Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் கருணாநிதியை அச்சுறுத்தியிருக்கக் கூடும் என அமெரிக்கா கருதியது – விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் கருணாநிதியை அச்சுறுத்தியிருக்கக் கூடும் என அமெரிக்கா கருதியது – விக்கிலீக்ஸ்
09 ஏப்ரல் 2013
 
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம் என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
1989ம் ஆண்டில் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழகத்தில் ஆயுத வன்முறைகளை வெடிக்கச் செய்வோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
 
போதியளவு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் வன்முறைகளில் ஈடுபடுவோம் என தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்திருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான உதவிகளை கருணாநிதி அதிகளவில் வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
குறிப்பாக தமிழீழம் தொடர்பான கடும்போக்குவாதத்தை கருணாநிதி பின்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து கருணாநிதி ஏனைய ஆயுதக் குழுக்களை உதாசீனம் செய்து, புலிகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை விக்கிலீக்ஸ் விலைபோனதாகத் தகவல் இல்லை. :o

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை விக்கிலீக்ஸ் விலைபோனதாகத் தகவல் இல்லை. :o

 

இதில் விக்கிலீக்ஸ் இல் ஒரு பிரச்சினையும் இல்லையே.. அமெரிக்க அதிகாரிகள் "இருக்கக்கூடும்", "நடக்கக்கூடும்" என்று ஆருடம் சொல்லி காலத்தை ஓட்டியுள்ளார்கள் என்று புரிகிறது.. :D

உது எல்லோருக்கும் தெரிந்த பழைய கதை.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக்ஸ் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனுப்பிய கேபிள் தகவல்களை மையமாக வைத்தே இவற்றை வெளிகிடுகிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் எல்லாவற்றையும் சரியாத்தான் செய்வார்கள் என்றில்லை. அப்படி செய்பவர்களாக இருந்தால்.. ஈராக்கில் அணு குண்டும்.. ஆந்திரக்ஸ் உயிரியல் ஆயுதங்களும்.. இரசாயன ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

அமெரிக்க அதிகாரிகள்.. fake claims இலும் வல்லவர்கள். எதிரிகளை குழப்பி அடிப்பதற்கு..!

 

நம்ம பிளேர்க் ஒரு கேபிள் எனுப்பி இருப்பார் 95% தமிழ் மக்கள் தமிழீழத்தை விரும்பவில்லை என்று. அதை நாளை விக்கிலீக்ஸ் வெளியிட்டால்.. அதுதான் உண்மை என்றாகிடுமா என்ன.

 

எனவே இதனை ஒரு ஆதாரமாக வைத்து விடயங்களை ஆராயலாமே தவிர உண்மை என்று நம்ப வேண்டிய அவசியம் இல்லை..!

 

ராஜீவ் காந்தி ஆயுத முகவராக விளங்கினார் என்று அமெரிக்கா கேபிள் அனுப்பியதற்காக.. சோனியா அதை நம்பி பதவி விலக்கிட்டாரா என்ன. காங்கிரஸ் கட்சி.. அசந்து போயிட்டா என்ன..??! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லதுக்குத்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழக மீனவர்களை கடத்தி படுகொலை செய்தனர்

 
images48.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழக மீனவர்களை கடத்தி படுகொலை செய்தனர் என்று தமிழக சட்டசபையில் முதல்வராக இருந்தபோது கருணாநிதி அறிவித்தது ஆச்சரியமானது என்று அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்திருக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.

 

2007ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12 மீனவர்கள் கடத்தப்பட்டனர். இந்த மீனவர்களை கடத்தியதும் படுகொலை செய்ததும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தான் என்று 2007ம் ஆண்டு சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி பேசியிருந்தார்.

 

இதை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பதிவு செய்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, கொழும்பு அமெரிக்க தூதரகங்களுக்கும் வோஷிங்டனுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அமெரிக்க தூதரகம் அனுப்பி வைத்த அந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் தற்போது பகிரங்கப்படுத்தியிருக்கிறது.

 

அமெரிக்க தூதராக ஆவணத்தில் குறிப்பிடப்படுவது,

 

2007ம் ஆண்டு மார்ச் 29ம் திகதியன்று தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சுட்டுக் கொன்றனர். என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வாயடைக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தின் இந்தக் குற்றச்சாட்டு உறுதியானால் தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு மீண்டும் குறைய வாய்ப்பிருக்கிறது.

 

1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலையின் போது விடுதலைப் புலிகளின் ஆதரவு பாதிப்புக்குள்ளானது. மீனவர் படுகொலைக்கு புலிகளே பொறுப்பு என்று ஆளும் திமுக கூறியிருப்பதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை அக்கட்சி மேற்கொள்ளக் கூடும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான திமுக உறவு வலுப்படும்.

 

ஏப்ரல் 27ம் திகதியன்று தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தமது அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில், தமிழ் புலிகளின் கடற்படை பிரிவான கடல் புலிகள் மார்ச் 29ம் திகதியன்று 5 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்திருந்தார்.

 

அவரது அறிக்கையில் ஏப்ரல் 11ம் திகதியன்று இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட 6 கடற்புலிகளும் மீனவர்களை படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வடக்கு இலங்கைப் பகுதியில் புலிகளின் கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கும்போது மீனவர்களை கொன்றதாகவும் கடற்புலிகள் கூறியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் 12 மீனவர்கள் மார்ச் 4ம் திகதி முதல் காணாமல் போயினர். அவர்களும் புலிகளின் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முகர்ஜி கூறியுள்ளார்.

 

ஏப்ரல் 28ம் திகதி முதல்வர் கருணாநிதி சட்டசபையில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். மீனவர் படுகொலைக்கு இலங்கை கடற்படைதான் காரணம் என்று தொடக்கத்தில் நாம் கருதிக் கொண்டிருந்தோம்.

 

ஆனால் இந்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்ற அதிர்ச்சியான தகவலை வருத்தத்தோடு தெரிவிக்கிறேன். மேலும் கடத்தப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு மூலமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார்.

 

அதற்கு முந்தைய நாள் சட்டசபையில் பேசிய கருணாநிதி, தாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் அவர்களுக்கு இங்கே இடம் இல்லை என்றும் அவர்கள் இங்கே எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் அவர்களது குறிக்கோளும் நோக்கமும் வேறுபட்டதாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

 

இதனிடையே தமிழக காங்கிரஸ் கட்சியானது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்ய கோரியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மத்திய அரசுடன் ஆலோசிப்பார்”. (தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ஜூலை 2002 முதல் பிப்ரவரி 2004 வரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மாநில அரசு பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டது) என்று விரிகிறது அந்த அமெரிக்க தூதரகத்தின் ஆவணம்.

 

மேலும் தி ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம் ஒன்றையும் அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையானது டெல்லியில்தான் முடிவெடுக்கப்பட வேண்டுமே தவிர சென்னையில் அல்ல என்பதை வலியுறுத்துகிறது அந்த தலையங்கம். அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் திமுகஇ இலங்கைக்கு “நேரடியாக” இந்திய அரசு ராணுவ உதவி அளிப்பதை ஆதரிக்காது என்றும் அமெரிக்க தூதரக ஆவணம் பதிவு செய்திருக்கிறது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

http://tamil24news.com/news/?p=57379

கருணாநிதி மட்டுமல்ல ஆதாரமில்லாத கட்டுக் கதைகள் மூலம் மக்களை ஏமாற்றுவதில் பிரபலமாக இருந்த ஏனைய சில அரசியல்வாதிகளிடமும் அவர்களின் போலித்தனம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் யாரும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சுறுத்தபடவில்லை.  விக்கிலீக்சும் அவ்வாறு உறுதிப்படுத்தவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.