Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அழகிப்போட்டி தேவையானதா ?

Featured Replies

அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் சொன்னார் இந்திய நடுத்தரவர்க்க மக்களும் நல்ல சாப்பாடு சாப்பிட வெளிக்கிட்டுதான் சாப்பாட்டுவிலைகள் இந்தளவிற்கு உயர்ந்துவிட்டது என்று ,இது உந்த நுகர்வு சந்தைக்கும் பொருந்தும் ,அதுதான் உள்ள போன் கொம்பனிகள் ,வால் மாட் எல்லாம் லைனுக்கு சீனா ,இந்தியா போன்ற நாடுகளில் நிற்கின்றன.சுமிதா சென் ஐ தொடர்ந்து ஐய்வர்யா.லார தாத்தா,பிரியங்கா சோப்ரா என்ற உலக அழகிகள் இந்தியாவில் இருந்து வரும் போது நுகர்வுசந்தை பற்றிய விமர்சனம் வந்தது .

 

மேலே சொன்ன கருத்துக்கள் இந்தியாவில் இருந்து தொடர்ந்து அழகுராணிகள் வந்தது பற்றியே ஒழிய ஒட்டு மொத்த அழகு ராணி போட்டிகள் பற்றியல்ல .அழகு ராணி போட்டிகள் உலகின் மூலை முடுகெங்கும் காலம் காலமாக  நடைபெற்ருக்கொண்டுதான் இருக்கின்றது .அறுபதுகளில் யாழ்பாணத்தில் தினகரன் அழகுராணி போட்டிகள் நடந்து கொண்டுதான் இருந்தது (ஒருமுறை லீலா நாராயணன் அழகுராணியாக வந்தவர் பின்னர் குத்து விழக்கு திரைப்படத்தில் நடித்தவர் ).

எம்மவர் மத்தியில்புலம் பெயர் நாடுகளிலும் அவ்வபோது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது சாந்தியக்காவின் கண்ணில் இப்பதான் பட்டிருக்குது போல .

  • Replies 52
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் சொன்னார் இந்திய நடுத்தரவர்க்க மக்களும் நல்ல சாப்பாடு சாப்பிட வெளிக்கிட்டுதான் சாப்பாட்டுவிலைகள் இந்தளவிற்கு உயர்ந்துவிட்டது என்று ,இது உந்த நுகர்வு சந்தைக்கும் பொருந்தும் ,அதுதான் உள்ள போன் கொம்பனிகள் ,வால் மாட் எல்லாம் லைனுக்கு சீனா ,இந்தியா போன்ற நாடுகளில் நிற்கின்றன.சுமிதா சென் ஐ தொடர்ந்து ஐய்வர்யா.லார தாத்தா,பிரியங்கா சோப்ரா என்ற உலக அழகிகள் இந்தியாவில் இருந்து வரும் போது நுகர்வுசந்தை பற்றிய விமர்சனம் வந்தது .

 

மேலே சொன்ன கருத்துக்கள் இந்தியாவில் இருந்து தொடர்ந்து அழகுராணிகள் வந்தது பற்றியே ஒழிய ஒட்டு மொத்த அழகு ராணி போட்டிகள் பற்றியல்ல .அழகு ராணி போட்டிகள் உலகின் மூலை முடுகெங்கும் காலம் காலமாக  நடைபெற்ருக்கொண்டுதான் இருக்கின்றது .அறுபதுகளில் யாழ்பாணத்தில் தினகரன் அழகுராணி போட்டிகள் நடந்து கொண்டுதான் இருந்தது (ஒருமுறை லீலா நாராயணன் அழகுராணியாக வந்தவர் பின்னர் குத்து விழக்கு திரைப்படத்தில் நடித்தவர் ).

எம்மவர் மத்தியில்புலம் பெயர் நாடுகளிலும் அவ்வபோது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது சாந்தியக்காவின் கண்ணில் இப்பதான் பட்டிருக்குது போல .

 

நீங்கள் சொல்வது உண்மைதான்...........
 
இந்திய உதரணங்கள் முன்வைக்க பட்டதற்கான காரணம் இங்கிருக்கும் எல்லோரும் கண்களால் பார்த்துகொண்டிருக்கும் மாறுதல்கள். இவற்றில் மறைக்கவோ மறுக்கவோ ஏதும் இல்லை என்ற ஒரே ஒரு காரணம்தான்.
 
மற்றைய படி அழகிபோட்டி என்றால் என்ன?
என்ற கேள்விக்கான விடையில் எல்லாம் இருக்கிறது.
 
மேலை நாட்டில் சாதரணமாக நடக்கிறது என்று எளிதாக சொல்லாதீர்கள். அறிவுசார் உலகம் நாட்டின் கலாச்சார அக்கரையுடைவர்கள் இதை எதிர்த்தே வருகிறார்கள். முதலாளி வர்க்கம் தமது வியாபரத்திட்கு உபயோகிக்கிறது. ஊடகம் அவர்கள் கைகளில் இருக்கிறது. உண்மைகளை தேடினால்தான் கிடைக்கும்.
மாயைகள் எல்லா இடமும் பறந்து கிடக்கும்.
 
உங்களுடைய கருத்துக்கள்..........
அழகுராணி போட்டிகள் ஆரோக்கியமானவை. என்பதுபோல் இருக்கிறது. ஒரு வேளை  அது உண்மையாகவும் இருக்கலாம். அப்படி நீங்கள் நம்பும் பட்சத்தில் ஏன் ஆரோக்கியமானவை  என்ற கருத்தை முன்வையுங்கள். நாங்கள் வாசித்து அறியலாம்.
1600ஆம் ஆண்டு அங்கு நடந்தது 1867இல் இங்கு நடந்தது என்ற தரவுகள். நல்லதா கெட்டதா  என்ற காரணத்தை சொல்லபோவதில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரிற்கும் வணக்கம்

இந்த அழகிப்போட்டி பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் இங்கு இணைந்ததற்கு ஒரு காரணம் இந்த போட்டி ஏற்படுத்திய ஒரு எதிர்வினையே. அது பற்றி இங்கு யாருக்கும் தெரியாதது (மொழி காரணமாக இருக்கலாம்) எனக்கு ஆச்சர்யமளிக்கின்றது.

இந்த அழகிப்போட்டி சரியா தவறா என்பதை பற்றி நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை. இது தனிமனித ஒழுக்கம் மற்றும் தனிமனித விருப்பம் சம்மந்தமான ஒன்று. எனவே அதை பற்றி விவாதிப்பதற்கு முன் நம் கண்ணிற்கு முன் மாவணவர் போராட்டம் தறவாக சித்தரிக்கப்பட்டதை நான் இங்கே சுற்றிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த 02.04.2013 அன்று இவர்கள் தங்களது போட்டி மாணவர் போராட்டம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறியத்தந்தார்கள். இதனை ஒரு செய்தி என்று இங்கு வெளியாகும் இலவசப்பத்திரிகையான 20Min வெளியிட்டது (எமது போராட்டங்கள் பற்றி ஒரு வரிகூட எழுதாவர்கள் இந்த செய்திக்கு மட்டும் அரைபக்கம் முக்கியத்துவம் கொடுத்து புகைப்படத்துடன் வெளியிட்டனர்). சரி அவர்கள் வெளியிட்டால் நமக்கு என்ன என்று நினைத்துவிட்டு போக முடியவில்லை. தமிழர்களை பழமைவாதிகள் என்று சித்தரித்து எழுதியிருந்தது.

இத்துடன் முடிந்துவிட்டால் பரவாயில்லை.

மாணவர் பேராட்டம் காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டதாக கூறிவிட்டு பக்கத்தில் ஒரு சிறிய பெட்டிக்குள் மாணவர் போராட்டம் பற்றிய விபரம் எழுதியிருந்தார்கள். மாணவர்கள் ஐக்கியநாடுகள் சபையில் கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடுகிறார்கள் என்று அதில் எழுதப்பட்டிருந்தது (மாணவர்களின் மற்ற கோரிக்கைகள் ஒன்றும் எழுதப்படவில்லை). இது முழுவதும் தவறான ஒரு தகவல். மாணவர்கள் இந்த அமெரிக்கத்தீர்மானத்தை அடியோடு வெறுக்கிறார்கள் என்பதை அவர்களின் முகநூலில் சென்று பார்த்தாலே தெரிந்துவிடும்.

இது தவறான தகவல் என்று நான் அந்த பத்திரிகைக்கு எழுதினேன். இன்றுவரை ஒரு பதிலும் இல்லை.

இது போதாது என்று இந்த அழகிப்போட்டி நடாத்தும் அமைப்பு ஒரு வீடியோ கிளிப் செய்து வெளியிட்டடார்கள்.

அதில் அவர்கள் அனைவருமே மனிதஉரிமை மற்றும் போர்குற்றம் பற்றியே பேசுகிறார்கள். ஒருவர் கூட வாய்தவறி இனப்படுகொலை அல்லது பொதுவாக்கெடுப்பு போன்ற விடயங்களை முன்வைக்கவில்லை. எம்க்கு நடந்தது மனிதஉரிமை மீறல் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இதில் முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கை என்பது எமக்கு நடந்தது வெறும் மனிதஉரிமை மீறலோ அல்லது போர்குற்றமோ அல்ல அது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்று அமைகின்றது (மனிதஉரிமை மீறலிற்கும் இனஅழிப்பிற்கும் உள்ள வேறுபாட்டை தேவையேற்படின் வேறு ஒரு திரியில் பேசலாம்).

இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்வியை நான் இது நடத்துபவர்களிடம் கேட்டுவிடலாம் என முடிவெடுத்து அவர்களின் முகநூல் பக்கத்தில் இதுபற்றி விபரமாக எழுதினேன். அங்கு பலரிற்கு எமது ஈழப்பிரச்சனை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. மற்றும் மாணவர்களின் கோரிக்கை பற்றி ஒன்றுமே தெரியவில்லை. பல கருத்துபரிமாற்றங்களிற்கு பிறகு நான் அவர்களின் யாராவது ஒருவரை தனிமடலில் என்னுடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். இந்த போட்டியை தொகுத்துவழங்கும் பெண் என்னுடன் தொடர்புகொண்டார் (அவர் இந்த போட்டியை நடாத்துபவரா என்று தெரியவில்லை).

அவர் என்னுடன் கலாச்சாரம் அது இது என்று பேசதொடங்கினார். நான் எனது பார்வையில் கலாச்சாரம் வேறு உங்கள் பார்வையில் வேறு. எனவே அதுபற்றி நாம் பேசுவதை விடுவோம் என்றேன். பின்னர் தாங்கள் மாணவர் போராட்டம் பற்றி கூறியதில் என்ன தவறென்றார்கள். நான் அவர்களிற்கு மாணவர் போராட்டத்தின் முகநூல் பக்கத்தை அனுப்பிவைத்தேன் (அதற்கு முன் அந்த பெண்ணிற்கு அப்படி ஒன்று இருப்பது தெரியாது). அதை பார்த்தும் அவரிற்கு தெளிவு வரவில்லை.அமெரிக்கா தீர்மானத்திற்கும் மாணவர்கள் கோருவதற்கும் என்ன வித்தியாசம் என்றார். முக்கியமாக அதில் அனைத்துலகவிசாரணை என்ற சொல் இல்லை என்பதை சுற்றிக்காட்டினேன். மற்றும் குற்றவாளியே தனது குற்றத்தை விசாரிப்பதை நாம் ஆதரிப்பதா என்பதையும் எழுதினேன்.

ஆனால் அவர்களோ தங்களின் தவறுகளை ஒத்துக்கொள்வதாக இல்லை. பத்திரிகை மாணவர்களின் போராட்டத்தை தவறாக விபரித்தால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றார். அது உண்மை தான். ஆனால் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இவர்களின் போட்டியை தள்ளிவைத்தவர்கள் அதே மாணவர் போராட்டம் தவறாக சித்தரிக்கப்படுவதை எப்படி அனுமதிக்கலாம்? அப்படி என்றால் வெறும் கடமைக்காக தான் ஆதரவு தெரிவித்தார்களா?

பின்னர் அவர்களின் இணையத்தளத்திலும் முகநூல் பக்கத்திலும் இருந்த முரண்பாடான தகவலை சுற்றிக்காட்டினேன். ஒரு இடத்தில் "எமது வேர்கள் தமிழீழத்தில்" என்று போட்டுவிட்டு மறு இடத்தில் அதையே "எமது வேர்கள் சிறீலங்காவில்" என்று போட்டுள்ளார்கள். ஆனால் இனறு வரை அவர்கள் அதை மாற்றவே இல்லை.

தாங்கள் பிக்கீனி போடமாட்டோம் என்று பத்திரிகையில் பேட்டி கொடுத்துவிட்டு உலகபோட்டியில் நாளை கலந்துகொள்ளவேண்டி வந்தால் தங்களின் நாடு தமிழீழம் என்று சொல்வார்களாம். பிக்கீனி போடாமல் ஒரு உலக அழகிப்போட்டியை நான் பார்த்ததில்லை (உஙகளிற்கு தெரிந்தால் சொல்லவும்).

இந்த போட்டியை அவர்கள் தொடர்ந்து நடாத்தியிருக்கலாமே. ஏன் மாணவர் போராட்டத்தை கூறி நிறுத்தவேண்டும்? இதே மாதத்தில் இங்கே நாட்டியமயில் போட்டி நடந்தது தானே. தங்களிறகு பெரிய அழுத்தம் இருப்பதாக காட்டி இலவச விளம்பரம் தேடும் முயற்சியாகவே நான் இதை பார்க்கின்றேன். நான் தெரியாமல் தான் கேட்கின்றேன் இப்படியான விடயங்கிள்கு எம்மவர்களிடம் வரவேற்பு பெரிதாக இருக்காது என்பதை இவர்கள் அறியாமலா இதை தொடங்கினார்கள்?

இன்று இவர்களின் இந்த சிறுபிள்ளைத்தனமான செயலால் நாம் அடைந்தது மாணவர்களின் போராட்டத்தை தவறாக சித்தரிக்க வைத்ததே ஆகும்.

தொடர்புடைய செய்தி:

http://www.20min.ch/schweiz/news/story/Miss-Tamil-Wahl-Schweiz-verschoben-23554045

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.