரை தமிழ் உணர்வாளர்களின் போராட்டமாக இருந்தது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது.

 

மாணவர்கள், பெற்றோர், பணியாளர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாலச்சந்திரன் படங்களை ஏந்தியபடி ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து வருகின்றனர்.

 

இலங்கை ஜனாதிபதியை கூண்டிலேற்றி தண்டிக்க கோரி வருகின்றனர். தனித் தமிழீழம் ஒன்றே உரிய தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 

இது தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டதால், அனைத்துத் தரப்பினரும் தனி ஈழத்துக்கு ஆதரவாகத் திரண்டுள்ளனர்.

 

இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அனைத்து நடிகர்-நடிகைகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இப்போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் தொடங்கியது.

 

இதில் ரஜினி, கமல் பங்கேற்கின்றனர். விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி,ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், ஜீவா, சிம்பு, பரத், விமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர்.

 

நயன்தாரா, ஸ்ரேயா, ஹன்சிகா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். நடிகர், நடிகைகள் பலர் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் படப்பிடிப்புகளில் இருந்தார்கள். அவர்கள் படப்பிடிப்புகளை இரத்து செய்து விட்டு சென்னை திரும்பிவிட்டனர்.

 

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்,இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம்,திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்கின்றன.

 

உண்ணாவிரத போராட்டத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் பந்தலும் மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது. காலையிலேயே கடும் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. ஆனாலும் நடிகர் நடிகைகள் திரளாக வர தொடங்கியுள்ளனர்.

 

செய்தி மூலம்: தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் எண்டு இருந்தாலும்..... கூட்டத்தில பவரா தெரிறது நம்ம பவர் ஸ்டார் தான்டோய்....

  • கருத்துக்கள உறவுகள்
கேட்டீங்களா..வெட்டியா உள்ளவன்தான் உண்ணாவிரதத்துக்கு போவானாம்... எனக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கப்பா எண்டு இளைய தலைவலி அவுஸ்திரேலியா பறந்திட்டாராம் :wub: ..பவருக்கு இல்லாத பிஸியா இவருக்கு..? :wub: 
பாருங்க பவர் ஸ்டாரை...பள்ளிக்கூட பையன் மாதிரி நேரத்துக்கு வந்து எல்லாருக்கும் முன்னாடி பணிவா பவ்யமா உட்காந்திருக்காரு... :) 
 
கண்ணா இதைக் கவனமா கேட்டுக்கோ...
 
"காமடியா நடிக்கிறவன் எல்லாம் நிஜத்தில காமடியனும் இல்ல..கீறோவா நடிக்கிறவன் எல்லாம் நிஜத்தில கீறோவும் இல்ல.."
 
விஜய் ஓடினாரே ஒரு ஓட்டம் கலியாணவிட்டு வேலியப் பிச்சுக்கொண்டு..அதுதான்யா நிஜக் காமடி.. :lol: 
vijay-run.jpg
 
என்னங்க..அப்ப நான் கிளம்புறன்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டீங்களா..வெட்டியா உள்ளவன்தான் உண்ணாவிரதத்துக்கு போவானாம்... எனக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கப்பா எண்டு இளைய தலைவலி அவுஸ்திரேலியா பறந்திட்டாராம் :wub: ..பவருக்கு இல்லாத பிஸியா இவருக்கு..? :wub: 
பாருங்க பவர் ஸ்டாரை...பள்ளிக்கூட பையன் மாதிரி நேரத்துக்கு வந்து எல்லாருக்கும் முன்னாடி பணிவா பவ்யமா உட்காந்திருக்காரு... :) 
 
கண்ணா இதைக் கவனமா கேட்டுக்கோ...
 
"காமடியா நடிக்கிறவன் எல்லாம் நிஜத்தில காமடியனும் இல்ல..கீறோவா நடிக்கிறவன் எல்லாம் நிஜத்தில கீறோவும் இல்ல.."
 
விஜய் ஓடினாரே ஒரு ஓட்டம் கலியாணவிட்டு வேலியப் பிச்சுக்கொண்டு..அதுதான்யா நிஜக் காமடி.. :lol: 
vijay-run.jpg
 
என்னங்க..அப்ப நான் கிளம்புறன்..

 

 

சுபேஸ் அவர்களே நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழக மாணவர் போராட்டம் தொடர்பாக?  

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் அவர்களே நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழக மாணவர் போராட்டம் தொடர்பாக?  

 

இப்பிடி பப்ளிக்கில இதெல்லாத்தையும் கேட்கப்படாது..இது ஒரு பொதுக்கருத்துக்களம்..இங்கு நான் என்னசெய்தன் என்பதை சொல்லவெளிக்கிட்டால் நான் எனது சொந்த அடையாளங்களையும் சொல்லவேண்டும் அண்ணா.. :) 
 
 
கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0
 
 
3. கருத்தாடல்
 
*எக்காரணம் கொண்டும் எழுதும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது
 
 
*கருத்தாளர் ஒருவர் தனது அடையாளங்களை பகிரங்கமாக குறிப்பிடுவதை கூடியவரைக்கும் தவிர்க்கவும். இணையத்தில் இடம்பெறும் தகவல் / தனிநபர் தகவல் திருட்டுக்களைத் தடுக்கும் நோக்கில் உறுப்பனர்கள் தங்கள் சுயவிபரங்களை பகிரங்கப்படுத்தாது இருப்பது விரும்பப்படுகின்றது. தனிப்பட்ட விபரங்களை உறுப்பினர்கள் பகிர்ந்தால் அவர்களே அதற்கான விளைவுகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.
 
 
என்னங்க..அப்ப நான் கிளம்புறன்..

Edited by சுபேஸ்

இந்த ஒரு விடையத்தை வைத்து  சொல்லமாம் விஜய்க்கு நடிக்க வராது என :D:lol: .

 

 

சிங்களவன்  யாழ்ப்பாணத்தை பிடித்ததும் கொழும்புக்கு  ஓடிவந்தவர்கள் எல்லாம் விஜய் ஓட்டத்தை படம் போட்டு காட்டுகிறார்கள் :D  இது தான் காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு விடையத்தை வைத்து  சொல்லமாம் விஜய்க்கு நடிக்க வராது என :D:lol: .

 

 

சிங்களவன்  யாழ்ப்பாணத்தை பிடித்ததும் கொழும்புக்கு  ஓடிவந்தவர்கள் எல்லாம் விஜய் ஓட்டத்தை படம் போட்டு காட்டுகிறார்கள் :D  இது தான் காலம்.

 

பொதுவாக ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமின்னு சொல்லுவாங்க..ஆனால் விஜயின் படங்களை எடுத்துபார்த்தால்..எல்லாமே அரைவேக்காடுதான்.. :lol: 
 
 
ஆமால்ல...நாங்க எல்லாம் ஓடி வந்தம்..ஆனால் வினித் அண்ணை வேறு ஏதோமாதிரி வித்தியாசமாய் வந்திருக்கார் போல :D ..அய்த்தான் நம்பளை கிண்டல்பண்றாரு :D ..ஆனால் இன்றுவரை நாங்கள் ஓடித்தான் வந்தம் என்பதை சொல்லி உண்மையை ஒத்துக்கொண்டு அதற்காக வருந்துபவர்கள் நாங்கள் :( ..ஆனால் படத்தில பத்துபேரை அடிக்கிறன் நூறுபேரை அடிக்கிறன் எண்டு பந்தா காட்டியவங்க நிஜத்தில இப்பிடி வேலியப் பிச்சுகொண்டு ஓடினால் அதைபடம்போட்டு காட்டி நாம சிரிப்பதில் என்னங்கண்ணா தப்புகண்டீங்க.. :) 
 
 
அட நம்ம வினித் அண்ணா விஜய் ரசிகனில்ல..மறந்திட்டன்..அதுதான் அண்ணைக்கு குப்பெண்டு கோபம் வந்திட்டு..சாரிங்கண்ணா.. :D 
 
என்னங்க..அப்ப நான் கிளம்புறன்...

பொதுவாக ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமின்னு சொல்லுவாங்க..ஆனால் விஜயின் படங்களை எடுத்துபார்த்தால்..எல்லாமே அரைவேக்காடுதான்.. :lol: 
 
 
ஆமால்ல...நாங்க எல்லாம் ஓடி வந்தம்..ஆனால் வினித் அண்ணை வேறு ஏதோமாதிரி வித்தியாசமாய் வந்திருக்கார் போல :D ..அய்த்தான் நம்பளை கிண்டல்பண்றாரு :D ..ஆனால் இன்றுவரை நாங்கள் ஓடித்தான் வந்தம் என்பதை சொல்லி உண்மையை ஒத்துக்கொண்டு அதற்காக வருந்துபவர்கள் நாங்கள் :( ..ஆனால் படத்தில பத்துபேரை அடிக்கிறன் நூறுபேரை அடிக்கிறன் எண்டு பந்தா காட்டியவங்க நிஜத்தில இப்பிடி வேலியப் பிச்சுகொண்டு ஓடினால் அதைபடம்போட்டு காட்டி நாம சிரிப்பதில் என்னங்கண்ணா தப்புகண்டீங்க.. :) 
 
 
அட நம்ம வினித் அண்ணா விஜய் ரசிகனில்ல..மறந்திட்டன்..அதுதான் அண்ணைக்கு குப்பெண்டு கோபம் வந்திட்டு..சாரிங்கண்ணா.. :D 
 
என்னங்க..அப்ப நான் கிளம்புறன்...

 

 

 நான்  அஜீத் வரவில்லை  ரஜனி வரவில்லை என குறை கண்டுபிடிக்கவில்லை ஆயிரம் பேர் சென்னை இருந்து கொண்டுவரவில்லை ஆனால் ஒரு விஜய்  அவுஸ்ரேலியாவில் இருந்துவரவில்லை என  குறை கூறுவதால் தான் ஓடிவந்த விடையம் கூறப்பட்டது,,,,,,,,,,,,,,,,,,.

 

சிலருக்கு சினிமாவில் நடிக்க தெரியாது சிலருக்கு நிஜத்திலும் நடிக்கவராது.....

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதம் இப்போ தேவையில்லாதது

 

விஜய் மற்றும் பலர் எங்களுக்காக பலகாலமாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.