Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க ஒத்துழைக்கும் எந்த கட்சிக்கும் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க ஒத்துழைக்கும் எந்த கட்சிக்கும் ஆதரவு

 

maduluwawe-300x228.jpgநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க ஒத்துழைக்கும் எந்தவொரு கட்சிக்கும் எதிர்வரும் தேர்தலில் ஆதரவு வழங்கத் தயார் என நியாயமான சமுதாயத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.  நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என நேற்று கூடிய தேரர்கள் கருத்து முன்வைத்ததாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சோபித்த தேரர் குறிப்பிட்டார்.

 

இந்த சட்டத் திருத்தம் குறித்து ஏனைய மதத் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தப்படும் என அவர் கூறினார்.

அதன் பின்னர் அது குறித்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்படும் என சோபித்த தேரர் தெரிவித்தார்.

 

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட எதிர்பார்ப்பதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்ததாக சோபித்த தேரர் நினைவுபடுத்தியுள்ளார்.

 

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளதாக சோபித்த தேரர் தெரிவித்தார்.

 

அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்க வேண்டியது அவசியம் என்பதால் சமூகத்தில் அது தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற வேண்டும் என சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்கப்படல் வேண்டும் என்பது நல்ல செய்தியாக இருந்தாலும் அந்தச் செய்தி புறப்பட்ட இடம் தவறான இடமாக உள்ளது. மதத் தலைவர்கள் மதகாரியங்கள் ஊடாக மக்களை அணுகவேண்டும். அரசியலூடாக அணுகுவது மகா தவறென ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இளவரசன் பொன்னியின் செல்வன் தெரிவித்ததாக கல்கி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இலங்கை, உலகில் கெட்டபெயர் வாங்குவதற்கு புத்தபிக்குகள் பெரும் காரணமாக உள்ளனர்.

அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பிக்கர் வாழைப்பழத்தில் ஊசி எற்றி உளவுகள் கண்டு பிடிப்பவரா அல்லது சிங்கள மக்களுக்கான உண்மையான போராளியா என்பது தெரியாது. இருந்தாலும் தெரிவுக்குழு சிராணியை பதவி நீக்கி சமநிலையை அழித்த போது எங்கே போயிருந்தார் இந்த  சபாநாயகர்?

 

நாங்கள் சோல்பரியின் ஜனநாயகத்தில் ஆரம்பித்துத்துதான் இங்கே வந்து துட்ட கைமுனுவின் பௌத்த இராசியம் பிரகடணப்படுத்தி முடித்திருக்கிறோம் என்பது தேரருக்கு தெரியாததா?

 

இருந்தாலும் அரசியல் முதிர்ச்சி என்று ஒன்று இருக்கு தேரரே. "நாய்கேன் போர்த் தேங்காய் " காணும் தேரரே? சந்திர மண்டலம் தன்னும் போய் அரசி கொண்டுவர முடியுமானால் நம்ம அரசியல் அமைதியாகப் போகும். <_<

 

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட எதிர்பார்ப்பதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழர்களை அழிக்க பயன்பட்டபொழுது மௌனம் காத்தவர்களில் சிலர் குரல் கொடுப்பதற்கு காரணம், அந்த சர்வ வல்லமை அதிகாரம் அவர்களுக்கும் எதிராக பயன்படுவதால் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் யாப்பா ஒரு பீடிகை போட்டுள்ளாரில்ல.. உந்த ஜனாதிபதி முறை இல்லைன்னா.. பயங்கரவாதத்தை தோற்கடிச்சிருக்க முடியாதுன்னு..!

 

அப்ப எப்படியாம்.. 1971 ஜே வி பி கிளர்ச்சியை 15,000 சிங்கள இளைஞர்களை இந்திரா அம்மையாரின் பங்களிப்போடு.. இந்தியப் படைகளைக் கொண்டு அழிச்சு அம்மையார் சிறீமாவோ அடக்கினவா..???!

 

Government crackdown

The new government was ill-prepared for the crisis that confronted it. Although there had been some warning that an attack was imminent, Bandaranaike was caught off guard by the scale of the uprising and was forced to call on India to provide basic security functions. Indian frigates patrolled the coast and Indian troops guarded Bandaranaike International Airport at Katunayaka, while Indian Air Force helicopters assisted the counteroffensive. In many places the government deployed personnel from all three services in a ground force capacity. Royal Ceylon Air Force helicopters delivered relief supplies to beleaguered police stations, while combined service patrols drove the insurgents out of urban areas and into the countryside.

After two weeks of fighting the government regained control of all but a few remote areas. In both human and political terms, the cost of the victory was high: an estimated 15,000 insurgents[citation needed]--many of them in their teens—died in the conflict, and the army was widely perceived to have used excessive force. In order to win over an alienated population and to prevent a prolonged conflict, Bandaranaike offered amnesties in May and June 1971, and only the top leaders were actually imprisoned. Wijeweera, who was already in detention at the time of the uprising, was given a 20-year sentence and the JVP was proscribed.

 

http://en.wikipedia.org/wiki/1971_JVP_Insurrection

 

அது பின்னர் 1987 இல் மீண்டும் முளைச்சுது. நிறைவேற்று அதிகாரம் மீண்டும் அழிச்சுது. இருந்தாலும் ஜே வி பி  இன்னும் இருக்குது. சந்தர்ப்பம் பார்த்து.

 

நல்ல ஒரு ஜேவிபி பயங்கரவாதம்.. மற்றும் தமிழ்ப் பயங்கரவாதம். உதுகள் இல்லையேல் சிங்களவனுக்கு ஆட்சி அதிகாரம் பண்ணுறது நடக்காத காரியம் போல.. எல்லோ.. இருக்குது.

 

சிங்களம் சொந்த வரலாற்றையே மறந்து நின்று ஆடுது.. தமிழனை சாகடிச்ச ருசியில.... சொந்த வரலாறுகள் மறந்து போச்சுப் போல..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.