Jump to content

வானொலி சேவை ஆரம்பத்துடன் ஈழம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்துள்ளனர் தமிழக மாணவர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
protest-170213-seithy-150.jpg

ஈழ ஆதரவு மாணவர் போராட்டம் தற்போது அடுத்தகட்டத்திற்கு நகரவுள்ளது. இதுதொடர்பான தகவலை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பி்ன்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்து கொண்டுள்ளோம்.

  

அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11மணியிலலிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌனம் கடைபிடிக்கிறோம். இது இறந்த தமிழர்களுக்கான அஞ்சலி அல்ல. நம் தமிழ் இனம் பட்ட வலியை இவ்வுலகம் உணர்வதற்காக நடத்தப்படும் மௌனப் போராட்டம். ஐநா மன்றம் மூடிய காதுகளை திறக்கும் வரையில் இந்த மௌன போராட்டம் தொடரும். ஐ.நா.மன்றம் தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே உணர்கிறோம். எனவே அடுத்தகட்டமாக ஐ.நா.வை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை துவக்கப் போகிறோம். ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியதன் தேவையையும் மனித நேயம் கொண்ட உலக பொதுமக்கள் மற்றும் உலக மாணவர்களிடம் எடுத்துசெல்கிறோம்.

 

அடுத்த வாரம் மாணவ கூட்டமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் தலைநகர் டெல்லி சென்று அங்குள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்து மௌன போராட்டத்திற்கு அந்த மாணவர்களின் ஆதரவையும் கோரவுள்ளோம். தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திலிருந்து இதே போன்று அனைத்து மாநில மாணவர்களை சந்திப்பதற்கான திட்டத்தை வடிவமைப்போம். தமிழக மாணவர்களின் முறையீட்டு மடல் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக மாணவ சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்.

 

பல்வேறு கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களின் இந்த அறவழியிலான நூதன போராட்டத்திற்கு சில கல்லூரி நிர்வாகம் தடை போடுகிறார்கள். மாணவர்களின் இந்த அறவழி போராட்ட முறையில் சில கல்லூரி நிர்வாகங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போவது வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயல். இந்த மௌன போராட்டத்திற்கு தடை விதிக்கும் கல்லூரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அந்தக் கல்லூரிகளை அந்த மாவட்டத்திலுள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள்.

 

கடந்த 60 ஆண்டு கால ஈழ வரலாற்றை தாங்கி நிற்கும் www.supporttamileelam.org என்ற இணைய முகவரியையும் வாக்கெடுப்பு நடத்துங்கள் (We Want Referendum) என்ற வாசகத்தையும் கொண்ட பேட்ஜ் அணிந்து கல்லூரி செல்வோம். இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திமுடிக்கப்பட்டதாக சொல்லப்படும் மே மாதம் 18ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணி அந்தந்த மாவட்டங்களில் எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

 

இதற்கிடையே, தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வரும் 13ம் தேதி சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் தமிழகம் முழுவதிலிருந்தும் அனைத்து மாவட்ட மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

மாணவர்களின் வானொலி

 

இந்த நிலையில் தமிழீழ மாணவர் அமைப்பு வானொலி ஒன்றை தொடக்கியுள்ளது. மக்கள் மத்தியில் மாணவர் போராட்டம் குறித்தும் இலங்கை இனப்படுகொலை குறித்தும் தகவல்களை கொண்டு சேர்க்கும் விதமாக இணையதள வானொலி ஒன்றை தொடஙகியுள்ளனர். இந்த வானொலி தற்போது ஒலிபரப்பை தொடங்கி நடத்தி வருகிறது.

 

இதற்கிடையே தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வருகிற 20,21 தேதிகளில் நடைபெற இருக்கும் போற்குற்றமல்ல இனப்படுகொலையே. இலங்கை அல்ல தனி தமிழீழமே என்ற புகைப்பட ஓவிய கண்காட்சி , காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தருங்கினை ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.

 

மேலும் இக்கண்காட்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக முதற்கட்ட பணியாக தொடங்க உள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80167&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

படிப்பு என்ன படிப்பு? எப்பவும் படிக்கலாம். போராடா விட்டால் ஈழ கனவு பொய்த்துவிடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படிப்பு என்ன படிப்பு? எப்பவும் படிக்கலாம். போராடா விட்டால் ஈழ கனவு பொய்த்துவிடும்.

 

நீங்க பெரிய படிப்பு படிச்சு என்னத்தை வெட்டிக் கிழிச்சீங்க..! :lol:

 

பொடியள்.. பாடப் படிப்போட.. எதிர்கால அரசியலும் படிக்கிறாங்க. உங்களுக்குப் பொறாமை..! உங்களை விட அவங்கள் அட்வான்ஸா இருக்கிறாங்கள் என்று..! :)

Posted

எல்லோரையும் ஓரணியில் இணைத்துப் போராட வேண்டும் என்ற மாணவர்களின் தூர நோக்கு மகிழ்ச்சியளிக்கிறது, அதற்கான முதல்படியாக ஈழப் பிரச்சினை குறித்த தகவல்களை அறியாமல் இருக்கும்மாணவர்கள் மத்தியில் அது குறித்த அறிவூட்டலைச் செய்வதற்கு இந்த வானொலிச் சேவை அவசியமாகிறது.

 

சிறப்பான திட்டமிடலுடன் மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறி இந்திய அரசியல் அரங்கில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே வேணவா!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகிழ்ச்சியான செய்தி. :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'தூய்மையான இலங்கை' செயலணிவசம் மிகையான அதிகாரங்கள்; ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை - அம்பிகா சற்குணநாதன் Published By: VISHNU   22 DEC, 2024 | 09:26 PM (நா.தனுஜா) 'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய 'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், 'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு' என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். 'இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201912
    • ஏனெனில் இதைப் பற்றிப் பேசுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த ட்ரோன் பறப்புகள் முதலில் பிரிட்டனில் ஒரு விமானப் படைத்தளத்தினை அண்டிய பகுதியில் இரவில் காணப்பட்டதாக மக்கள் ஊடகங்களுக்குப் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அது போன மாதம். அந்த படைத்தளம் கூட அதைப் பற்றி அறிக்கையெதுவும் விடவில்லை - எனவே அவர்களுடைய பறப்பாகக் கூட அவை இருக்கலாமென விடயம் அடங்கி விட்டது. பின்னர் நியூஜேர்சி, ஒஹையோ செய்தியில் வந்தன. நியூ ஜேர்சி செய்திகளின் படி, சில ட்ரோன்கள் இரவில் பறந்ததை ஊடகங்கள் பகிரங்கப் படுத்தியதும், இவ்வளவு நாளும் இரவு வானத்தைப் பார்க்காத மக்கள் அண்ணாந்து பார்த்திருக்கிறார்கள். பறந்த சில பொலிஸ் ஹெலிக்ப்ரர்கள், சிறு விமானங்கள் கூட ட்ரோன்கள் என சிலர் அறிக்கை விட ஆரம்பித்து ஏதோ சதி நடப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். "அமெரிக்க எல்லையில் தரித்து நிற்கும் ஈரானிய தாய்க்கப்பல்" ட்ரோன்களை அனுப்புவதாக ஒரு அரசியல்வாதி கற்பனைக் கதை வேறு வெளியிட்டிருக்கிறார்😂.  உண்மையில்,அமெரிக்காவில்  ட்ரோன்களை எந்த நேரத்திலும் FAA அனுமதி பெற்றுப் பறக்கலாம். பறக்கும் இடத்தின் முக்கியத்துவம் சார்ந்து அனுமதி இருக்கும். 2019 வரை, விமான நிலையங்களில் இருந்து 5 மைல் தொலைவில் அனுமதியின்றியே பறக்கலாம் என்பதை மாற்றி அதற்கும் முன் அனுமதி வேண்டுமென்று விதித்திருக்கிறார்கள். ஆனால், பிரதான விமான நிலையங்கள் தவிர்ந்த ஏனைய தளங்களைச் சுற்றி இத்தகைய அனுமதி கோரும் முறை இருக்கவில்லை. நியூஜேர்சி, ஒஹையோ செய்திகளை அடுத்து அந்த மாநிலங்களின் ஆளுனர்கள் இப்போது பெருமளவு பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை விதித்திருக்கிறார்கள் - அதுவும் 1 மாதம் மட்டும் செல்லுபடியாகும்.  
    • இந்த "தொண்டர் நியமனம்" என்பது இலங்கை அரச சேவையில் காலம் காலமாக இருக்கும், தகுதிக்கு (merit) மதிப்பளிக்காமல் அரசியல் செல்வாக்கிற்கு மதிப்பளிக்கும் ஊழல் நிறைந்த முறை. ஆசிரியர் நியமனங்கள் சிறந்த உதாரணம். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்காமல், பல்கலைப் பட்டதாரியாகவும் இல்லாமல், "தொண்டர் ஆசிரியர் நியமனம்" என்று நியமனமாகி நாலைந்து வருடங்கள் பணி செய்வார்கள். பின்னர் "பல வருடங்கள் பணி செய்து விட்டோம், அனுபவம் வந்து விட்டது, சான்றிதழ் ஏன் அவசியம்? நிரந்தரமாக்குங்கள்" என்று போராடுவர். வாக்குகளுக்காக யாராவது அரசியல்வாதியும் இவர்களை  நிரந்தரமாக்க  உதவுவார். இப்படி "சைட் கதவால்" நுழைந்தே நிரந்தர அரச தொழில் கிடைக்குமென்றால் , எவரும் படிக்கவோ, பயிற்சி பெறவோ போகாமல் இந்த இலகு வழியால் தான் வர முனைவர். இதையே தற்போது சுகாதார சேவையிலும் எதிர்பார்க்கின்றனர் போலும். உழைப்பவர்களுக்கும், சுய முன்னேற்றத்தை நாடுவோருக்கும் அநீதியான இந்த தொண்டர் நியமனங்களை இல்லாமல் செய்வது தான் பொருத்தமான செயல்!   அரசியல்வாதிகள் மாற வேண்டுமென்று மக்கள் வாக்களிக்கும் காலத்தில், வாக்களிக்கும் மக்களின் பகுதியாக இருக்கும் இந்த அரச ஊழியர்களும் மாற வேண்டும். அது தான் அரகலய கேட்ட "சிஸ்ரம் சேஞ்" ஆக இருக்கும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.